வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் ஐந்து!

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

– அண்மையில் எனது கண்ணம்மாக் கவிதைகள் ஐந்தினைத் தனித்தனியாக இங்கு பதிவு செய்திருந்தேன். அவை அனைத்தையும் தொகுத்து இங்கு தந்துள்ளேன். ‘காலவெளி’ நம் இருப்பின் யதார்த்தம். இச்சொற்றொடரைக் காணும் போதெல்லாம், கேட்கும் போதெல்லாம், வாசிக்கும் போதெல்லாம் நெஞ்சில் களி பொங்குகின்றது; சிந்தனைக்குருவி சிறகடித்துப்பறக்க ஆரம்பித்து விடுகின்றது. காலவெளியற்று இங்கு எதுவுமேயில்லை. காலவெளி பற்றிய என் உணர்வுகளின் பிரதிபலிப்புகள் இக்கவிதைகள். –


1: காலவெளிச்சித்தனின் மடலொன்று!

ஒளிக்கூம்புக்குள் விரிந்து , சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.
அடியே! அண்டத்தில் நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.
ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.
நானே  கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா!
உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால்
புரிந்துகொள்.
ஏனென்றால் இப்பிரபஞ்சத்துடனான என் உறவு
ஏன் உன் உறவும் கூடத்தான்
ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ.
இருந்தாலும் கவலையை விடு.
இன்னும் சிறிது விளக்குவேன்.
நீ, நான் , இங்குள்ள அனைத்துமே
துகள்களின் நாட்டியம்தாம்.
சக்தியின் வடிவம்தான்.
புரிந்ததா சகியே!

Continue Reading →

ஆறாம் நிலத்திணை தமிழ் இலக்கியத்திற்குப் புதியது!

குரு அரவிந்தன்தமிழ் இலக்கியத்தில் ஒரு சந்தேகம் உங்களிடம் கேட்டுப் பார்க்கலாமா?, ‘ஆறாம் நிலத்திணை’ என்றால் என்ன, சங்க இலக்கியத்தில் தேடிப்பார்த்தேன், அப்படி ஒரு பதம் இருப்பதாகத் தெரியவில்லை’ என்று நண்பர் ஒருவர் கேட்டார். ஆறாம்திணை என்பதற்கு ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்ததை வெவ்வேறு வகையான விளக்கத்துடன் தருவார்கள், அது அவர்களது சொந்தக் கருத்தாகும். ஆனாலும் ‘ஆறாம் நிலத்திணை’ என்றால் இப்படியும் இருக்கலாம் என்று எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன் என்று எனது கருத்துக்களையும் அவருடன் நான் பகிர்ந்து கொண்டேன். எனவேதான் கருத்துப் பரிமாறல் மூலம் இந்தக் கட்டுரையை மேலும் மெருக்கூட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன், ஆவணப் படுத்துவதில் தமிழர்தகவல் ஆண்டு மலர்கள்; முன்னிற்பதால் எனது கருத்தை இந்த மலரில் பதிவு செய்கின்றேன். 

தமிழர்களின் வரலாற்றில் ‘தமிழ் இலக்கியம்’ எப்பொழுதும் முக்கியமான இடத்தை வகித்திருக்கின்றது. தமிழ் மொழியின் காலத்தையும் தமிழர்களின் பண்பாடு நாகரிகம் போன்றவற்றையும் கலை, இலக்கிய வடிவங்களையும் அறிந்து கொள்ள பழம்பெரும் இலக்கியங்கள்தான் எங்களுக்கு உதவியாக இருந்தன. புலவர்களும், அரசர்களும், சான்றோர்களும் தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்தியதால் தான் இன்று எமது மொழியின் தொன்மையை, எமது இனத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்ல முடிகின்றது. அக்காலத்தில் எழுதப்பட்ட ஏடுகளும், கல்வெட்டுக்களும், புடைப்புச் சிற்பங்களும், ஓவியங்களும் எம்மை அடையாளப்படுத்த மிகவும் உதவியாக இருந்தன.

அவற்றைக் கவனமாகப் பாதுகாத்தவர்களும், தமிழ் பிரமி எழுத்துக்களை வாசித்து நவீன முறையில் எல்லோரையும் சென்றடையக் கூடிய வகையில் பதிப்பித்தவர்களும் எம்மினத்தின் பாராட்டுகுரியவர்கள். தற்போது மதுரைக்கு அருகே உள்ள கீழடி அகழாய்வுகள் எம்மினத்தின் தொன்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுவனவாக இருக்கின்றன. இவற்றை எல்லாம் தேடி எடுத்து வெளியே கொண்டு வந்து, தமிழ் மெழியைச் செம்மொழியாக்கி எம்மினத்திற்கும் முகவரி தந்தவர்கள் இவர்களைப் போன்றவர்களே என்றால் மிகையாகாது.

Continue Reading →

அரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : “நெஞ்சு பொறுக்குதில்லையே”

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே – நம்மை
நெருங்கிடும் துயரங்கள் நீள்வது கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லையே!

அடிமை விலங்கொடித்து ஆர்ப்பரித்தோம்
அடைந்துவிட்டோம் சுதந்திரமெனக் கொக்கரித்தோம் – இன்று
நெஞ்சு பொறுக்குதில்லையே!

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் கடக்கையில்
அங்கும் இங்குமாய்ச் செய்திகள் படிக்கையில்
நெஞ்சு பொறுக்குதில்லையே!

இறைவன் இருப்பிடத்தைக் கேடயமாக்கி
இளஞ்சிறார் சிதைக்கப்படுவதா சுதந்திரம்
நெஞ்சு பொறுக்குதில்லையே!

கைம்மாறு கருதாது உதவிய காலம்போய்
கையூட்டு இல்லாமல் காரியம் நடப்பதெங்கே
நெஞ்சு பொறுக்குதில்லையே!

Continue Reading →

லண்டனில் தமிழ் மொழிக் கல்வி’

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -ஒரு மனிதனின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஆரம்ப சக்தியாயிருப்பது அவனுடைய மொழியாகும். இந்த மாபெரும் அடிப்படையில் அவனுடைய அடையாளம்,அறிவு, கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம்,இசை நாடகம் போன்ற விழுமியங்கள் கட்டமைக்கப் படுகின்றன,வளர்கின்றன.காலக் கிரைமத்தில் அவனுடைய மொழி சார்ந்த ஆக்கங்கள் அவனுடைய பாரம்பரியத்தின் சரித்திமாகின்றன.

அது மட்டுமல்லாமல்,ஒரு மனிதனின்,உடல்,உள.அறிவியல்,சமூக,ஆத்மீக வளர்ச்சியுடன் மொழி வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒரு குழந்தையின் மொழிவளர்ச்சியின் ஆரம்பம் அந்தக்குழந்தை தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆரம்பிக்கிறது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். தனக்குப் பரிச்சயமான ஒலிகளை, குழந்தை தனது தாயின் வயிற்றிலிருக்கும்போதே அடையாளம் காண்கிறது. குழந்தை தனது தாயின் வயிற்றில் உண்டாக்கும் முதல் அசைவைக் கொண்டாட வளைக் காப்பு வைபம் மூலம் குழந்தைக்குத் தாயின் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும் நல்லொலியை ஆரம்பித்தவர்கள் எங்கள் மூதாதையர்.

குழந்தை பிறந்ததும் அதன் மொழி வளர்ச்சி மொழியற்ற வித்தியாசமான ஒலிகளால் வெளிப்படுத்தப்படுகிறது.பின்னர் குழந்தை சார்ந்த நெருங்கிய சூழ்நிலையில் உள்ள குடும்பத்தினரிடமிருந்து பல்வகையான ஒலிகளின் படிமம் சார்ந்த மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது.

அதன் நீட்சி குழந்தை மிகச் சிறுவயதில் மற்றக் குழந்தைகளுடன் விளையாடிப் பழகும்போதும், அன்னியர்களுடன் பழகும்போதும் தொடர்கிறது.அதன் பின்னர் குழந்தையின் கல்வி பாடசாலையில் ஆரம்பிக்கும்போது,அந்தக் கல்வி குடும்பம், சமுகம், தாண்டி, ஒரு நாட்டின் கல்வியற் கோட்பாடுகளின் கட்டுமானங்களுடன் நீட்சிபெறுகிறது.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (7) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (18) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை[ இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட ‘அமெரிக்கா’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட ‘பனையும் பனியும்’ சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. முதலில் தாயகம் (கனடா) பத்திரிகையில் ‘ஒரு மாட்டுப்பிரச்சினை’ என்னும் தலைப்புடன் வெளியாகியது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பானது (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) இலண்டலிலிருந்து வெளியாகும் ‘தமிழ் டைம்ஸ்’ ஆங்கில இதழில் வெளியாகியுள்ளது. ]


ஞாயிற்றுக் கிழமையாதலால் ‘றோட்டி’னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் ‘கொண்டா அக்கோர்ட்’ ‘சென்ற்கிளயர்’ மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித ‘டென்ஷ’னுமின்றிப் பின்னால் ‘ஹோர்ன்’ அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் ‘ஹோர்ன்’ அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. ‘நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை’ இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். ‘நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்’ என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும் அவன் சிந்தித்துக் கொள்வான்.

‘ஓல்ட்வெஸ்டன்’ றோட்டைக் கடந்து ‘கீல் இண்டர்செக்ஷ’னையும் கடந்து கார் விரைந்தது. இடப்புறத்தில் ‘கனடாபக்கர்ஸி’ன் ‘ஸ்லோட்டர்’ ஹவுஸ்’ பெரியதொரு இடத்தைப் பிடித்துப் ப்டர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளைத் துண்டு போடும் பெரியதொரு கசாப்புக்கூடம்.

பொன்னையா இயற்கையிலேயே சிறிது கருணை வாய்ந்தவன். ஏனைய உயிர்களின்மேல் அன்பு வைக்க நினைப்பவன். ஊரிலை இருக்கும் மட்டும் சுத்த சைவம்தான். இங்கு வந்ததும் கொஞ்சங்கொஞ்சமாக மாறி விட்டான். ‘இங்கத்தைய கிளைமட்டிற்கு இதையும் சாப்பிடாட்டி மனுஷன் செத்துத் துலைக்க வேண்டியதுதான்’. திடீரென் ஊர்ந்து கொண்டிருந்த ‘டிரபிக்’ தடைப்பட்டது. பொன்னையா மணியைப் பார்த்தான். நேரம் பதினொன்றையும் தாண்டி விட்டிருந்தது. பஞ்சாப்காரன் பத்து மணிக்கே வரச்சொல்லியிருந்தான். பொன்னையாவிற்குத் தெரிந்த ஓரளவு நாணயமான கராஜ் அந்தப் பஞ்சாப்காரனின் கராஜ்தான். ஸ்டியரிங்கில் மெல்லியதொரு உதறல் நேற்றிலிருந்து. அதனைக் காட்டத்தான் பொன்னையா விரைந்து கொண்டிருந்தான். ‘நேரங் கெட்ட நேரத்திலை இதென்ன டிரபிக் புளக்..’ இவ்விதம் எண்ணியபடி டிரபிக் தடைப்பட்டதற்குக் காரணம் என்னவாகயிருக்குமென் எதிரே நோக்கினான்.

Continue Reading →

வெகுசன ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பும் அவற்றின் விருதுகளும் பற்றி…

ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'ஆனந்த விகடன் சஞ்சிகை தமிழ் இலக்கியச் சூழலில் வெளிவரும் முக்கியமான வெகுசன இதழ்களிலொன்று. தமிழ் இலக்கிய வரலாறு பற்றி எழுதுபவர்கள் விகடன் போன்ற வெகுசன இதழ்கள் ஆற்றிய பங்களிப்புகள் பற்றிக் குறிப்பிடுவதில்லை. முனைவர்கள் தொடக்கம் சிறு சஞ்சிகை ஆசிரியர்கள் வரைக்கும் இப்போக்கினைக் காணலாம். வெகுசன சஞ்சிகைகள், பத்திரிகைகள் வாசகர்களின் உணர்வுகளுக்குத்தீனி போட்டு, பணம் சம்பாதிப்பதையே பிரதானமாகக்கொண்டு செயற்படுபவை. அதனால் அவற்றில் வெளியாகும் படைப்புகள் அனைத்துமே ஒதுக்கித்தள்ளப்பட வேண்டும் என்பது அர்த்தமல்ல. தமிழ் வாசகர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்ததில் அவற்றின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் குறை நிறைகளுடன் அவற்றின் பங்களிப்பு அணுகப்பட வேண்டியவை. அவற்றின் ஆரோக்கியமான பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட வேண்டியவை. ஆனால் அதனை நம் விமர்சகப்பெருந்தகைகளோ, சிறு சஞ்சிகை ஆசிரியர்களோ செய்வதில்லை. இவர்களது எழுத்துகளில் எங்குமே இச்சஞ்சிகைகளின் ஆக்கபூர்வமான பங்களிப்பு பற்றியோ, இச்சஞ்சிகைகளில் வெளியான முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் பற்றியோ தகவல்களோ, கட்டுரைகளோ வெளிவருவதில்லை.

அதே சமயம் இவ்வகையான பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தால் பலரைச் சென்றடையும் சூழல் உண்டு. இதனாலோ என்னவோ இவ்வகையான ஊடகங்கள் வழங்கும் விருதுகளுக்கு மட்டும் இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். உதாரணத்துக்கு விகடன் விருதுகள் பற்றிக் குறிப்பிடலாம். விகடன் விருது கொடுத்தால் விகடனின் ஆக்கபூர்வமான இலக்கியப்பங்களிப்புகளையெல்லாம் சுட்டிக்காட்டாத எழுத்தாளர்கள், கவிஞர்கள், இதழாசிரியர்கள் எல்லாரும் , விகடன் விருது பெற்ற செய்திகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து முகநூலில், வலைப்பதிவுகளில் விளம்பரப்படுத்திக் களிப்படைகின்றார்கள். காரணம் விகடன் விருது அவர்களது பெயர்களை இலட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சென்று சேர்க்கின்றதல்லவா?

இவர்கள் செய்நன்றிக்கடனாக ஒன்று செய்யலாம். விகடன் போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வரும் இலக்கியத்தரம் மிக்க படைப்புகளை, சமூக, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களைப்பற்றியாவது அவ்வப்போது தம் எழுத்துகளில் வெளிப்படுத்தலாம். செய்வார்களா?

Continue Reading →

கப்பலில் கரையொதுங்கியவர்கள்

கப்பலில் கரையொகப்பலில் கரையொதுங்கியவர்கள்துங்கியவர்கள்

“2009, 2010 ஆம் ஆண்டுகளில் இரண்டு கப்பல்களில் புகலிடம் தேடி வந்திறங்கிய தமிழர்களை நாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தினோம். அவர்களது குடும்பங்களைப் பிரித்தோம். குழந்தைகள் உட்பட, சகலரையும் சிறையில் அடைத்தோம். இவர்கள் சிறையில் நலிவுற்றிருந்த இதே ஆண்டுகளில்தான் –  கொசொவோ அகதிகளை விமானங்களில் மீட்டெடுத்துக் கொண்டுவந்த பத்தாவது ஆண்டு நிறைவையும், வியட்நாமிலிருந்து தப்பியோடி வந்த அகதிகளை வரவேற்ற நாற்பதாவது ஆண்டு நிறைவையும், ஹங்கேரியப் புரட்சியின்போது இடம்பெயர்ந்த அகதிகளை உள்ளெடுத்த ஐம்பதாவது ஆண்டு நிறைவையும் நினைவுறுத்திக் கொண்டாடி மகிழ்ந்தோம். கடந்த காலங்களில் அகதிகள் மீது காண்பித்த அனுதாபத்தையிட்டும் இரக்கத்தையிட்டும் எங்கள் முதுகில் நாங்களே தட்டிப் பெருமிதமடைந்தோம். அதே சமயம், புதிதாக வந்திறங்கிய தமிழ் அகதிகளிடம் கொடூரமாக நடந்துகொண்டோம். கனடியர்களான நாங்கள் உண்மையில் யார் என்பதிலும், உலகுக்கு எங்களை எப்படி நாங்கள் காட்டிக் கொள்கிறோம் என்பதிலும் உள்ள இந்த முரண்நிலையை நான் ஆராய்ந்தறிய விரும்பினேன்.”

The Boat People என்னும் தமது முதலாவது நாவலூடாக ஆங்கில இலக்கிய உலகில் இன்று பிரபலம் அடைந்திருக்கும் தமிழ்க் கனடியரான ஷரோன் பாலா (Sharon Bala) அந்த நாவலைத் தாம் எழுதுவதற்குக் கால்கோளமைத்த அருட்டுணர்வின் பின்னணியை இவ்வாறுதான் குறிப்பிடுகின்றார்.

தொழிலின் நிமித்தம் டுபாயில் வசித்துக்கொண்டிருந்த தமிழ்ப் பெற்றோரின் பிள்ளையாக அங்கு பிறந்தவர், ஷரோன். பின்னர் எழுபதுகளின் நடுப்பகுதி வரை ஐக்கிய அரபு நாடுகளில் (UAE) வாழ்ந்து வந்த அவரது குடும்பம், இலங்கையில் நிலவிய பாதுகாப்பின்மை காரணமாக ஊர் திரும்ப விரும்பாமல், ஷரோனின் ஏழாவது வயதில் கனடாவுக்கு இடம் பெயர்ந்தது. ஒன்ராறியோ மாகாணத்தின் பிக்கறிங்ஸ் நகரில் வளர்ந்த ஷரோன், உலகின் சகல திசைகளிலிருந்தும் வந்து குடியேறிய மக்களை உள்ளடக்கிய அன்றைய கனடிய பன்முகக் கலாசாரச் சூழலே, தமது இன்றைய ஆளுமைக்கும் எழுத்தார்வத்துக்கும் வித்தூன்றியதாகக் கூறுகின்றார்.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (5): காலவெளிக் கைதிகள்!

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல்
சிந்திக்க விரும்புகின்றேன்.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையென்றுரைத்தான்.
அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேன்.
மனத்து அசை இன்னும் முடியவில்லை.

Continue Reading →