திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்குமான பொது விதியாகவும், குழந்தையைப் பெற்று வளர்த்தும், சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், தம் வாரிசை பெறுவதற்குமான காரணியாகவும் பொதுப்படையாகக் கருதப்படுகிறது. எனின் உலகளவில் மனிதக் குழுக்கள் செய்து கொண்ட திருமண முறைகள் கால ஓட்டத்திற்கு ஏற்ப பலவகையில் நிகழ்ந்திருக்கின்றது. இதனை ஆராய்ந்து, பல சமூக விஞ்ஞான ஆய்வாளர்கள் திருமணம் பற்றி பல்வேறு கருத்துரைகளை எடுத்துரைத்தனர்.
இனக்குழு வாழ்வு தொடங்கி தாய்வழிச் சமூகம், தந்தை வழி சமூகமாக நிலைபெற்ற பின்னர் வரையும் பல வகையில் குடும்பச் சூழல்களும் திருமண முறைகளும் மாறுபட்டு வந்திருக்கின்றன என்பதை முதற்கண் புரிந்து கொள்ள வேண்டும். திருமண வரையறைகள் ஏன் உருவாக்கப்பட்டது என்பதற்கு, பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில்,
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (தொல். பொருள் – II நூ. 43)
என்று சமூகத்தில் பொய்யும், தவறான பாலியல் ஒழுக்கக் கேடுகளும் தோன்றிய பின்னரே பெரியோர்கள் திருமணம் என்ற வரையறையை ஏற்படுத்தினர் என்பார்.
திருமணம் – அறிஞர் கருத்துக்கள்
Google – இணைய தளத்தில் Marriage, a prominent institution regulating sex, reproduction, and family life, is a route into classical philosophical issues such as the good and the scope of individual choice, as well as itself raising distinctive philosophical questionsலl .. என்று விளக்கிச் செல்கின்றது. அதாவது,
உலகெங்கும் ஓர் ஆண், ஓர் பெண்ணுடனும் ஒரு பெண் சில ஆண்களுடனும், ஒரு ஆண் சில பெண்களுடனும், திருமணம் செய்து கொண்டு இருவரும் பிரிந்து பின்னர் வேறொருவருடனும் யென பலவகை போக்கில் நிகழ்கின்ற அனைத்து முறைகளையுமே திருமணம் என்ற சொல்லாலேயே அடக்குகின்றது. சாதாரணமாக ஆண், பெண் பார்த்து காதல் வயப்பட்டு நிகழும் திருமணம் முதல், வானில் பறந்து கொண்டே மணம் செய்து கொள்கின்ற புதிய முறையும் எல்லோரும் நம்மை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற வேட்கையுடனும், சாதாரண பந்தலிட்டும், உலகமே வியக்கும் அளவிற்குமென பல நிலையில் மணமுறைகள் நிகழ்ந்திருக்கின்றன, இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.