பதிவுகளில் அன்று: கலாச்சாரம், மார்க்ஸியம், பின் நவீனத்துவம் பற்றி…….

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


பதிவுகள் மார்ச் 2002  இதழ் 51
[திண்ணை இணைய இதழின் விருந்தினர் பகுதியில் இடம்பெற்ற விவாதத்திலிருந்து சில பகுதிகள். பதிவுகளில் ஏற்கனவே வெளியான பகுதி. பதிவுகளின் வாசகர்களுக்காக மீண்டுமொருமுறை இங்கு பிரசுரிக்கின்றோம். இவ்விவாதத்தில் தொடர்ந்தும் பங்கு பற்ற விரும்பினால் எமக்கொன்றும் ஆட்சேபனையில்லை.]

நரேஷ்:
ஜெயமோகன் – மாலன் கட்டுரைகள் தொடர்ந்து கலாச்சாரம் பற்றிய விவாதங்களைப் படித்து வருகிறேன். உண்மையில் எனக்கு மட்டும் தான் புரியவில்லையா , அல்லது எல்லோருக்குமே இதே கதியா என்று தெரியவில்லை. மாலன் தமிழ்க்கலாச்சாரம் என்பதனை ஆடியன்ஸ் என்ற பொருளில் பயன்படுத்துகிறார் போலத்தோன்றுகிறது. ஜெயமோகன் தமிழ்க்கலாச்சாரம் என்பதனை, ஜெயமோகன் தான் எந்த நோக்கில், அல்லது உருவாக்கப்பட வேண்டிய ஐடியல் என்ற நோக்கில் புரிந்து எழுதுவது போலத் தோன்றுகிறது. இருவருக்கும் மனப்பகையால் ஒருவர் எழுதுவதை மற்றொருவர் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்து கொள்ள முடியாமல் வார்த்தைகளில் சிக்கிக்கொண்டுவிட்டார்களா, அல்லது எனக்குத்தான் பத்தவில்லையா என்று புரியவில்லை. இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதை யாரேனும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முடியுமா? மிகுந்த நன்றி உடையவனாக இருப்பேன்.

ஜெயமோகன்:
அன்புள்ள நண்பருருக்கு, தங்கள் குழப்பம் சற்று அதிகமானதே. மாலன் கலாச்சாரம் என்றால் நெறிகள், அறங்கள், ஒழுக்கங்கள், விதிகள், நம்பிக்கைகள்  ஆகியவற்றி¢ன் தொகுப்பாக மட்டும் பார்க்கிறார் [அதாவது ஒட்டு மொத்தமாக  விழுமியங்கள்]அவை சமூகத்தின் பொருளாதாரக் கட்டுமானத்தால் ,அதை  நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு ,உருவாக்கப்படுபவை என்கிறார் .இது ஒரு மரபான பொருளாதார அடிப்படைவாத பார்வை. பொதுவாக பலராலும் நம்பப்படும் தளம் இது. இவர்கள் இலக்கியமென்றாலே உயரிய கருத்து மட்டுமே என்று எப்போதும் சொல்வதை பார்க்கலாம்.இலக்கியம் என்றால் கருத்து மட்டுமல்ல அக்கருத்துக்களை உண்டு பண்ணும் அகம் குறித்த புரிதலுக்கான முயற்சி அது என்ற எண்ணம் தேர்ந்த  வாசகனுக்கே ஏற்படுகிறது. இலக்கியம் குறியீட்டு இயக்கமான மனத்தை  அக்குறியீட்டு   வடிவிலேயே போய் அறிந்து கொள்வதற்கான முயற்சி என்று  சொல்லிப்பர்க்கலாம் இந்த  முரண்பாட்டின் தொடர்ச்சியே இந்த விவாதம்.  நான் கலாசாரம் என்பது விழுமியங்கள் மட்டுமல்ல என்கிறேன். எந்தெந்த  விஷயங்களை ஒரு சமூகம்  தொடர்ந்து தலைமுறைமுறையாக பேணுகிறதோ அவையெல்லாம் கலாசாரத்தின் கூறுகளே என்று  சொல்கிறேன்.அவை வெறுமே பொருளாதார காரணங்களால் மட்டும்  உருவாக்கப்பட்டு நிலை  நிறு¢த்தப்படுபவை அல்ல . சமூகத்தின் எதிர் காலக்கனவுகள் , இறந்த கால நினைவுகள் என எண்ணற்ற கூறுகளால் ஆனவை அவை. தனிமனத்திலும் ,சமூக மனத்திலும்  உள்ள குறியீட்டு  ரீதியான இயக்கங்களை அவை தீர்மானிக்கின்றன.விழுமியங்களும்  அவற்றின் விளைவுகளே .அந்த செயல்பாடுகளுடன் எல்லாம் தொடர்பு படுத்தி மட்டுமே கலாச்சாரம்  என்றால் என்ன என்று  தீர்மானிக்க முடியும். கலாச்சாரம் என்பது மிக வும் சிக்கலான ஓர் கூட்டு அகவய இயக்கம்  என்ற புரிதலே அச்செயல்பாடுகளை புரிந்து கொள்ள உதவிகரமானது . ஒரு இடத்தில் அதை நாம்  நெறிகளாக அறிகிறோம்.இன்னொரு இடத்தில் அதை அடையாளங்களாக. இன்னொரு இடத்தில் பழக்கவழக்கமாக. இவை அனைத்தையும் இணைத்தே யோசிக்கவேண்டும் என்கிறேன் , இவ்வளவுதான் ஆகவே விழுமியங்களை பிரச்சாரம் செய்வது மட்டுமல்ல கலாசார  செயல்பாடு. அடையாளங்களை  மீட்பது ,நிலைநிறுத்துவது,தகர்ப்பது ,மேலும்  நுட்பமாக்குவது,பழக்கங்களின் உள்ளர்த்தங்களை  அறிவது எல்லாமே கலாச்சார இயக்கங்களே . ஈவேராவின் சீர்திருத்த குரல்போலவே ஆபிரகாம்  பண்டிதரின் இசை நுட்ப ஆராய்ச்சியும் கலாச்சார  செயல்பாடேயாகும். தமிழுக்கு பாரதி அளித்த கொடை உலக இலக்கியத்துக்கும் உலக கலாசாரத்துக்கும் உரியதேயாகும். பிறிதொரு தருணத்தில் இதை மேலும் விரிவாக விவாதிக்கலாம். ஒன்றுண்டு ,  விவாதங்களே நம்மை  தெளிவாக சிந்திக்க வைக்கும். ஒரு அசலான கருத்தை உருவாக்கியெடுத்து ஒரளவு தெளிவுடன் முன்வைப்பது எளிய விஷயமல்ல .நான் எந்த விவாதத்திலும் எப்போதும் தயங்காமல் கலந்து கொள்பவனாகவே இருந்திருக்கிறேன். அதற்கு காரணம் என் சிந்தனையை அவ்விவாதங்களே ஒழுங்கு படுத்துகின்றன ,தெளிவாக்குகின்றன என்பதே. மாலனுடனான விவாதமும் அப்படித்தான்.ஆனால் அதில் விவாதத்துக்கு அப்பால் சில சிறு கோபங்களும் உருவாகிவிட்டன என்பதை மறுக்க முடியாதுதான்.அதை தவிர்க்க முடிவது இல்லை .

Continue Reading →

பதிவுகளில் அன்று: மாலனின் எதிர்வினை: கலாச்சாரம், பின்நவீனத்துவம், மார்க்ஸியம் ….

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


மாலன்பதிவுகள் இணைய இதழில் வெளியான எழுத்தாளர் மாலனின் எதிர்வினையொன்று.

பதிவுகள் யூன் 2002 இதழ் 30

ஜூன் 3,2002

அன்புள்ள வி.என்.ஜி, கலாசாரம் குறித்த என் கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பதற்காகவும் அவற்றைப் பதிவு செய்யவும் முன் வந்துள்ளமைக்கும் நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கிறேன். விவாதங்களில் – குறிப்பாக தமிழ் இலக்கிய உலகில்/ தமிழ் இணைய இதழ்களில் நிகழும் விவாதங்களில் இரு வகை அணுகுமுறைகள் காணப்படுகின்றன. தான் இருபது முப்பது ஆண்டுகளில் படிதறிந்தவற்றையெல்லாம், விவாதப் பொருளுக்குத் தேவையோ இல்லையோ, கொட்டி இரைத்து, விவாதத்தை அதன் தடத்திலிருந்து பிறழச் செய்வது. ‘எனக்கு என்னவெல்லாம் தெரியும் பார்’ என்ற மனோ பாவத்தில் மறுதரப்பை அச்சுறுத்தும் போக்கு அது. ஆங்கிலத்தில் sabre rattling என்றழைக்கப்படும் போக்குஅது. மற்றொன்று விவாதத்தை ஒரு இகழ்ச்சித் தொனியோடு அணுகி பொறுப்பற்ற, (flippant) சாரமற்ற கருத்துக்களைப் பொழிவது. பெரும்பாலும் தாங்கள் போதிய கவனம் பெறவில்லை என்ற மனக்குறை உள்ளவர்கள் பின் பற்றும் அணுகுமுறை இது.

இது தவிர இன்னொரு அணுகுமுறை உண்டு.விவாதங்களின் போது உலகெங்கும் பின் பற்றப்படும் முறை அது. தான் படித்தறிந்த கருத்துக்களை, தன் அனுபவத்தின், விழுமியங்களின் அடிப்படையில் தொடர்ந்து சிந்தித்து, அதைத் தன்வயமாக்கிக் கொண்டு விவாதங்களில் வெளிப்படுத்துவது. இஇவர்கள் நான்  இன்னின்ன படித்துள்ளேன் என்று சட்டையில் அந்து கொள்வதில்லை. குத்துச் சண்டைக்குப் போவதைப் போல ஒரு ‘தயாரிப்போடு’ ‘களம்’  இறங்குவதில்லை.விவாதத்தில் ‘வெற்றி’ ‘தோல்வி’களை எதிர்பார்ப்பதில்லை. காரணம் விவாதத்தையும் ஒரு கற்றல் அனுபவமாகக் கருதுபவர்கள்  இவர்கள்.

எனக்கு என்ன தெரியும் பார் என்பது ஒரு அணுகுமுறை. இந்த விஷயத்தில் என் நிலை என்ன என்பது  இன்னொரு அணுகுமுறை.ஜெயமோகன் விவாதங்களை கவனித்து வருபவர்கள் அவரது பாணி என்ன என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். நீங்களும், சதுக்க பூதமும் அவரிடம் அடிப்படையான விஷயங்கள் குறித்துக் கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். விரைவில் நீங்களே அவரது அணுகுமுறை பற்றி அனுபவ பூர்வமாக அறிந்து கொள்வீர்கள்.

Continue Reading →

பதிவுகளில் அன்று: மரபிலக்கியம் இரு ஐயங்கள்

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


ஜெயமோகன்பதிவுகள் ஆகஸ்ட் 2002 இதழ் 32

செவ்விலக்கியங்கள் இன்று எதற்கு?

செவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவதுண்டு . இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் ” நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேஎன். என குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம் . எதற்காக நேற்று என்ன எழுதினர்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்? ” என்று கேட்பார்கள் . இதன் மறுபக்கமாக வாசகர்கள் “நான் அறிந்து கொள்ள விரும்புவது இன்றைய வாழ்க்கையை.அதன் இன்றைய சிக்கல்களை .ஏன் நான் நேற்று எழுதப்பட்டவற்றை படிக்கவேண்டும் ?” என்பார்கள் . இவை முதல் பார்வைக்கு உண்மைபோலதெரியும்  கூற்றுக்கள் . ஆனால் மிக ஆழமான சில அடிப்படைக் கேள்விகளை அதை ஒட்டி எழுப்பிக்கொள்ளும்போது அர்த்தமற்ற ஒன்றாக மாறிவிடக்கூடியவை.

நமது உணர்வுகளை நாம் இக்கணமே பிறந்து வந்த ஒரு புத்தம்புதிய ஊடகம் மூலம் வெளிபடுத்தவில்லை .இன்று நாம் எழுதுவது நேற்றுமுதலே இருந்துவந்த மொழியில் . நாம் பயன்படுத்தும் அனைத்து சொற்களும் நேற்றிலிருந்து வந்தவை . ஆகவே நேற்றுடன் அவற்றுக்கு உள்ள ஆதாரமான உறவை நாம் எவ்வகையிலும் மறைக்க முடியாது .இலக்கியம் என்பது கணந்தோறும் புதியதும் அறுபடாத காலம் கொண்டதுமான ஒரு பிரவாகம் என்பதில்தான் அதன் அனைத்து அழகுகளும் மகத்துவங்களும் அடங்கியுள்ளது .

இயல்பாகவும் தன்னிச்சையாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதாகச்சொல்லும் ஒரு இளம் கவிஞனையே எடுத்துக் கொள்வோம் . அவன் குறைந்த பட்சம் மொழியையாவது கற்றிருக்க வேண்டும். மொழி எனும் போது சொற்கள் அவற்றின் அர்த்தங்கள் இரண்டும் கொள்ளும் உறவை இங்கு உத்தேசிக்கிறோம். இந்த உறவு பலவகை நுட்பங்கள் கொண்டது .தொடர்ந்து கண்ணுக்குதெரியாமல் மாறிக் கொண்டிருப்பது . இந்த மாற்றங்களை நிகழ்த்துபவை அன்றாட புழக்கமும் ஆக்க இலக்கியங்களும் தான். அதாவது ஓர் இளம் கவிஞன் அவன் எந்த பண்டைய இலக்கியங்களையும் கற்காவிட்டால் கூட பண்டைய இலக்கியங்களால் கட்டமைக்கப்பட்ட மொழியையே அடைகிறான், அதையே பயன்படுத்துகிறான் . அதற்குள் தான் அவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.

இலக்கியம் படைக்கும்போது அவன் உண்மையில் செய்வதென்ன? ஏற்கனவே அர்த்த்ப்படுத்தப்பட்டு தன்னை வந்தடைந்த சொற்களை தன் அனுபவத்தின் இயல்புக்கும் வெளிப்படுத்தல் தேவைக்கும் ஏற்ப அவன் வேறு இரு வகையில் அடுக்கி வைக்கிறான். அதன் மூலம் இன்னொரு தளத்தை உருவாக்குகிறான் , அவ்வளவுதான் .இந்த அர்த்த தளத்தின் ஒரு பகுதியாக இருக்கையில் அதன் சொற்களில் சில மெல்லிய அர்த்த மாற்ந்த்தை அடைகின்றன . இந்த சிறு மாற்றமே உண்மையில் அக்கவிஞனின் பங்களிப்பு . அதை அவன் அடுத்த தலைமுறைக்காக விட்டுச் செல்கிறான் .

Continue Reading →

பதிவுகளில் அன்று: எழுத்தாளர் தேவகாந்தனின் கட்டுரைகள் சில!

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


தேவகாந்தன் -

பதிவுகள் ஜூலை 2003 இதழ் 43

1. மய்யமுடைத்தல்

– தேவகாந்தன் (கொழும்பு) –

நான் இலங்கை வந்து ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாகி விட்டன.இக் காலத்தில் நிறையவே நாடளாவிய நண்பர்களையும் , பொதுமக்களையும் , அரசியல்வாதிகளையும் சந்தித்திருக்கிறேன். அவர்களின் அறிக்கைகளையும் பரவலாகவே வாசித்திருக்கிறேன். வெளியேயிருந்து ஒரு கருடப் பார்வையில் இலங்கையின் அரசியல் நிகழ்வுகளை அவதானித்துக்கொண்டிருந்து கருத்துகளை அடைவதைவிட ,இங்கிருந்தே – மக்களுடன் இந்த மண்ணில் நேரடியாகவிருந்தே – முடிவுகளுக்கு வந்தடைதல் சுலபமாகவேயுள்ளது. எனினும் பத்திரிகை / பத்திரிகை சாராத நண்பர்களுடனான ஒரு கலந்தாலோசிப்பினதும் விவாதத்தினதும் மேலேயே எனக்கு இக் கண்டடைதல்கள் சாத்தியமாயிற்று என்பதையும் இங்கு நான் கூறியாகவேண்டும்.

அண்மையில் நடந்து முடிந்த கொடையாளி நாடுகளின் ரோக்கியோ மாநாட்டிலிருந்து விஷயத்தைத் தொடங்கலாமென நினைக்கிறேன்.

இம்மாதம் 10ம் 11ம் தேதிகளில் நடைபெற்ற அன்னதான -மன்னிக்கவும்- அந்நியதான மகாநாட்டுக்கு எல்லா நாடுகளும் , நிறுவனங்களுமே வந்திருந்தன. நோர்வே மிகவும் சரியான  நிலைப்பாடெடுத்து ஒதுங்கி இருந்திருக்கிறது.

4.5 பில்லியன் டொலர்களுக்கும் கூடுதலாகவே கட்டம்கட்டமான உதவி வழங்கலோடும் , இன்னும் ஒரு பெரிய தொகைக்கான  ஆசை வார்த்தைகளோடும் , தமிழீழப் புலிகளின் முன் சில உறுக்காட்டியமான வார்த்தைகளோடும் சில வேண்டுதல்களோடும் மாநாடு முடிவடைந்திருக்கிறது.

மாநாடு காரணமாக நடந்த ஒரு சிறப்பு நிகழ்வுதான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட ஆசியநாயகன் விருது. நல்லவேளையாக இது ஆட்டநாயகன் விருதாக வழங்கப்படவில்லை. சோவியத் யூனியனின் சிதைவுக்கு முன் போலந்திலும் , கிழக்கு ஜேர்மனியிலும் கிளர்ச்சிகள் தோன்றிய காலத்தில் ‘கிளஸ்னோ’ கொள்கையைக் கடைப்பிடித்து அனைத்து அழிவுகளுக்கும் வித்தூன்றிய சோவியத் பிரதர் கோர்ப்பசேவிற்கு man of tha year கௌரவப் பட்டம் வழங்கியதும் இதே டைம்ஸ் நிறுவனம்தான்.

அதிலிருந்து நடந்த நிகழ்வுகள் …..அப்பப்பா…!உலகமே அறியும்!

ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த சியநாயகன் விருது வழங்கப்பட்டமையை , அதுவும் டைம்ஸ் நிறுவனத்தாலேயே வழங்கப்பட்டமையை , நினைக்க  எனக்கு மனதெல்லாம் திகில் வந்து பரவுகிறது.

அவர்கள் மிகவும்தான் தமது அவசரங்களைக் காட்டியிருந்தார்கள். மாநாட்டில் தத்தமது வியாபாரத்தை இலங்கையில் ஆரம்பிப்பதற்குத்தான். இந்த விஷயத்தில் மௌனமாய் , அதேவேளை உன்னிப்பாய்ச் சகலரின் செயற்பாடுகளையும் கவனித்துக்கொண்டிருந்த ஒரே நாடு இந்தியா மட்டுதான். இந்தோ- லங்கா எண்ணெய் நிறுவனத்தின் வியாபாரத்தை மாநாட்டுக்கு ஒரு வாரம்/ பத்து நாட்களுக்கு முன்னதாகவே திருகோணமலையில் ரம்பித்து வைத்துவிட்டிருந்ததே அதன் காரணம். இந்திய மத்திய அமைச்சர் ராம் நாயக்கே வந்து ஒரு வண்டிக்கு எண்ணெய் நிரப்பி கைவியள வியாபாரத்தை ரம்பித்து வைத்தார்.

Continue Reading →

பதிவுகளில் அன்று: மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]

பதிவுகளில் அன்று: மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


பதிவுகள் மார்ச்  2004 இதழ் 51

‘இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும்,
பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும்,
விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும்,
சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே.’
சுப்ரமணிய பாரதியார்-

“பாரதியால் தமிழ் உயர்ந்ததும், தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். பாரதி மக்கள் கவி. மானுடம் பாட வந்த மாக்கவி. புது நெறி காட்டிய புலவன். தன்னைப் பின்பற்றித் தமிழ் வளர்க்க ஒரு பரம்பரையைத் தோற்றுவித்த ஓர் உயர்கவி. எண்ணத்தாலும், எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர். பல்துறை அறிஞர், தொலை நோக்கினர், அறிவியல் பார்வை நல்கிய கவிஞானி. மெய்ஞ்ஞான விஞ்ஞானங்களின் கூட்டுச் சேர்க்கை அவர் படையல். புதிய தமிழகத்தை உருவாக்கக் கனவு கண்ட கவிக்குயில். சுதந்திரப் போரில் பாரதியின் பாடல் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத் தீயாய், சுதந்திரக் கனலாய்ப், புனலாய்த் தமிழ் நாட்டை வீறுகொள்ளச் செய்தது…”.ச. மெய்யப்பன், எம்.ஏ. [அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]

பாரதி மகாகவியா இல்லையா வென்று பாரதியின் படைப்புகளைத் திறனாய்வு செய்து, பாராட்டுக்குரிய ஒரு கட்டுரையைக் கோவை ஞானி திண்ணை அகிலவலையில் [டிசம்பர் 12, 2003] வெளியிட்டு இருந்தார். மகாகவிகள் எனப் போற்றப்படும் காளிதாசர், கம்பர், வால்மீகி, வியாசர், தாகூர், ஷெல்லி, ஷேக்ஸ்பியர், காய்தே, பைரன் வரிசையில் பாரதியார் நிற்கத் தகுதி பெற்றவரா அல்லது பாரதியை வெறும் தேசீயக் கவி என்று ஒதுக்கி விடலாமா என்னும் கேள்வி ஒரு சமயம் எழுந்திருக்கிறது! பாரதிக்கு மகாகவி என்னும் பட்டமளிப்பது முறையா அல்லது தவறா என்று ஆய்வதற்கு முன்பு மேற்கூறப்பட்ட கவிஞர் காளிதாசர், வால்மீகி, கம்பர், வியாசர், ஷெல்லி, ஷேக்ஸ்பியர், காய்தே, பைரன் ஆகியோர், பாரதி தனது காவியத்தில் கையாண்ட நூற்றுக் கணக்கான பல்வேறு நிகழ்கால, மெய்யான, முரணான மனிதக் குறைபாடுகளை, மானிடப் பண்புகளை நடைமுறைகளைத், தேசீயப் போராட்டங்களை எந்த வகையிலாவது தொட்டிருக்கிறார்களா என்று பார்ப்பது முதற்கண் அவசியம். அதாவது மற்ற மகாகவிகளை ஒப்பிட்டுப் பாரதியை எடை போடாமல், பாரதியை ஓர் அளவு கோலாக எடுத்துக் கொண்டு மற்ற கவிஞர்களின் தரத்தை, நயத்தை, உயரத்தைத் திறனாய்வு செய்ய ஒருவர் விரும்பலாம்! பாரதியைத் தராசின் ஒரு தட்டில் அமர வைத்து, மற்ற கவிஞர் ஒவ்வொருவரையும் நிறுத்துப் பார்த்துத் தரத்தை அறிய முற்படலாம்!

கவிஞர்களைத் தனித்தனியாகப் பீடத்தில் நிறுத்தி, அவர் மகாகவியா, இவர் மகாகவியா, எவர் மகாகவி என்றெல்லாம் வர்ணம் பூசி வரிசையில் வைக்க முயல்வது, ஒருபுறம் வீணான செயலாக எனக்குத் தோன்றுகிறது! ஆயினும் தமிழ்நாட்டில் பாரதியின் திறமைப் புலமைக்கு ஓர் இடத்தை அளிக்கத் தமிழறிஞர்கள் முற்பட்டிருப்பதால், அதைப் பற்றி எனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த ஆய்வுக்குச் சில கவிஞர் வால்மீகி, வியாசர், காளிதாசர் ஆகியோர் ஆக்கங்களைச் சிறிது ஆராய முயல்கிறேன்.

கவிஞர்கள் பலவிதக் கனி வகைகளைப் போன்றவர்கள்! கவிஞரின் தனித்துவப் படைப்புகள் எல்லாம், தனித்தனிக் கனிகளின் அரிய பழச்சுவை போல, முற்றிலும் வேறுபட்டு உள்ளத்தில் உணர்ச்சி அளிப்பவை! பலவிதக் கனிகளான மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பீச், பியர் ஆகியவற்றுள் எப்பழம் சுவையில் உயர்ந்தது, எப்பழம் சுவையில் மட்டமானது என்று கேட்டால் எவ்விதம் பதில் அளிக்க முடியும்? அவரவர் காலத்தின் கோலங்களை அவரவர் காவியத்தில், கவிதைகளில் வானவில் போல ஓவியம் தீட்டுகிறார்கள், படைப்பாளிகள்!

Continue Reading →