நூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு

நூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்புநூருல் அயின்திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள் ஊடகத் துறையில் ஒரு பெரிய மைல்கல். புpரபல பெண் பத்திரிகையாளர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பணியாற்றிவர். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் கொழம்பபுவத் (கொழும்பு செய்திகள்) என்ற காலாண்டு பத்திரிகையை சிங்கள மொழி மூலம் வெளியிட்டுள்ளார். அத்தோடு ஏற்கனவே 1997 ஆம் ஆண்டில் ‘பண்பாடும் பெண்’ என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளிலும் இவரது இலக்கியப் பங்களிப்புக்கள் ஏராளம். ரிம்ஸா முஹம்மதைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் 08 ஆவது இதழில் இவரது சிறப்பானதொரு நேர்காணல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ள இவர் கணனித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 1980 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆண்டு வரை ஷஷதினபதி – சிந்தாமணி|| ஆசிரிய பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் ‘ஜனனி|| என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமை புரிந்தவர். இவரது குடும்பமே ஒரு கலைக் குடும்பம் தான். சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், ரஷீத் எம். ரியால், நூலாசிரியரின் கணவர் என். நஜ்முல் ஹுசைன் ஆகியோரும் இலக்கியத் துறையில் மிகக் காத்திரமான பங்களிப்புக்களைச் செய்து வருபவர்கள். சட்டத்தரணியான நூலாசிரியரின் ஒரே மகளான நூருஸ் சப்னா சிராஜுதீனும் இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்.

தற்போது இலக்கியவரலாற்றில் இமாலய சாதனை புரிந்திருக்கின்றார் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள். யாருமே செய்யத் தயங்கும் ஒரு நூல் வெளியீட்டை பல வருடங்கள் தவமிருந்து துணிந்து வெற்றிகரமாக வெளியீடு செய்திருக்கின்றார். ஆம் இலங்கையில் காணப்படுகின்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய பாரியதொரு ஆய்வை இவர் மேற்கொண்டு 460 பக்கங்கயில் அதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதில் எழுத்தாளர்கள், கல்வியியலாளர்கள், வானொலி, தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவிலாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்களின்; தகவல்கள் யாவும் திரட்டப்பட்டு நூலுருவாக்கம் பெற்றுள்ளமை இந்த நூலின் சிறப்பம்சமாகும்.

இனி இந்த நூலில் இவரால் ஆராயப்பட்டுள்ள முக்கியமான சில பெண் எழுத்தாளர்கள் பற்றிய சில தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

பக்கம் 53 இல் முதலாவதாக இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் மாதரசி ஹாஜியானி மைமூனா செய்னுலாப்தீன் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. நிந்தவூரைச் சேர்ந்த இவர் இலக்கியத் துறையிலும் கல்வித் துறையிலும் சாதனைகள் புரிந்த 86 வயதான சரித்திரநாயகி. இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் என்ற பெருமையையும் பெற்றவர்.

மர்கூமா உம்மு ரஸீனா புஹார் (பக்கம் 79) என்று நாமெலல்hம் பெயரளவில் அறிந்திருந்த ஒரு இலக்கியவாதியை எமக்கெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறார் நூலாசிரியர். மண்ணிழந்த வேர்கள் என்ற கவிதைத் தொகுதியைத் தந்த ரஸீனா புஹார் அவர்கள் லுணுகலையைச் சேர்ந்தவர். ஆசிரியையாகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். சுpல வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தாலும் அவரது படைப்புக்கள் என்றும் வாழும்.

இளந்தலைமுறைப் படைப்பாளர்கள் மத்தியில் நன்கு பேசப்படும் ஒரு இலக்கியவாதி ரிம்ஸா முஹம்மத் பற்றிய தகவல்கள் பக்கம் 86 இல் தரப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் மற்றவர்களைப் புகழோங்கச் செய்வதிலும் ஆத்ம திருப்தி காண்பவர் ரிம்ஸா முஹம்மத். தன்னைச் சார்ந்தவர்களின் நலனில் அதிக அக்கறைகாட்டி அவர்களின் நலனுக்காக என்றும் பிரார்த்திக்கும் ஒரு கருணைக் கடல். இதுவரை 10 இலக்கிய நூல்களையும் கணக்கீட்டுத் துறையில் 03 நூல்களையும்  வெளியிட்டுள்ள சாதனைப் பெண். பூங்காவனம் என்றகாலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். கொழும்பு பல்கழைக்கழகத்தில் இதழில் துறை டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுள்ளதோடு இலக்கியத் துறையில் பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.

Continue Reading →

காற்றுவெளி மின்னிதழ்

வணக்கம். காற்றுவெளி மின்னிதழ் முன்னர் சிற்றிதழ் சிறப்பிதழ் ஒன்றை வெளிக்கொண்டுவதிருந்தது. மீண்டும் ஒரு இதழைக் கொண்டுவரவுள்ளதால் படைப்பாளர்களிடமிருந்து சிற்றிதழ்கள் பற்றிய கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.சிற்றிதழ்கள் பற்றிய அறிமுகங்களை, அவற்றின்…

Continue Reading →

சிறுகதை: கார் பாடம்

- கடல்புத்திரன் -பெரும்பாலானவர்கள் தம் காருக்கு லஸ்மி,சித்தினி..என்றெல்லாம் செல்லப் பெயர் சூட்டி கண்மணி எனக் கொண்டாடுவார்கள். அதற்கு என்னம் காயம் பட்டால் தலைகீழாய் பதற்றம் தொற்றிக் கொள்ளும்.”கட்டல்ட் சீரா”காரை முந்தி வேலைசெய்த …தளத்தில் கணேஸ்,”டேய் ,சுப்பர் காராடா,மச்சாள், அவ்வளவு பெரிய பிழை இல்லாமல் கனநாளைக்கு ஓடுவாள், ஓட்டம் அந்த மாதிரி இருக்குமடா”என்று ஒவ்வொரு நாளும் அவளைப் பற்றி புகழ்ந்து, புகழ்ந்து… தள்ளிக் கொண்டிருப்பான், ஓடிக் கொண்டிருந்த யப்பான் காரையும் பின்னால் ஒருவன் வந்து இடிக்க, சொன்னால் நம்ப மாட்டீர்கள் ,அதன் செசியே சிறிது வளைந்து விட்டது. பின்னால் இடித்தவனில் பிழை. மூன்றாந் தரக் காப்புறுதி தான், இவனிலே பிழை என்றால், ஐய்யா, தலையிலே கையை வைத்துக் கொண்டு … இருக்க வேண்டியது தான்.

அதை விட அதிசயம் அடிபட்ட பிறகும் கார் ஓடியது தான். யப்பான் கார் , கால் கை போனாலும் ஓடுற கார் .

அதனாலே அதற்கு மவுசும் அதிகம்.ஆனால் அவனுக்கு வெறுத்து விட்டது. பதிவு மையத்தில் புகாரை பதித்து விட்டு, காப்புறுதிக்காரனுக்கு தெரிவிக்க, அவன் அடிபட்டுத் திருத்துற கார் கராஜ் ஒன்றிட விலாசத்தைத் தெரிவித்தான். “அங்கே கொண்டு போய் விடு”என்றான்.

பிறகும், அவனுக்கு சார்ப்பாகவே நடக்கிறது.”செசி வளைந்ததால் கழிக்க வேண்டியது தான்”கராஜ்காரன் தெரிவிக்க, “நட்ட ஈடாக 2000 டொலர்கள் தர முடியும்,என்ன சொல்றே”என காப்புறுதிக்காரன் ,ரிம் கொட்டேனில் வந்து சந்தித்துக் கதைத்தான்.இந்தியன்.சுழியன்கள் என்று இந்த நிறுவனமும் இவர்களையே இப்படியான விசயங்களிற்கு அனுப்புகிறார்கள்.”அவ்வளவு தான் தர முடியும்.அது தான் அதனுடைய பெறுமதி “என்றான்.காரையே அவன் 1500 டொலருக்குத் தான் வாங்கியவன்.”சரி” என்றான். செக்கை எழுதி யே கொண்டு வந்திருக்கிறான். உடனேயே தந்தான்,

குடித்த கோப்பிக்கும் அவனே காசைக் கொடுத்திருந்தான்.

பிறகென்ன தேடி அலைந்து இந்த கட்டலஸ் சீரா, பழைய காரை 2000 டொலருக்கு வாங்கி இருந்தான். இந்தக் காரின் தயாரிப்பை இப்ப நிறுத்தி விட்டார்கள். காரை, புகழ்வதை கணேஸ் மட்டும்  நிறுத்தவே இல்லை.

காரில் ஓட்டத்திலே பிழை இல்லை தான் . அதாவது எஞ்சின் நல்லது. ஆனால்,எரிபொருள் ஓடுற குழாய்கள் மாற்ற வேண்டி வந்தது. எரிபொருள் தாங்கியில் ஓட்டை விழுந்து அதையும் மாற்றியது. நிறுத்தியில் மாற்றும்.முக்கிய பகுதியை விட மற்றப் பகுதிகள் எல்லாத்திற்கும் கராஜ்காரனுக்கு 200 டொலர் படிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான். காரை வைத்திருக்கிறவர்கள் அதைப் பற்றிய அறிவையும் காட்டாயம் கொண்டிருக்க வேண்டும். ஊரிலே என்றால் பழுதான பகுதியை வெட்டி எறிந்து விட்டு ,கராஜ் ஆள் தானே கூட தயாரித்து ஒட்டி அந்த மாதிரி ஓட வைத்து விடுவான். இங்கே,மீள  உயிர்ப்பிக்கிற பகுதிகள் மலிவு சிலவேளை முழு தொகுதியையே மாற்றுவார்கள். ஆனால்,தொட்டதுக்கும் 200 டொலர் அழ வேண்டி வரும் ஊரிலே செலவும் குறைவு.

இப்ப பேவிய்யூ வீதியிலே வேலைக்குப் போய்க் கொண்டிருந்த போது பின் பக்க இடது ரயரிலே காற்றுப் போய் விட்டது.

Continue Reading →

மேலும் சில தமிழினியின் (றொமிலா ஜெயன் ) படைப்புகள் பற்றி…

தமிழினி ஜெயக்குமாரன்தமிழினி ஜெயக்குமாரன் இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் ஆயுதம் தாங்கி இலங்கை இராணுவத்திற்கெதிராக யுத்தம் புரிந்தவரும் கூட. யுத்தம் மெளனிக்கப்பட்ட பின்னர் தன் இறுதிக்காலம் வரையில் அவர் கவனம் எழுத்துக்குத் திரும்பியது. அவரது சுயசரிதையான ‘ஒரு கூர்வாளின் நிழல்’ மற்றும் கவிதைத்தொகுப்பான  ‘போர்க்காலம் – தோழிகளின் உரையாடல்’ ஆகிய இரு நூல்களுமே உலகத்தமிழ் இலக்கியத்துக்கு அவராற்றிய பங்களிப்புகளாகும். இவ்விரு நூல்களும் அவரது பெயரை வரலாற்றில் நிலைத்து நிற்க வைக்கும். இவற்றுடன் அவரது இலக்கியப்பங்களிப்பு நின்று விடவில்லை. றொமிலா ஜெயன் என்னும் புனைபெயரில் அவர் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் எண்ணப்பதிவுகள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.  அப்படைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவரது சிறுகதைகள் ‘எதுவரை’ இணைய இதழ் மற்றும் ‘அம்ருதா’ (தமிழகம்) சஞ்சிகை ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளன. அவையும் குறிப்பிடத்தக்கவை.

அவர் முகநூலில் ‘றொமிலா ஜெயன்’ என்னும் பெயரில் நட்புக்கான அழைப்பினை அனுப்பியபோது எனக்கு அவரை யாரென்று தெரிந்திருக்கவில்லை. யாரோ ஒரு பெயர் சொல்ல வக்கற்ற முகமூடியாக அவரை எண்ணியதால், அந்த நட்பு அழைப்பினை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அவர் தமிழினி என்னும் பெயரில் முகநூலில் அறிமுகமாகி, பதிவுகள் இணைய இதழில் அவரது படைப்புகள் வெளியாகிய காலகட்டத்திலேயே அவர்தான் றொமிலா ஜெயன் என்னும் புனைபெயருக்குள் ஒளிந்திருப்பவர் என்னும் விடயமே எனக்குத் தெரிய வந்தது.

தமிழினியின் இலக்கியப்பங்களிப்பு றொமிலா ஜெயன் என்னும் புனைபெயரில் அவர் எழுதிய படைப்புகளையும் உள்ளடக்கியது. றொமிலா ஜெயன் என்னும் பெயரில் அவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள், பதிவுகள் போன்றவையும் தொகுக்கப்படுதல் அவசியம். றொமிலா ஜெயன் என்னும் பெயரில் முகநூலில் அவர் எழுதிய கவிதைகள் சில மற்றும் பதிவுகள் சிலவற்றை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன். இத்தொகுப்பு ஓர் ஆவணத்தொகுப்பு.

முகநூலில் றொமிலா ஜெயனின் பதிவுகள் சில:

1. றொமிலா ஜெயன்  நவம்பர்  27, 2014 –

“என் மக்களுக்காக ஆயுதம் தூக்கியதை தவிர
நான் என்ன தவறு செய்தேன்…”

றொமிலா ஜெயன் – டிசமபர் 24, 2014

நான் வீழ்ந்து விட்டேன்
என்று எண்ணி மட்டும்
யாரும் சந்தோசம் கொள்ளாதீர்கள்..
நான் வீழ்ந்ததே முளைப்பதற்குத்தான்..

2.  கவிதை:  எனது அன்னை.

எனைக் கருச் சுமந்த
காரணத்தால்
காலமெலாம்
கவலைகளையே
சுமந்தலைந்தாய்
வறுமையும்
வசைகளும் தாங்கினாய் -உன்
கனவுகளை சிதைத்துப் போட்ட
பிரயோசனமில்லாப் பிள்ளையானேன்- என்
பிறப்புக்கு அர்த்தம் தேடியலையாமல்
அன்னையே
உன் முகத்திலொரு புன்னகையை
மலரச் செய்வேனாகில்
ஆன்மா நிறைவடைவேன்.

Continue Reading →