கனடாத் தமிழ் இலக்கியமும் ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையும்!

கனடாத் தமிழ் இலக்கியமும் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையும்!கனடாத்தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘புரட்சிப்பாதை’ சஞ்சிகைக்குமோரிடமுண்டு.  இதுவொரு கையெழுத்துச் சஞ்சிகை. ‘அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம்’ என்னும் தாரக மந்திரத்துடன் வெளியான சஞ்சிகை.  ‘இப்பத்திரிகை வட அமெரிக்கா வாழ் தமீழீழ மக்கள் விடுதலைக்கழக ஆதரவாளர்களினால் வெளியிடப்பட்டது’ என்னும் குறிப்புடன் வெளியானாலும், இதன் அமைப்பின்படி இதனையொரு சஞ்சிகையாகவே கருதலாம் (செய்திக்கடிதமாகவும் கருதலாம். ஆனால் நாவல், கவிதை, கட்டுரை எனப்பல ஆக்கங்கள் வெளியானதால் சஞ்சிகையென்று கருதுவதே பொருத்தமானதென்பதென் கருத்து.). இதன் கனடாத் தொடர்புகளுக்கான முகவரி:  C.P.842, POST OFFICE – AHUNSTIC, MONTREAL, QUEBEC H3L 3P4 என்றும் குறிபிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பதினைந்தாம் திகதி வெளியான இச்சஞ்சிகை  15.09.1984 தொடக்கம் 15.06.1985 வரை பத்து இதழ்கள் வெளியாகியுள்ளன. வெளியான இதழ்கள் எவற்றிலும் ஆசிரியர் குழுவினரின் பெயர்கள் இல்லை. இளைஞர்கள் பலரின் கூட்டு முயற்சி இது. எனக்குத் தெரிந்து சுந்தரி (கோண்டாவில்)  ,ஜெயந்தி (உரும்பிராய்), நவரஞ்சன், குணபாலன் போன்றோருடன் மேலும் சிலர் இணைந்து இச்சஞ்சிகையினை வெளியிட்டார்கள்.  

இதுவோர் அரசிலமைப்பு சார்ந்து வெளியான கையெழுத்துச் சஞ்சிகையென்றாலும், கனடாவில் 1984இல் வெளியான தமிழ்ச் சஞ்சிகையென்றவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இச்சஞ்சிகை கவிதை, கட்டுரை மற்றம் நாவல் & கேலிச்சித்திரம் போன்றவற்றையும் பிரசுரித்ததன் மூலம் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கும் வளம் சேர்த்துள்ளது. கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவலான எனது ‘மண்ணின் குரல்’ இச்சஞ்சிகையிலேயே தொடராகவும் ஏழு அத்தியாயங்கள் வரை வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

‘புரட்சிப்பாதை’யில் வெளியான ஆக்கங்களின் விபரங்கள் வருமாறு (என்னிடம் இதழ் மூன்றிலிருந்தே  இருப்பதால் அதிலிருந்தே ஆரம்பிக்கின்றேன்) :

புரட்சி 1. விழிப்பு 3 – 15.11.1984

1. முதலிரு பக்கங்களில் ‘எமது மக்களே எம்மை புரட்சியாளராக்கினர்’ – தோழர் உமாமகேசுவரன் என்னும் தலைப்புடன் அவரது பேட்டியின் ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது. ‘தமிழன் குரல்’ பத்திரிகையில் வெளியான பேட்டியின் மீள்பிரசுரம்.
2. பக்கங்கள் 3,4 &5: Enemies of the People’  என்னும் தலைப்பில் ஸ்வீடிஷ் பாராளுமன்றத்தில் திரு.எவெரெட் ஸ்வென்சன் (Everet Svennson) ஆற்றிய உரையின் பகுதியுடன் ஆரம்பமான ஆங்கிலக்கட்டுரை, ‘ஸ்பார்க்ஸ்’ பகுதி 1 1984 இலிருந்து மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. மகாவலித்திட்டம் பற்றிய, குறிப்பாகக் கொத்மலைத்திட்டம் பற்றிய தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் நடாத்திய ஆய்வினை விபரிக்கும் கட்டுரை. கட்டுரையில் சிங்கள மக்களும் ஒடுக்கப்படுகின்றார்கள். அவர்களை ஒருபோதும் தமிழர்களின் எதிரிகளாகப் ‘தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் கருதியதில்லை’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரையின் இறுதியில் இலங்கையின் தென்பகுதி மக்களையும் ஜே.ஆரின் அரசினை அடக்குமுறைகளிலிருந்து விடுதலைபெறுவதற்கான போராட்டத்தில் இணையும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3. பக்கம் 6: ஆசிரியர் குழுவின் எண்ணத்தைப்பிரதிபலிக்கும் ‘விடுதலைப்பாதையிலே..’ தொடர் கட்டுரையின் பகுதி பிரசுரமாகியுள்ளது.
4. பக்கம் 7 அஞ்சலி : தோழர் பரமதேவா.  ‘மங்கை’யின் ஆசிரியருக்கான வாசகர் கடிதம்.  கவிஞர் பைரனின் ‘தைரியத்தின் ஒரே நம்பிக்கை சொந்த நாட்டின் வாள்களில் வாழ்கிறது’  என்னும் கூற்றும் பிரசுரமாகியுள்ளது.
5. பக்கம் 8 இறுதிப்பக்கம்: கவிதை -‘மரணத்துள் வாழும் மக்கள்’ – கிரிதரன்

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்னும் தலைப்பில் கேலிச்சித்திரம். வரைந்தவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.  சித்திரத்தைப்பார்க்கையில் கட்டடக்கலைஞர் பாலேந்திராவின் கேலிச்சித்திரம்போல் தெரிகின்றது.

Continue Reading →