அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள் 3: வள்ளூவர் நினைவு!

அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள் 3: வள்ளூவர் நினைவு!

– -வேலணையூர்த் தொல்காவியன் மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில்  அறிஞர் அ.ந.கந்தசாமி பாடியவை. நவீனத்தமிழ் இலக்கியத்தில் வள்ளுவரைப்பற்றி வெளிவந்த சிறந்த கவிதையிது. –

வள்ளுவனார் செய்திட்ட நிறைநூலைப் போற்றி
வாழ்த்தெடுக்க வந்திட்டேன் வண்கவிஞர் மன்றில்
தெள்ளுதமிழ்த் தீங்கவிதைத் தேனமுதம் நல்கும்
தெவிட்டாத நடராசர் கவியரங்கின் தலைவர்
விள்ளுகவி கேட்டோம்; பிறர் கவியும் கேட்டோம்
வேலணையூர் வீசுபுகழ் தொல்காவியன் மன்றில்
வள்ளுவனார் புகழ்பாட வாய்த்ததொரு வாய்ப்பு
வாய்ப்பளித்த பண்டிதர்க்கு என்னுளத்தின் வாழ்த்து.

பாட்டாலே உலகத்தைக் கவர்ந்திட்ட பேரில்
பைந்தமிழர் தம்மிடையே வள்ளுவர்போல் யாரே?
பாட்டாளிக் கவிஎனவே அன்னவனைப் போற்றிப்
பரவிடுவேன் அதற்கும்பல ஆதாரம் சொல்வேன்
நாட்டினிலே மிகச்சிறந்த நெசவென்னும் கலையை
நற்றொழிலாய்க் கொண்டிட்ட கவியரசர் கோமான்
பாட்டாக வடித்தெடுத்தான் அநுபவத்தின் கோர்வை
பாரெல்லாம் போற்றுததை தமிழ்வேதம் என்றே.

Continue Reading →

அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள் 2: அன்னையார் பிரிவு!

அன்னை கஸ்த்தூரிபா

ஒப்பரிய காந்தியரி னொப்பில் லாத
ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்
செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்
தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்;
இப்புவிதான் கலங்கிடவும் இந்தியத்தாய்
அழுதரற்றிக் கூவிடவும் இறந்துபட்டாள்;
இப்பெரிய துன்பந்தான் இதயந் தன்னை
ஈர்க்குதே இந்தியர்கள் வேர்க்கின்றாரே!

பாரதத்தின் மக்களெல்லாம் காந்திதம்மைப்
பண்புடைய பிதாவென்றும் அம்மையாரைச்
சீருதவும் செவ்வியளாம் மாதாவென்றுஞ்
சிந்தையிலே நினைத்திருந்தார் அந்தோ வின்று
நீருகுத்து நிலைகலங்கல் ஆனா ரன்னை
தனைப்பிரிந்தே வாடுகின்றார்; நீளுந் துன்பம்
பாரிடத்தெ கொண்டுவிட்டார் செயல்ம றந்து
பரிதவித்துப் பதறுகின்றார் என்னே துன்பம்!

Continue Reading →

அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள் 1: ரவீந்திரர்!

அ.ந.கவின் கவிதை: ரவீந்திரர்

இந்து தேசத் திணையில் கவிஎனும்
முந்து வரகவி காளி தாசனின்
இந்த நாளின் அவதார மோவென
வந்தவன் ரவீந்த்ர நாத தாகுரே.

வெள்ளி வெண்சிகை வெண்ணிறத் தாடியும்
கள்ளமிற் கருணை காலும் கண்களும்
விள்ளுதற் கரிய கவிதை வேகம்
துள்ளிடும் உள்ளமும் கொண்டவன் தாகுரே.

வங்க நாடு வழங்கிய வண்கவி
எங்கணும் புகழெய்திட ஏதமில்
துங்கமார் கீதாஞ்சலியாம் துய்யநூல
மங்கிடா தொளிர்தர யாத்தளித்தனே.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 295: ஶ்ரீலங்கா சஞ்சிகையின் கலை, இலக்கியப்பங்களிப்பும், அ.ந.கந்தசாமியின் படைப்புகளும்!

ஶ்ரீலங்கா இதழொன்றுஅறிஞர் அ.ந.கந்தசாமி‘ஸ்ரீலங்கா’ சஞ்சிகை இலங்கைத் தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தமிழ்ச் சஞ்சிகை. ஆகஸ்ட் 1950 – டிசம்பர் 1963 காலகட்ட இதழ்கள் பல (தொடர்ச்சியாக அல்ல) நூலகம் இணையத்தளத்திலுள்ளன. இவற்றைப் பார்த்தபோதுதான் ஈழத்தமிழ்இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பினைச் செய்த சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகையையும் காண முடிந்தது.


அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் போன்றவர்கள் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணி புரிந்த காலகட்டத்தில் , அவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகை இச்சஞ்சிகையென்று அறிந்திருக்கின்றேன்.ஆனால் சஞ்சிகையின் முன் அட்டையில் அரசாங்க சமாச்சாரப் பகுதியால் வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசிப்பக்கத்தின் அடியில் தகவற் பகுதியினருக்காக இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றிய விபரமெதனையும் காணவில்லை.
ஆனால் இச்சஞ்சிகையின் உருவாக்கத்தில் அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் ஆகியோரின் பங்களிப்பினை சஞ்சிகையில் வெளியான படைப்புகள் வாயிலாக அறிய முடிகின்றது. இருவருமே இச்சஞ்சிகை வெளிவந்த காலகட்டத்தில் இலங்கைத் தகவற் திணைக்களத்தில் பணி புரிந்து கொண்டிருந்ததாலும், இருவருமே நாடறிந்த எழுத்தாளர்கள் என்பதாலும் ‘ஶ்ரீலங்கா’ சஞ்சிகையின் ஆசிரிய பீடத்தினை அலங்கரித்தவர்களாக அறிந்த தகவல் உண்மையென்றே தோன்றுகின்றது.


இலங்கைத் தகவற் திணைக்கள வெளியீடு என்பதால் அரசு பற்றிய , அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய சஞ்சிகையாக இச்சஞ்சிகை விளங்கினாலும், ஈழத்தமிழ்க் கலை, இலக்கியத்துக்குக் காத்திரமான படைப்புகளையும் கூடவே வெளியிட்டுள்ளதால் , ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் முக்கிய சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகை விளங்குகின்றது எனலாம்.


கவிதை, சிற்பக்கலை பற்றி, ஆலயக் கட்டடக்கலை பற்றி, பல்லினச் சமூகங்கள் பற்றி, ஊர்களைப்பற்றி, கந்தரோடை, நல்லூர் போன்ற நகர்கள், அரசின் பல் வகை நீர்ப்பாசனத்திட்டங்கள் பற்றி, பரந்தன் இரசாயன, வாழைச்சேனைக் காகிதத் தொழிற்சாலைகள் பற்றி, ஆதிவாசிகளான குறவர்கள் பற்றி இவ்விதம் இச்சஞ்சிகையின் களம் விரிந்தது. மிகுந்த பயன் தருவது. அறிஞர்கள், எழுத்தாளர்கள் எனப்பலரின் படைப்புகள் பலவற்றைத்தாங்கி வெளியாகிய சஞ்சிகை ஶ்ரீலங்கா. அவ்வகையில் தவிர்க்க முடியாத கலை,

இதுவரை இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாறு பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் பேராசிரியர்கள் , எழுத்தாளர்கள் பலர் இனிமேலாவது இது போன்ற காத்திரமான கலை, இலக்கியப் பங்களிப்பு செய்த சஞ்சிகைகள் பக்கமும் கவனம் செலுத்தட்டும்.


“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. ” என்னும் வள்ளுவனாரின் குறளுக்கொப்ப ஆய்வுகளைக் காய்தல், உவத்தலின்றிச் செய்யட்டும்.


இலக்கியச் சஞ்சிகை.நூலகத் தளத்திலுள்ள ஶ்ரீலங்கா சஞ்சிகைகளில் காணப்படும் அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகள் வருமாறு: