கவிதை : என் மகன்! (அன்னையர் தினக் கவிதை)

(ஒரு  தாயின் நிகழ்காலத் துடிப்பும்,வருங்கால எதிர்பார்ப்பும்)

ஶ்ரீராம் விக்னேஷ்

1.
கட்டிய  கணவர்தம்,  
மட்டிலா  அன்பினால்,
கட்டிப் பொன் :  கனியைப்பெற்  றேன்! – வாரிக்
கட்டியே  முத்தம்இட்  டேன்! – சிறு
தொட்டிலில்  போட்டவன்,
தூங்கிடும்  போதிலே,
தூய்மையாம்  தெய்வம்கண்  டேன்! – ஒரு
தாய்மையின்  உய்வில்நின்   றேன்!

2.

எட்டியே  பிடித்துமார்,
பற்றியே  முகத்தினால்,
முட்டியே  பருகக்கண்   டேன்! – முகம்
மோதியே  மகிழக்கண்   டேன்! –  தேன்
சொட்டென   வாயினால்,
விட்டிடும்   வீணிரால்,
சட்டையும்   நனையக்கண்   டேன்! – மனம்
சாலவே   குளிரக்கண்   டேன்!

Continue Reading →

(அன்னையர் தினத்தை முன்னிட்டு) சிறுகதை: “ நான் – அம்மா புள்ளை!”

ஶ்ரீராம் விக்னேஷ்அதிகாலை  ஐந்துமணி.  அறையின் கதவு தட்டப்படும் சத்தம்.  எரிச்சலாக இருந்தது.  

சட்டைகூட போடாமல், பெனியனுடன்சென்று கதவைத் திறந்தேன்.

அங்கே… அறிமுகமில்லாத  ஒரு  சிறுவன்.

“யாரப்பாநீ…. காலங்காத்தால  வந்து  கதவைத்தட்டி  உசிரைவாங்குறே… எதுக்கு…? ’’

கொட்டாவி விட்டபடி  கேட்டேன்.

தெருவில்  பால்க்காரர்களின்  சைக்கிள் ’பெல்’ ஒலி….  இட்லிக்கடையில்  ஒலிக்கும் பக்திப்பாடல்….. ஆகியன  வைகறையை  வரவேற்றன.

அந்தச்சிறுவன்,  என்னை  ஏறஇறங்க  நோக்கினான். வலக்கரம்  நெற்றிக்குச்சென்றது. ‘’சலாம்’’ போட்டான்.

“வணக்கம்சார்…. எம்பேரு சுப்புறுமணியன்… வயசுபன்னிரண்டு… எல்லாரும்என்னய “சுப்புறு”ண்ணு கூப்பிடுவாங்க… வீடுவீடாய்ப் போயி அவங்கசொல்ற வேலைய செஞ்சு குடுப்பேன்….”

பேச்சினில்  பணிவு. பார்வையில்கம்பீரம்.  “மனக் கேமரா” வில் அவனைக் “கிளிக்” செய்தேன்.

தொடர்ந்து அவனே பேசினான்.

“ நேத்து பகல்பூராவும்  நீங்க வீடுதேடி அலைஞ்சதும்., பூசாரி அருணாசலம்ஐயா  தயவால சாயந்தரம்போல  இந்த “ரூம் “  கெடைச்சதும்… வரையில  எனக்குத்தெரியும்….”

நான்  குறுக்கிட்டேன்.

“சரி..சரி…  இப்பநீ  எதுக்குவந்தே…  சொல்லிட்டுக்  கெழம்பு ”

“தப்பா  நெனைக்காதீங்க….  பஞ்சாயத்துநல்லீல  தண்ணிவருது….  குடமோ, பானையோ இருந்தாக்  குடுங்க…. சத்தே  நேரமானா   கூட்டம்ஜாஸ்தியாகிடும்…. “பணிவாக வந்தது அவன் குரல்.

நேற்று  மதியமே பூசாரி அருணாசலம்  அண்ணாச்சி  கூறியிருந்தார்., “ தண்ணிபுடிக்கக் குடம் ஒண்ணு  வாங்கிக்க….”

அப்போது  வாங்குவதற்கு  மறந்துவிட்டேன். இப்போது இந்தச் சிறுவன் முன்னே தலை சொறிந்தேன்.

“ இல்லைப்பா…. நான்  குடமெதுவும்  வாங்கிக்கல்ல….. இண்ணைக்கு  வாங்கிக்கிறேன்…. நாளையிலயிருந்து  தண்ணிபுடிச்சுக்  குடு……”

பதிலை  எதிர்பாராமல்,  கதவை அடைத்தேன். தூக்கம்  உலுக்கி  எடுத்தது.

Continue Reading →

அன்னையர் தினக் கவிதை: குடியிருந்த கோவில் !

கருவறையில் குடியிருத்தி
குருதிதனைப் பாலாக்கி
பெற்றெடுக்கும் காலம்வரை
தன்விருப்பம் பாராது
கருவளரக் கருத்துடனே
காத்திருக்கும் திருவடிவம்
உண்டென்றால் உலகினிலே
உண்மையிலே தாயன்றோ  !

குடியிருந்த  கோவிலதை
கூடவே  வைத்திருந்தும்
கோடிகொண்டு கோவில்கட்டி
குடமுழுக்கும் செய்கின்றோம்
கருவறையை தாங்கிநிற்கும்
கற்கோயில் நாடுகிறோம்
அருகிருக்கும் கோவிலாம்
அம்மாவை மறக்கலாமா  !

அன்னதானம்  செய்கின்றோம்
அறப்பணிகள் ஆற்றுகிறோம்
ஆத்ம  திருப்தியுடன்
அநேகம்பேர் செய்வதில்லை
தம்பெருமை தம்புகளை
தானதனில் காட்டுகிறார்
தாயவளைத் தாங்கிநிற்க
தானவரும் நினைப்பதில்லை    !

Continue Reading →

சமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில் வளர வேண்டும்

- சுப்ரபாரதிமணியன் -மைசூரில் வசிக்கும் எழுத்தாளர் ராமன் முள்ளிப்பள்ளம்  நேற்று திருப்பூரில் நடந்த புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசும் போது இப்படிக் குறிப்பிட்டார்”:

“ இன்று இலக்கியம் பெரும் கார்ப்பரேட்டுகள் தீர்மானிப்பதாக இருக்கிறது. டிஜிட்டல் சிந்தனைகள் மனித மூளையை மழுங்கடிப்பதாக இர்க்கிறது. இன்று இலக்கியச் சந்தை கேளிக்கை தரும்  விடயங்களையேத் தருகிறது. இன்றைய தலைமுறை  கைபேசிகள், தொலைக்காட்சி தரும் கேளிக்கைகளீல் மூழ்கிக் கிடக்கிறது. சமூக பொறுப்புணர்வுகளைத் தரும்  அநீதியோடு சமரசம் செய்யாத  எழுச்சி மிகு உணர்வுகளைத் தரும் நல்ல இலக்கியம் உரூவாக்கப்படுவதும் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பதும் பெரிய சவாலாக உள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாகவி பாரதியார்  கொடுத்தக் கவிதைகளூம் பாடல்களும் தேசபக்தி எழுச்சியை மக்கள் மத்தியில் ஊட்டியதாக இருந்தது. அது உதாரணம். இளைஞர்களின் இலக்கிய மையங்கள் பல இன்று முன் வந்து தரும் இலக்கியப்படைப்புகளான கவிதைகள், சிறுகதைகள் , நாவல்கள் உரிய சிறப்பு தரப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.  சமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில்  வளர வேண்டும். இதுவே புதிய, நல்ல இலக்கியங்களுக்கு வழிவகுக்கும். பெரும் இலக்கியங்கள் பல நாடுகளில் , பல கலாச்சாரங்களில்  பலமுறை கடந்த காலங்களில் அடிப்படி சமூக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன . அரசியல், அதிகார மாற்றத்திற்கான முன்னோடி இலக்கியம். சமூக மாற்றத்தினை பதிவு செய்யும்  இலக்கியம் மக்களீன் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது   ”

ராமன் முள்ளிப்பள்ளம் நாவல் “ அம்மா தொட்டில் “  சசிகலா  வெளியிட துருவன் பாலா பெற்றுக் கொண்டார் .

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்

* மே    மாதக்கூட்டம் ..5/5/19. ஞாயிறு மாலை.5 மணி..                     பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலை,திருப்பூர்., நடைபெற்றது.தலைமை : தோழர்  பி ஆர். நடராஜன்

( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )வரவேற்புரை :தோழர்  சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )மாமேதை  காரல் மார்க்ஸ் பிறந்த தின சிறப்புரையை பி ஆர். நடராஜன்  நிகழ்த்தினார் :

Continue Reading →

புகலிட இலக்கியத்தில் மூத்த பெண்ணிய எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் படைப்புகள்: ஒரு பார்வை

புலம்பெயர் எழுத்தாளரான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் , அக்கரைப்பற்று - கோளாவில்  கிராமத்தில் 01.01.1943 இல் பிறந்தார்புலம்பெயர் எழுத்தாளரான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் , அக்கரைப்பற்று – கோளாவில்  கிராமத்தில் 01.01.1943 இல் பிறந்தார். இராஜேஸ்வரி, கந்தப்பர் குழந்தைவேல் – கந்தையா மாரிமுத்து ஆகியோரின் மூன்றாவது குழந்தையாவார். இராஜேஸ்வரி  1969 ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியம் அவர்களை திருமணம் செய்து,  இராஜேஸ்வரி மூன்று பிள்ளைகளுக்குத் தாயானவர். 1970களில் இருந்து இன்றுவரை இலண்டனில்   வசித்து வருகிறார். இலண்டனிலே இவர் தம்மை முழுமையாக இலக்கிய உலகில் அர்ப்பணித்துள்ளார். இவர் சிறுகதை,  நாவல், கட்டுரைகள் முதலான ஆக்க இலக்கியங்களைப் படைத்துள்ளார். இராஜேஸ்வரி,  யாழ்ப்பாணத்தில் தாதியாகப் பணி புரிந்தார். பின்னர்,  இலண்டன் சென்று பல ஆண்டுகளுக்குப் பின், தமது குழந்தைகள் வளர்ந்த பின் பல துறைகளில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். இங்கிலாந்தில் திரைப்படத்துறையில் சிறப்புப் பட்டம் (BA) (London College of Printing 1988)  பெற்ற முதல் ஆசியப் பெண்மணியாகக் கருதப்படுகிறார். மானிட மருத்துவ வரலாற்றுத் துறையில் முதுமாணிப் பட்டம் (MA) (1996 London University) பெற்ற முதல் ஆசியப் பெண்ணாகவும் கருதப்படுகிறார்.

இலங்கையில் 1960 களுக்குப் பின்னர், பல பெண் எழுத்தாளர்கள் இலக்கியத் துறையில் பிரவேசிக்கத் தொடங்கினர். இக்காலப்பகுதியில் இலக்கிய ரீதியான தமிழகத் தொடர்பு நெருக்கமுற்றமையும் எழுத்தாளர்களின் உருவாக்கத்திற்கு துணை புரிந்தது. இக்காலப் பகுதியில் பெண்கள் தொடர்பாக அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடிய கதைகளை முதல் முதலாக எழுத முற்பட்டவர் பவானி ஆழ்வாப்பிள்ளை. இக்கால கட்டத்திலே இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அன்னலட்சுமி இராசதுரை, நயீமா சித்திக், இராஜம் புஸ்பவனம், பூரணி, பத்மா சேமகாந்தன், தாமரைச் செல்வி, மண்டூர் அசோகா போன்ற பெண் எழுத்தாளர்களையும் விதந்து கூறலாம். அதிகளவு புலம்பெயர் நாவல், சிறுகதைகளைப் படைத்த பெண்ணிய எழுத்தாளராகவும் இன்றுவரை இலக்கிய உலகில் எழுதுபவராகவும் ஈழத்துப் புலம்பெயர் எழுத்தாளராகவும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,   தமது எழுத்துக்களால் பிரபல்யம் அடைந்துள்ளார். மருத்துவ நூல்கள், ஆராய்ச்சி நூல் முதலானவற்றையும் சிறுகதை, நாவல் முதலிய ஆக்க இலக்கியங்களையும் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார். 

மருத்துவ நூல்கள்

1.    தாயும் சேயும்
இவரது ‘தாயும் சேயும்’ என்ற மருத்துவ நூல் 2002ஆம் ஆண்டு மீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஒரு பெண்ணின் முக்கிய சவால்களான கருத்தரித்தல், கர்ப்ப காலம், மகப்பேறு, புதிய சிசுவை வளர்த்தெடுத்தல் முதலானவற்றை இராஜேஸ்வரியின் தாயும் சேயும் என்ற நூல் எடுத்துக் கூறுவதாக அமைகின்றது. இந்நூலில் தாயினதும் சேயினதும் உடல், உள வளர்ச்சி பற்றி விபரிக்க முனைந்துள்ளார். இந்நூல் தாய்மையின் ஆரம்பத்தில் இருந்து குழந்தை பிறந்து முதல் ஐந்து வருடங்களையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.

2.    உங்கள் உடல் உளம் பாலியல் நலம் பற்றி
மருத்துவ அறிவியல் வகையைச் சேர்ந்த இந்நூல் 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது. இது இவரது இரண்டாவது மருத்துவ நூலாகும். இது தமிழ் மக்களின் ஆரோக்கிய விருத்தியை நோக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.  இருதய நோய்கள், நீரிழிவு, உளவியல், பாலியல் முதலானவை பற்றி இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது. இவை பல ஆங்கிலப் புத்தகங்களில் உள்ள விடயங்களைத் தழுவி எழுதப்பட்டுள்ளன.

Continue Reading →

முகநூற் கவிதைகள்: முகம்மது றியால் கவிதைகள்!

முகம்மது றியால்

1. கன்னிக் கூறை

வாங்கி வைத்த சந்தனமும்
புதுசு மணக்கும் ஆடைகளும்
வைத்த இடத்தில்
அப்படியே இருக்கின்றன

நான்
பெரிய மனிசியாகி
இந்த வீடடிற்குள் இன்னும்
உங்களுக்காகக்
காத்துக் கொண்டிருக்கின்றேன்
உம்மா…

என்னைக் குளிப்பாட்டி
ஆடை உடுத்தி
அழகு பார்க்க
நீங்கள் இனி
வரவே மாட்டீர்களா?

Continue Reading →