கவிஞர் மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஓர் உரையாடல்

கவிஞர் மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஓர் உரையாடல்

எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் மதுரையைப் பிறப்பிடமாகக்கொண்டவர். தற்போது வசிப்பது சிங்கப்பூரில். எழுத்து (சிறுகதை, கதை, கட்டுரை, நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு), ஓவியம் மற்றும் இசை எனப்பன்முக ஆற்றல் வாய்ந்தவர். இவரது படைப்புகள் பல நூல்களாக வெளியாகியுள்ளன. பல விருதுகளையும் பெற்றவர். ‘பதிவுகள்’ இணைய இதழிலும் இவரது படைப்புகள் பல வெளியாகியுள்ளன.

கவிஞர் மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஓர் உரையாடல்

தேதி: 2.2.2018  |  இடம்: ராஜபாளையம், தமிழ்நாடு, இந்தியா

* தமிழ்குஷி எஃப் எம் ஆட்டோகிராஃப் நிகழ்ச்சிக்காக எடுக்கப்பெற்ற இந்த நேர்காணல் ஊடகங்கள் எவற்றிலும் இதுவரை ஒலிபரப்பப்படவில்லை.

Continue Reading →

கவிதை: “அகதிகள் ” (உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு)

ஶ்ரீராம் விக்னேஷ்

பதியிழந்து   பலமிழந்து,
படைத்துவிட்ட    நாடிழந்து,
கதியிழந்து  வருவரல்ல  அகதி!  –  ஆங்கே
விதியிருந்தும்   கதியிருந்தும்,
விபரமற்றோர்   தமைமிதிக்கும்,
வீணர்களே  உள்ளூரின்   அகதி!

நெற்றிதன்னில்  வழிகின்ற,
நீள்வியர்வை   நிலஞ்சிந்த, 
கஷ்டமுற்று   உழைப்பவனின்  கூலி!  –  அதை
பத்தினுக்கு  எட்டாக்கி,
பகற்கொள்ளை   அடிப்பவரே,
சொத்துசுகம்   வைத்திருந்தும்  அகதி!

Continue Reading →

அப்பாவின் நினைவுகள்: “தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்! தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்!”

அப்பாவின் நினைவுகள்அப்பொழுது எனக்கு ஐந்து வயதிருக்கும். 1956  ஆம் ஆண்டு. எனது பெயரில் ” முருகன் லொட்ஜ்” என்ற சைவஹோட்டலை நீர்கொழும்பு பிரதான ( பஸாரில்) வீதியில்  நடத்திக்கொண்டிருந்த அப்பா லெட்சுமணன்,  பரோபகரா  இயல்புகளினாலும் எவரையும்  முன்யோசனையின்றி நம்பிவிடுவதனாலும்,  இரக்கசிந்தனையினாலும் ,  பொறுப்புணர்ச்சி குறைந்தைமையாலும் நட்டப்பட்டு,  அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டின் உறுதியை வைத்து கடன் பெற்று, அதனையும் மீட்க வழிதெரியாது,  கொழும்பிலிருந்த ஒரு கம்பனியில் வெளியூர் விற்பனைப் பிரதிநிதியாகி மலையகப்பக்கத்திற்கு கம்பனி வாகனத்தில் சென்றிருந்தார்.

ஒரு நாள் இரவு யாரோ சிலர் காரில் வந்து இறங்கினார்கள். அப்பாவுக்கு கடன் கொடுத்தவர்கள்தான் வந்துவிட்டார்கள் என நினைத்து  அம்மா கலங்கிவிட்டார்கள்.

வந்தவர் பெயர் ரகுநாதன் என்றும் அவர், தமிழ்நாட்டிலிருந்து அப்பாவைத்தேடி வந்துள்ளார் என்பதையும் பின்னர்தான் தெரிந்துகொண்டேன். வந்தவர் வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருந்த அப்பா – அம்மா திருமணமான புதிதில் எடுத்துக்கொண்ட படத்தைப்பார்த்துவிட்டு, ” இவரைப்பார்த்து எத்தனை வருஷமாச்சு. இலங்கை வருவதை உறவினர்களிடம் சொன்னதும், இந்த ஊருக்குப்போய் இவரையும் பார்த்துவிட்டு வரச்சொன்னார்கள். அதுதான் வந்தேன்.” என்றார்.
அம்மா, ” நீங்கள் யார்? அவர் வெளியூர் போயிருக்கார். எப்போ வருவார் என்பது தெரியாது.” என்றார்.

” எனது பெயர் ரகுநாதன். சிதம்பர ரகுநாதன் என்று சொன்னால் அவருக்குத் தெரியும். தமிழ்நாடு திருநெல்வேலியிலிருந்து வந்ததாகச் சொல்லுங்கள். ” எனச்சொல்லிவிட்டு,  கையில் வைத்திருந்த ஒரு சுவீட் பொட்டலத்தை என்னிடம் நீட்டினார்.
அவர் திடுதிப்பென வந்துவிட்டதால் எவ்வாறு உபசரிப்பது என்பதும் தெரியாமல் அம்மா பதட்டத்துடன் நின்றார். அவருடன் வந்தவர்களில் ஒருவர், ஒரு துண்டில் ஏதோ எழுதி, ” அவர் வந்தால் இதனைக்கொடுங்கள். இன்னும் சில நாட்களில் இவர் ஊர் திரும்பிவிடுவார் . முடிந்தால் கொழும்பு வந்து இந்த முகவரியில் சந்திக்கச்சொல்லுங்கள்.” என்றார்.

சில நிமிடங்களில் அவர்கள் திரும்பிச்சென்றனர். நானும் அக்காவும் தங்கை தம்பியும் அந்த சுவீட் பொட்டலத்தை பிரித்துச் சாப்பிட்டோம். நல்ல சுவையாக இருந்தது.

இச்சம்பவம் நடந்து  நான்கு வருடங்களின் பின்னர் 1960 ஆம் ஆண்டு ஒருநாள், மதியம் நானும் அக்கா தம்பி, தங்கையும் பாடசாலை விட்டு வந்து உணவருந்திக்கொண்டிருந்தோம்.

வெளியூருக்கு வியாபாரத்திற்குச்சென்றிருந்த அப்பா, திடுதிப்பென வாகனத்தில் வந்திறங்கினார். அவரது கையில் அன்றைய வீரகேசரி பத்திரிகை. அவருடைய உதவியாளர் பெரிய பெரிய பைகளில் மரக்கறிவகைகள், பழங்கள் யாவும் எடுத்துவந்தார். பத்திரிகையைக்காட்டி, ” பபா ( அம்மாவுக்கு பபா என்றும் ஒரு பெயர்) எங்கட மாமா கொழும்புக்கு வந்திருக்கிறார். இன்று காலையில் கண்டியில் நிற்கும்போதுதான் பேப்பர் படித்தேன். அவர் ஒரு கலெக்டர். பெரிய எழுத்தாளர். இன்றைக்கு கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் பேசப்போகிறார். நான் போய் இரவுச்சாப்பாட்டுக்கு அழைத்துவரப்போகின்றேன். எங்கள் ஸ்கூல் பண்டிதர் மற்றும் ஆசிரியர்களையும் விருந்துக்கு  அழைக்கப்போகின்றேன்” என்று வேகமாக சொல்லிக்கொண்டிருந்தார்.

Continue Reading →