கானுலா! காடு இதழ் ஒருங்கிணைக்கும் பயணம்.!

நிகழ்வுகள் & அறிவித்தல்கள்!

கானுலா! காடு இதழ் ஒருங்கிணைக்கும் பயணம்.!
இடம். சத்தியமங்கலம் காடு
நாள்: அக் 13 – 14, 2018 ( சனி, ஞாயிறு)
பயணம் தொடக்கம், நிறைவு –  பனுவல் புத்தக விற்பனை நிலையம். திருவான்மியூர், சென்னை.

Continue Reading →

திருமுக்கூடல் ஒரு பார்வை

திருமுக்கூடல் ஒரு பார்வை

இந்த திருமுக்கூடல் என்பது பள்ளு இலக்கியங்களில் கூறப்படும் முக்கூடல் அன்று. இது 108 திவ்விய தேசமும் அல்லாத பழமைவாய்ந்த விண்ணகர். செங்கல்பட்டிற்கும் காஞ்சிபுரத்துக்கும்  இடையே உள்ள வாலாசாபாத்தில் இருந்து கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்த பழையசீவம் மலைக்கு  எதிர்புறம் பாலாற்றின் தென் கரையில் அமைந்த ஊர் தான் இந்த திருமுக்கூடல். ஏன் இந்த பெயர்? இக்கோவிலுக்கு பின்புறம் உடனடியாக மேற்கே செய்யாறும் வடமேற்கே வேகவதி ஆறும் வடக்கே பாலாறும் ஆக மூன்று ஆறுகள் ஒருமிக்கும் இடம் ஆதனலின் இப்பெயர் பெற்றது. அமைதி சூழ்ந்த இந்த ஆறுகள் ஒருமிக்கும் இடத்தை தேர்ந்தெடுத்து  அங்கே இந்த அப்பன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் விண்ணகரை அமைத்துள்ளனர். பாலத்தில் இருந்து பார்த்தல் மூன்று ஆறுகள் கூடும் தடம் நன்றாகத் தெரியும்

இக்கோயில் சோழர் கால கட்டட க்  கலைப் பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. உருள்வடிவ தூண்களை நிறுத்தி செவ்வையாக கற்றளி அமைத்துள்ளார்கள். இதில் வேறு எந்த கலைப்பாணியின் கலப்பும்  இல்லை ஆதலின் நடுவண் தொல்லியல்  துறை (ASI) இக்கோவிலைத்  தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தஞ்சைப்  பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம் போல இக்  கோவிலினுள் அழகிய தோட்டம் அமைத்து நன்றாகப் பேணிக் காத்து  வருகிறது. இக்கோவிலின் மேற்கு சுவரில் விக்கிரம சோழன் காலத்து கல்வெட்டு உட்பட மொத்தம் 17 கல்வெட்டுகள்  கல்வெட்டுகள் உ ள்ளன. இதில்  சிறப்பிற்குரியது யாதெனில் 60 பேர் தங்கிப் படிக்கின்ற .வேதபாடசாலையும், மருத்துவமனையும் இயங்கியதை குறிக்கும் 55 வரி கொண்ட நெடிய கல்வெட்டு ஆகும்.  இக்கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதி, நாலுகால் மண்டபம்,  ஆகியன பிற்காலத்தில் காலத்தில் கட்டுவிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. ஒருவர் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது இதன் கட்டட அமைப்பை கண்டு வரவேண்டும்.

Continue Reading →

வட திருமுல்லைவாயல் சோழபுரீசுவரர்

வட திருமுல்லைவாயல் சோழபுரீசுவரர் சோழபுரீசுவரம் என்னும் சிவத்தலம் சென்னை அம்பத்தூரை அடுத்து அமைந்த வட திருமுல்லைவாயலில்  இடம் கொண்டுள்ளது.  இங்கிருந்து  புழல் ஏரி 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற மாசிலாமணி ஈசுவரர், கொடியிடை அம்மன் கோவில் வளாகத்தினுள் வடதிசையில் அமைந் துள்ளது. சோழவுரீசுவரர் கோவில் பண்டு சோழர் கட்டிய தொடக்க நிலைக்  கோவிலாகவே இன்றளவும்  உள்ளது.  ஏனென்றால் மாசிலாமணீசுவரர் கோயில் அதனினும் பழமையானது புகழ் மிக்கது என்பதால்  இக்கோவிலை மேலும் வளர்த்தெடுக்காமல் அப்படியே விட்டுவிட்டனர்  எனக் கொள்ளலாம் . கோவில்கள் பண்டு தொடக்கத்தே எவ்வாறு இருந்தன என்பதை அறிய விரும்புவோர் இங்கு வந்து அறியலாம். 

வேந்தர்கள், மன்னர்கள் சதுர்வேதி மங்கலங்களையும் கோவில்களையும் ஆறு பாய்கின்ற இடங்களுக்கு அண்மையிலேயே அமைத்தனர். ஏனென்றால் பண்டமாற்று நிலவிய அக்காலத்தே கோவில் பணியாளர்களுக்கு சம்பளம் என்று ஏதும் கிடையாது  அதற்கு மாறாக அவர்களுக்கு விளைநிலங்கள் ஒதுக்கப்பட்டன. அவர்கள் அவற்றில் பயிர் செய்து அறுவடையாகும் கூலங்களை பண்டமாற்று முறையில் மாற்றி வாழ்க்கை நடத்தலாம் என்ற ஏற்பாடு தான் இதற்கு காரணம். இக்கால் இப்பகுதியில் ஆறு ஏதும் இல்லை. பின் எப்படி பயிர் விளைத்திருக்க முடியும்? இத்தனைக்கும் அக்காலத்தே புழல் ஏரி இவ்வளவு பெரிதாகவும் இருக்கவில்லையே? என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழும். ஒரு கல்வெட்டு  இப்பகுதியை அண்டிய முகப்பேர் நுளம்பூரில் ஆறு ஒன்று ஓடியதை குறிக்கிறது. அந்த ஆறு கூவத்தின் கிளை ஆறாகவோ அல்லது குசத்தலை ஆற்றின் கிளை ஆறாகவோ இருந்திருக்கலாம். ஏனெனில் திருநின்றவூர் தொடங்கி திருமுல்லைவாயில் வரை உள்ள கோவில்கள் இன்று எந்த ஆற்றின் தொடர்பும்  இல்லாமலேயே உள்ளன. ஆனால் அக்காலத்தே எதோ ஒரு ஆற்றின் ஓட்டம்  இல்லாமல் அக்கோவில்களை அமைத்திருக்க மாட்டார்கள்.  கீழ்வரும் கல்வெட்டு அந்த ஐயத்தை போக்கும் சான்றாக உள்ளது.   (பார்வை நூல்: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வட்டுகள் .p.181) 

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் சீராசராச தேவர்க்கு யாண்டு 21 ஆவது ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து காஞ்சிபுரத்து திருவத்திஊர் நின்றருளிய  / அருளாளப்பெருமாளுக்கு துலா நாயற்று பூர்வபக்ஷத்து சதுர்தசியும் நாயாற்றுக்  கிழமையும் பெற்ற ரேவதினாள் நாயனார் கண்டகோபாலதேவர் கேழ்விமுதல்களில் நுளம் / பியாற்றுழான் னாராயணநம்பி  தாமோதரன் பெருமாளுக்கு வைத்த திருநுந்தாவிளக்கு இரண்டு இதில் குறைக்கோன் இளையபெருமாள் விளக்கு ஆறுமா சேவான்மேட்டு சேவைக்கோன் விள / க்கு கால் சிரியக்கோன் கைக்கொண்ட விளக்கு அரைக்கால் வடவாஇள் கோன் கைக்கொண்ட விளக்கு அரைக்கால் வடுகக்கோன்  விளக்கு அரைக்கால் கோயில் நங்கைக்கோன்  விளக்கு / அரைக்கால் யாதரி கைக்கொண்ட விளக்கு  அரைக்கால் கன்னிக்கோன் கைக்கொண்ட விளக்கு அரை இராமக்கொன் கைக்கொண்ட விளக்கு ஆறுமா அரை ஆக விளக்கு  இரண்டுக்கு விட்ட பாற்ப்பசு / இருபதும் சினைப்பசு இருபதும் பொலிமுறை நாகு இருபத்துநாலும் ரிஷபம் இரண்டும் ஆக உரு அறுபத்து ஆறுங்  கைக்கொண்டு  அரிய்யென்ன வல்லனாழியால்  நெய் உரியும் தயிரமுது / நாழியும் கோயிற்த்தேவைய்களும் செய்யக்கடவதாகவுங் கைக்கொண்டு இத்திருநந்தா விளக்கு  சந்திராதித்தவரை  செலு த்தக்கடவோம் பெருமாள் கோயிற் தாநத்தோம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 297 : நாடு கடந்த முதலாளித்துவப் பொருளாதாரமும், அரசும் மற்றும் உற்பத்தியும் சமூகவியலறிஞர் வில்லியம் ஐ.ராபின்சனின் கருதுகொள்களும்..

மாமூலனின் 'இனப்படுகொலை நாட்களில் (குரலற்ற கனடாப்பத்தி எழுத்துக்கள்)மாமூலன்அண்மையில் ‘நாளை பதிப்பகம்’ (கனடா) வெளியிட்ட மாமூலனின் ‘இனப்படுகொலை நாட்களில் (குரலற்ற கனடாப்பத்தி எழுத்துக்கள்)’ நூலை வாசித்துக் கொண்டிருந்தபொழுது அதிலுள்ள சில கட்டுரைகள் கவனத்தைக் கவர்ந்தன. அவை நாடு கடந்த அரசு பற்றிய கட்டுரைகள். அவற்றிலும் குறிப்பாக என்னைக் கவர்ந்த கட்டுரை ‘நாடு கடந்த நாடு வினாவிடை (Transnational State: A short introduction for dummies) ‘ என்னும் கட்டுரை. கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகச் சமூகவியற் பேராசிரியரான வில்லியம் ஐ. ராபின்சன் (William I.Robinson) அவர்கள் அரசியற் பொருளாதாரம், உலகமயமாதல் , இலத்தீன் அமெரிக்கா மற்றும் வரலாற்றுப்பொருள்முதல்வாதம் ஆகிய துறைகளை மையமாக வைத்து ஆய்வு செய்பவர். இவர் கிரேக்கப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் கருத்துகளைச் சுருக்கமாக வெளிப்படுத்தும் கட்டுரை.

அந்நேர்காணலில் வில்லியம் ஐ. ராபின்சன் தெரிவித்துள்ள கருத்துகளைச் சுருக்கமாக வழங்கும் மாமூலனின் கருத்துகளைச் சுருக்கி இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

1. புதிய முதலாளித்துவம் ‘நாடு கடந்த மூலதன’ங்களைக் கொண்டது. அத்துடன் உலகலாவியரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட நாடு கடந்த உற்பத்தி முறையும், பொருளாதார ஒழுங்கமைவும் உள்ளன.

2. நாடு கடந்த உற்பத்தி முறையானது ஓர் இடத்தை மையமாகக் கொண்ட உற்பத்தி முறை அல்ல. அதாவது பொருளொன்றின் பாகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நாடுகளில் செய்யப்பட்டு இன்னுமொரு நாட்டில் ஒன்றாக்கப்பட்டுச் சந்தைக்கு
வருகின்றன.

3. தேசியப்பொருளாதாரங்கள் உலகமயமாதலால் மீள் கட்டமைக்கப்பட்டுள்ளன. நாடு கடந்த உற்பத்தி என்பதும் உலகம் தழுவிய இப்பொருளாதாரத்தின் விளைவே.

4. மூலதனமானது தேசிய , உள்ளூர் மூலதனங்கள், நாடு கடந்த உலகலாவிய மூலதனம் எனப்பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் நாடு கடந்த மூலதனமே ஆதிக்கம் செலுத்துவதாகவுள்ளது.

5. நாடு கடந்த அளவிலான முதலாளித்துவ முதலீடு செய்யும் குழுக்கள் இன்று உலகளாவியரீதியிலுள்ளன. இவையே உலகத்தின் ஏனைய அதிகார, ஆளும் வர்க்கங்களின் மீது மிகப்பெரும் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன.

Continue Reading →