வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் 3!

- வேந்தனார் இளஞ்சேய் -

1. குறைகளை விட்டால் பகைமை இல்லை!

இன்பங்கள் மட்டும் நிரந்தரம் இல்லை
இன்னல்கள் காணா வாழ்வும் இல்லை
இழப்புகள் இல்லாத மனிதரும் இல்லை
இடைஞ்சல்கள் தராத உறவும் இல்லை

அன்பினை வேணடாத உயிரும்  இல்லை
அழிவினைத் தந்திடாத போரும் இல்லை
அறிவினை மயக்காத விதியும் இல்லை
அரசைக் கெடுக்காத சதியும் இல்லை

வஞ்சகம் என்றும் வெல்வது இல்லை
வாய்மை இழிவைத் தந்திடல் இல்லை
வலியவர் என்றும் ஆள்வது இல்லை
வறியவர் என்றும் தாழ்வது இல்லை

Continue Reading →

சுப்ரபாரதிமணியனின் நாவல் ” ரேகை ” நூல் வெளியீட்டு விழா!

- சுப்ரபாரதிமணியன் -“டிஜிட்டல் யுகத்தில்  புத்தக வாசிப்பு” ; ” இது டிஜிட்டல் யுகம். இன்னும் புத்தக வாசிப்பைக் கைக்கொள்ளும் மனிதர்கள் இயல்பாக இருக்கிறார்கள் .வாசிப்பு மனிதர்களை ஆசுவாசப்படுத்தக்கூடியது. அதன் தொடர்ச்சியான சிந்தனைகளை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லக்கூடியது. வாசிப்பை மூச்சுக்காற்றாக, ஆசுவாசமாக எடுத்துக் கொள்ளும் மனிதர்களால் உலகமெங்கும் புத்தகக் கண்காட்சிகள் நடந்து வருகின்றன “ என்று உலகப்புத்தக்கண்காட்சி : 37வது உலக ஷார்ஜா அமீரகப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்ட அனுபவம்    பற்றி சுப்ரபாரதிமணியன் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * டிசம்பர்  மாதக்கூட்டம் 02/12/18.ஞாயிறு மாலை.5 மணி..          பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலை,திருப்பூர்., நடந்தது.
தலைமை : தோழர் சண்முகம் .,முன்னிலை: தோழர்கள்  ரவிச்சந்திரன், சசிகலா கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடந்தன, சுப்ரபாரதிமணியனின் ரேகை நாவல் வெளியிடப்பட்ட்து

நூல் வெளியீடு :
1.* சுப்ரபாரதிமணியனின்  நாவல்  ”  ரேகை  ”
: உரை : படைப்பு அனுபவம்
“தமிழகம் தன் இசுலாமியப் பிள்ளைகளின் விடுதலையைப் பேசட்டும்  “    –  : திருப்பூர் குணா

* நூல்கள் அறிமுகம் .: * கா.ஜோதியின் “ ஒரு சாமானியனின் கவிதைகள் “ ( மருத்துவர் முத்துசாமி )
* மதிக்கண்ணனின் “ ஆர்டருக்காகக் காத்திருப்பவர்கள்  “ சிறுகதைத் தொகுப்பு ( குணா )
* சத்யாவின் “ அன்பின் துணை வழி “ சிறுகதைத் தொகுப்பு
*  சீதாராம் யேச்சோரியின் ” மார்க்சீயம் : மாற்றத்துக்கான ஒரே சக்தி ”  ( ஜோதி )
* இதழ்கள் அறிமுகம் :  கோடுகள் ( தேனி ), தொழிலாளி(  கோவை ) , சிந்தனையாளன் ( சென்னை ) – சுப்ரபாரதிமணியன்

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 316 : மிலான் குந்தெராவின் ‘நாவலின் கலை’யிலிருந்து;முற்றுப்பெறாத எனது நாவல்கள்!;ஸ்கார்பரோவில் ஜான் மாஸ்ட்டரின் உரை; ஈழநாடு மாணவர் மலர்க் கட்டுரைகள்!

மிலான் குந்தெராவின் 'நாவலின் கலை'யிலிருந்துமிலான் குந்தெராவின் ‘நாவலின் கலை’ என்னும் நூலிலுள்ள கட்டுரைகளைப் புரட்டிக்கொண்டிருக்கின்றேன். நூலிலுள்ள முதலாவது கட்டுரை “The Depreciated Legacy of Cervantes”.. அதில் நாவல் பற்றி, இருத்தல் பற்றி, மனிதர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் என் கவனத்தை ஈர்த்த சில கருத்துகளை என் மொழியில் சுருக்கமாகத் தருகின்றேன்.

எட்மண்ட் ஹஸ்ஸேர்ல் வியன்னாவிலும், பிராக்கிலும் ஆற்றிய ஐரோப்பிய மனிதத்துவம் பற்றிய புகழ்பெற்ற உரையில் ஐரோப்பிய விஞ்ஞானம் பற்றிக் குறிப்பிடுகையில் ஒரு பக்கத் தன்மை மிக்கதான ஐரோப்பிய விஞ்ஞானமானது உலகை கணித மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்குரியதொன்றாக மட்டுமே ஆக்கிவிட்டது. மானுட வாழ்க்கையை அதன் கவனத்துக்கப்பால், அதன் எல்லைக்கப்பால் வைத்துவிட்டது என்று கூறியுள்ளார்.

விஞ்ஞான வளர்ச்சியானது மனிதரை விஞ்ஞானத்தின் சிறப்பு விதிகளுக்குள் உந்தித்தள்ளி விட்டது. எவ்வளவுக்கெவ்வளவு மனிதர் அறிவில் முன்னேறினார்களோ அவ்வளவுக்கவ்வளவு வாழ்வை முழுமையாகவோ அல்லது தம்மைப்பற்றி முழுமையாகவோ அறிந்துகொள்வதில் பின்னேறினார்கள். எட்மண்ட ஹஸ்ஸேட்லின் மாணவரான ஹைடெகரின் புகழ்பெற்ற சொற்றொடரான ‘இருத்தலை மறத்தல்’ (the forgetting of being) என்னும் சூழலுக்குள் மனிதர் தள்ளப்பட்டுவிட்டார். ரெனெ தெக்கார்தே (Rene Descartes) குறிப்பிட்டதுபோல் மனிதர் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் வரலாறு ஆகிய விசைகளால் புறக்கணிக்கப்பட்டுவிட்ட ஒரு பொருளாக ஆகி விட்டார். இவ்விசைகளுக்கு மனிதரோ அவர்தம் வாழ்வு பெறுமதியற்றதொன்று. முக்கியத்துவமற்றதொன்று. ஆரம்பத்திலிருந்தே மூடி மறைக்கப்பட்டதொன்று.

நூலாசிரியரைப்பொறுத்தவரையில் நவீன யுகத்தின் பிதாமகர்கள் தெக்கார்தேயும் சேர்வாண்டேசுமே. விஞ்ஞானமும், தத்துவமும் மனிதரின் இருப்பினை மறந்துவிட்டது உண்மையானால், சேர்வாண்டேசின் மூலம் ஐரோப்பியக் கலையானது மறக்கப்பட்டிருந்த மானுட இருப்பு பற்றிய விசாரணையினை மேற்கொண்டது. உண்மையில் ஹைடெகரால் அவரது ‘இருப்பும் நேரமும்’ நூலின் ஆய்வுக்குள்ளாகியிருந்த இருப்பியல் பற்றிய,அதுவரை ஐரோப்பியத் தத்துவங்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த அனைத்துக்கருதுகோள்களையும் ஐரோப்பிய நாவலானது வெளிப்படுத்தியது. தனக்குரிய வழியில், தனக்குரிய தர்க்கத்தில், ஐரோப்பிய நாவலானது இருப்பின் பல்வகைப்பரிமாணங்களையும் ஒவ்வொன்றாகக் கண்டு பிடித்தது: சேர்வாண்டேஸ் மற்றும் அவரது காலத்துப் படைப்பாளிகள் மூலம் மானுடர்தம் சாகசங்களின் தன்மை பற்றி ஆராய்ந்தது. ரிச்சார்ட்சன் மூலம் மானுட உணர்வுகளின் இரகசிய வாழ்க்கையினை வெளிப்படுத்தும்பொருட்டு மனிதர்தம் உள்ளே என்ன நடக்கின்றது என்பதை ஆராய்ந்தது. பால்சாக்கின் மூலம் வரலாற்றில் மானுடரின் காலூன்றல் பற்றி ஆராய்ந்தது. பிளாபர்ட் மூலம் மூடி மறைக்கப்பட்ட மானிடரின் அன்றாட வாழ்வினை ஆராய்ந்தது. டால்ஸ்டாயின் மூலம் மானுடர்தம் நடத்தை மற்றும் தீர்மானங்களில் பகுத்தறிவற்ற போக்கின் தலையீடு பற்றிக் கவனத்தைத் திருப்பியது.

Continue Reading →

முண்டாசுக் கவிஞனே நீ மூச்சுவிட்டால் கவிதை வரும்

– பாரதியாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றுவோம்!  பெரும்  பேறாய் போற்றுகின்றோம்! –

- பாரதியாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றுவோம்!  பெரும்  பேறாய் போற்றுகின்றோம்! -

முண்டாசுக்   கவிஞனே   நீ
மூச்சுவிட்டால் கவிதை வரும்
தமிழ் வண்டாக நீயிருந்து
தமிழ் பரப்பி நின்றாயே
அமிழ் துண்டாலே வருகின்ற
அத்தனையும் வரும் என்று
தமிழ் உண்டுமே பார்க்கும்படி
தரணிக்கே உரைத்து நின்றாய்

Continue Reading →

சிறுகதை: “யாழ்ப்பாண நினைவுகளில்….”

– இடங்கள்,காலங்கள்,அடிப்படைச் சம்பவங்கள் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு ஆக்கப்பட்ட, கற்பனைப் படைப்பு. –

ஶ்ரீராம் விக்னேஷ்1.

1973ம், 1974ம்  வருட, 9ம்,10ம் வகுப்புகள் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் –

நான் தங்கியிருந்த “யாழ்.மத்திய கல்லூரி”யின் விடுதியும், அதாவது “ஹாஸ்ட” லும் ஊரோடொத்து உறங்கிக்கொண்டிருந்தது. மாடியிலுள்ள மண்டபத்தில்தான் எனது பெட்டி படுக்கைகளும், கட்டிலும் இருந்தன. நல்ல சொகுசான கட்டிலாக இருந்தும், இன்னும் தூக்கமே வரவில்லை.

எங்கள் விடுதிக்குத் தெற்கேயிருந்த, முதலாம் குறுக்குத்தெருப் பக்கமாக எங்கோ ஒரு மூலையில் நாய்கள் குரைத்துச் சத்தமிட்டுக்கொண்டிருந்தன. 

தலையணைக்கு கீழே வைத்திருந்த ஒளிப்பேழையை, அதாவது “ டார்ச்லைட்”டை எடுத்து, பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த சகமாணவன் மூர்த்தியைக் கவனித்தேன். வாயைப் பிளந்தபடி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். 

சுவர்க் கடிகாரத்தை நோக்கினேன். அது ஏற்கனவே நேற்று மாலை ஐந்து மணிக்கே உறங்கிவிட்டது.

என்னிடமும் கைக்கடிகாரம் கிடையாது. அதிகாலை ஐந்து மணிக்கு விடுதிக் காவலர், அதாவது, ஹாஸ்டல் வாச்மேன் மணி அடிக்கும்வரை விடுதிக்குள் மின்விளக்கு, அதாவது லைட்டு போடக்கூடாது என்பது விடுதி நிர்வாகத்தின் கண்டிப்பான உத்தரவு. எனினும், மணியோ நான்கை அண்மித்துவிட்டால் குளியலறை, அதாவது, பாத்ரூம் சென்று நிம்மதியாகக் குளிக்கலாம். மற்றவர்களும் எழுந்துவிட்டால், போட்டி போட்டுத்தான் குளிக்கும் நிலை வரும். 

எங்கள் விடுதிக்கு – வடக்கே, சமீபமாகத்தான் மணிக்கூண்டுக் கோபுரம் எழுந்தருளியுள்ளது. நேரத்தைக் கவனித்தேன். எதிர்பார்த்தபடி நிலைமை சாதகமாகவே இருந்தது. ஆமாம்: மணி நான்கு.

“தமிழன் என்று சொல்லடா…. தலை நிமிர்ந்து நில்லடா….” என்று சொன்னவர், தலை நிமிர்ந்தாரோ இல்லையோ…. ஆனால், அந்த மணிக்கூண்டுக் கோபுரம் மட்டும் தலை நிமிர்ந்து நின்றது.

என் பார்வையின் கோணத்தை சற்று இடதுபுறம் திருப்பினேன். இந்தியாவிற்கு ஒரு தாஜ்மகால் கிடைத்தது போன்று, இலங்கையின் – முக்கியமாக யாழ்ப்பாணத்தின் தாஜ்மஹாலாக, சரஸ்வதியின் ஆலயமான யாழ். நூலகம்…. ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகமாக பிரகாசித்துக்கொண்டிருந்தது.

விடிந்தால் வெள்ளிக்கிழமை. இன்னும் ஒரு மணி நேரத்தில், காவலாளி மணியடித்துவிடுவார். காலையில், சக இந்து மாணவர்களோடு நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு போகவேண்டும். அதுவும், நடந்தே சென்றுவருவோம். எட்டுமணிக்கெல்லாம் விடுதிக்கு வந்து சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்புவோம்.

Continue Reading →

ஆய்வு: பண்டைய இலக்கியங்களில் நன்னன் சேய் நன்னனின் மூதூர்ச் சிறப்பு

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -நன்னன் சேய் நன்னனுடைய பழமையான ஊர் செல்வம் நிறைந்து உயர்ந்து ஓங்கிய மதில்களை உடையது. அவ்வூரினின்றும் பெயர்தலை அறியாத பழங்குடிகள் வாழும் ஊர் அகன்ற இடமாயினும் போதுமான இடமில்லாத நிலைபோன்று சிறந்த பெரிய அங்காடித் தெருக்கள் நடைபெறுவது போன்று எப்போதும் இருக்கும். பகைவர் செல்ல அஞ்சும் பல குறுந்தெருக்களும் உள்ளன. ஊர்மக்கள் ஆரவாரம் கடல் போன்றும் மாடங்கள் உயர்ந்து ஓங்கி நிற்கும். அவ்வூரில் வாழ்வோர் வெறுப்பில்லாமல் விருப்பத்துடன் வாழ்வர். குளிர்ந்த பெரிய சோலைகளில் வண்டுகள் ஒலித்துக் கொண்டிருக்கும். அவனுடைய பழமையான வெற்றியையுடையது மூதூர் ஆகும் என்பதைப் பின்வரும் பாடல் வரிகள் காட்டுகின்றன:   

நிதியம் துஞ்சும் நிவந்துஓங்கு வரைப்பின்
பதிஎழல் அறியாப் பழங்குடி கெழீஇ
வியல்இடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து
யாறுஎனக் கிடந்த தெருவின் சாறுஎன 
இகழுநர் வெரூஉம் கவலை மறுகின்
கடலெனக் காரென ஒலிக்கும் சும்மையொடு
மலையென மழையென மாடம் ஓங்கித்
துனிதீர் காதலின் இனிதமர்ந்து உறையும்
பனிவார் காவின் பல்வண்டு இமிரும்
நனிசேய்த் தன்று அவன் பழவிறல் மூதூர்
(பெரும்பாண்.478 – 487).

அவன் தன்னுடன் மனம் பொருந்தாத பகைவரின் கரிய தலை வெட்டுண்டு வீழ, அதைப் பருந்துகள் உண்ண அலையும் போர்க்களத்தில் வெற்றி பெறும் மறவர், தம் கரிய காம்பினையுடைய வேல்கள் சாத்தப் பெற்ற கதவினையுடைய வாயிலைப் பிறர் ஐயுறாது, அஞ்சாமல் புகுவர். இங்கு நன்னனின் பெரிய அரண்வாயில் காணப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன:

பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப்
பருந்துபடக் கடக்கும் ஒள்வாள் மறவர்
கருங்கடை எஃகம் சாத்திய புதவின்
அருங்கடி வாயில் அயிராது புகுமின், 
(மலை.க.488 – 491).

Continue Reading →

இரண்டு பேராசிரியர்கள் இணைந்து எழுதிய “பாரதி மறைவு முதல் மகா கவி வரை”! மகாகவி பாரதிக்கு 136 வயது!

மகாகவி பாரதியார்– விரைவில் வெளிவரவிருக்கும் முருகபூபதியின் இலங்கையில் பாரதி என்னும் ஆய்வு நூலின் இறுதி அங்கத்தில் இடம்பெறும் ஆக்கம் –

தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி பிறந்திருக்கும் சுப்பிரமணியன் சுப்பையாவாகி, தனது 11 வயதில் பாரதியாகி, 1921 செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி சென்னையில் திருவல்லிக்கேணியில் மறைந்தார். அவருக்கு டிசம்பர் 11 ஆம் திகதி 136 வயது! பாரதியை இன்றும் சிலர் கவிஞராக மாத்திரமே பாரக்கின்றபோதிலும் அவர் ஒரு மகாகவி என்பதை நிரூபிப்பதற்காக பலர் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வந்துள்ளனர். யார் கவிஞன் என்று பாரதியே ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு சொல்லியுள்ளார்: 

“கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், எவனொருவன் வாழ்க்கையையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி “. அத்துடன், ” நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் ”  எனவும் சொன்னவர் அவர். பாரதி தன்னை கவிஞனாகவே பிரகடனம் செய்துகொண்டிருந்தாலும், அவர் மகாகவியா..? அதற்கான தகுதி அவருக்குண்டா என்னும் வாதங்கள் நீண்ட காலம் தொடர்ந்தன. அத்துடன் அதற்கு எதிர்வினைகளும் பெருகின.  பாரதி மகாகவிதான் என்பதை வலியுறுத்தும் வகையில் இலங்கைப்பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ( 1932-2011) அவர்களும் தமிழகப்பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களும் இணைந்து நீண்ட நாட்கள் ஆய்வுமேற்கொண்டு எழுதிய நூல்தான் பாரதி மறைவு முதல் மகா கவி வரை.  வட இலங்கையில் வடமராட்சியில் கரவெட்டியில் 1932 இல் பிறந்திருக்கும் இவர் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, கொழும்பு சாகிறா கல்லூரி ஆகியனவற்றின் பழைய மாணவர். தொடக்கத்தில் சாகிறாவில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கும் சிவத்தம்பி அவர்கள், இலங்கை நாடாளுமன்றில் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். சிறந்த இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர். அத்துடன் சமூகச்சிந்தனையாளர்.  பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்று இளமாணி, முதுமாணி பட்டங்களையும் பெற்று லண்டன் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கலாநிதியானவர்.  இலங்கையில் கொழும்பு , யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களிலும் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியவர். பல நாடுகளில் வருகை தரு பேராசிரியராகவும் பணியாற்றிய இவரது மாணாக்கர் பலரும் படைப்பிலக்கியவாதிகளாகவும் கலைஞர்களாகவும் இலக்கிய விமர்சகர்களாகவும் திகழுகின்றனர். நாடகத்துறையிலும் பங்களித்திருக்கும் பேராசிரியர் சிவத்தம்பி எழுதியிருக்கும் பல திறனாய்வு நூல்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உசாத்துணையாக விளங்குபவை. பல விருதுகளையும் பெற்றுள்ள பேராசிரியர் தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமையாகப்போற்றப்படுபவர். இவர் குறித்தும் ஏராளமான கட்டுரைகள் வெளியாகியுள்ளன. கொழும்பில் 2011 ஆம் ஆண்டு மறைந்தார்.

Continue Reading →

ABDUL HAQ LAREENA’S POEM (Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

- லதா ராமகிருஷ்ணன் -– இங்கு எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், ரிஷி, அநாமிகா என்னும் புனைபெயர்களில் எழுதி வருபவருமான , லதா ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு  மொழிபெயர்த்த கவிதைகள் பிரசுரமாகின்றன. –

ABDUL HAQ LAREENA’S POEM (Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

THE MALICE OF THE FACELESS

Holding which end of the life that is not
she would walk on the rope-ladder
_ with a malicious smile you kept looking on

The length of the short span between life and death
had swelled into a river sideways
whenever she tried to cross it
the night’s dream ends

life’s thirst doesn’t suffice
to drink death
the length of her dream’s wing
you cannot measure

When the jungle of Yakshi beyond imagination
smouldering gradually and turning into
raging fire
amidst the shimmer of ashes she sprouts softly.

முகமிலியின் வன்மம்

இல்லாத வாழ்வின் எந்த அந்தத்தை பற்றிக்கொண்டு அந்த நூலேணியில் அவள் நடப்பாள் என்பதை
ஒரு வன்மப் புன்னகையோடு நீ பார்த்திருந்தாய்

இருப்புக்கும் இறப்புக்கும் இடையிலான குறிலின் நீளம்
பக்கவாட்டில் ஒரு நதியாகப் பெருக்கெடுத்திருந்தது
அவள் அதைக் கடக்கமுனையும் போதெல்லாம்
இரவின் கனவு தீர்ந்துபோய் விடுகிறது.

Continue Reading →

துயரின் இதழ்களில் விரியும் புன்னகை (மிர்ஸா காலிப் தமிழ் மொழிபெயர்ப்பில்)

துயரின் இதழ்களில் விரியும் புன்னகை (மிர்ஸா காலிப் தமிழ் மொழிபெயர்ப்பில்)- லதா ராமகிருஷ்ணன் -சமீபத்தில் கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ள காலிபின் 440 கவிதைகளின் (பாரசீக மொழியில் எழுதப்பட்ட கவிதைகளின்) ஆங்கில மற்றும் தமிழ் ஆகிய இருமொழிபெயர்ப்புகள் இடம்பெறும் இந்த நூலில் [ஆங்கில மொழிபெயர்ப்பு திரு. மூஸா ராஜா ; தமிழில்: நான்- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் முழுமுனைப்பான உதவியுடன்] இடம்பெறும் என்னுடைய சுருக்கமான ‘சொல்லவேண்டிய சில’ என்ற தலைப்பிலான கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது. ]

நாம் 200 சதவிகிதம் அன்பைத் தந்தும் நமக்கு 20 சதவிகிதம் அன்புகூட சம்பந்தப்பட்ட மறுமுனையிலிருந்து பதிலுக்குக் கிடைப்பதில்லை என்பதாக மனிதமனங்கள் உணரும் தருணங்கள் அவர்கள் வாழ்க்கையில் இருந்தே தீரும். பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையில், நண்பர்களுக்கு இடையில், சகோதர சகோதரிகளுக்கு இடையில், தலைவர் – தொண்டருக்கும் இடையில் சு எல்லாவற்றிற்கும் மேலாக, அன்புவயப்பட்டிருப் பவருக்கும் அவருடைய அன்புக்குப் பாத்திரமான வருக்கும் இடையில். இந்தப் புறக்கணிப்பு ஏற்படுத்தும் வலியின் தாக்கம் அன்றும் இன்றும் பல அரிய படைப்புகள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. பாராமுகத்தின் தீரா வலியை பேசிப்பேசி நிவாரணம் தேடிக்கொள்ளும் பிரயத்தனமாய்…

தான் நேசிப்பவர் தன்னை நேசிக்கவில்லையென்றால் அதற்காய் அவர் மீது அமிலம் கொட்டுவதா உண்மைக்காதல்? ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று மனதார வாழ்த்துவதே மெய்யன்பு. இது ஏமாளித்தனம் என்று எண்ணுவோர் உண்டு. அத்தகைய மனப்போக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகிவருவதுபோல் தோன்றுகிறது, ஆனால், உண்மையான அன்பு – அது ஒருதலைக் காதலோ, இருதலைக் காதலோ, பொருந்தாக் காதலோ, பொருந்தும் காதலோ -ு ஒருவரை ஏமாளியாக்கி னாலும் பரவாயில்லை; எக்குத்தப்பான கிராதகராக்கி விடலாகாது.

’மிர்ஸா காலிப்’-இன் கவிதைகளில் மேற்காணும் மெய்யன்பும், அதற்குப் பிரதிபலனாகக் கிடைக்கும் வலியும் மிக நுட்பமாக விரித்துவைக்கப்பட்டி ருக்கின்றன. காதலினூடாக இந்தக் கவிதைகள் வாழ்க்கையின் பல கூறுகளை, சமூகத்தை, மதத்தைப் பற்றியெல்லா காலத்திற்குமான, கேட்கப்படவேண்டிய கேள்விகளை எழுப்புகின்றன. மிர்ஸா காலிப்-இன் கவிதைகளுடைய தத்துவார்த்தப் பின்னணி, இறையியல் சார்ந்த கோணங்களை யெல்லாம் மிர்ஸாவின் பாரசீகக் கவிதைகளை பாரசீக மொழியிலிருந்து நேரடியாக உருது மொழியிலும் ஆங்கில மொழியிலும் THE SMILE ON SORROW’S LIPS என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ள திரு.மூஸா ராஜாவின் முன்னுரை (இந்த நூலில் தமிழாக்கம் செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது) விரிவாகப் பேசுகிறது.

Continue Reading →