வாசிப்பும், யோசிப்பும் 298 : இலங்கைப்புகலிடத் தமிழர்களின் ‘நாடுகடந்தஉள்ளூர்த் தேசியம் (Translocal Nationalism)!

 கலாநிதி ஞானசீலன் ஜெயசீலன்இலங்கைப்புகலிடத் தமிழர்களின் ‘நாடுகடந்தஉள்ளூர்த் தேசியம் (Translocal Nationalism) : வ.ந.கிரிதரனின் தேர்தெடுத்த சிறுகதைகள் மீதான வாசிப்பு! – கலாநிதி ஞானசீலன் ஜெயசீலன் (The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora: A Reading of Selected Short Stories of V.N. Giridharan By Dr. Gnanaseelan Jeyaseelan)

நாடு கடந்த அரசு, நாடு கடந்த தேசியம், நாடு கடந்த உற்பத்தி, நாடு கடந்த பொருளாதாரம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கின்றீர்கள். ‘நாடு கடந்த உள்ளூர் தேசியம்’ (Translocal Nationalism) என்னுமொரு சொற்றொடரைக் கேள்விப்பட்டிருக்கின்றீகளா? குறிப்பாக எமது விமர்சகர்களிடமிருந்து கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? கேட்டிருந்தால் அறியத்தாருங்கள். ஆனால் நான் முதலில் இச்சொற்றொடரை அறிந்து கொண்டது 2007இல். அப்பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றிக்கொண்டிருந்த கலாநிதி ஞானசீலன் ஜெயசீலனின் ஆய்வுக்கட்டுரையொன்றிலிருந்து. அக்கட்டுரையை அவர் மார்ச் 13, 2007 அன்று சென்னையில் ‘நியூ காலே’ஜில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுக் கருத்தரங்கில் சமர்ப்பித்திருந்தார். அக்கருத்தரங்கானது ஆசியர்களின் புகலிடப் புனைவுகளில் காணப்படும் அடையாளம் மற்றும் கலாச்சாரப்பிரச்சினைகள் பற்றியது. அதற்காக அவர் எடுத்துக்கொண்ட புனைகதைகள் ஆங்கிலத்தில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்ட எனது சிறுகதைகளான ‘ஒரு முடிவும் விடிவும்’, ‘ஒரு மா(நா)ட்டுப்பிரச்சினை’, ‘மான்ஹோல்’, ‘வீடற்றவன்’, ‘சுண்டெலிகள்’ மற்றும் where are you fom? ஆகியவையாகும்.

நாடுகடந்த உள்ளூர்த் தேசியம் (The ‘Translocal’ Nationalism )

இதற்கு முதல் நாடுகடந்த உள்ளூர்த் தேசியம் என்றால் என்ன? என்று சிறிது பார்ப்போம். புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த குடிவரவாளர்கள் பலரும் பல்வகைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். புகலிடம் நாடிப்புகுந்த மண்ணில் அவர்கள் எதிர்நோக்கும் அடையாளச்சிக்கல்கள் பல்வகையின. மொழி, கலாச்சாரம், நிறம் என்று அவர்கள் பல்வகைப்பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். அதே சமயம் அவர்களால் அவர்கள் விட்டு விட்டு வந்த பிறந்த மண், அங்குள்ள அவர்களை உருவாக்கிய கலாச்சாரக் கூறுகளை, அரசியலை எல்லாம் மறந்து விட முடியாது. நாடு கடந்து வாழும் நிலையிலும் அவர்கள் கவனம் அவர்களது இழந்த மண்ணின் மீதிருக்கும். பிறந்த மண்ணின் அரசியலில் அவர்களது பங்களிப்பு இருக்கும். பிறந்த மண்ணின் பொருளாதாரத்தில் அவர்களது பங்கு இருக்கும். பிறந்த மண்ணின் சமூகத்தில் புகலிட அனுபவங்கள் மூலம் பல் வகை மாற்றங்கள் ஏற்படும் நிலைக்குக் காரணமாகவும் புகலிடக் குடிவரவாளர்களிருப்பார்கள்.

Continue Reading →