ஆய்வு: சங்கத்தமிழரின் வேட்டைத் தொழில்

   - சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -சங்க இலக்கியத்தில்  சங்க தமிழரின் வாழ்வயிலைக் காட்டும் கண்ணாடி. சங்கத் தமிழர்  இயற்கையோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தனர். மனிதன் விலங்கோடு விலங்காக வாழ்ந்த காலத்தில் விலங்கைத் தாக்கி வீழ்த்தி வாழ முற்பட்ட நிலையில் வேட்டைத் தொழில் தோன்றியிருக்க இடமுண்டு. அன்று தொடங்கி இந்தத் தொழில் காலந்தோறும் வளர்ந்து தற்காலத்தில் ஒரு கலையாகப் போற்றப்படுகின்றது. காலமாற்றத்தால் இக்கலை இன்று வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுவதும் சுட்டத்தக்கது. சங்க காலத்தில் ஐந்நிலமக்களும் வேட்டைத் தொழிலில் ஈடுபட்டன என்று அறிய முடிகின்றது. உணவு தேடுதல், பொருளீட்டல் என்ற அடிப்படைகளில் வேட்டைகள் நிகழ்ந்தன. வேட்டைத் தொழிலில் வேட்டையாடப்படும் பொருளாகவும், வேட்டையாடுவதற்கு உதவியாகவும் விலங்குகள் இருந்தன என்று இக்கட்டுரை வாயிலாக வெளிக்கொணர முற்படுப்படுகின்றது.

வேட்டையாட ஆராய்தல்
வேட்டைக்குச் செல்பவர் குறித்த விலங்குகளைத் தேர்ந்தெடுத்து வேட்டையாடுவர். குறவர்கள் இரவுநேரத்தில் விலங்குகளை ஆராய்ந்து தேடித் திரிந்ததை,
தேஎம் மருளும் அமையம் ஆயினும்
இறாஅ வன்சிலையர் மாதேர்பு கொட்கும்
குறவரும் மருளும் குன்றத்துப் படினே        (மலைபடு:273-275)

என்னும் மலைபடுகடாம் அடிகளின் மூலமாக பெரும் கௌசிகனார் விளக்கின்றார். இதனைப் போலவே நற்றிணை அடிகளில் வருவதை,

களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென     (நற்.389:4-5)

குறிஞ்சிநிலத் தலைவன் விலங்கின் வேட்டை மேற்சென்றதை காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் புலவர் நற்றிணை அடிகளின் வழியாக விளக்கின்றார். இதன் வழி சங்ககால மக்கள் விலங்குகளை ஆராய்ந்து வேட்டையாடியமை புலப்படும்.

யானை வேட்டை

யானையைக் கோட்டின் பயன்கருதி வேட்டையாடியுள்ளனர். குறிஞ்சிநில வேட்டுவன் வெண்கடம்ப மரத்தின் பின்நின்று களிற்றின் மார்பில் அம்பைச் செலுத்திக் கொன்றனன். பிறகு அதனின்று எடுத்து வந்த வெண்கோட்டைப் புல்லால் வேய்ந்த குடிசையில் புலால் நாற்றம் வீச ஊன்றியதை,

இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்
விரிமலர் மராஅம் பொருந்தி கோல்தெரிந்து
வரி நுதல் யானை அருநிறத்து அழுத்தி
இகல்அடு முன்பின் வெண்கோடு கொண்டுதன்
புல்வேய் குரம்பை புலர ஊன்றி         (அகம்.172:6-10)

என்னும் அகநானூற்றுப்பாடலடிகள் மூலமாக மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் கூறுகின்றார். குறிஞ்சிநிலத்தில் புலியுடன் போர் செய்த யானை புண்பட்டுக் கிடந்ததை,

புலியொடு பொருத புண் கூர் யானை
நற்கோடு நயந்த அன்புஇல் கானவர்        (நற்.65:5-6)

அதன் தந்தத்தை எடுக்கக் கருதிய வேடர்கள் அதன்மீது மீண்டும் அம்பெய்து துன்பப்படுத்தினர் என்பதை நற்றிணை பாடலடிகளின் மூலமாக கபிலர் வாயிலாகக் கூறுகின்றார். அவ் யானை இறந்தபின் அதனின்று தந்தத்தைக் கவர்ந்தனர். பாலைநில மறச்சாதியினர் தம் வில்லைக் கொண்டு வழிப் போக்கர்களைத் துன்புறுத்தியதை,

கொடுஞ்சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடும் கண் யானைக் கானம் நீந்தி
இறப்பர் கொல்..                (குறுந்.331:3-5)

காட்டிலுள்ள யானைகனைக் கொன்று தந்தங்களையும் கைப்பற்றினர் என்பதை குறுந்தொகைப் பாடலடிகளின் மூலமாக வாடாப்பிரபந்தனர் புலவரின் அறியமுடிகிறது.

Continue Reading →

பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல

- சுப்ரபாரதிமணியன் -“  பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல.. ஆண்கள் இயல்பாகவே தருவது. கிடைக்காத போது பெண்ணுரிமையை இலக்கியப்படைப்புகளிலும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது . அதைத்தான் இன்றைய பெண்கள் தங்களின் சமையல் காரியங்களோடும், வீட்டுக்காரியங்க்ளோடு சேர்ந்து  எழுதுவதையும் செய்து வருகிறோம். பெண்கள் பல துறைகளில் முன்னேறி வளர்கிறோம் “ என்றார் சக்தி விருது 2019 பெற்ற கவிஞர் உமாமகேஸ்வரி அவருக்கும் . மற்றும் 21 பேர்களுக்கு இலக்கியம், கல்வித்துறை,ஓவியம் , .சமூகப்பணி சார்ந்த பெண்களுக்கு சக்தி விருதுகள் ஞாயிறில்  வழங்கப்பட்டன .

“இரு கைதட்டினால்தான் ஓசை கிடைக்கும். பெண், ஆண் என்ற பேதமில்லாமல் படைப்பாளிகள் படைப்புகளில் ஈடுபட்டு சமூக மேம்பாட்டிற்கான கருத்துக்களைப் படைப்புகளில் வெளிப்படுத்த வேண்டும். வாசிப்பும், புத்தகப்பதிப்பும் இன்றைய சூழலில் பின்னுக்குத் தள்ளப்படும் சூழலில் புத்தகங்களை முன் நிறுத்தி படைப்பாளிகளைக் கொண்டாட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காகவே புத்தகக் கண்காட்சிகளும்  இலக்கிய பரிசுகளும் தேவைப்படுகின்றன “ என்றார் விழாவில் கலந்து கொண்ட பதிப்பாளர் ரவி தமிழ்வாணன், சென்னை  அவர்கள்.

திருப்பூர் சக்தி  விருது 2019   –

திருப்பூர் சக்தி  விருதுகளை  ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு   20  20 ஆண்டுகளாக வழங்கி வருவதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் 2/6/19  அன்று இடம்: பிகேஆர் இல்லம் , மில்தொழிலாளர் சங்கம், ஊத்துக்குளி சாலை..  விழா நடைபெற்றது .

இவ்வாண்டு திருப்பூர் சக்தி  விருது 2019   விருது பெற்றோர் : உமா மகேசுவரி கோவை , தனசக்தி நாமக்கல் , நா. நளினிதேவி மதுரை, பரிமளாதேவி திண்டுக்கல், செல்வகுமாரி புதுவை , தமிழரசி விழுப்புரம் , ந.கிருஷ்ணவேணி காங்கயம், செல்வசுந்தரி திருச்சி, நர்கீஸ்பானு தஞ்சை, பூங்குழலி பழனி ,சிந்துஜா சென்னை, ஷோபா பன்னீர் செல்வம் அரியலூர்,  இரா. மேகலா காரைக்கால், ரத்னமாலா புருஷ் நாகர்கோவில் ,  கமலதேவி  உறையூர் , தீபா கோவை ,ஜி ஏ பிரபா கோபி,         வி. ஆனந்தி தில்லி, மணிமாலா மதியழகன் சிங்கப்பூர் , , மரிய தெரசா சென்னை , இறை நம்பி வேலூர்

Continue Reading →

பண்பு பாராட்டும் உலகு

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

அறம் பொருளின்பமென்று முப்பால் முலையெடுத்து
புறம் அகம் நிகழ்வதத்தனையும் – இகம் பரமென்று
எங்குள்ளார்க்கும் புகட்டிப் புவிதனில் புகழொடு 
தோன்றிப் புகழொடு மறைந்தான் திரு வள்ளுவன் !

ஒன்று தெய்வமென்றுணர்தல் வேண்டுமென்று ஓதி
ஒற்றுமையின் வலுவுரைக்க ஓயாது பாடிப் – பெண்ணடிமை
தீருமட்டும் கவியெடுத்துச்சாடி களிறிடரித்தான்  விழுந்து
கண்ணணோடு உறைந்தான் கவி பாரதி !

அன்பாயுதமெடுத்து அஹிம்சையென்னும் உறையிலிட்டு
துன்பம்வரும் வேளையிலும் மலர்ந்து – காலன் வரும்
காலம்வரை நடந்து கருப்பு வெள்ளைக் கலகமோய
கணைகள் வாங்கிச் சரிந்தான் மகான் காந்தி !

நோயடித்த பிள்ளைகளின் துயர்துடைத்தோர் கருணைத்
தாயென்றணைத்து நின்றாள் – அவள் கரம்பட்டுத்
தலைதெறிக்க ஓடியதாம் பிணிகள்; தம்சேவை தேவையென
தேவனழைக்கச் சென்றாள் அன்னை தெரசா !

Continue Reading →

சூறை ஆடி விட்டார்கள் ! அனைவருமே ஆசை கொள்வோம் !

1. சூறை ஆடி விட்டார்கள் !
– யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை வெளிப்படுத்தும் இதயத்தின் குமுறல் –

ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து
நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியாதால்
ஓடாக உழைத்து நிதம் உருப்படியாய் செய்தமையே
வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்

எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்
எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே
நித்தமும் நாம்படிப்பதற்கு புத்தகமாய் இருக்குமவை
எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்

நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது
நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடிடலாம் அறிவையெலாம்
பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக
நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்

யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்
வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்
சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும்

Continue Reading →

அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் நடேசனின் நூல்களின் அறிமுகமும் விமர்சன அரங்கும்!

எழுத்தாளர் நடேசன்அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் நாவல்கள், சிறுகதைகள், தொழில் சார் அனுபவ நூல்கள் மற்றும் பயண இலக்கியம் தொடர்பான அறிமுகமும் விமர்சன அரங்கும் எதிர்வரும் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மெல்பனில் நடைபெறும். நடேசன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கியவர். இவரது விலங்கு மருத்துவத்துறை சார்ந்த கதைகளை உள்ளடக்கிய நூல் வாழும் சுவடுகள் இதுவரையில் இரண்டு பதிப்புகளைக்கண்டுள்ளன.  இதுவே இவரது முதலாவது நூலாகும்.

இலங்கையில் மதவாச்சியா தொகுதியில் பதவியா என்னுமிடத்தில் விலங்கு மருத்துவராக இவர் பணியாற்றிய அனுபவத்தின் பின்னணியில் எழுதிய முதலாவது நாவல் வண்ணாத்திக்குளம். இக்கதையை தமிழக திரைப்பட இயக்குநர் (அமரர்) முள்ளும் மலரும் மகேந்திரன் திரைப்படமாக்குவதற்கு விரும்பி, திரைக்கதை வசனமும் எழுதியிருந்தார். எனினும் இலங்கை அரசியல் சூழ்நிலைகளினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. எனினும் இந்த நாவல் Butterfly Lake என்ற பெயரில் ஆங்கிலத்திலும், சமணள வெவ என்ற பெயரில் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. 1983 இனக்கலவரத்தை பின்னணியாகக் கொண்டு நடேசன் எழுதிய உனையே மயல்கொண்டு என்ற நாவலும் Lost in you என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.
நடேசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளும் மலேசியன் எயர் லைன் 370 என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்த நூலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அசோகனின் வைத்தியசாலை என்ற நாவலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சுக்குத்தயாராகியுள்ளது.

எதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி  பிற்பகல் 2.30 மணிக்கு மெல்பனில், வேர்மன் தெற்கு கல்வி நிலையத்தில், கலை, இலக்கிய ஆர்வலர் மருத்துவர் ( திருமதி) வஜ்னா ரஃபீக் தலைமையில்,  நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் அனைத்து நூல்களின் விமர்சன  அரங்குடன்,   புதிய நாவலான கானல் தேசம், மற்றும்    நனவிடை தோயும்  சுயவரலாற்று பத்தி எழுத்து தொகுப்பான எக்ஸைல் முதலான நூல்களும் அறிமுகப்படுத்தப்படும்.

Continue Reading →