An Ideal Manual for Electronic Broadcasters

வி.என்.மதியழகனின் 'சொல்லும் செய்திகள்'From the humble beginnings as an Operational Assistant (spinning discs and assisting in production of programmes) in the studios of Radio Ceylon, V N MathiAlagan gained practical and theoretical aspects of electronic broadcasting, step by step, and rose to the highest position as Deputy Director General of Broadcasting. He is a humble and pleasant man with dedication to his chosen field with immense talents and shone over the airways as the first Thamil newsreader over the first TV station in Lanka the ITN, and later the Rupavahini and proving himself as an efficient administrator in radio broadcasting too.

At the beginning of the present century he emigrated to Canada and presently work for the TVI Channel (Tamil Vision Inc.) as a Senior Broadcaster.

He was in Lanka last week to launch his worthwhile book of 150 pages titled “V N. MathiAlagan- Sollum Seithigal” (meaning the NEWS (he) SAYS)

The book is priced at Rs 1000 and printed by Kaanthalaham in Chennai.

SriLankan Radio (then called Radio Ceylon and later SLBC) was and is very popular broadcasting medium in South Asia for its friendliness shown by broadcasters in different tongues-English, Thamil, Sinhala, Hindi, Malayaalam, Telugu and Kannada.

But now, sad to say, with the number of private radio TV stations coming up, the focus is on cheap entertainment and catering mostly to the not so culturally inclined younger people. The electronic media is e flooded with broadcasters descending to lower standards, thereby insulting the majority of listeners and viewers who expect information and cultivated cultural items. The audience expect that the broadcasters should play a role model to the listening and viewing public. The accepted standards of using the medium of language deteriorated, and young people not properly understanding the nature of radio/tv broadcasting enter the field using clichés and inappropriate ‘ad lib bing’, lowered the standards of speech over these channels.

But not all broadcasters are to be blamed for the misuse of broadcasting etiquette.

It is at this point, that this book in Thamil serves the good purpose of educating the etiquette in broadcasting, particularly in radio / tv journalism and the quintessence of good broadcasting.

The author acknowledges the pioneer TV personalities, the late Thevis Guruge, and Sharmini Boyle by using their colour photographs in the back of the front cover and dedicates the book to his wife, who is the woman behind his success. There are 15 chapters plus comments by others in the form of introductions and forewords and wishes.

In his well-written pieces in clear language, he primarily stresses on the language of the spoken word and news presentation. Simple language is rightly recommended by him. He also mentions the collective responsibility in gathering news and rendering them. He also writes about the current methods of News communication in the electronic media. He cautions of how correct pronunciation matters, behind the news, perfect translation into native languages, newsroom studios among other things

Continue Reading →

யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்

– எழுத்தாளர் பற்றிய குறிப்பு: வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க

கவிதை, சிறுகதை, கட்டுரைகள் ஆகிய துறைகளில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனது பங்களிப்பை ஆற்றி வரும் திரு. ருவண் எம் ஜயதுங்க, இலங்கை இராணுவத்தின் மன நலப் பிரிவில் மருத்துவராக கடமையாற்றியவர்.  அத்தோடு இலங்கை சுகாதார அமைச்சின் புத்தளம் மாவட்டத்துக்கான மன நல உத்தியோகத்தராகவும் கடமையாற்றியவர். ஜோன் எப். கென்னடி, வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற தலைவர்கள் குறித்தும், மன நல மருத்துவம், சிறுகதைத் தொகுப்புகள்  என சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். –


எரிந்த நிலையில் யாழ் நூலகம்

வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க

யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்த நபரொருவர் எனக்களித்த வாக்குமூலத்தை பல வருடங்களுக்குப் பிறகு நான் எழுதுகிறேன். இந்த நிகழ்வு குறித்து நான் தனிப்பட்ட பதிவேதும் எழுதவில்லை. எனினும் 2002 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட எனது ‘பிரபாகரன் நிரூபணம் குறித்த மனோவியல் ஆய்வு’ எனும் தொகுப்பில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நபரை, 1994 ஆம் ஆண்டு நான் மாத்தளை வைத்தியசாலையில் கடமையாற்றிய காலத்தில் சந்தித்தேன். அவர் எனது பகுதி நேர நோயாளியாகவிருந்தார். பகுதி நேர நோயாளி என நான் குறிப்பிடுவது ஏனெனில், அவருக்கு ஆரம்பத்திலிருந்து சிகிச்சையளித்த வைத்தியர் நானல்ல. எனினும் அவரது உடல் ரீதியான வியாதிகள் சிலவற்றுக்கு நான் சில வைத்திய அறிவுரைகளைக் கூறியிருந்ததாலும், அவருக்கு சில மருந்துகளை இலவசமாகக் கொடுத்ததாலும் அவர் எனக்கு சினேகமாகியிருந்தார். நான் இங்கு குறிப்பிடப் போவது அந்த நபர் என்னிடம் கூறியதைத்தான். இந்தத் தகவல்கள் உண்மையானவை, பொய்யானவை போன்ற விடயங்களை வாசகர்களின் தீர்மானத்துக்கு விட்டு விடுகிறேன். (ஓய்வுபெற்ற சிரேஷ்ட போலிஸ் பிரதி காவலதிகாரி எட்வட் குணதிலகவால் முன்வைக்கப்பட்ட ‘ஆய்வறிக்கை’யின் பிரகாரம், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது விடுதலைப்புலிகள் இயக்கத்தினரது செயல்பாடாகும். அதற்கு சிங்களவர்கள்தான் காரணம் எனக் காட்டி சர்வதேச மக்களின் அனுதாபத்தை வென்றெடுப்பதே அவர்களது நோக்கமாகும்.)

இந்த வாக்குமூலத்தை அளித்த நபரது உத்தியோகம் என்னவாகவிருந்தது என்பதை நான் கூற மாட்டேன். காரணம் அது சர்ச்சைக்குரியதாகவும், ஈழ ஆதரவாளர்களால் இந்த விடயமும் கூட அவர்களது பிரசார தந்திரமாகப் பாவிக்கப்படக் கூடும் என்பதனாலுமாகும். எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அவர் வடக்கில்தான் இருந்திருக்கிறார்.

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களோடு, ஆசியாவிலிருந்த விசாலமான நூலகங்களிலொன்றான யாழ்ப்பாண நூலகத்துக்கு 1981 ஆம் ஆண்டு, மே மாதம் 31 ஆம் திகதி தீ வைக்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் யாழ்ப்பாண அபிவிருத்திக் குழுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததோடு, கொழும்பிலிருந்து சென்றிருந்த காடையர்கள் யாழ்ப்பாணத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவாறு இருந்தனர். இந்த நிகழ்வானது இனவாதக் கலவரங்களின் திருப்புமுனையாக அமைந்தது.

Continue Reading →

பல்லவன் கல்வெட்டில் குழப்பம்

மாமல்லபுரச்சிற்பங்கள்ஒரு கல்வெட்டைப்  படித்து அதன்  பாடத்திற்கு துலக்கமான விளக்கம் தந்து உலகிற்கு வெளிக் கொணர்வோர் மிகக்குறைவு. இப்படி வெளிவந்த கல்வெட்டு பாடத்தையும் விளக்கத்தையும் நம்பித்தான் வரலாற்று ஆர்வலர்கள், எழுத்தாளர்கள்  தமது எழுத்தை அமைகின்றனர். இத்தகையோர் எழுத்துகளைத் தான் பல ஆயிரம் மக்கள் படிக்கின்றனர். கல்வெட்டு வாசிப்பிலும் விளக்கத்திலும் தவறு இருந்தால் அதை பின்பற்றி வரும் எழுத்தாளர் எழுத்து அனைத்தும் தவறாகவே இருக்கும். மக்களுக்கு தவறான செய்தியே சென்று சேரும்.

அயல் நாடுகளில் தனியார் தொல்லியல் முயற்சி மேற்கொண்டு அதன் அடிப்படையில் ஆய்வு முடிவுகளை சிறப்பாக வெளியிடுகின்றனர். இந்தியாவில் அவ்வாறான முயற்சி குறைவாகவே உள்ளது. ஆதலால் நடுவணரசு தொல்லியல் துறையும் (ASI), மாநில அரசுகளின் தொல்லியல் துறையும்  தான் அரசு மானியத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுநூல்களை வெளியிடுகின்றன.

கீழ்க்காணும் கல்வெட்டு பல்லவ மன்னன் கொடுத்த கொடை பற்றியது. இதில் உள்ள குழப்பம் தீர்க்க வேண்டியுள்ளது. நான் சொல்லும் கருத்தே சரி என்று சொல்ல முடியாது.  மாற்று கருத்தும் ஏற்புடையதே. 

ஸ்வஸ்தி ஸ்ரீ [கோவி] / [ராஜ]கேஸரி பந்மக்கு யாண் / டு 15 ஆவது அண்டாட்டு / குற்றத்து நீங்(க்)கிய — — / – – – த் திருப்புறம்(ப்) பியத்து ப / [ட்டா]லகர்க்கு பல்லவப் பேரரையர் / வீர[ஸி]காமணிப்  பல்லவரை /- – – சந்த்ராதித்தவ(ற்) லெரிக்க / வைத்த நொந்தா விளக்கு 1 ஒ[ந்] / றி[னி]க்கு  நிச[த]மு[ம்]  உழக்கு னெ / [ய்]க்கு வைத்த சாவா மூவாப் / பேராடு 90 தொண்ணூ / று   பந்மாஹேஸ்வர ரக்ஷை

விளக்கம்: கோவிசய என்பதன் குறுக்கமே கோவி என்பது. கோவி ராசகேசரி பன்மர் என்பது முதலாம் ஆதித்ய  சோழனை குறிக்கின்றது என்றால் அந்த வகையில் இக்கல்வெட்டு அவனது 15 ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டுள்ளது என்றால்  அதன் காலம் கி.பி. 885 என்று ஆகிறது.  ஆதித்ய   சோழன் அபராஜித்தனை கி.பி. 897 ல் போரிட்டு கொல்லும் வரை  அபராஜித்த பல்லவன் தான் வேந்தன் ஆதித்ய  சோழன் அவனுக்கு அடங்கிய மன்னன். கல்வெட்டு மரபுப்படி வேந்தன் பெயரும் ஆட்சி ஆண்டும் தான் முதலில் தொடங்க வேண்டும்.   மேலுள்ள கல்வெட்டு  கோவி ராசகேசரி பன்மர் என்று குறித்துவிட்டு பல்லவனை பேரரையர் (மன்னன்) என்கிறது. இதாவது, சோழனுக்கு பல்லவன் கட்டுப்பட்டவன் என்பது போல உள்ளது.

Continue Reading →

The return of the English Disease? உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்

“காலடியில் வந்து சேரும் பந்து என்னுடையதல்ல, அது என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. நீதான் கோல் போட வேண்டுமென ஒரு போதும் நினைக்காதே. உனக்குப் பெரும் தடைகள் சூழ்ந்து வரும்போது, பந்தை மேல் எடுத்துச் செல்ல வசதியுடன் உன் சக ஆட்டக்காரர்கள் காத்துக் கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே”.  – சுந்தரராமசாமி ( ஜே.ஜே. சில குறிப்புக்களில்) –


The return of the English Disease?  உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்  மீண்டும் உலக கால்பந்து போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளது. உலகின் பெரும்பாலான மக்கள் அதனால் பின்னப்பட்ட மாய வலையின் பிரமிப்பிலிருந்து விடுபடாமல் குடும்பங்கள், வேலைகள், நோய்கள், கடன் சுமைகள் என அனைத்து பிரச்சினைகளையும் மறந்து அதில் லயிக்க ஆரம்பித்து விட்டனர். சாதாரண அடித்தட்டு மக்கள் மட்டுமன்றி, படித்தவர்கள், அறிவு ஜீவிகள், சமூக அக்கறையுள்ளவர்கள் கூட அதன் பிடியில் சிக்குண்டு ஒரு வித போதையுணர்வோடு தமக்கு பிடித்தமான அணியின் வெற்றி தோல்விகளுக்கு பின்னான களிப்பிலும் கலக்கத்திலும் மாள்ந்து போயுள்ளார்கள்.

கால்பந்து – ஆதியில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சீனாவில் ஆரம்பிக்கப் பட்டு பின்பு இங்கிலாந்தில் நவீனமயப்படுத்தப் பட்டு இன்று People Game  என்று சொல்கின்ற அளவிற்கு உலகின் பெரும்பாலான மக்களின் வாழ்வில் (அமெரிக்கா, இந்தியா போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர) பின்னிப் பிணைந்துள்ள ஒரு அற்புதமான விளையாட்டு ஆகும். ஆயினும் இம் மக்கள் விளையாட்டானது இன்று முற்று முழுதாக வணிகமயப் படுத்தப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களினதும் பல வணிக நிறுவனங்களினதும் கைகளுக்குள் சிக்குண்டு அதன் தனித் தன்மையை இழந்து வருகின்றது. அத்துடன் ஊழல் மிகுந்த பல அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் கறை இதற்குப் பின்னால் எவ்வளவு தூரம் உள்ளன என்பதுவும் இன்று மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. இதற்கு உதாரணமாக 2022 உலக பந்து தொடரிற்காக Qatar தெரிவு செய்யப்பட்ட முறையும் அதன் பின்னால் நடை பெற்ற பல்லாயிரக்கணக்கான கோடி டொலர்கள் ஊழலையும் நாம் குறிப்பிடலாம். இதன் காரணமாக உலக கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் இருந்து அதன் தலைவர்  Sepp Platter  அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டமையும் நாம் அறிந்தவையே.

Continue Reading →

“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது” அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் கருத்தாடல் களத்தில் கலாநிதி அமீர் அலி உரை.

"தமிழ் - முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது" அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் கருத்தாடல் களத்தில் கலாநிதி அமீர் அலி உரை.“தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர். முஸ்லிம் என்பது ஒரு மதத்தவரின் பெயர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் மொழிவாரியாக நோக்கின் தமிழரே. எனவே தமிழரென்ற பெயரை மொழிவாரியாக மட்டும் உபயோகப்படுத்தினால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் மட்டுமல்ல அம்மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட அனைவருமே தமிழராகின்றனர். அதேபோன்று இஸ்லாத்தைப் பின்பற்றும் எவ்வினத்தவராயினும் அவர்கள் முஸ்லிம்களே. ஆகவே, தமிழரென்பது எவ்வாறு ஒரு தனிப்பட்ட இனத்தவருக்குமட்டும் சொந்தமான பெயராக இருக்க முடியாதோ அதேபோன்று முஸ்லிம் என்பதும் ஒரு தனிப்பட்ட இனத்தவரின் பெயராக இருக்க முடியாது. ” என்று கடந்த ஞாயிறன்று மெல்பனில் நடைபெற்ற ‘தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தில் எழுத்தாளர்களின் வகிபாகம்’ என்னும் தலைப்பில் உரையாற்றிய கலாநிதி அமீர் அலி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் மெல்பன், வேர்மண் தெற்கு சமூக இல்லத்தில் கடந்த ஞாயிறன்று மாலை நடைபெற்ற கருத்தாடல் களம், சங்கத்தின் நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதியின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.

மேற்கு அவுஸ்திரேலியா  மேர்டொக் பல்கலைக்கழகத்தின் பொருளியற் துறை விரிவுரையாளரும் எழுத்தாளரும் ஆய்வாளருமான கலாநிதி அமீர் அலி, தொடர்ந்தும் பேசுகையில், ” ஒரு திராவிடரோ சிங்களவரோ சீனரோ இஸ்லாத்தைத் தழுவிவிட்டால், அவர் தன்னை முஸ்லிமென்று அழைப்பதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை இச்சிக்கல் ஏன் தெளிவடையாமல் ஒரு தீராத பிரச்சினையாகவும் நல்லிணக்கத்தைக் குலைப்பதொன்றாகவும் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரிடையே இன்றுவரை நிலைத்திருக்கின்றது? 

தமிழ்ப் பேசும் மக்கள் என்ற போர்வைக்குள் முஸ்லிம்களை உள்ளடக்கியமை ஓர் அரசியல் உபாயமேயன்றி அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு வழியல்ல. நல்லிணக்கம் தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலா? தமிழரென்ற இனத்துக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலா? என்பதை ஆராயின், தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நல்லிணக்கம் அன்றுமிருந்தது, இன்றுமிருக்கிறது, இன்னுமிருக்கும்.

Continue Reading →

சாதாரண மக்களின் விடிவுக்காக பேனா பிடித்த படைப்பாளி நாவேந்தன்..!

‘கரும்பூறும் நறும்பாகும் கற்கண்டும்
கனிரசமும் கலந் தொன்றாய்
அரும்போதின் தேனமுதோ அலைகடலின்
திருவமுதோ அன்றி வீணை
நரம்போதும் இன்னிசையோ எனவியந்து
நயந்து கடல்மடை திறந்தாலென்ன
வரும்போது அவன்பேச்சில் இறும்பூது
எய்தாதார் யாருமில்லை..!”

நாவேந்தன்கவிஞர், ஆசிரியமணி சி. நாகலிங்கம் அவர்களால் இவ்வாறு புகழ்ந்துரைக்கப்பட்ட முதுபெரும் எழுத்தாளர் – பேச்சாளர் நாவேந்தனின் பதினெட்டாவது  நினைவு    தினம் 10 – 07 – 2018 அன்று ஆகும்..! யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தாபகராகவும் அதன் முதற் செயலாளராகவும் இலங்கை இலக்கிய இரசிகர் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்ட நாவேந்தன் யாழ். மாநகரசபையின் பிரதிமேயராகவும் திகழ்ந்துள்ளார்..! சாதாரண மக்களின் விடிவுக்காகப் பேனாபிடித்த படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் நாவேந்தன். அவர் சாதாரண மக்களின் பிரச்சினைகளை – அவர்களது ஆசாபாசங்களை வாழ்வியல் முரண்பாடுகளைத் தமது சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர். அவரது சிறுகதைகள் வெறும் கற்பனைகளல்ல. அவை யதார்த்த பூர்வமானவை. சமூகத்தினரிடையே புரையோடிப் போயிருக்கும் அழுக்குகளை அப்புறப்படுத்தவும் சமூக அவலங்களையும் அறியாமைகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டி சமூக மாற்றத்தின் தேவைகளை உணர்த்தவும் அவரது எழுத்துக்கள் பெரிதும் உதவின. மானுடம் பயனுற விரும்பும் இலக்கிய ஆக்க முயற்சிகளில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகத் தம்மை அர்ப்பணித்து தொண்டாற்றியவர். அவர்    பன்முகத் திறன்கொண்ட படைப்பாளி. ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான இவர் சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், விமர்சகர், கவிஞர், பேச்சாளர், தொழிற்சங்கவாதி எனப் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். அவர் மறைந்து பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் மக்கள் மனதில் அவரது பணிகள் நிலைத்து நிற்பதை நிதர்சனமாகக் காண முடிகிறது.

அமரர் நாவேந்தன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். த. திருநாவுக்கரசு என்பது இவரது இயற்பெயராகும். இவரது பேச்சாற்றலைக் கண்டு அன்று தமிழரசுக்கட்சித் தலைவர் ”கோப்பாய்க் கோமான்” கு. வன்னியசிங்கம் ‘நாவேந்தன்” என்று பாராட்டினார். அன்றுதொட்டு நாவேந்தன் என்னும் புனைபெயராலேயே ஈழத்திலும் தமிழகத்திலும் நன்கறியப்பட்டவராகத் திகழ்ந்தார். தமது பதினைந்தாவது வயதில் ‘இந்து சாதனம்” மூலம் எழுத்துத்துறையில் புகுந்த இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், கவிதை, விமர்சனம் எனப் பல்வேறு துறைகளில் தமது எழுத்தாற்றலைப் புலப்படுத்தியுள்ளார். ”சுதந்திரன்” பண்ணையில் வளர்ந்த எழுத்தாளர்களுள் நாவேந்தனுக்குச் சிறப்பிடமுண்டு. சுதந்திரன் பத்திரிகையிலேயே அவரது பெரும்பாலான படைப்புக்கள் பிரசுரமாகியுள்ளன. நாவேந்தனின் தமிழ் நடை தனித்துவமானது. கொஞ்சும் தமிழிலும் குமுறும் எரிமலை நடையிலும் எழுதும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். அவர் நடத்திய ‘சங்கப்பலகை” இதழில் எழுதிய விமர்சனங்கள் இதற்குத்தக்க சான்றாகும்.

Continue Reading →

Likely Festival Film

கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

Senior journalist Jayantha Chandrasiri’s newest film Gharasarpa shown at the Tharanga theatre of the National Film Corporation on Friday last drew many admirers and the house was full with viewers sitting on the steps inside the hall. As an invitee I sat in one of the front rows amidst distinguished and many VIP. Although the screening started a little later than the scheduled time, it was worth waiting for more than an hour. The full-packed audience patiently watched the film till the end in pin drop silence. One reason why all the spectators waited till the end was perhaps they also wanted to eat their dinner that was ready to be served after the show. The other reason is of course the interesting images that were moving in close-ups in the wide screen that made the audience curious to know what’s next to be shown.

It was curious for me because I had never seen on the screen the Kalu Kumariya antics and the presence of Catholic priest and the venerable attention by the pious villagers, the choir rendition and people at praying and the religious rites performing. And the excellence of the cinematographer with meaningful shots that exhibited the nuances of the body language and the characters facial expression.

Apart from the obvious features in a good film (and the audience consisted knowledgeable and finetuned and mature cinegoers in understanding of what true cinema would be in its presentation), the subtitle in English helped non – Sinhala people t follow the story with ease.

But what is the story? Most of us are conditioned to expect a watered-down story line in a film to judge whether it is a good film or not. The Scene near the end – lasting about 8 to 10 minutes- when the married lady doctor and the married professor meet after so many years is a memorable sequence I liked best was because it was handled by the director and the cinematographer very well without any dramatization. It is a natural performance with   hesitation but with concrete assertion by the female character and the shock and uneasiness on the part of the male character were acted well. The respective players were Sangeetha Weerarathna and Kamal Addaraarachi.

I was happy to see Kamal after a long spell and he proved here beautifully, as a jovial, married Professor but with seriousness and with a purpose in uttering his thoughts and maintaining a cool demeanor.

Sangeeetha acted with dexterity as a professional doctor cool but showing her hidden excitement without over acting. She looked beautiful. Thanks to the makeup and hairstylist Indika Udara Lanka.

Sriyantha Mendis looked different from his normal appearance and played his role as the catholic priest.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 287 : யாழ் கோட்டையில் இராணுவமுகாமும், இலங்கையின் எதிர்காலமும்; யாழில் தலைவிரித்தாடும் வன்முறைகளும், சண்டியர்களும்!

யாழ்  கோட்டைக்குள் இராணுவ முகாம்புத்தரின் கண்ணீர்‘ட்விட்ட’ரில் கண்ட இச்செய்தி என் கவனத்தை ஈர்த்தது. யாழ்ப்பாணத்திலுள்ள ஒல்லாந்தரின் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு இலங்கைத் தொல்லியற் திணைக்களம் அனுமதியளித்துள்ளதாம். அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் புகைப்படங்களையும் அச்செய்தியில் காண முடிந்தது. கரிகாலன் garikaalan‏ @garikaalan என்பவரின் ‘ட்வீட்’ இது. ஆச்சரியமென்னவென்றால் முகநூலில் இது பற்றிய செய்திகள் எதனையும் கண்டதாக நினைவிலில்லை. இச்செய்தி உண்மையாகவிருக்குமானால் இலங்கை அரசு தவறிழைக்கின்றதென்றே கூற வேண்டும். யாழ்நகரின் மத்தியில் கோட்டைக்குள் இராணுவமுகாம் அமைப்பதே முட்டாள்தனமானது. காலம் மீண்டுமொருமுறை ஆயுதபோராட்டமொன்றினை உருவாக்குமானால் (தென்னிலங்கையில் முதற் புரட்சியில் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட ஜே.வி.பி மீண்டெழுந்து பதினேழு வருடங்களுக்குப் பின்னர் ஆயுதப்புரட்சி செய்யவில்லையா) மீண்டும் அன்று மாதிரி கோட்டை மீதான முற்றுகைக்குள் சிக்கப்போவது இம்முகாம் இராணுவத்தினரே..

உபகண்ட அரசியலில் இந்தியா மீண்டும் இலங்கைத்தமிழர்களின் பிரச்சினையைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்த மாட்டாது என்பதற்கு உத்தரவாதமெதுவுமில்லை. இலங்கை எவ்வளவுக்கு எவ்வளவு சீனாவின் பிடிக்குள் செல்கின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்தியா மீண்டும் இலங்கைத்தமிழர்களின் பிரச்சினையைத் தனது துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தவே முனையும். மேலும் களத்தில் விடுதலைப்புலிகளுமில்லை. இந்தியாவின் சார்பு முன்னாள் ஆயுதப்போராட்ட அமைப்புகளே உள்ளன. எனவே இந்தியா மிகவும் இலகுவாக இலங்கைப் பிரச்சினைக்குள் உள் நுழைய முடியும்.

இலங்கையின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் புத்திசாலிகளென்றால் இலங்கைத்தமிழர் பிரச்சினையை முற்றாகத் தீர்த்து வைப்பார்கள். அதன் மூலம் இந்தியாவின் அழுத்தங்களிலிலிருந்து தப்பலாம். இதுபோன்ற இராணுவ மயமாக்கல் நடவடிக்கைகள் மீண்டும் இலங்கையை யுத்த பூமியாகவே மாற்றும். ஜே.வி.பி.க்கு மீண்டும் உயிர்த்தெழ சுமார் 17 வருடங்கள் பிடித்தது. தமிழர்களின் யுத்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகளே கடந்துள்ளன. இன்னும் எட்டு ஆண்டுகளில் என்னவெல்லாமோ நடக்கலாம்? யார் கண்டது?

Continue Reading →

சிறுகதை: வேதாளம் சொன்ன ‘சாட் ‘ கதை!

சிறுகதை: வேதாளம் சொன்ன ‘சாட் ‘ கதை!– “வேதாளம் சொன்ன ‘சாட்’ கதை” என்னுமிந்தச் சிறுகதை திண்ணை ஆகஸ்ட் 12, 2001 இதழில் வெளியான எனது சிறுகதை.  நானே மறந்திருந்த இச்சிறுகதை அண்மையில் என் கூகுள் தேடலில் மீண்டும் வந்தகப்பட்டுக்கொண்டது. முனைவர் வெங்கட்ரமணனின் ‘திண்ணைச் சிறுகதைகள் தேர்விலொரு சிறுகதையாக’ அத்தேடலில்  என்னை மீண்டும் வந்தடைந்த சிறுகதையிது. –


முற்றும் மனந்தளராத விக்கிரமன் வழக்கம் போல் முருங்கையிலேறி வேதாளத்துடன் இறங்கிய பொழுது, எள்ளி நகைத்த வேதாளம் அவனைப் பார்த்துப் பின் வருமாறு கூறத் தொடங்கியது.

‘ விக்கிரமா! நான் ஒரு கதை கூறப் போகின்றேன். இது சைபர் உலகு பற்றியதொரு கதை. இதற்கான கேள்விக்குாிய பதிலைத் தொிந்திருந்தும் நீ கூறாது விட்டாயானால் உன் தலை வெடித்துச் சிதறி சுக்கு நூறாகி விடும். ‘ இவ்விதம் ஆரம்பித்த வேதாளம் தன் கதையினைக் கூற ஆரம்பித்தது.


ராமநாதன் அன்று மிகவும் ஜாலியான மனோநிலையில் இருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் மனைவி பானுமதி வேலைக்குப் போய்விடுவாள். அவள் செய்வது ‘கிரேவ்யார்ட் சிவ்ட் ‘. நள்ளிரவிலிருந்து காலை வரை கனடாவின் பிரபல வங்கியொன்றின் தகவல் மையத்தில் வேலை. ராமநாதன் ஜாலியான மனோநிலையில் இருந்ததற்குக் காரணமிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் ‘சாட் ‘டில் ஒரு சிநேகிதி அகப்பட்டிருந்தாள். இதுதான் அவன் முதன் முறையாக ஒரு பெண்ணுடன் சாட் செய்வது. கடந்த இரண்டு நாட்களாக ஒருவிதமான கிளூகிளுப்பு. புது மாப்பிள்ளை போன்ற உற்சாகம். அவனில் தொிந்த மாற்றத்தை பானுமதியும் கவனித்துக் கொண்டிருந்தாள்.ஆனால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பானுமதி வேலைக்கு இறங்குவதற்கு ஆயத்தமானாள்.

‘என்னங்க, அப்ப நான் போயிட்டு வரட்டா ‘

‘ம்.. ‘ ராமநாதன் கணினியை ‘ஆன் ‘ பண்ணினான்.

‘என்ன நான் சொல்லுவது காதில் விழுகிறதா ? ‘ பானுமதியின் குரலில் சிறிது கடுமை தொிந்தது.

‘குழந்தை கட்டிலோரத்திலை படுத்திருக்கு..பார்த்துக் கொள்ளுங்க…பால் கரைத்து வைத்திருக்கிறேன். அழுதாலெடுத்துக் குடுங்கோ.. ‘

‘ம்.. ‘

‘ உணவெல்லாம் வெளியிலை இருக்கு. சாப்பிட்டதும் ஃபிரிட்ஜிற்குள் வைத்து விடுங்கோ..என்ன ? ‘

‘டோண்ட் வொரி  ஐ வில் மனேஜ் இட்.. நீர் போய் வாரும் ‘

‘இப்பிடித்தான் எப்பவும் சொல்லுவீங்க..விடிய வந்தால் எல்லாம் வெளியிலை கிடக்கும்.. எத்தனை தரம் கொட்டியாச்சு..கொஞ்சமாவது கவனம் இருக்குதாயென்ன ? ‘

Continue Reading →