கொரொனா வைரஸ் என்றொரு வைரஸ்
ஆட்டிப் படைக்குது அகிலத்தை இன்று.
இரும்புத் திரைக்குள் என்ன நடக்குது?
சொல்வ தெல்லாம் உண்மை தானா?
இதுவரை நாங்க கண்ட தில்லை
இந்த வைரசை என்ற போதும்
அச்சம் பெரிய வியாதி அன்றோ
அறிந்து துணிந்து எதிர்த்து நிற்போம்.
தனது 99 வயதினை நெருங்கும் வேளையில் எம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார் மூத்த எழுத்தாளரும் நாடக, கூத்து கலைஞரும் சமூகப்பணியாளரும் ஒளிப்படக்கலைஞருமான கலைவளன் சிசு நாகேந்திரன். நீண்டகாலம் அவுஸ்திரேலியா மெல்பனை வதிவிடமாகக்கொண்டிருந்தவர். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் அவரது புதல்வியும் பேரப்பிள்ளைகளும் அவரை சிட்னிக்கு அழைத்துச்சென்று, அங்கு ஒரு முதியோர் காப்பகத்தில் பராமரித்துக்கொண்டிருந்தனர். கடந்த சனிக்கிழமை திடீரென சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 10 ஆம் திகதி திங்கட்கிழமை மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி எம்மை வந்தடைந்தது. யாழ். நல்லூர் இவரது பூர்வீகம் எனச்சொல்லப்பட்டாலும், பிறந்தது கேகாலையில் 1921 ஆம் ஆண்டில். இவரது பிறந்த தினம் ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி.
அந்நாளைய அரிவரி தொடக்கம் லண்டன் மற்றிக்குலேஷன் வரையில் யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் ( இன்றைய யாழ். பல்கலைக்கழகம்) படித்த நாகேந்திரன், பின்னர் யாழ். மத்திய கல்லூரியில் வர்த்தக முகாமைத்துவம் கற்று, London Chamber of Commerce உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றினார். 1944 இல் மன்னார் அரசாங்க அதிபராக கடமையாற்றிய சிற்றம்பலம் அவர்களிடம் தட்டச்சாளராக பணியாற்றும் அரச நியமனம் கிடைத்தது. பின்னர் கொழும்பில் அரச திணைக்களம் ஒன்றில் பணிபுரியும்போது கணக்காய்வாளராக பதவி உயர்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து, 1979 இல் சேவையிலிருந்து ஓய்வுபெறும் வரையில் பல்வேறு திணைக்களங்களில் பணியாற்றியிருக்கிறார்.
நான்கு பிள்ளைகளின் தந்தை. ஒரு சாதாரண எழுதுவினைஞருக்குரிய ஊதியம். எளிமையான வாழ்க்கை. இவற்றுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்கவைத்து நல்ல நிலைமைக்கு அவர்களை உயர்த்தியவர். தனது வாழ்வை தமிழ் சமூகத்திற்கு பலவழிகளிலும் பயன்படும்விதமாக அமைத்துக்கொண்டிருந்ததுதான் அவரது தனிச்சிறப்பு. அத்துடன் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர். இளமைக்காலத்தில் படிப்பில் படு சுட்டி எனப்பெயரெடுத்த இவர், மாணவர் தலைவராகவும் பல்துறை விளையாட்டு வீரராகவும் திகழ்ந்திருக்கிறார். உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், டெனிஸ், டேபிள் டெனிஸ் முதலானவற்றிலும் வல்லவராகியிருக்கிறார். அயராது இயங்கிய இவரது சூட்சுமும் இந்தப்பின்னணிகள்தான் என்பது எமக்குப்புரிகிறது.
வாய்மொழி வழக்காறுகள் மானுட வாழ்வின் அறிவின் சேகரமாகும். அவை பெரும் தலைமுறை தொடர்ச்சியினைக் கொண்டவை. வாழ்வியல் சூழலோடு பிணைந்து நிற்கின்ற இந்த வழக்காறுகள் அவர்தம் வாழ்வியல் விழுமியங்களையும் பறைசாற்றுபவை. அர்த்தப்பட்ட வாழ்வினை அர்த்தப்பட வேண்டிய வாழ்விற்குக் காட்டாகக்கூறி நெறிப்படுத்துபவை. அந்நிலையில் நீலகிரி படகர் இன மக்களின் இறப்புச் சடங்கு சார்ந்த “கரு ஹரசோது” எனும் பாவம் போக்கும் சடங்கில் இடம்பெறும் வாய்மொழி வழக்காறுகளில் நிலவும் சூழலியல் சிந்தனைகள் இம்மக்களின் சூழலியல் அறிவினையும், பாதுகாப்பினையும் புலப்படுத்துபவையாக அமைகின்றன.
படகர்களின் வாழ்வியல், வழிபாட்டு நிலையைவிட இறப்புச்சடங்கியலுக்கே அதிகமான முக்கியத்துவம் அளிக்கின்றது. மறுபிறப்பு மற்றும் பேய்களின் மீதும் நம்பிக்கையில்லாத இம்மக்கள் இம்மையுலகிலிருந்து பிரிந்துச் செல்கின்ற ஆன்மா மறுமையுலகத்தில் தம் முன்னோர்களுடன் உறைவதாக நம்புகின்றனர். இந்நிலையில் இம்மையுலகில் பிரியும் ஆன்மாவினையும், அவ் ஆன்மா உற்ற உடலையும் புனிதப்படுத்துவது இவர்களின் முக்கியமான இறப்பியல் சடங்காகும். அதனுள்ளும் இறந்த உடலினைக் கிழக்குநோக்கி கிடத்தி பாவம்போக்கும் ‘கரு ஹரசோது’ எனும் சடங்கு மிகவும் இன்றியமையானதாகும்.
அண்மையில் தனது நூற்றி மூன்றாவது வயதில் மறைந்த நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) உலகச்சினிமாவில் முக்கியமானதோர் ஆளுமை. மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்குக் கிடைக்காத அவ்விருது இவரது மகன் மைக்கல் டக்ளசுக்குக் கிடைத்தது. ஆனால் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பின்னர் கிடைத்தது. இவர் இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகத்திறமை மிக்க நடிகர்களிலொருவர்.
இவரை நினைத்தாலே முதலில் நினைவுக்கு வருவது ஸ்டான்லி கூப்ரிக்கின் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த ஸ்பார்ட்டகஸ் திரைப்படமே . அதில் அவர் ரோமானிய அடிமைகளிலொருவராக நடித்திருப்பார். அடுத்து ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் லஸ்ட் ஃபோர் லைஃப் (Lust for Life – வாழ்வுக்கான காமம்) .ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் அவர் அதற்காக ஆஸ்காரின் சிறந்த நடிகர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ருஷ்யாவிலிருந்து , உலகம் போரில் மூழ்கியிருந்த காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு வந்த யூதக் குடிவரவாளர்கள் இவரது பெற்றோர். இரண்டாவது உலக யுத்தக் காலகட்டத்தில் அமெரிக்கக் கடற்படையிலிணைந்து பணியாற்றினார். பின்னர் நாடக மேடை நடிகராக நடித்துத் திரையுலகுக்குள் நுழைந்தார். சிறுவயதில் குடும்பப் பாரத்தைச் சுமப்பவதற்காகப் பல்வேறு வேலைகளைச் செய்தார். பின்னர் வளர்ந்து திரைப்பட நடிகரானதும் , தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். இவரது புகழ்பெற்ற திரைப்படமான ஸ்பார்ட்டகஸ் திரைப்படத்தை அக்காலகட்டத்தில் யாரும் அறிந்திராத ஸ்டான்லி கூப்ரிக்கின் இயக்கத்தில் தயாரித்தது இவரது நிறுவனமான ‘பிரியானா புரடக்ஸன்ஸ்’ (Bryna Productions) நிறுவனமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
கென் கேசி (Ken Kesey) எழுதிய நாவலான One Flew Over the Cuckoo’s Nest (குயில் கூட்டுக்கு மேலால் பறந்த ஒன்று) ஜாக் நிக்கல்சனின் நடிப்பில் திரைப்படமாக வெளியாவதற்கு முன்னர் அதில் நடிகராக அதே வேடத்தில் நடித்தவர் இவர். அதற்கான உரிமையினைப்பெற்றவர், அதில் நடிக்காமல் அதைத் தன் மைக்கல் டக்ளஸிடம் கொடுத்துவிட அவர் ஜாக் நிக்கல்சனை வைத்துத்தயாரித்து வெளியிட்டார். ஆஸ்கார் விருதுகளை அள்ளிச்சென்ற திரைப்படம் அது. அதில் நடிக்காதற்காகப் பின்னர் கேர்க் டக்ளஸ் வருந்தியதாக எங்கோ வாசித்த ஞாபகம்.
கண்ணம்மா!
நேற்று -இன்று – நாளை என்று
காலத்தின் ஒரு திசை பயணத்தில்
மீளுதல் சாத்தியமற்றதா? ஆயின்
‘அறிவுணர்’வுக்கு அது இல்லை. ஆம்!
அது இல்லை. எது?
ஆம்! அதுதான். அதுதான்.ஆம்!
அது இல்லை.
தயக்கமெதுவற்று அதனால் தங்குதடையின்றிப்
பயணிக்க முடியும்.
நேற்று – இன்று – நாளை
காலத்தின் அர்த்தமற்றதொரு நிலை
‘அறிவுணர்’வுக்குண்டு.
குவாண்டம் நுரையில் கிடக்கும் இருப்பில்
நேரத்துக்கும் அர்த்தமுண்டோ?
அங்கு அனைத்துமே சம காலத்தில்
இருப்பன. அறிவாயா கண்ணம்மா!
காலமே காலமாகி விட்ட நிலைதான்
குவாண்டம் நிலை. ஆம் ! அந்த நிலை.
என் ‘அறிவுணர்’வு கொண்டு
என்னால் எங்கும் பயணிக்க முடியும் கண்ணம்மா!
உனக்கது புரியுமா?
– இச்சிறுகதை அமரர் எழுத்தாளர் குகதாசன் இதழாசிரியராகவிருந்த சமயம் வெளியான யாழ் இந்துக்கல்லூரிச் (கனடா) சங்கம் வெளியிட்ட ‘கலையரசி’ மலருக்காக எழுதப்பட்ட சிறுகதை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. சிறுகதைகள்.காம் இணையத்தளத்திலும் இடம் பெற்றுள்ளது.-
யன்னலினூடு தெரிந்த அதிகாலை வானத்தைப் பார்த்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். மெல்லிய இருட்போர்வையின் அரவணைப்பில் சுகம் கண்டுகொண்டிருந்த பூமிப் பெண்ணிற்கு உறக்கத்தை விட்டெழுவதற்கு இன்னும் மனம் வராமல் அப்படியே படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருப்பது போல் பட்டது. விடிவெள்ளி பிரகாசத்துடன் விடிவை கட்டியம் கூறி வரவேற்றுக் கொண்டிருந்தது. ஊரில் இருந்த மட்டும் அவரிற்கு மிகவும் பிடித்தமானவை அதிகாலையில் எழுந்து கல்லுண்டாய் வெளியினூடாக நடந்து வருவதும், விடிவெள்ளியின் அழகில் மெய் மறப்பதும் தான்.”மாஸ்ட்டர், மாஸ்ட்டர்” என்று எவ்வளவு பெரிய பெருமை அவரிற்கு.”படிப்பிற்கு மாஸ்ட்டரின் பிள்ளைகளைக் கேட்டுத்தான்” என்று கதைப்பார்கள்.’வர மாட்டேன், வர மாட்டேன்’ என்றிருந்தவரை மகன் தான் வற்புறுத்தி கனடா வரவழைத்திருந்தான். வந்து ஒரு வருடத்திற்குள்ளேயே அவரிற்கு வாழ்க்கை போதும் போதுமென்றாகி விட்டது. நான்கு சுவர்களிற்குள்ளேயே வாழக்கை அதிகமாகக் கழிகின்றது. இயற்கையை இரசித்து ஆனந்தமாகப் பறந்து கொண்டிருந்த பறவையைப் பிடித்துக் கூட்டினுள் அடைத்து வைத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அவர் நிலை.
ஊரில் நிலவிய அந்த சமூக வாழ்வியற் தொடர்புகள் இங்கு அற்றுத் தான் போய் விட்டன. அங்கு…பொழுது விடிவதிலும் ஒரு அழகு. பொழுது சாய்வதிலும் ஒரு அழகு.இரவெல்லாம் நட்சத்திரப் படுதாவாகக் காட்சியளிக்கும் விண்ணைப் பார்ப்பதிலுள்ள இன்பத்தைப் போன்றதொரு இன்பமுண்டோ? மின்மினிப் பூச்சிகளும் இரவுக்கால நத்துக்களின் விட்டு விட்டுக் கேட்கும் ஓசைகளும் இன்னும் காதில் கேட்கின்றன. மழை பெய்வதென்றால் சுப்ரமணிய வாத்தியாரிற்கு மிகவும் பிடித்ததொரு நிகழ்வு. ‘திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தோம்’ போடுமந்த மழையிருக்கிறதே…’வெட்டியிடிக்கும் மின்னலும்’ ‘கொட்டியிடிக்கும் மேகமும்’ ‘விண்ணைக் குடையும் காற்றும்’…வானமே கரை புரண்டு பெய்யும் அந்த மழையின் அழகே தனி அழகு. இங்கு பொழுது புலர்வதும் தெரிவதில்லை. பொழுது சாய்வதும் தெரிவதில்லை. மழை பெய்வதும் இன்பத்தினைத் தருவதில்லை. மூளியாகக் காட்சியளிக்கும் நகரத்து இரவு வானம் இழந்து விட்ட இனபத்தினை நினைவு படுத்தி சோகிக்க வைக்கும். நாள் முழுக்க நாலு பேருடன் கதைத்துக் கொண்டிருந்தவரிற்கு கனடா வாழ்க்கை நான்கு சுவரிற்குள் நரகமாக விளங்கியது. எந்த நேரமும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தவரிற்கு ஓய்ந்து கிடப்பது கொடிதாகவிருந்தது. ‘திக்குத் தெரியாத கட்டடக் காட்டினுள்’ வந்து சிக்கி விட்டோமோவென்று பட்டது. அதே சமயம் மகனை நினைத்தாலும் கவலையாகத் தானிருந்தது.
‘யாரும் ஊரே! யாவரும் கேளிர்’ என்று பாடி வைத்தான் பண்டையத் தமிழ்க்கவிஞன் ஒருவன். உலக மக்கள் அனைவருமே எனது சுற்றத்தவர்கள் என்பது அதன்பொருள். அன்றுள்ளதை விட இன்று உலகம் மிகவும் சுருங்கி விட்டது. பல்லின, பன்மொழி, மத மக்களுக்கிடையிலான புரிந்துணர்வும், தொடர்புகளும் அதிகமானதொரு சூழல் நிலவும் காலகட்டத்தில் நாம் வாழுகின்றோம். இவ்விதமானதொரு சூழலில் சீனதேசத்து மக்கள் ‘கொரோனா’ வைரஸின் தாக்கத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டு வாழ்கின்றார்கள். இந்நிலையில் அவர்களுக்கு வேண்டியவை மானுடர்கள் அனைவரினதும் உதவியும், நோயினைக்கட்டுத்துவதற்கான செயற்பாடுகளில் ஒத்துழைப்புமே. & தார்மீக ஆதரவுமே.
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக’ச் சில நாடுகளில் (இலங்கையுட்பட) சீனர்கள் (கொரோனா வைரஸ் சீனாவில் சீனர்களை ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படுவதால்) பல்வேறு வகைகளில் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கூட உணவகமொன்று சீனர்களை அனுமதிக்க மறுத்துள்ளதாக இணையத்தில் செய்தியொன்றினை வாசித்தேன்.
ஒரு சில நாடுகள் அரசியல், பொருளாதாரரீதியில் வலிமை பெற்று வரும் சீனாவில் ஏற்பட்டுள்ள இந்நிலைமை தம் நாட்டுபொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்குமென்று நம்புகின்றார்கள். அரசியல் மற்றும் ஆயுதரீதியிலான சீனாவின் ஆதிக்கத்தை உடைக்கக் கொரோனா உதவும் என்று சிலர் கருத்துகளை உதிர்த்துள்ளார்கள்.
சமூகம் இப்படித்தான் இருக்கும். ஆனால், சமூகம் எப்படி இருக்கவேண்டும் என தமது கற்பனையில் நினைத்துப்பார்ப்பவர்கள் ஆக்க இலக்கியப்படைப்பாளிகள். அந்தப்படைப்பாளிகள் தீவிரமான மனிதநேயர்களாக இருப்பின், அவர்களது படைப்பிலக்கிய எழுத்துக்களில் அவர்கள் எதிர்பார்க்கும் கதாமாந்தர்கள் வருவார்கள். அசாதாரண சம்பவங்கள், திடீர் திருப்பங்கள் நிகழும். பெரும்பாலான ஆக்க இலக்கியப்படைப்பாளிகளுக்கு அவர்தம் வாழ்க்கைத் தரிசனங்களே அவர் எழுதும் கதைகளாகிவிடும். சொந்த வாழ்வில், பயணத்தில், சந்திப்புகளில், அனுபவங்களில், தரிசிக்கும் மனிதர்களில் , உறவாடும் நட்புகளில் , உயிரினங்களில் இன்ன பிற காட்சிகளில் கிடைக்கும் சித்திரம் மனதில் பதிந்துவிடும். தருணம் வரும்போது அவை, சிறுகதையாக, கவிதையாக, நாவலாக, நாடகமாக, ஏன் திரைப்படமாகவும் உருமாறிவிடும்.
இலங்கையிலும் உலக அரங்கிலும் காணாமல் போன மனிதர்கள் பேசுபொருளாகியிருக்கும் காலப்பகுதியில், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் ஓரே காலப்பகுதியில் அறிமுகமான படைப்பிலக்கியவாதி ஏ.ஏ.ஹெச்.கே.கோரி எழுதியிருக்கும் காணாமல் போகவிருந்த கதைகள் தொகுதி எனக்கு தபாலில் வந்து சேர்ந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும் இவரை, நான் நேரில் பார்த்திராதபோதிலும், இவரது கதைகளை முன்னர் இலங்கை மல்லிகையில் படித்திருக்கின்றேன். ஒருசமயம் இவர் மல்லிகை அட்டைப்படத்தையும் அலங்கரித்து, அதிதியானவர். அதில் இவரைப்பற்றி எழுதியவர் ஈழத்து எழுத்தாளரும் அண்மையில் சாகித்திய ரத்னா விருதுபெற்றவருமான ஐ. சாந்தன். சாந்தனுக்கு கோரியை அக்காலப்பகுதியில் கொழும்பில் அறிமுகப்படுத்தியவர் இலங்கை வானொலி, லண்டன் பி.பி.ஸி புகழ் அப்பல்லோ சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள்.
இரண்டாம் உலக யுத்தத்தின்பின், ஐரோப்பிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு தங்களையழித்துக்;கொள்ளக் கூடாது என்பதைச் செயற்படுத்தவதற்காக ‘ஐரோப்பிய எக்கனாமிக் கொம்யூனிட்டி’ ஆரம்பிக்கப் பட்டது.அதில் பிரான்ஸ்,ஜேர்மனி,பெல்ஜியம்,நெதர்லாந்து,இத்தாலி என்ற ஐந்து நாடுகள் மட்டுமே இருந்தன. 1961ம் ஆண்டு சோவியத் யூனியனுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான ‘பனிப்போர்’ உச்ச நிலையிலிருந்தது. பிரித்தானியாவின் ஆளுமையிலிருந்த பல காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைந்ததால்,பிரித்தானியாவின் பொருளாதாரநிலை மிகவும் சிதைந்த நிலையிலிருந்தது.
ஐரோப்பாவுடனிணைந்திருப்பது பிரித்தானியாவுக்குப் பல விதத்திலும் பாதுகாப்பாகவிருக்கும் என்பதால்.பிரித்தானியா ‘ஐரோப்பிய எக்கானமிக் கொம்யூனிட்டியுடன்’ இணைவதற்கான கோரிக்கையை 1961ம் ஆண்டு முன்வைத்தபோது,ஆங்கிலேயர்களைப் பிடிக்காத பிரான்ஸ் நாட்டின் தலைவர் சார்ள்ஸ் டி கோல், பிரித்தானியா தங்களுடன் சேர்வதை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரித்தானியாவின் கோரிக்கையை 63லும் 1967லும் நிராகரித்தார்.1969ல் பிரான்ஸ் தலைவர் பதவியிலிருந்த சார்ள்ஸ் டிகோல் இராஜினாமா செய்தபின் நிலைமை மாறியது.
1.1.1973ல்; ஆண்டு பிரித்தானியா, ‘ஐரோப்பிய எக்கானமிக் கொம்யூனிட்டி நாடுகளுடணிணைந்தது .இங்கிலாந்தில் இடதுசாரி பாராளுமன்றவாதியான ரோனி பென் (ஜேரமி கோர்பினின் குரு) போன்ற இடதுசாரித்தலைவர்கள் அதை எதிர்த்தார்கள்.