மீண்டும் “தமிழ்ப்பூங்கா”

நிகழ்வுகள் , அறிவித்தல்கள்

அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். இதோ மிக நீண்டதோர் இடைவெளியின் பின் “தமிழ்ப்பூங்கா” புதியதோர் வடிவமைப்புடன் காலாண்டு இதழாக புதுவடிவம் பெற்று உங்களிடம் வருகிறது. வாழ்வின் கடமைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு வருந்துகிறேன். இது வழமை போல P.D.F ஆக இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இதனை வெள்ளோட்டமாக ஒரு மின்புத்தகமாக்கும் முயற்சியில் அதற்குரிய இணையத்தளத்தினைத் தருகிறேன் இதனைப் பார்வையிடுவதற்கு Adobi Flash மென்பொருள் உங்கள் கணணியில் இருக்க வேண்டும். என்றும் போல இப்பவும் உங்கள் ஆதரவையும், ஆக்கங்களையும் தந்து ஆதரவளிபீர்கள் எனும் நம்பிக்கை எனக்குண்டு. இ-புத்தக வடிவில் பார்க்க இணையத்தளம் – https://www.flipsnack.com/thamilpoonga/2.html

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: நீடித்த போரின் வலி சுமந்த மக்களின் கதைகளைப்பேசும் “வன்னியாச்சி”! வன்னிபெருநிலப்பரப்பின் ஓலங்களை படைப்பிலக்கியத்தில் ஒலிக்கச்செய்த தாமரைச்செல்வி!

தாமரைச்செல்விநீடித்த போரினால் வலிசுமந்த மக்களின் கதைகளைச்சொல்லும் தாமரைச்செல்வியின் ” வன்னியாச்சி” பெரும் கதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 37 கதைகளையும், ஜீவநதியில் இம்மாதம் வெளியான அவனும் அவளும் என்ற சிறுகதையையும் சேர்த்து மொத்தம் 38 கதைகளையும் படித்து முடித்த தருணத்தில், தமிழ் ஊடகங்களில் ” அரசின் மகா வலி – தமிழருக்கு மன வலி ” என்ற தலைப்பிலும் தொனியிலும் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மக்கள் வலிசுமந்த மேனியராகவே கடந்த மூன்றரை தசாப்த காலமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை, தனது கதைகளின் ஊடாக பதிவுசெய்துவருபவர் தாமரைச்செல்வி.  இவரது எழுத்துக்களை இலங்கையில் நான் இருந்த காலப்பகுதியில் படித்திருந்தாலும், நேரில் சந்தித்துப்பேசியது வெளிநாடான தற்போது நான் வாழும் அவுஸ்திரேலியாவில்தான்.

சில வருடங்களுக்கு முன்னர் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழாவில் அவரது சமுகம் இன்றியே அவரது பச்சை வயல் கனவு என்ற நாவலை அறிமுகப்படுத்தியிருந்தோம். அதனை இங்கு வதியும் கிளிநொச்சி பிரதேசத்தில் முன்னர் ஆசிரியராக பணியாற்றிய மரியதாசன் மாஸ்டர் அறிமுகப்படுத்தி உரையாற்றினார். இவர் பெண் போராளி தமிழினிக்கும் முன்னர் ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

நான் முன்னர் எழுதிய இலக்கியத்துறையில் பெண்ணிய ஆளுமைகள் தொடரில் தாமரைச்செல்வி பற்றியும் ஒரு பதிகை எழுதியிருக்கின்றேன். இலங்கையில் சந்திப்பதற்கு வாய்ப்புக்கிட்டாது போனாலும், அதற்கான சந்தர்ப்பம் காலம் கடந்து, 2016 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் நடந்த 16 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில்தான் கிடைத்தது. அன்று இவர்தான் விழாவை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைத்தார். அன்று அந்த புதிய மேடையில் அவர் உரையாற்றவில்லை என்பது எனக்கு ஆச்சரியமானது! எனினும் இவரது நேர்காணலை அவுஸ்திரேலியா எஸ்.பி. எஸ். வானொலியில் கேட்டபோது, இவரால் தாம் வாழ்ந்த பிரதேசத்து மக்களின் வலி நிரம்பிய கதைகளை யதார்த்தம் குன்றாமல் பேசவும் தெரிந்தவர் என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது.

ஈழத்தின் போர்க்கால இலக்கியம் தமிழ்ச்சூழலில் அறிமுகமாகி தற்போது சிங்களம், ஆங்கில மொழிகளுக்கும் பரவியிருக்கிறது. தாமரைச்செல்வியின் கதைகள் இலங்கையிலும் தமிழகத்திலும் பாட நூல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு ஓவியராகவும் அறியப்பட்டுள்ள தாமரைச்செல்வியின் கதைகள் அவர் வரைந்த ஓவியங்களுடனும் வெளியாகியுள்ளன.  சில கதைகள் குறும்படங்களாக தயாரிக்கப்பட்டு வெளியாகி விருதுகளும் பெற்றுள்ளன. இந்தப்பின்னணிகளைக்கொண்டிருக்கும் – மேடைகளைத் தவிர்க்கும் – தாமரைச்செல்வியின் தன்னடக்கம், ஆழ்ந்த பெருமூச்சுக்களாக வலி சுமந்த மக்களின் ஓலங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

” சொந்த மண்ணிலேயே இருப்பிடம் இழந்து அகதிகளாகிக் குண்டுகளின் அதிர்வும் கந்தக நெடியும் ஒரு புறம் துரத்த உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் பதற்றத்தோடும் பசி பட்டினியோடும் பதுங்கு குழிகளின் பக்கத்துணையோடும் வாழ்ந்திருந்தவர்கள். இந்த மக்களின் நடுவே நானும் ஒருத்தியாக வாழ்ந்துகொண்டேதான் இச்சிறுகதைகளை எழுதினேன். என்னைச் சுற்றிய நிகழ்வுகள் தந்த அதிர்வுகள், பாதிப்புகள், நெருடல்கள், இவைதான் இப்படைப்புகள். இம்மக்களின் துயரங்களை வார்த்தைகளில் பதியும்போது எனக்கும் வலித்திருக்கிறது. கண்களின் ஓரம் நீர் கசிந்திருக்கிறது. இந்த மக்கள் அனுபவித்த கடலளவு துயரங்களில் ஒரு சில துளிகளையே என்னால் பதிவு செய்ய முடிந்திருக்கிறது. ” என்று வன்னியாச்சி தொகுப்பில் தனதுரையில் குறிப்பிட்டிருக்கும் தாமரைச்செல்வியும், குறிப்பிட்ட வன்னியாச்சி கதையில் வரும் வன்னியாச்சியைப்போன்றே அந்த மண்ணின் ஆத்மாவை நன்கு அறிந்திருப்பவர்.

Continue Reading →

தொடக்க விழா – சினிமா புத்தகங்களுக்கான இந்தியாவின் ஒரே புத்தக அங்காடியான பியூர் சினிமா – புதுப்பொலிவுடன்

நிகழ்வுகள் , அறிவித்தல்கள்

09-09-2018, ஞாயிறு,  மாலை 6 மணிக்கு.

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7 , மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். கூகிள் மேப்பில் pure cinema book shop என்று தேடினால் எளிதாக கண்டடையலாம்.

திறந்து வைப்பவர்: ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

இந்தியாவில் செயல்படும் நிலையில் இருக்கும் முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களுக்காகவே செயல்படும் இந்தியாவின் ஒரே சினிமா புத்தக அங்காடியான பியூர் சினிமா புத்தக அங்காடி சென்னையில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இன்னும் சீரிய முறையில் செயல்படும் வகையிலும், பல்வேறு கிரியேட்டிவ் செயல்பாடுகள் கொண்ட இடமாகவும் மாற்றியமைக்கப்பட்டு எதிர்வரும் ஞாயிறு அதாவது செப்டம்பர் 9 ஆம் தேதி, மாலை 6 மணியளவில் திறக்கப்படுகிறது. இதனை இந்தியாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளராக, பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் கேமராமேன் திரு. ரவிவர்மன் அவர்கள் திறந்து வைக்கிறார். ஒளிப்பதிவு, ஓவியங்கள், லைட்டிங் குறித்தும் மிக முக்கிய உரையொன்றையும் நிகழ்த்த இருக்கிறார்.

Continue Reading →