பல்துறைக் கலைஞர் , நாடகத்துறை ஆளுமை கிரீஸ் கர்னாட் நினைவாக..

நாடக ஆசிரியர் கிரீஸ் கர்னாட்இந்திய நாடகத் துறையில் முக்கிய ஆளுமைகளிலொருவர் கிரீஸ் கர்னாட். அவரது மறைவு பற்றிய செய்தியைத்தாங்கிய பல பதிவுகள் முகநூலில் நேற்று பதிவு செய்யப்பட்டன. இவர் இந்திய சினிமாவின் வெற்றிகரமான நடிகர்களிலொருவரும் கூட. இலங்கைத்தமிழ் நாடகத்துறையின் முக்கிய ஆளுமைகளிலொருவரான க.பாலேந்திரா அவர்கள் எண்பதுகளில் தினகரனில் கிரீஸ் கர்னாட் பற்றி எழுதிய ‘நாடக ஆசிரியர் கிறீஸ் கர்னாட்’ என்னும் கட்டுரையைப் பதிவு செய்திருந்தார். அக்கட்டுரையை அமரர் கிரீஸ் கர்னாட் அவர்களை நினைவு கூரும்பொருட்டு இங்கு நன்றியுடன் பகிர்ந்து கொள்கின்றோம். – பதிவுகள்-.


நாடக ஆசிரியர் கிரீஸ் கர்னாட்

-க. பாலேந்திரா –

இந்தியத் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் கன்னட மொழி ஆக்கங்கள், தற்போது தனித்துவம் பெற்று விளங்குகின்றன. “சம்ஸ்காரா”, “காடு”, “கடசிராத்தா”, “சோமனதுடி” போன்ற திரைப்படங்கள் பலசர்வதேச விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவை. நாடகங்களில் “துக்ளக்” “யயாதி’, “காகன்ன” “கோட்டே”, “ஹயவதனா” போன்றவை பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு அகில இந்திய புகழ்பெற்றவைகளாக விளங்குகின்றன. நாடகத்தில் அறுபதுகளில் ஆரம்பித்த இந்தத்தீவிர இயக்கம் பிறகு திரைப்படத் துறையைப் பாதித்து விட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் இவற்றின் பாதிப்புக்கள் ஏற்பட ஏனோ கஷ்டமாக இருக்கிறது.

புதிய கோணம்

இப்படைப்புகளில் பொதுவாக இந்தியாவின் பண்டைக் கலாசாரப் பின்னணியில் கிராமிய கலைவடிவங்களினதும் புராண இதிகாசங்களினதும் செல்வாக்கு அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம். மேற்குறிப்பிடப்பட்ட நாடக திரைப்பட ஆக்கங்கள் அனைத்துக்கும் மூலகர்த்தாக்கள், கிரீஸ் கர்னாட், பி. வி. காரந்த், ஆனந்தமூர்த்தி போன்ற ஆங்கிலக் கல்வியறிவுள்ள புத்தி ஜீவிகள்தான், மேலைத் தேசங்களில் பெற்ற கலை அனுபவங்களோடு தத்துவச் சிந்தனைகளோடு திரும்பிவரும் இவர்கள் கிராமங்களிலும், ஏட்டுச் சுவடிகளிலும் மறைந்து கிடக்கும் பழமைகளைக் கண்டெடுத்து துலக்கிக் காட்டும் போது அவை ஒரு புதிய கோணத்தில் சிறந்த கலாவடிவங்களாக எமக்குக் கிட்டுகின்றன. கிரீஸ் கர்னாட் இவர்களில் முக்கியமானவர். நாடகாசிரியராக அறிமுகமான இவர், சிறந்த மேடை, திரைப்பட நடிகனாக, நாடகத் திரைப்பட தயாரிப்பாளனாக, சிறந்த மொழிபெயர்ப்பாளனாக இப்படி பல துறைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

கிரீஸ் கர்னாட் கன்னடத்தில் எழுதுகிறபோதும் கொங்கணி மொழிதான் இவரது முதல்மொழி. ஆங்கிலம், மராத்தி, ஹிந்தி போன்ற மொழிகளிலும் சமதையான ஆளுமையுடையவர். தன்னுடைய ஆக்கங்களை கன்னடத்தில்தான் நெருடல் இல்லாமல் வெளிப்படுத்த முடிகிறதாகக் கூறுகிறார் இவர். கன்னடம் அவருடைய சிறு பிராயத்து மொழி. ஆங்கிலத்திலும் எழுதும் இவர், சிறுவயதில் தான் ஒரு ஆங்கிலக் கவிஞனாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டவர். தனது கன்னட மொழி ஆக்கங்களைத் தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். இதைவிட வேறு நாடகங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தயாரிக்கிறார்.

Continue Reading →

பலூனில் மாட்டிக் கொண்ட சிறுமி.

கவிதை வாசிப்போமா?
பலூன் ஊதிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி
தவறி அதனுள் விழுந்துவிட்டாள்.
அவளுடைய மூச்சுக் காற்றில்
பலூன் பெரிதாகிக் கொண்டிருந்தது

அவள் மூச்சில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டேயிருந்தது.
பலூனில் கருவில் இருக்கும் சிசுவைப் போல
தத்தளித்துக் கொண்டிருந்தாள்
பலூனின் வாயைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிட
பிரயத்தனம் செய்தவைகள் எல்லாம் வீணாகிக் கொண்டிருந்தன.

Continue Reading →

கவிதை: காகிதப் பூ !

ஶ்ரீராம் விக்னேஷ்“பஞ்சத்தில்   உழன்று  :  பட்டினி   கிடந்தாலும்….
பட்டதாரி  ஆக்கிப்  :  பார்க்க வேண்டும்  தம்மகனை….”
நெஞ்சத்தில்  நினைப்போடு  :  நிறையப்   பெற்றோர்கள்,
நெருக்கடிகளைச்  சுமந்து  :  நேரகாலத்  தையும்மறந்து ….,

பட்டணம்  அனுப்பிவைத்துப் :  பட்டதாரி  ஆக்கிவிட்டு,
பட்டயம்  பெற்றதனைப்  :  படம்பிடித்து  மாட்டிவைத்து,
தொட்டதனைப்   பார்ப்பதிலே  :  சுகமொன்றைக்  கண்டுவிடும்,     
பெற்றோர்க்கும்  பிள்ளைகட்கும்  :  இக்கவிதை  சமர்ப்பணமாம் !

பட்டம் பெறுவதில்தான் :  பற்றெல்லாம்  இருந்ததனால்,
பழகியே  எத்தொழிலும்  :  பார்ப்பதற்கு  வாய்ப்பு  இன்றிப்,
பாவம்  இவன் நிலைமை  :  பயனற்ற  அலைச்சலிலே…….
பணிகள்   பலதேடிப்   :  படியேறி  இறங்குகின்றான்…..!

ஒரு ரூபாச்  சீட்டினிலே  :  ஒரு  லட்சம்  கனவுகாணும்….
உருப்படார்  வரிசையிலே :  உள்ளபடி  இவனும் ஒன்று !
“உனக்கும்  கீழுள்ளோர் : ஒருகோடி  என அவரை,
நினைத்துப் பார்   அதிலே :  நிம்மதியை  நாடு”  என்று….,

செப்பிய  கவிஞர்  தன் : சிந்தனை  வரிகளை….
திருப்பியே  பார்த் துணர்ந்து : திருந்தியே  கொள்ளுங்கள் !
“உனக்கும்  முன்னே : உள்ளவர்  பலரே….
உத்தியோகம்  பெற்றோர் : ஒருவர்  சிலரே….! ”

என்கின்ற  உண்மையை : ஏற்றிட  மறுத்தே,
இன்னும்  வாழ்க்கையை :  இழந்திட  வேண்டாம் !
பட்டம்  பெறுவதும் : படிப்பில்  உழல்வதும்,
“பாபச்  செயல்” என்று பகர்ந்திட  வில்லை !

Continue Reading →