Her poetry speaks!

"Fleeting Infinity" (Poems)

கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

This is a 330-page volume of contemporary Tamil Poetry rendered in English and compiled by Latha Ramakrishnan, a prominent translator of literary works from Tamil to English and vice versa. She lives in Chennai. Published by Annamikaa Alphabets (her own publication) in January this year, it is priced at Rs. 500/= Indian currency. The writer’s e-mail is: lathaa.r20102gmail.com

Latha Ramakrishnan (62) is not only a translator (more than 30 books) but also writes poetry (11 volumes), short stories (2 collections) literary criticism and essays (3 books). She is in Thamilaham literary world for the last 35 years. She also writes under various pseudonyms (Rishi, Anamika and her own name). She is on Facebook for the last three years. Most of the poems translated are poems by fellow poets that appeared on Facebook. They were in Tamil. Only a few are from Lankan Tamil poets. Among the latter, I happen to know only well-known people.

One thing good in this collection is that she has published the original Tamil version and her English translation side by side. Although she has translated about 600 such poems, she has included only 139 poets for volume one.
One should congratulate Latha Ramakrishnan for her genuine interest in translating these Tamil poems into English although in her Foreword she modestly says. “Of course, they may be imperfect and my translation may not be doing full justice to the original poem. Yet, I dared (and dare) to go on for the sheer joy it gives me and to my Facebook friends”. The translator also says that she “found solace in, admiring their (the poets selected for this volume) style and content.”

She is a Post-Graduate in English from Presidency College, Chennai. What I wanted to do here her version in English of some of the Lankan Tamil poems for the benefit of non-Tamil knowing readers. She has arranged the names of the poets according to the English alphabets and yet I wouldn’t know who among them Lankans are. Therefore, I am selecting only those whom I know well.

Anar Issath Rehana

Her original poem is titled “Alaiapukal Varatha Cellphone” Here is the English translation:

Cell Phones with no Incoming Calls-
There might have been an earthquake
In the underground hideouts of Earth:
The signs of landslide are there to see.
Deep down the Volcano fire
Begins to emit cinders.
Upon the Wal of house
Cracks breaking it into two
Appearing
The porcelain vessel
Which I had dusted and cleaned
With great care yesterday
Slipped from my had so unexpectedly
And smashed into splinters;
In the new dress of the child
The stitching has loosened
From the number saved
No call comes to
My mobile at all.
Dense Fog
Stands to block the way
At a distance is seen that human form;
Whether coming or going
Remains blurred.

(Anar comes from Kalmunai and I too has translated one of her poems into English.)

Continue Reading →

நினைவு கூர்வோம் மே 18!

 

விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த இசைப்பிரியா ஊடகவியலாளர்; கலைஞர். கர்ப்பிணியான அவர் இறுதி யுத்தத்தில் இராணுவத்தின் கரங்களில் அகப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டவர். இராணுவம் புரிந்த யுத்தக் குற்றங்களுக்கு ஆதாரங்களாக இவரது வாழ்வின் இறுதிக்கட்டங்கள் சம்பந்தமாக வெளியான காணொளிகள் அமைந்துள்ளன.  இசைப்பிரியாவை நினைக்கும் தோறும் கூடவே என் நினைவுக்கு வருபவர் 71 ஜேவிபி புரட்சியின்போது கொல்லப்பட்ட போராளியான பிரேமாவதி மனம்பெரி. பிரேமாவதியின் மரணத்துக்கான நீதி அவரது மரணத்தின் பின் கிடைத்தது. ஆனால் இசைப்பிரியாவுக்கான நீதி அவர் மரணித்து பத்து வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னும் கிடைக்கவில்லை. இதனை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை Six Degrees Of Separation: Sad Saga Of Premawathie & Isaipriya என்னும் இக்கட்டுரை. இதனை எழுதியவர் சண்முகம் கனகரத்தினம் ( Sanmugam Kanaga-Ratnam). இக்கட்டுரை வெளியான பத்திரிகை 'கொழும்பு டெலிகிறாப் (Colombo Telegraph)'.

விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த இசைப்பிரியா ஊடகவியலாளர்; கலைஞர். கர்ப்பிணியான அவர் இறுதி யுத்தத்தில் இராணுவத்தின் கரங்களில் அகப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டவர். இராணுவம் புரிந்த யுத்தக் குற்றங்களுக்கு ஆதாரங்களாக இவரது வாழ்வின் இறுதிக்கட்டங்கள் சம்பந்தமாக வெளியான காணொளிகள் அமைந்துள்ளன. இசைப்பிரியாவை நினைக்கும் தோறும் கூடவே என் நினைவுக்கு வருபவர் 71 ஜேவிபி புரட்சியின்போது கொல்லப்பட்ட போராளியான பிரேமாவதி மனம்பெரி. பிரேமாவதியின் மரணத்துக்கான நீதி அவரது மரணத்தின் பின் கிடைத்தது. ஆனால் இசைப்பிரியாவுக்கான நீதி அவர் மரணித்து பத்து வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னும் கிடைக்கவில்லை. இதனை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை Six Degrees Of Separation: Sad Saga Of Premawathie & Isaipriya என்னும் இக்கட்டுரை. இதனை எழுதியவர் சண்முகம் கனகரத்தினம் ( Sanmugam Kanaga-Ratnam). இக்கட்டுரை வெளியான பத்திரிகை ‘கொழும்பு டெலிகிறாப் (Colombo Telegraph)’.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்ந்து பத்து வருடங்கள் கழிந்து இன்னும் அவற்றுக்கான நீதி கிடைக்கவில்லை. யுத்தக்குற்றங்களுக்கான சான்றுகளிருந்தும் இன்னும் அவற்றுக்கான நீதி கிடைக்கவில்லை. இலங்கையில் முறையான் நல்லிணக்கம் , அமைதி ஏற்படுவதற்கு இலங்கை அரசானது இறுதி யுத்தக்காலத்தில் புரியப்பட்ட யுத்தக்குற்றங்களை ஏற்று , அவற்றுக்குரிய நீதி வழங்குவது அவசியம். முள்ளிவாய்க்கால் படுகொலைகளைப்பற்றி நினைவுபடுத்தும் ஒரு குறியீடு இசைப்பிரியா. முள்ளிவாய்க்கால் படுகொலை தினமான மே 18 நாளினை முன்னிட்டு இக்கட்டுரையை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். இணைய இணைப்பு: https://www.colombotelegraph.com/index.php/six-degrees-of-separation-sad-saga-of-premawathie-isaipriya/

Continue Reading →

எனது , வ.ந.கிரிதரனின், மூன்று கவிதைகள் பற்றி…

எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார்எழுத்தாளர் மாலன்எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக ‘அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -‘புவி எங்கும் தமிழ்க் கவிதை’ என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். அத்தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. அது பற்றி அறியத் தந்த மாலன் ” அன்புள்ள கிரிதரன், தேர் ஒருவழியாக புறப்பட்டுவிட்டது. உங்களது கவிதை இடம்பெற்றுள்ள அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு-புவி எங்கும் தமிழ்க் கவிதை- சாகித்திய அகாதெமியின் வெளியீடாக வந்துள்ளது. 22 நாடுகளில் வசிக்கும்  தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது  தமிழ்க் கவிதைகளின் விரிவிற்கும் ஆழத்திற்கும் சான்றளிக்கும் ஓர் அரிய நூல்” என்றும் தனது மின்னஞ்சலில் குறிப்ப்ட்டுள்ளார். முதலில் இத்தொகுப்பு நூலிலுள்ள கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளதற்காக அவருக்கு நன்றி. அத்தொகுப்பினை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினை மாலனின் கடிதம் ஏற்படுத்துகின்றது. மேற்படி தொகுப்பில் எனது கவிதையொன்றும் இடம் பெற்றுள்ளது. “நவீன விக்கிரமாதித்தனின் ‘காலம்'” என்பது அக்கவிதையின் தலைப்பு, அக்கவிதையினையே கீழே காண்கின்றீர்கள்:


கவிதை: நவீன விக்கிரமாதித்தனின் ‘காலம்’!

உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ, நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.

இரவு வானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திர சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கிறேன்.

எப்பொழுதுமே இறுதி வெற்றி
உனக்குத்தான்.
எப்பொழுதுமே உன் காட்டில்
மழைதான். அதற்காக
மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்
பேரவாவன்று பின்
உனைப் புரிதல்தான்.

ஓரெல்லையினை
ஒளிச்சுடருனக்குத்
தந்து விடும் பொருளறிந்த
எனக்கு
அவ்வெல்லையினை மீறிடும்
ஆற்றலும், பக்குவம்
உண்டு; புரியுமா?

Continue Reading →

மறக்க முடியாத மனிதர்கள குறித்து சிறப்பாகப் பதிவு செய்துள்ள இளங்கோவன் பணிகள் பாராட்டுக்குரியவை..! இலண்டன் இலக்கிய மாலை நிகழ்வில் பாராட்டு..!!

மறக்க முடியாத மனிதர்கள குறித்து சிறப்பாகப் பதிவு செய்துள்ள இளங்கோவன் பணிகள் பாராட்டுக்குரியவை..! இலண்டன் இலக்கிய மாலை நிகழ்வில் பாராட்டு..!!‘மக்கள் பணிபுரிந்த மாமனிதர்கள் குறித்துச் சிறப்பான பதிவுகளை இளங்கோவன் செய்துவருகிறார். அவை அவசியமான சிறந்த பணியாகும். நவீன தொழில்நுட்ப வசதி> முகநூல்> இணையத்தளங்கள் புத்தக வாசிப்பை அருகிடச் செய்துவிட்டது எனக் கூறுகிறார்கள். ஆனால் புத்தக வாசிப்பு உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தருவதாகும். முற்போக்குச் சிந்தனையுடனும் மாறாத இலட்சியப் பிடிப்புடனும் எழுதிவருபவர் இளங்கோவன். அவரது நூல்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் வெளியாகி பல நாடுகளிலும் பாராட்டைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.” இவ்வாறு கடந்த 31 -ம் திகதி ஞாயிறு (31 – 03 – 2019) இலண்டன் மாநகர் – ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற ‘இலக்கிய மாலை” நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த எழுத்தாளர் கரவை மு. தயாளன் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ‘கலாபூஷணம் – இலக்கிய வித்தகர்” வி. ரி. இளங்கோவனின் ‘ஈழத்து மண் மறவா மனிதர்கள், என் வழி தனி வழி அல்ல, ஒளிக்கீற்று” ஆகிய நூல்களும் ‘பாரதி நேசன்” வீ. சின்னத்தம்பியின் ‘ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள்” என்ற நூலும் வெளியிடப்பட்டன.

நிகழ்வில் எழுத்தாளர் மு. தயாளன் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது: ‘இலக்கியப் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனின் புலமையை அவரது கவிதை நூலில் கண்டு மகிழ்ந்தேன். அந்நூலில் யாரிடமும் அணிந்துரை பெறாது தைரியத்துடன் அவர் எழுதியுள்ள முன்னுரை என்னைக் கவர்ந்தது. அவர் கவிதைகள் காலத்தின் பதிவாகச் சிறப்பாகவுள்ளன. ஈழத்தில் மட;டுமல்ல புலம்பெயர்ந்த நாட்டிலும் எழுத்தாளன் தனது படைப்புகளை நூலுருவில; வெளிக்கொணர்ந்து மக்களிடம் சேர்ப்பிக்கப் பல அவதாரங்கள் எடுக்கவேண்டியுள்ளது. சிந்தனையில் வந்ததை எழுதி முடித்தல், ஒழுங்காகப் பதிதல்,  அச்சகம் தேடிக் கொடுத்தல், பிழை திருத்தம் பார்த்தல்> அச்சுக்கூலியைத் தேடிக் கொடுத்தல், நூல்களைத் தேவையான இடங்களில் சேர்ப்பித்தல்,  வெளியீட்டு விழாக்களை ஒழுங்கு செய்தல், விமர்சனம் என்ற வகையில் பேச்சாளர்களின் அறுவைகளைக் கேட்டுக் கொள்ளல், மிகுதி நூல்களை வீட்டில் அடுக்கி வைத்தல், மனைவி – பிள்ளைகளின் நச்சரிப்பைத் தாங்குதல் – இப்படியான நிலைமைகளையெல்லாம் சமாளித்து எழுத்தாளன் தன்னளவில் திருப்திப்படவேண்டியுள்ளது. இந்த அவல நிலைதான் எம்மிடையே உள;ளது. இத்தகைய நிலையிலும் சளைக்காது பல நூல்களை வி. ரி. இளங்கோவன் தொடர்ந்து வெளியிட்டுவருவது பாராட்டுக்குரியது” என்றார்.

ஊடகவியலாளர் எஸ்.கே.ராஜன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: ‘என் பள்ளிப் பருவம் முதல் வி. ரி. இளங்கோவனுடன் பழகி வருகின்றேன். அவர் ஒரு தகவல் பொக்கிசமாகத் திகழ்பவர். இலக்கியம், அரசியல் சம்பந்தமான எந்தச் சந்தேகங்களையும் அவரிடம் கேட்டு நிவிர்த்திக்கலாம்;. அவை குறித்து ஆர்வத்துடன் விளக்கமாகக் கூறுவார். மறக்க முடியாத மனிதர்களின் பணிகள் குறித்துப் பதிவுகள் செய்த அவர் இன்றைய தலைமுறைக்கேற்ற பல படைப்புகளை, பதிவுகளை மேலும் தரவேண்டும்” என்றார்.

Continue Reading →

நூல் அறிமுகம்: ‘உதிர்தலில்லை இனி’ ஸ்ரீரஞ்சனியின் சிறுகதைத்தொகுப்பு பற்றிய சிறு குறிப்பு

'உதிர்தலில்லை இனி' ஸ்ரீரஞ்சனியின் சிறுகதைத்தொகுப்பு பற்றிய சிறு குறிப்பு.இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்புலம் பெயர்ந்த தமிழர்கள், கனடா மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் அவர்கள் புலம் பெயர்ந்து வந்த கால கட்டத்தில் முகம் கொடுத்த பிரச்சினைகள பல. கனடியத் தமிழர்களின் வாழ்க்கையின் முக்கியமான பிரச்சினைகளில் சிலவற்றை ஸ்ரீரஞ்சனி தனது கதைகளின் மையக் கருத்தாகப் படைத்திருக்கிறார். அதாவது, தமிழ்க் குடும்பங்களில் தாய் தகப்பனிடையே நடக்கும் பிரச்சினையால், சோசியல் சேர்விஸ் அவர்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கப்; பிரித்துக் கொண்டு போவதால் வரும் துயரங்ளை இரு கதைகளிற் சொல்லியிருக்கிறார். அத்தோடு, போர் காரணிகளால் இல்லல் பட்டுப் புலம் பெயர்ந்து வந்த இடத்தில் எதிர் நோக்கும் பல பிரச்சினைகளால் சில தாய்மார் மன உளைச்சல்களுக்காளாகுவதும் அதனால் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்படுவதும் கனடா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளில் இன,மத,நிற வேறுபாடின்றி எல்லா சமூகத்தினரிடையும் நடக்கிறது.இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் பல விதத்திலும் பாதிக்கப்படுகின்றன.

‘உள்ளங்கால் புல் அழுக்கை’ என்ற கதையில், குடும்பப் பிரச்சினை காணமாகத் தாய் தகப்பனைப் பிரிந்து.மன உளைச்சலால் பாதிக்கப் பட்ட ஒரு குழந்தை, ‘தன் சுயமையின் வலிமை’ என்ன என்பதை மற்றவர்களுக்குக் காட்ட, ‘நாளைக்கு ஏதாவது சாமானை உடைக்க வேணும்’ என்று தனக்குள் முடிவெடுப்பது,அக்குழந்தையின் சாதாரண மனவளர்ச்சி.அக்குழந்தையின் வாழ்க்கையில் நேர் கொண்ட குடும்பத்து வன் முறைகளால்.எப்படி அசாதாரணமாக்கப் பட்டு விட்டது என்பதைக் காட்டுகிறது. வன்முறை என்பது, ஒரு குழந்தையின் பாதுகாப்புத் தளமான குடும்பத்தில் மட்டுமல்ல, சமுதாய நல்லுணர்வு, அரசியல் முன்னெடுப்புக்களையும் அழித்துவிடும் ஒரு பயங்கர ஆயதம் என்பதை இக்கதையின் ஒரு வரி மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

குடும்பத்தில் நடக்கும் பல பிரச்சினைகளால், அந்தக் குடும்பத்திலுள்ள குழந்தைகளின் எதிர்காலம் சிதைவதைத் தடுக்க அரசுகள் அந்தக் குழந்தைகளைத் தாய் தகப்பனிடமிருந்து அகற்றுவது பல நாடுகளிலும் நடக்கும் விடயமாகும். ஆனால், தாய் தகப்பனிடமிருந்து குழந்தைகளை அகற்றுவதில் மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில், கனடா இரண்டாமிடத்தைப் பெறுகிறது. பிரான்ஸ் நாட்டில் 1.2 விகிதமான பிள்ளைகளும்,கனடாவில் 1.1 விகிதமான குழந்தைகளும் சோசியல் சேர்விஸின் பாதுகாப்புக்குள் வளர்கிறார்கள். பிரித்தானியாவில் இந்தத் தொகை 0.55 மட்டுமே. கனடாவில் அரச பாதுகாப்புக்குள் வளரும் 30.40 விகிதமான குழந்தைகள் அந்நாட்டின் முதற்குடியினரின் குழந்தைகள் என்று சொல்லப்படுகிறது. இந்திய உப கண்டத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளின் தொகை தெரியவில்லை. தாய் தகப்பனிடமிருந்து பிரிந்து வாழ்வதால்; குழந்தைகளின் எதிர்காலம் பலவிதத்திலும் பாதிக்கப் படலாம். அவர்களின் உடல் உள.கல்வி வளர்ச்சியில் பல தளர்வுகள் நிகழலாம். உதாரணமாக ஓர் அன்பான வீட்டில் தாய் தகப்பன் இருவரின் அன்பிலும் பாதுகாப்பிலும் வளரும் குழந்தைகளை விட, ஒட்டு மொத்த அன்பற்ற யாரோ வீட்டில் வளரும்போது அவர்களின் முழுத்திறமையும் வெளிப்படாது போகலாம்.

இவருடைய பதினாறு கதைகளில் இருகதைகள் இப்படியான கதைகள் என்பதைப் பார்க்கும்போது, கனடாவில் வாழும் தமிழர்களில் 12.5 குழந்தைகள் இந்த நிலைக்கு ஆளாகிறார்களா என்ற கேள்வி வந்தது. இவர்களுக்கு உதவி செய்யும் தமிழர்களால் உண்டாக்கப் பட்ட அமைப்புக்கள் இருக்கின்றனவா என்றும் தெரியாது.

ஸ்ரீரஞ்சனியின் சிறுகதைத் தொகுப்பின் தலையங்கமான,’ ‘உதிர்தலில்லை இனி; என்ற பெயரைத்; தாங்கிய இவரின் ஆறாவது கதை,காதலிற் தோல்வியுற்ற ஒரு பெண்,மீண்டும் அவளது பழைய காதலரைக் காணும்போது எழுந்த மனத் துயரைத் தொடர்ந்து, சுயநலமாக என்னைப் பாவித்து முடித்த இந்த மனிதனுக்காக ஏன் நான் இவ்வளவு நாளும் என்னை வருத்தி, ஒடுக்கி வாழ்ந்தேன் என்று தன்வாழ்க்கையை அலசும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை. இது 2010; ஆண்டில் முதற்தரமும் 2014ம் ஆண்டு இரண்டு முறை பதிவாகியிருக்கிறது. 1984ல் எழுதப்பட்ட இவரின் முதலாவது கதையான,’கனவுகள் கற்பனைகள்’ என்ற கதையின் கருத்துக்கும உள்ள வித்தியாசம் இந்த எழுத்தாளர் என்னவென்று படிப்படியாகத் தன் படைப்புகளில் தன்னம்பிக்கை கொண்ட பெண்களைப் பிரதிபலிக்கிறார் என்பது புரியும்.

Continue Reading →