கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 2018-19 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபை அங்கத்தினர் தெரிவு!

கனடாவில் கடந்த 25 வருடங்களாக இயங்கிவரும்  கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமையன்று 19-05-2018 ஸ்காபுறோ நகரில் நடைபெற்றது. புதிய இயக்குனர் சபைக்கான தேர்தல் (2018) நடைபெற்றபோது தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகசபையினரின் பதவிகளுக்கான தெரிவில் போட்டி எதுவுமின்றி அனைத்து பதவிகளுக்கும் பின்வருவோர் சபையினால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்

Continue Reading →

தமிழகத்தில் நூல்கள் வாங்கு ஆர்வமுள்ளவர்கள் கவனத்துக்கு: அறிமுகம் – எழுத்தாளர் ஸ்ரீராம் விக்னேஷ் ,Srirham Vignesh, (வவுனியா விக்கி)

தமிழகத்தில் நூல்கள் வாங்கு ஆர்வமுள்ளவர்கள் கவனத்துக்கு: அறிமுகம் - எழுத்தாளர் ஸ்ரீராம் விக்னேஷ் ,Srirham Vignesh, (வவுனியா விக்கி) எழுத்தாளர் ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலிதமிழகத்திலிருந்து நூல்களை வாங்க ஆர்வமுள்ளவர்களுக்கு நான் நண்பரொருவரை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். அவர் என் பால்ய காலத்து நண்பர்களிலொருவர். நண்பர் வவுனியா விக்கியே எழுத்தாளர் ஸ்ரீராம் விக்னேஷ் (Srirham Vignesh). அவர்களையே நான் அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். நீங்கள் வாங்க விரும்பும் புதிய நூல்களென்றாலும் சரி, உங்களது இளமைக்காலத்தில் நீங்கள் வாசித்த ‘பைண்டு’ செய்த படைப்புகள் அல்லது அக்காலகட்டத்தில் வெளியான நூல்கள் எவையென்றாலும் அவர் தன்னால் முடிந்த வரையில் தேடி, நியாயமான கட்டணத்தில் அனுப்புவார்.

நான் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த நூல்களிலொன்று: ஆரம்பகால ராணிமுத்துப் பிரசுரமாக வெளியான எழுத்தாளர் ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’. என் பால்ய காலத்தில் நான் வாசித்த என்னைக் கவர்ந்த நூல்களிலொன்றென்பதால் , ஒரு நினைவுக்காக அந்நூலை வாங்க விரும்பினேன். அவரிடம் கூறினேன் இந்நூலை எங்காவது பழைய புத்தக் கடையில் கண்டால் வாங்க விருப்பமென்று. அவர் உடனேயே பழைய புத்தகக் கடைகளெல்லாம் தேடி , கடையொன்றில் அந்நூலைக் கண்டு பிடித்தார். ஆனால் அட்டையில்லாமலிருந்த நூலினையே அவரால் கண்டு பிடிக்க முடிந்தது. இந்நிலையில் எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தன் முகநூலில் பகிர்ந்திருந்த ஆரம்ப கால ராணிமுத்துப் பிரசுரங்களின் அட்டைப்படங்களிலொன்றாக ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’யுமிருந்தது. அதனை நான் என் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அவர் அவ்வட்டைப் படத்தைக்கொண்டு அழகான அட்டையொன்றினை உருவாக்கி, அட்டையற்ற நந்திவர்மன் காதலிக்கு அதனை அணிவித்துக் கூரியரில் அனுப்பியிருந்தார். அதற்காக அவருக்கு நன்றி.

கூடவே அக்காலகட்டத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளியான ஜே.எம்.சாலியின் ‘கனாக் கண்டேன் தோழி’ யின் பைண்டு செய்யப்பட்ட தொகுப்பினையும் கண்டெடுத்து அனுப்பினார். அத்தொடர் நாவலில் ஓவியர் ஜெயராஜ் வரைந்த சில ஓவியங்களையும் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். இளம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல் விதவையின் மறுமணத்தைப்பற்றியும் பேசுகின்றது. நாவலில் அவ்வப்போது வரும் காவிரி ஆற்றங்கரைக் காட்சிகளும், மொழி நடையும் படிப்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொள்வன.

Continue Reading →

‘ஞானம்’ சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு! (சிறு குறிப்பு)

'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு! (சிறு குறிப்பு)'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு! (சிறு குறிப்பு)நேற்று மாலை (18.05.2015) எழுத்தாளர் தேவகாந்தனுடன் ‘ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்’ ஏற்பாடு செய்திருந்த , தற்போது கனடாவுக்கு வருகை தந்திருக்கும் ‘ஞானம்’ இதழாசிரியர் எழுத்தாளர் தி.ஞானசேகரன் தம்பதியினருடனான இலக்கியச்சந்திப்புக்குச் சென்றிருந்தேன். நிகழ்வில் கனடாவில் கலை, இலக்கியத்துறையில் நன்கு அறியப்பட்ட பலரைக் காணக்கூடியதாகவிருந்தது. குறிப்பாக எழுத்தாளர்களான அ.முத்துலிங்கம், மனுவல் ஜேசுதாஸ், அகணி சுரேஷ், அகில், தேவகாந்தன், பார்வது கந்தசாமி, சி.பத்மநாதன், ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா, ‘சோக்கலோ’ சண்முகநாதன், முருகேசு பாக்கியநாதன், ‘காலம்’ செல்வம், த.சிவபாலு, முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர்.. எனப்பலரைக் காணக்கூடியதாகவிருந்தது.


நிகழ்வு முள்ளிவாய்க்காலில் மரணித்த அனைவருக்குமான மெளன அஞ்சலியுடன் ஆரம்பமாகியது. அதனைத்தொடர்ந்து எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினை நிகழ்த்தினார். அதிலவர் இலங்கையில் வெளியான தமிழ்ச்சஞ்சிகைகளின் பங்களிப்பு பற்றி, குறிப்பாக முதலாவது சஞ்சிகையான கே.கணேசின் ‘பாரதி’ தொடக்கம் ‘ஞானம்’ சஞ்சிகை வரையிலான இலக்கியப்பங்களிப்புகள், அவற்றின் முக்கியத்துவம் பற்றிச் சுருக்கமாக எடுத்துரைத்தார். தனது முதலாவது சிறுகதை ஞானம் சஞ்சிகையிலேயே வெளியானதெனவும், மேலும் சிறுகதைகள் வெளியானதாகவும், தனது நாவலொன்று ஞானம் வெளியீடாக வெளியானதாகவும் தனது உரையிலவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.


அதனைத்தொடர்ந்து ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரான எழுத்தாளர் தி. ஞானசேகரன் ‘ஈழத்தின் இன்றைய இலக்கியச் செல்நெறி’ என்னும் தலைப்பில் சுமார் 45 நிமிடங்கள் வரையில் நீண்டதொரு உரையினை நிகழ்த்தினார். தான் கூறவேண்டியவற்றை, மிகவும் திறமையாகத் தயார் படுத்தி வந்திருந்தார் என்பதை அவரது தான் கூற வேண்டிய பொருள் பற்றிய தெளிவான உரை புலப்படுத்தியது. அவரது உரையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான கருத்துகள் சில வருமாறு:


1. அண்மையில் நிகழ்ந்த முப்பதாண்டுப் போரின் விளைவாக உருவான இரட்டைக் குழந்தைகளாக நாட்டில் படைக்கப்பட்ட போர்க்கால இலக்கியத்தையும், நாட்டில் நிலவிய அரசியல் நிலை காரணமாகப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் படைத்தபுலம்பெயர் இலக்கியத்தையும் குறிப்பிடலாம்.


2. அக்காலகட்டத்தில் உருவான இலக்கியம் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ஞானம் சஞ்சிகை போர்க்கால இலக்கியச் சிறப்பிதழ், புலம்பெயர் தமிழர் இலக்கியச் சிறப்பிதழ் போன்றவற்றை வெளியிட்டுள்ளது.

Continue Reading →

பிரமிளா பிரதீபனின் கட்டுபொல் நாவலும் ஈழத்துப் பின்காலனிய இலக்கியமும்

பிரமிளா பிரதீபன்பிரமிளா பிரதீபனின் கட்டுபொல் நாவலும் ஈழத்துப் பின்காலனிய இலக்கியமும்முதலில் இந்த நாவல் வெளியீட்டைப்பற்றிச் சிறிது சொல்ல வேண்டும். இந்த நாட்டின் முக்கியமான ஒரு தனியார் புத்தக வெளியீட்டு நிறுவனமான கொடகே புத்தக நிறுவனம் வருடந்தோறும் நூற்றுக்கான நூல்களை வெளியீட்டு வருகிறது. அது சிங்களம் மற்றும் ஆங்கில நூல்களை மட்டுமே வெளியிடாது, கடந்த 8 வருடங்களாக மேலாகச் சுயமான தமிழ் நூல்களைவெளியீட்டதும், தமிழ் நூல்களைச் சிங்களத்திலும், சிங்கள நூல்களைத் தமிழிலும் வெளியிட்டதும், அவர்கள் நடத்தும் கொடகே சாகித்திய விழா, கையெழுத்துப் பிரதிகளுக்கான போட்டிகள் நடத்தி விருதுகளும் பணப்பரிசில்கள் வழங்கல் மற்றும் மூத்த எழுத்தாளர்களைக்கெளரவித்தல் போன்ற சகல நிகழ்வுகளிலும் தமிழ் எழுத்தாளர்களை இணைத்துக் கொண்டு சிங்கள எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அதே அளவான கெளரவத்தையும் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 2017 ஆம் ஆண்டுக்கான கையெழுத்துப் போட்டியில் சிறந்த நாவலுக்கான விருதினைப் பெற்றுக்கொடகே நிறுவனத்தினாலேயே நூலாக பிரமிளாபிரதீபனின் கட்டுபொல் எனும் இந்த நாவல் பிரசுரமாகி இருக்கிறது.

கட்டுபொல் எனும் இந்த நாவல் ஈழத்து நாவல் இலக்கியத்தில் குறிப்பாக மலையக நாவல் இலக்கியத்தில் மிகக்கவனத்தினைப் பெறுவதற்குக் காரணம் இது வரை காலம் மலையகச் சமூக அரசியல் துறையினராலும் மலையக இலக்கியத்தின் புனையாக்கத்துறையிலும் பேசப்படாத ஈழத்தின் தென்பகுதி பெருந்தோட்டப் பகுதி ஒன்றின் மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது என்ற வகையிலும், இதுவரை இந்தப் பெருந்தோட்டத்தின் பயிர் செய்கையான கட்டுபொல்(முள் தேங்காய்) எனும் பயிர் செய்கை பற்றிப் பேசுகின்ற,அப்பயிர் செய்கையில் ஈடுபடும் மக்களின் வாழ்வியலையும் பேசுகின்ற முதல் மலையக நாவல் என்ற வகையிலும் இந்த நாவல் நமது கவன ஈர்ப்பைப் பெறுகிறது.

அடுத்து ஈழத்துப் பின்காலனிய இலக்கியமாகவும் இந்த நாவல் வெளிப்பட்டிருப்பதும் இந்த நாவல் முக்கியத்துவம் பெறுவதற்கான பிரதானக் காரணியாகிறது.

ஈழத்துப்பின்காலனிய இலக்கியம் என்ற நோக்கில் 60களுக்கு பின்னான ஈழத்து மலையகத் தமிழ் இலக்கியம் முன்னிலை வகிக்கின்றது. ஈழத்து மலைய தமிழ் இலக்கியத்தை ஈழத்துப் பின்காலனிய இலக்கியமாகப் பார்ப்பதற்கு என்ன தேவை, என்ன பொருத்தப்பாடு இருக்கிறது என்பது கேள்விகள் எழலாம்.

பின்காலனிய நிலவரத்தின் முக்கிய ஒர் அம்சமாக நிலம் இழந்தவர்களின் குரல் என்பது சொல்லப்படுகிறது. காலனியத்தால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக ஈழத்து மண்ணுக்குக் கொண்டு வரப்பட்டு, பெருந்தோட்டப் பயிர் செய்கையில் ஈடுபடுத்தப்பட்டு, பல தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்து மடிந்து, சுதந்திர இலங்கை என்ற என்று சொல்லப்பட்டாலும் காலனிய மனோபாவம், காலனியச் சமூகக் கட்டமைப்பின் எச்சொச்சங்கள், காலனிய அரசியல் சட்ட அமைப்பின் தொடர்ச்சி போன்ற நிலவரங்களின் காரணமாக அந்த மலையக மக்கள் இலங்கை தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட, காலனிய ஆட்சி தொடக்கம் பின்காலனிய கால ஆட்சி வரை பல இன்னல்களையும் துயரங்களை அனுபவித்த, அத்தகைய நிலைமைகளுக்கு எதிராகப் போராடிய, நிலம் இழந்தவர்களின் குரலாக மலையகத் தமிழ் இலக்கியம் வெளிப்பட்டதன் காரணமதாக அது ஈழத்துப் பின்காலனிய இலக்கியப் போக்கில் முதன்மையான அடையாளத்தினைப் பெறுகிறது.

Continue Reading →

அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம்

அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம் தஞ்சையை விட அதிக விறுவிறுப்பும், பரபரப்பும் கொண்டு இயங்கும் நகரம் கும்பகோணம் என்பதை காண்பவர் யாவரும் உணருவர். இதற்கு காரணம் இங்குள்ள பாடல் பெற்ற தளங்கள் தாம். அதிலும் கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்கள் பலவும் 12 ராசிக்குரிய அதிபதிகளை, சிறப்பாக 9 கோள்களை முதன்மைப்படுத்தும் வகையினவாக உள்ளன. இவை எல்லாம் கும்பகோணத்தை சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளன.இதனால் 9 கோள்களின் தோஷம் நீங்க  பரிகாரம்
செய்யவேண்டி பலவேறு ஊர்களிலிருந்து மக்கள் நாள்தோறும் வருவதால் கும்பகோணம் ஒரு ஆன்மீகத்  திருச்சுற்றுலா தலமாக உள்ளது. அதன் காரணமாகவே இவ்வூரில்  பல தங்கும் விடுதிகள், கடைகள்  என சுற்றுலாவினால் தொழில்வளமையும் பொருளியல் வளமையும்  பொங்குகிறது. திருச்செலவு தான் இவ்வூர் இயக்கத்திற்கு உயிர்நாடி.

இவ்வூரில் பல கோவில்கள் அமையப்பெற்றாலும் கல்வெட்டு, சிற்பம் பழமை ஆகியவற்றில் முதன்மையானது என குறிக்கத்தக்க பெருமை உடைய கோவில் .அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில்.. ஆதி கும்பேசுவரர் கோவில் போல் மிகப் பெரிதாக இல்லாவிட்டாலும் மக்கள் கூட்டம் நிரம்பி இராவிட்டாலும் சிறப்பு என்னவோ இந்த கோவிலுக்கு தான்.

பொதுவாக கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்களில் கருவறையையோ  அல்லது மண்டபத்தையோ ஒட்டி  தேர்ச்சக்கரங்கள் பொருத்தி குதிரை பூட்டி இழுப்பது போலவும் யானை இழுப்பது போலவும் கட்டி இருக்கிறார்கள். இது கட்டடபாணி பிற்கால சேர்கையாக இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தொண்டைமண்டல கோவில் தூண்களில் புடைப்பு சிற்பம் இருப்பது போல இக்கோயில்களில் புடைப்பு சிற்பம் அவ்வளவாக காணப்படாமல் பூக்கோலம், மரம், கொடி போன்றவையே அதிகமாக பொதுவாக வடிக்கப்பட்டுள்ள்ளன. மேலும் பல மண்டபத் தூண்கள் கருநாடக கோவில்  கட்டட அமைப்பை கொண்டுள்ளதானது இவை விசயநகர ஆட்சியில் 14  ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன, அதிக எண்ணிக்கையில் பணியாளர்களை அமர்த்தி இக்கோயில்கள் நன்றாகக் பேணப்பட்டு வருகின்றன.

Continue Reading →

அஞ்சலிக்குறிப்பு: ” எழுத்துச்சித்தர் “பாலகுமாரன் நினைவுகள்

அஞ்சலிக்குறிப்பு: " எழுத்துச்சித்தர் "பாலகுமாரன் நினைவுகள்” என்னுடைய கன்டென்ட் கஷ்டமானது, அதனால் நடையும் அப்படித்தான் இருக்கும். ” என்று சொல்லும் பாலகுமாரன், வித்தியாசமாக எழுதுகின்ற எழுத்தாளர் வரிசையில் முதன்மையானவரும் முக்கியமானவருமாவார். ஆரம்பத்தில் கணையாழியில் எழுத ஆரம்பித்த இவர், பின்னர் சாவி, மோனா, தாய், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பரவலான சஞ்சிகைகளில் தனது வீரியமான கதைகளை விதைக்கத்தொடங்கினார். ஜிகினா வேலைசெய்து வாசகரை ஏமாற்றி இருட்டுக்கு இட்டுச்செல்லும் சில கதாசிரியர்கள் செய்யும் வேலையைச்செய்யாது, யதார்த்தங்களை அப்படியே சாயம் பூசாமல், மனதால் மட்டுமே எழுதிக்காட்டுபவர் பாலகுமாரன். இவரது நாவலான ‘ மெர்க்குரிப்பூக்கள்’ இவருக்கு கனதியான அந்தஸ்தத்தை தேடித்தந்தது. படுத்திருந்த பல வாசகர்களை இது நிமிர வைத்தது. அயர வைத்தது. போராட்டத்தைப்பற்றி சிந்திக்கவைத்தது. சின்னச்சின்ன வட்டங்கள் இவரது முதல் சிறுகதைத்தொகுதி. அதைத்தொடர்ந்து வந்தவைய, ஏதோ ஒரு நதியில், அகல்யா, மௌனமே காதலாகி, இரும்புக்குதிரை என்பன. இதைத்தவிர, நான் என்ன சொல்லிவிட்டேன், சேவல் பண்ணை, கல்யாண முருங்கை, என்றென்றும் அன்புடன், பனிவிழும் மலர் வனம், முதலிய வித்தியாசமான மாத நாவல்களையும் எழுதியுள்ளார்.

“பாலகுமாரன் இன்னமும் பேசப்படுவார். அவரால் நாவல் இலக்கியமும் பேசப்படும் என்பது முகமூடி அணியப்படாத உண்மை” இந்த வரிகளை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரே வீரகேசரியில் இலக்கியச்செய்திகள் என்ற வாராந்த பத்தியில் எழுதியிருக்கின்றேன். அக்காலத்தில் அவரும் இளைஞர். கறுத்த மீசையுடன் அவரது படத்தையும் பதிவுசெய்து அந்தப்பதிவை எழுதியிருந்தேன். நேற்று 15 ஆம் திகதி அவர் சென்னையில் மறைந்தபின்னர் மீண்டும் அவர் நினைவுகளை மீட்டி இந்த அஞ்சலிக்குறிப்புகளை அவரது வெண்ணிற மீசை, தாடி தோற்றத்துடன் இந்தப்பதிவை எழுத நேர்ந்திருக்கிறது.

வாசிப்பு அனுபவமும் வயது வித்தியாசத்தினால் மாறிக்கொண்டே இருக்கும். ஜெயகாந்தனின் எழுத்துக்களை தீவிரமாக வாசித்துக்கொண்டிருக்கையில், தி. ஜானகிராமனும், கி. ராஜநாராயணனும், இந்திரா பார்த்தசாரதியும் இடையில் வந்து இணைந்தார்கள். இவர்களை வாசித்துக்கொண்டிருக்கையில் பாலகுமாரன் 1978 இற்குப்பின்னர் நெருங்கினார். அவரது எழுத்து நடை சற்றுவித்தியாசமாக இருந்தது. அவர் எழுதிய தாயுமானவன் என்ற நாவலில் என்னையும் கண்டுகொள்ளமுடிந்தது. அப்பொழுது நானும் ஒரு தந்தையாகியிருந்தமையும் முக்கிய காரணம். நான் மாத்திரமல்ல பல இளம் குடும்பத்தலைவர்களும் அந்த நாவலில் தங்களை இனம் கண்டார்கள். அதனால் பாலகுமாரன், அக்காலப்பகுதியில் என்னையும் கவர்ந்த படைப்பாளியானார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 282 : எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு!

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுஎழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு பற்றிய செய்தியைப் பலர் முகநூலில் பகிர்ந்துகொண்டிருக்கின்றார்கள். எண்பதுகளில் தமிழகத்து வெகுசன இதழ்களில் பிரபலமாக விளங்கிய எழுத்தாளர். தமிழ்த்திரையுலகிலும் கால் பதித்தவர். இவர் வெகுஜன இதழ்களில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் நான் வெகுசன இதழ்களை விட்டு விலகி விட்டிருந்தேன். அவ்வப்போது பார்ப்பதோடு சரி. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் படைப்புகள் ஏதும் வந்தால் மட்டும் வாங்குவதுண்டு. அதனால் பாலகுமாரனின் எழுத்துகள் எவையும் என்னைக் கவர்ந்திருக்கவில்லை. கல்கி, நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், சாண்டில்யன், அகிலன், ‘நைலான் கயிறு’, ‘அனிதா இளம் மனைவி’ காலத்து சுஜாதா, மீ.ப.சோமு, ர.சு.நல்லபெருமாள், பி.வி.ஆர், .. என்று வெகுசன இதழ்களில் ஆதிக்கம் செலுத்தியவர்களுக்குப் பிறகு என்னை பிறகு உருவான வெகுசன எழுத்தாளர்கள் எவருமே கவரவில்லை. ஆனால் வெகுசன எழுத்துகளை வழங்கிய, வழங்கும் எழுத்தாளர்கள் மேல் மதிப்பு வைத்திருப்பவன் நான். வாசகர்களின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டியவர்கள், தூண்டுபவர்கள் இவர்கள். அவ்வகையில் இவர்களது படைப்புகள் முக்கியமானவை.

Continue Reading →

முள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்

முள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்முனைவர் ஜூட் லால் பெர்ணாண்டோ (Dr Jude Lal Fernando) – இக்கட்டுரை குளோபல்தமிழ்நியூஸ்.நெற் இணையத்தளத்தில் வெளியான கட்டுரை. நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள்

– கட்டுரையாளரான முனைவர் ஜூட் லால் பெர்ணாண்டோ (Dr Jude Lal Fernando) டப்ளின் டிரினிட்டி கல்லூரியைச் சார்ந்த ஐரிஸ் ஸ்கூல் ஆஃப் எக்குமெனிக்ஸில் அமைதி மற்றும் இணக்க மேம்படுத்தல் துறையில் உயராய்வு மேற்கொள்வதோடு அங்கு விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். இலங்கையின் களனியிலுள்ள துலானா என்னும் மதம் சார்பான உரையாடல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர். டிரினிட்டி கல்லூரியில் 2010இல் இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தை ஒருங்கிணைத்தவர். –


அறிமுகம்
மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள் குறிப்பிட்ட அரசியல், கருத்தியல் களங்களிலேயே பிரயோகிக்கப்படுவதால் அந்தக் களங்கள் விமர் சனத்திற்குள்ளாக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகள் பற்றிய உண்மைகளைக் கூறும் முழுமையான எடுத்துரைப்பு ஒன்று எட்டப்பட வேண்டும். இந்த வன்கொடுமைகள் பற்றிய எடுத்துரைப்புகளை நோக்கினால், எவ்வாறு உண்மைகள் நோக்கப்படுகின்றன என்பதையும், நீதி, புனரமைப்பு (justice and recovery) பற்றிய எதிர்பார்ப்புகள் எவ்வாறு அமைகின்றன என்பதையும் சித்தாந்தம்தான் முடிவுசெய்கிறது என்பதை இந்தக் கட்டுரை நிறுவ முற்படுகிறது. இந்தப் பணியைச் சந்தேகக் கண்ணோடு அணுகுவது அரசியல் சிந்தனையில் மிகச் சரியான எடுத்துரைப்பு வெளிப்படவும் நீதிக்கும் புனரமைப்புக்குமான விசாலமான முன்னெடுப்புகளை அடையாளங்காட்டவும் உதவும்.

எண்ணிலடங்காத மரணங்கள்
ஐ. நா. விபரங்களின்படி நான்கு மாதங்களே நீடித்த இறுதிக்கட்டப் போரில், குறைந்தது 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இலங்கை அரசால் நிறுவப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக் குழுவின் (LLRC) முன்னால் சான்று வழங்கிய மன்னார் ஆயர் 1,46,679 தமிழர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார். இந்த எண்ணிக்கையை இலங்கை அரசால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வத் தரவுகளிலிருந்து அவர் பெற்றுள்ளார்.

இத்தகைய அதிர்ச்சியூட்டும் வகையிலான பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பற்றிய உண்மையை எவ்வாறு சரியாக அரசியல் சிந்தனையில் எடுத்தியம்ப முடியும்? சர்வதேசச் சட்டம் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு, அமைதிக்கெதிரான குற்றம் ஆகியன உள்ளிட்ட சட்ட, கோட்பாட்டு வகைப்பாடுகளை முன்வைக்கிறது. இந்த வகைப்பாடுகளுக்கேற்ப இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகளை எடுத்துரைத்தால் அது புனரமைப்புக்கும் மீளலுக்கும் எத்தகைய முன்னெடுப்புகள் தேவையென்பதைத் தீர்மானிக்கும்.

Continue Reading →

Memories of late K.G Amaradasa -an Ardent Tamil Literary Lover & Advocate for National Unity

K.G Amaradasa“Some might say that if a Sinhala man marries a Tamil woman or a Tamil man marries a Sinhala woman, then national unity will be born. I don’t think so. If people of different ethnic origin get married, only the children would be born as a natural consequence” quipped Ven. M Ratnavansa Thero- a Buddhist monk much loved and respected by Tamil writers and community members alike.

Late K.G. Amaradasa is someone of similar calibre who also held the strong belief that national unity is not a one -way street. He is a remarkable man who learned and excelled in the Tamil literature and who pioneered the way in introducing the great Tamil national poet Mahakavi Barathiyar to the Sinhala people.

Due to the introduction of the controversial Sinhala Only legislation in 1950s and the promotion of Sinhala as a compulsory subject in the curriculum, a large number of Tamils who held government positions learned Sinhala and mastered that language. Many Tamil writers also proceeded to learn Sinhala literary forms and translated them in Tamil. Sinhala cinema and drama productions were also subject of Tamil literary critique. In contrast, there was little or no reciprocal engagement by Sinhala literary figures and community members with the Tamil language and its rich literature. K.G Amaradasa was one of the handful of Sinhala writers who deeply regretted this situation and recognized that it ought to change even as early as 1970s.

He was a man of resolution who acted on his preaching. He learned Tamil and was able to speak our language fluently. His Tamil pronunciation had the beauty a child ‘s utterances and he also had the dedication to constantly ask his Tamil friends for feedback so that he can improve his Tamil language command. The warmth and generosity of his character was something deeply endearing.

He made his entry into the literary world in 1957. Only gradually he grasped the bitter reality of the ethnic question unfolding at the time. He envisioned  that preserving the millennium long Sinhala -Tamil relationships from the devastating political catastrophe is an utmost duty of each and every writer of that divisive era.

He embarked on translating many Tamil literary works and introduced them to the Sinhala readers through newspapers. As he commenced working at the Department of Cultural Affairs he became a friend of many Tamil literary figures and writers. It is said that “Friends are not born -they are created”. The strong friendship that flourished between K.G Amaradasa and many Tamil writers was a living proof of this.

Continue Reading →