ஆய்வு: கால் நடைச்சமுதாயத்தில் நடுகல் வழிபாடு (வெள்ளகோவில் வீரக்குமாரர் கோயிலை முன்வைத்து சில மதிப்பீடுகள்)

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக்கூறுகளாகக் காலங்காலமாக திகழ்ந்து  வருபவை கடந்தகால மக்கள் விட்டுச்சென்ற வரலாற்றுச் சான்றுகளே.  குறிப்பாக தமிழகத்தில் நம் முன்னோர்கள்  விட்டுச் சென்றவை கோயில்கள். இக்கோயில்கள் சமய வரலாற்றை மட்டும் எடுத்தியம்புவனாக காணப்பெறவில்லை. அதையும் தாண்டி கலை, பண்பாடு, நாகரீகம், பொருளாதாரம் என பல விடயங்களையும் கோயில்கள் பதிவுசெய்கின்றன. இக்கோயில்கள் வழிபாடுகளை முதன்மையாகக் கொண்டு திகழ்கின்றன.  வழிபாடுகள் இனக்குழு வாழ்விலிருந்தே தொடங்கப் பெற்றவை.  இயற்கையைப் போல் வாழ தலைப்பட்ட அச்சமூக மனிதர்கள் இயற்கையிலிருந்தே தமக்கான அடிப்படைக்கூறுகளை மெய்யக்கற்றுக்கொண்டனர். விலங்குகளை வேட்டையாடக்கூடிய வேட்டைச்சமூகம் அதனைப் பயன்படுத்த கற்றுக்கொண்டதன் பின்புலத்தின்தான் வேளாண் சமூகமாக கால்கொள்கிறது.  வேளாண்சமூகம் உற்பத்தி சமூகமாக பரிணமத்தின் தொடக்க நிலையில்தான் சடங்குகளும், வழிபாடுகளும், உரிமைகளும், உடமைகளும் தனிமனிதர்களின் கைகளில் தஞ்சம் அடைந்தன.

அச்சூழலியல் நோக்கில் வழிபாட்டையும் அதனோடு இணைத்துப் பேச வேண்டிய கால்நடைசமூக வாழ்வியலும் ஒன்றுக்கொன்று தக்க முரணில்லாமல் பின்னிப் பிணைந்தே செயலாற்றியுள்ளன. இவற்றில் தெய்வ உருவாக்கங்கள் முதன்மையளிக்கின்றன.பொதுவாக தெய்வப் பரவுதல்  உற்பத்திச்சமூகத்திற்கும் கால்நடைச் சமூகத்திற்கும் சில காரணிகளை  தொகுத்தளித்துள்ளது. 

ஆதி மனிதன் இயற்கையின் ஊடாட்டத்தால் பிணையப்பட்டவன்.  புரிதலற்ற வாழ்வியல்கூறுகள் சமநிலையற்றதன்மையும், ஒழுங்குமுறையற்ற வாழ்க்கைச்சூழலும் அச்சமூக மனிதர்களில் வாழ்நிலையில் ஆழ்ந்த தாக்கங்களை உருவாக்கின.  கண்களால் கண்ட இயற்கையும் புலன்களில் மட்டுமே உணரக்கூடிய ஒலிக்கூறுகளும் அவர்களின் வாழ்வியலில் மிக நுட்பமான அடையாளங்களை உருவாக்கின.  குறுகிய தன்மைமையுடைய அவர்களின் இருப்புக்குள் இனக்குழுவுக்குள் பயம் கலந்த கால நகர்வை கடத்தவே பற்றுக்கோடாக சடங்குகள் தோன்றின. இத்தன்மையிலிருந்தே  வழிபாடுகள் இனக்குழு வாழ்வில் தொடங்கப்பெற்றன.  சடங்குளின் நுட்பமான தன்மையிலிருந்து தொடக்கம் பெற்ற  தெய்வ உருவாக்கங்கள்  படிநிலை வளர்ச்சியில் எடுத்துக்கொண்ட கால இடைவெளியில்   சமூக மனங்களின் ஏற்பட்ட மாற்றங்களையும் உள்ளடக்கியே பிணைப்பட்டுள்ளன.

Continue Reading →

ஆய்வு: நீதி பாடிய ஒளவையாரும் அறம்செய்தலும்

முன்னுரை:   
- முனைவர்.பா.சத்யா தேவி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09 -தமிழ் இலக்கிய பரப்பில் ஒளவையார் பாடியதாகப் பல்வேறு இலக்கியங்கள் காணப்படுகின்றன.  அந்த வரிசையில் சங்ககாலத் திணைப் பாடல்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, விநாயகர் அகவல், ஞானக்குறள், அசதிக்கோவை, நன்னூற் கோவை, நாண்மணிக்கோவை, நான்மணிமாலை, அருந்தமிழ் மாலை, தரிசனப்பத்து, பந்தனத்தந்தாதி, தனிப்பாடலில் ஒருபாடல், திருவள்ளுவமாலையில்; அமைந்துள்ள ஒரு வெண்பா போன்ற இலக்கியங்களின் ஆசிரியர் ஒளவையார் என்பதாகக் காணப்படுகின்றன.  ஆயினும், இவற்றை ஒருவரே எழுதியிருக்க வாய்ப்பில்லை.

ஒளவையார் பெயரில் காணலாகும் இவ்விலக்கியங்கள் ஒரே காலட்டத்தைச் சார்ந்ததை அல்ல.  வெவ்வேறு காலகட்டச் சமூக அமைப்பையும், அச்சமூக அமைப்பின் கருத்தியல், பண்பாட்டு இலக்கியக் கொள்கை அமைவுகளுக்கு ஏற்பவும்; அமைந்திருப்பவை.  எனவே இவற்றையெல்லாம் ஒருவரே பாடியதாகக் கொள்ள முடியாது. வேறுவேறு காலத்தில் வாழ்ந்த கவிஞர்களே ஒளவை எனும் பெயரில் எழுதியிருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாகும்.  வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தாகக் கருதப்படும் பல ஒளவைகளைக் கலவையாக்கி ஒரே ஒளவை என்பதான சிந்தனைத் தோற்றம் தமிழ்ச் சிந்தனை மரபில் திணிக்கப்பட்டிருக்கிறது.  இருப்பினும் ஒளவையார் என்னும் உருவகம் தமிழ்க் கவிதைப் பரப்பில் தொடர்ந்து வந்திருப்பதால் ஒளவையார்களை வகைப்படுத்தியும் ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர்.

ஒளவையார் இத்தனை பேர்தான் என வரையறுப்பதிலும் கருத்து வேறுபாடுகள் உண்டு.  இருப்பினும், ஒளவைகள் மூவர் என்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் வரையறுக்கின்றனர்.  “சங்க கால ஒளவையார் அகம், புறம் இரண்டையும் அகவற்பாவால் பாடியவராகையால் அவரது பாடல்களில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் ஏற்பட வாய்பில்லை. இரண்டாம் ஒளவையார் பாடியனவாகக் கருதப்படும் நீதி நூல்களான ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகியன ஒரே பாடு பொருளை உள்ளடக்கியமையாலும் அவற்றுள் ஒன்றுக்கொன்று கருத்து முரண்பாடமையாலும், தொகுப்பு நூல்களாக அமைந்தவையாலும் அவர் பாடியனவாக ஏற்கத்தக்கன.  மூன்றாம் ஒளவையார் தனிப்பாடல்களைப் படைத்தவராகவும் சிற்றிலக்கிய வகைகளைப் படைத்தவராகவும் ஏற்கத்தக்கவராவார்”1 என்ற மு.பழனியப்பன் கருத்தும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.  இதன் மூலம் ஒளவையார் என்ற பெயரில் மூவர் இருந்துள்ளனர் என்று வரையறுக்கலாம்.  இதில் அறநெறியும் பக்தியும் பாடிய இடைக்கால ஒளவையாரின் பாடல்களே இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

Continue Reading →

கவிதை: மழைப் பயணி! – எம்.ரிஷான் ஷெரீப் –

ஆங்காங்கே தேங்கியிருக்கும் சகதிகளோடு
மழை நனைத்த ஒற்றையடிப் பாதை
ஈரமாகவே இருக்கிறது இன்னும்

ஊதா நிறப் பூக்களைக் கொண்ட
தெருவோர மரங்கள்
கிளைகளிலிருந்து காற்று உதிர்க்கும் துளிகளினூடு
நீரில் தலைகீழாக மிதக்கின்றன

Continue Reading →