இன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசரின் 92 ஆவது பிறந்த தினம்! குருவின்றி வித்தை கற்ற கவிஞன்! கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்!

இன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசரின் 92 ஆவது பிறந்த தினம்! குருவின்றி வித்தை கற்ற கவிஞன்! கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்!” ஆலையமணியின்   ஓசையை   நான்   கேட்டேன்,   அருள்மொழி   கூறும் பறவையின் ஒலி கேட்டேன் ” –  இந்தப்பாடலை  எங்கள் மூத்த தலைமுறையினர்   மறந்திருக்கமாட்டார்கள். 1961 ஆம் ஆண்டு வெளிவந்த பாலும்பழமும் படப்பாடல்.  ஒரு சிறிய பூங்காவில்தான், இந்தப்பாடல் கவியரசு கண்ணதாசனிடம் பிறந்தது.  அந்தப்பூங்காவின் முன்பாகத்தான் அமைந்திருக்கிறது கவிஞரின் கவி, கலை, திரை,  அரசியல் வாழ்க்கைச் சரிதத்தில் முக்கிய இடம் வகிக்கும் அவரது இல்லம். சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) இலக்கியவாதிகளுக்கு மிகவும் வேண்டப்பட்டது.  இங்குதான் கண்ணதாசன் பதிப்பகம், கலைஞன் பதிப்பகம், மணிமேகலை பிரசுரம், நர்மதா பதிப்பகம், தமிழ்ப்புத்தகாலயம், தாமரை- ஜனசக்தி காரியாலயம்,  கணையாழி அலுவலகம் இப்படியாக பல.

கண்ணதாசன் வாழ்ந்த வீட்டில் தற்போது அவரது மகன்மார் காந்தி -அண்ணாத்துரை குடும்பத்தினர் அடுத்தடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  இங்குதான் கண்ணதாசன் பதிப்பகமும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. முன்னர் ஹென்ஸ்மன் ரோடு என அழைக்கப்பட்ட இந்த வீதி கண்ணதாசன் சாலை என மாற்றப்பட்டிருக்கிறது.  1984 ஆம் ஆண்டு முதல் காந்தி கண்ணதாசன் குடும்பத்தினருடன் எனக்கு நெருக்கமான நட்பு. கண்ணதாசனின் துணைவியார் பார்வதி அம்மா, அந்த இல்லத்தின் வாசல்படியில் அமர்ந்துகொண்டு என்னுடன், கவிஞரைப்பற்றிச்சொன்ன பல சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றுதான் ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேன்  பாடல் பிறந்த தகவல்.

ஒரு காலத்தில் கவிஞரிடம் பாடலுக்காக வந்து தத்தமது கார்களை அடுத்தடுத்து நிறுத்திவிட்டு காத்திருந்த தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அமர்ந்திருந்த அந்த இல்லத்தின் விறாந்தாவிலிருந்துதான் பார்வதி அம்மா என்னுடன் நீண்டநேரம் உரையாடினார்கள்.  இது நடந்தது 1984 ஆம் ஆண்டு.  1990 ஆம் ஆண்டு மீண்டும் அவர்களை நான் விஜயா மருத்துவமனையில்தான் பார்த்துப்பேசினேன்.  84 இல் சந்தித்தபொழுது, எத்தனை பிள்ளைகள்..? எனக்கேட்டார்கள்.  இரண்டு பெண்குழந்தைகள் என்றேன். ” அப்படியா, அடுத்தது ஆண்தான். கண்ணன் பெயராக வைங்க. ”   என்றார்கள். அவர்களின் வாக்கு தேவ வாக்காக இருக்கவேண்டும். எமக்கு மகன் கண்ணதாசன் பிறந்த நாளன்றே ஜூன் 24 ஆம் திகதி 87 ஆம் ஆண்டு பிறந்தான்.  முகுந்தன் எனப்பெயர் வைத்தேன்.விஜயா மருத்துவமனையில் திருமதி கண்ணதாசனிடம் “ அம்மா உங்கள் வாக்குப்படியே நடந்துவிட்டது. மகனுக்குப்பெயர் முகுந்தன் என்றேன். “அப்படியா? வந்திருக்கானா? கூட்டிக்கொண்டு வாப்பா’ என்றார்கள்.  ” நாளை இரவுதான் இலங்கையிலிருந்து வருகிறான். நான் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்துவிட்டேன். நாளை நிச்சயம் அழைத்து வருவேன்” என்றேன். ஆனால், அதற்கு முன்பே கவிஞர் கண்ணதாசன் தன்னிடம் தனது காதல் மனைவியை அழைத்துக்கொண்டுவிட்டார்.  அதாவது பார்வதி அம்மா மருத்துவமனையிலிருந்து வீடு  திரும்பாமலேயே மேலுலகம் சென்றுவிட்டார். காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் என்ற பாவமன்னிப்பு திரைப்படப் பாடலை, இந்த காதல் மனைவியை மனதிலிருத்தியே கவிஞர் எழுதியிருந்தார்.

Continue Reading →

சுவர்ணவேல் நெறியாள்கையில் ‘கட்டுமரம்’

சுவர்ணவேல் ஈஸ்வரன்இலண்டன்  இந்திய திரைப்பட விழாவில் மெக்சிக்கன் பல்கலைக்கழகத் திரைப்படத்துறைப் பேராசிரியரும், குறுந்திரைப்படம், ஆவணப்படம், திரைப்படம் என்பவற்றின் இயக்குனருமாகிய  சுவர்ணவேல் ஈஸ்வரன் அவர்களின் நெறியாள்கையில் மிஸ்கின், அனுஷா பிரபு, பிரீதி கரன் ஆகியோர் நடித்த கட்டுமரம்” திரைப்படத்தை BFI Southbank எனும் இடத்தில் 21.06.2019 அன்று பார்க்கக் கிடைத்தமை நல்லதொரு பொழுதாக அமைந்தது.

வாழ்வு எவ்வளவு சவால்களைக் கொண்டதென்பதை முன்னிறுத்தியதான கதைப்பிரதியைக் காட்சிப்படுத்தியமைக்காகச் சுவர்ணவேல் அவர்களைப் பாராட்டியேயாக வேண்டும். கதைக்கரு, உரையாடல், நடிப்பு, கிராமிய வாழ்வுப்பதிவு என்று அனைத்தும் கச்சிதமாக அமைந்துள்ளன. இவற்றோடு படத்தைத் தாங்கி நிற்கும் இசையையும் கமராவின் நகர்வையும் பார்க்கின்ற போது, இது சாதாரண தமிழ்ப் படமின்றி நுணுக்கமான உத்திகளையும் உணர்வுகளையும் தரவல்லதென எண்ண வைக்கின்றது. இங்கு கரையேறப் போராடும் மக்களைக் கட்டுமரமாக்கி இயக்குனர் பயணிக்கின்றார். படம் முழுதும் நீரினால் சூழப்பட்ட கிராமமும்,  அங்கு கடலை நம்பி வாழும் மக்களும் ஓயாது ஆர்ப்பரித்து அலையும் கடலும் மூசி மூசி வீசும் காற்றும்,  கவித்துவமாகப் பதிவாகியுள்ளன.  

கதைக்களமாகச் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசம் அமைகின்றதென்பதும், அங்கு மீனவ வாழ்வு பதியப்படுகின்றதென்பதும், அதற்குக் கட்டுமரம் என்கின்ற குறியீடு வைக்கப்பட்டுள்ளதென்பதும் எமது எதிர்பார்ப்பாக அமைய, அவற்றையும் மீறி, அழகிய காதல்கதையை அதுவும் லெஸ்பியனின் காதல் வெளிப்பாட்டைச் சமூகம் ஏற்கும் வகையில் காட்டியமை திரைப்படத்துறையில் இயக்குனருக்கு இருக்கும் ஆளுமையைத் தெளிவுபடுத்துகின்றது.

தமிழ்ச் சமுகத்தில் திருமணம், குடும்ப வாழ்வு என்பன எவ்வளவு முக்கியத்துவமானவை என்பது ஒவ்வொரு பாத்திரத்திற்குள்ளாலும் வெளிப்படுத்தப்படுகின்றது. சிங்காரம் தாய்தந்தையற்ற மருமகளான ஆனந்திக்குத் திருமணம் செய்து வைப்பதில் காட்டும் தீவிரம், மாமாவுக்கு விதவையான மலரே மனைவியாக அமைந்தால் நல்லதென நினைக்கும் மருமகள், மகள் லெஸ்பியனாக இருந்தாலும் அவளுக்கு வாழ்வு அமைத்துக் கொடுக்க விரும்பும் தந்தையான விக்ஷ்ணுஜித்தன், திருமணம் செய்து வை அல்லது செய் எனத் தூண்டும் நண்பர்களென யாவருமே சமூக அழுத்தமொன்றைப் பேணுபவர்களாகவுள்ளனர்.

Continue Reading →

கவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை: காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாசன் !

கவிஞர் கண்ணதாசன்

– கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம் ஜூன் 24. அதனையொட்டி வெளியாகும் கவிதையிது. –

திரையுலகில் புகுந்தாலும் திறலுடைய சொற்கொண்டு
பலருடைய மனமுறையப் பாடியவர் நின்றாரே
நிலைநிற்கும் பலகருத்தை சுமந்துவந்த அவர்பாட்டு
நெஞ்சமதில் எப்போதும் நிலைத்துமே நிற்கிறது !

காதலவர் கைபட்டால் காமனுமே கலங்கிடுவான்
தேவர்கூட அவர்பாட்டை திறமென்றே பகர்ந்திடுவார்
சாதிமதம் காதலுக்கு தடையாதல் தகாதென்று
சேதிசொன்ன பாடலைநாம் தினமுமே ரசித்துநிற்போம் !

பட்டினத்தார் தத்துவத்தைப் பலபேரும் அறிவதற்குப்
பலபாட்டில் தந்துநின்ற பாவேந்தன் கண்ணதாசன்
இஷ்டமுடன் தமிழ்தந்தான் எமையென்றும் மகிழ்வித்தான்
கஷ்டம்பல பெற்றிடினும் காலமெலாம் வாழுகிறான் !

Continue Reading →