வ.ந.கிரிதரன் கவிதைகள் 39: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!

வ.ந.கிரிதரன்எனது கவிதைகளில் 39  கவிதைகளின் தொகுப்பிது. எதிர்காலத்தில் என் கவிதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணமுண்டு. ‘ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்’ என்னும் தலைப்பில் அத்தொகுப்பு வெளியாகும். இத்தொகுப்பினை எனது வலைப்பதிவான ‘வ.ந.கிரிதரன் பக்க’த்தில் நீங்கள் முழுமையாக வாசிக்கலாம். அதற்கான முகவரி:   வ.ந.கிரிதரன் கவிதைகள் 37: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!

1. ஆசை!

அர்த்த ராத்திரியில் அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும் ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல் அடியேனின்
வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளிலே கண் சிமிட்டும்
சுடர்ப் பெண்கள் பேரழகில் மனதொன்றிப் பித்தனாகிக்
கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்தி விடும் நள்ளிரவில்
சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.

பரந்திருக்கும் அமைதியிலே பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி பைத்தியமாய்ப்
படுத்திடுவேன்.

இயற்கையின் பேரழகில் இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால் அடியேனின்
இஷ்ட்டமாகும்.

2. இயற்கையே போற்றி!

எங்கும் வியாபித்து, எங்கும் பரந்து எங்கனுமே,
சூன்யத்துப் பெருவெளிகளும் சுடர்களும், கோள்களும்,
ஆழ்கடலும், பாழ் நிலமும், பொங்கெழி லருவிகளும்,
பூவிரி சோலைகளும இன்னும்
எண்ணற்ற , எண்ணற்ற கோடி கோடி யுயிர்களுமாய்
வியாபித்துக் கிடக்கும் பரந்து கிடக்கும்
இயற்கைத் தாயே! உனைப் போற்றுகின்றேன்.
நானுனைப் போற்றுகின்றேன்.
பொருளும் சக்தியுமாய்
சக்தியே பொருளுமாய்
E=M(C*C)
இருப்பதுவே யில்லாததாய்
இல்லாததே யிருப்பதுவாய்
உண்மையே பொய்மையுமாய்
பொய்மையே உண்மையுமாய்
நித்தியமே அநித்தியமுமாய்
அநித்தியமே நித்தியமுமாய்
புதிர்களிற்குள் புதிராகக்
காட்சிதரும் இயற்கைத்தாயே! உனைப்
போற்றுகின்றேன்! நானுனைப் போற்றுகின்றேன்.

Continue Reading →

Colombo Telegraph: Six Degrees Of Separation: Sad Saga Of Premawathie & Isaipriya

Premawathie & IsaipriyaSix degrees of separation is the theory that every person on this planet can be connected to any other person on the planet through a chain of people, places, events that has no more than five layers or intermediaries. Mathematicians and MIT professors have researched this theory and see some validity.

Premawathie Manamperi was a beautiful 22 year old Sinhala woman from Kataragama. If you don’t believe me about her beauty, let me tell you, she was crowned Avurudhu Kumari in April 1970. She was a pleasant happy girl coming from a modest home living with her parents and ten siblings. If you search the archives, you may come across pictures of her in black and white. Even the grey scale cannot hide her beauty. She was living at the time where there were no cell phones or the internet.

Shobana Dharmarajah, popularly known as Isaipriya was a beautiful 27 year old Tamil girl from Jaffna. Just search for her name and you will see why I call her a beauty. Unlike Premawathie, Isaipriya was fully immersed and grew up in the cell phone/internet era. Isaipriya was a media personality, a journalist and a broadcaster. The LTTE hired her to broadcast news from their network.

I feel connected to Premawathie – because I walked the same streets she walked on. I have been to Katharagama first as a child with my parents and have walked from Tissamaharama to Katharagama on many occasions. I ate bunnis and drank tea at the same tea boutiques where Premawathie ate bunnis and drank tea. Premawathie and I worshipped at the same Katharagama Devaley, the jungle shrine, with mystique rituals and practices. [proof of six degrees of separation]

I feel connected to Isaipriya – because she walked the same streets I walked on when she lived in Jaffna. She enjoyed ice cream at Subhas Café at the Jaffna main bus station where I would swing by for my fix of ice cream made with full cream milk, loaded with calories when I was a student in Jaffna. And to round off my connection to Isaipriya, she attended Vembadi Girls High School in Jaffna, a school my mother and my sister attended. [proof of six degrees of separation]

Now here comes the bombshell – a further proof of six degrees of separation.

I feel Premawathie and Isaipriya were connected. They both met their death in the hands of The Sri Lankan Army! Sri Lankan Army is the common link that connected Premawathie from the South and Isaipriya from the North.

They were both alive when they were picked up by the army, but soon thereafter they were both dead. Though their time line was thirty eight years apart, there is an eerie unity in their death! Unbeknownst to each other, they became sisters in their death and their sisterhood was facilitated by the Sri Lankan Army.

On April 5, 1971 Jathika Vimukthi Peramuna (JVP) launched a surprise attack on several police stations and government installations in the South with a view to overthrowing democratically elected government of Sirimavo Bandaranaike. Around mid April 1971 the army was deployed in the south of Sri Lanka to bring the JVP insurgency under control. There is no evidence that Premawathie was linked to the insurgency forged by the JVP. After several hours of interrogation by the army personnel Premawathie was stripped naked and was made to walk the streets of Katharagama and two army officers, Liutinent Wijesuriya of Gemunu Watch and private Ratnayake sprayed bullets into her with a sterling sub-machine gun. As she was crawling on the ground, still alive, she was picked up and buried alive in a pit in a vacant lot. Minutes later, another soldier from Wijesuriya’s unit came and put a bullet through her head and finished the job. [this gruesome narrative is straight from the court proceedings and evidence presented in court – by witnesses including civilians and soldiers]

There is no doubt that Isaipriya was a LTTE sympathizer and was doing broadcasts for the LTTE. During the final stages of the war still and video images show the soldiers took Isaipriya into custody in the Nandi Kadal area. Subsequent forensic examination showed that Isaipriya was shot in the head execution style and her body desecrated.

Continue Reading →

விளிம்பு நிலை மக்களது அவலத்தின் கலாபூ ர்வமான விவரிப்புகள்: இமையத்தின் படைப்புகள் குறித்து..

புஎழுத்தாளர் தேவகாந்தன்னைவுசார்ந்த எழுத்துக்களில் நாவல், குறுநாவல், நெடுங்கதை, சிறுகதை ஆகிய நவீன இலக்கியத்தின் ஆரம்ப கால பகுப்புகள் இன்று அவ்வளவு வீச்சான ப ரிசோதனையில் இல்லை. நாவல், சிறுகதை என்கிற இரண்டு கூறுகளில்  இன்றைய வாசிப்பின் தளம் இவற்றை பொதுவாக உள்ளடக்கிவிடுகிறது. ஆக, ஒரு படைப்பாளியின் எழுத்துக்களை விமர்சிக்க வரும் இன்றைய ஒரு விமர்சகனுக்கு நிச்சயமாக இவற்றின் பகுப்புபற்றி ஆரம்பத்திலேயே ஒரு சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. தமிழ் எழுத்துலகில் நன்கறியப்பட்ட இமையத்தின் படைப்புகள்பற்றிய ஒரு அறிமுக வியாசம்கூட  இச் சிக்கலை எதிர்கொண்டே தீரும்.

பதிப்பக பகுப்புகளின் ஊடாகவன்றி தனியான ஒரு பகுப்பில் தன் பயணத்தை  மேற்கொள்வது இந்தவகையில்  சிரமமாகுமென்ற புரிதலுடன்தான் இவ்வாண்டு (2019) கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் இமையத்தின் படைப்புகள் பற்றி ஒரு அறிமுக வியாசத்தை இங்கு பதிவாக்க   முனைகிறேன்.

இமையத்தின் கோவேறு கழுதைகள் ( நாவல்-1994), ஆறுமுகம் (நாவல்- 1999), மண்பாரம் (சிறுகதைகள்- 2004), செடல் (நாவல்- 2006), வீடியோ மாரியம்மன் (சிறுகதைகள்- 2008), கொலைச் சேவல் (சிறுகதைகள்- 2013), பெத்தவன் (கதை – 2013), சாவு சோறு (சிறுகதைகள்- 2014), எங் கதெ (நாவல்- 2015), நறுமணம் (சிறுகதைகள்- 2016), செல்லாத பணம் (நாவல்- 2018), நன்மாறன் கோட்டைக் கதை (சிறுகதைகள்- 2019) ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. இமையத்தின் புதிய படைப்புகளையும் பழைய படைப்புகளின் மீள்வாசிப்பையும் செய்தபோதுதான் அவரது எழுத்தின் வீச்சை, கலாபூர்வமான நடையின் வசீகரத்தைக் காண முடிந்திருந்தது.  அவரது கருத்தியலை சரியாக இனங்கண்டு முன்வைக்க முனைகிற அதே வேளையில், அந்த நடையின் வசீகரத்தையும்  ஓரளவேனும் பதிவாக்க இவ்வியாசத்தில் நான் முயல்வேன்.

அம்பேத்கர் நூற்றாண்டுடன் தமிழகத்தில் வீச்சுப்பெற்று தலித் இலக்கியம் தன் செல்நெறியில் வளர்ந்துசென்ற வேளையில், அதுபற்றிய காரசாரமான விவாதங்கள் தமிழ்ப்பரப்பில் உருவாகின. அது மராட்டியத்திற்கும் கன்னடத்திற்கும் உரியதானதுபோன்ற தோரணையில், உச்சாலியா, மற்றும் உபார ஆகிய நூல்களை நினைவில் வைத்து, பேச்சுக்கள் எழுந்தன. அதேவேளையில் அது தமிழக  முற்போக்கு அணியினர்க்கும் பெரிய உவப்பானதாக இருக்கவில்லை எனத் தெரிந்தது. ஆனால் அது அழகரசன்,  என்.டி.ராஜ்குமார், பாமா, விழி.பா.இதயவேந்தன், சிவகாமி,  அன்பாதவன், ராஜ்கௌதமன் போன்றவர்களின்  எழுத்துக்கள்  அதை வலுவாக புனைவு மற்றும் கருத்தியல் தளங்களில் தன்னை நிறுவிக்கொண்டது. தி.க.சிவசங்கரபோன்ற முற்போக்காளர்கள்கூட தலித்திலக்கியத்திற்கு ஆதரவாக குரகொடுத்தனர். தலித் இலக்கியம்பற்றி அவ்வேளையில் தி.க.சி. இலக்கு சஞ்சிகையில் எழுதிய கட்டுரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இமையத்தின் முதல் நாவலான ‘கோவேறு கழுதைகள்’ விளிம்பு நிலை மக்களின் கதையைப் பேசியதானாலும், தலித் கருதுகோள் சார்ந்தும், அதன் சித்தாந்தம் சார்ந்துமான எழுத்துமுறையை முன்வைக்கவில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மறுதலையில் விமர்சகர் வெ.சாமிநாதன் அந்நாவலை வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்ததை இச் சந்தர்ப்பத்தில் நினைத்துகொள்ளல் தகும். ஆக, சாதீயம் காரணமாய் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்முறையை, அக் காலகட்டத்தில் வெளிவந்த இமையத்தின்  ‘கோவேறு கழுதைகள்’ நாவல் வெளிப்படுத்தியிருந்தாலும், தலித்திய பாதையில் நடந்துசெல்ல முயலவில்லை. அது சமூக அக்கறை கொண்டவர்களுக்கு வியப்பாகவிருந்தது.

Continue Reading →