தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)-12

- மார்க் ட்வைன் -என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் பன்னிரண்டு

முனைவர் ஆர்.தாரணிவிசித்திரமான முறையில் தோணி மெதுவாய் நகர்ந்தது கடைசியாக அந்தத் தீவைத்தாண்டும் வேளை நள்ளிரவு மணி ஒன்று இருக்கக்கூடும். ஏதேனும் படகு எதிரில் வந்தால் உடனடியாகத் தோணியிலிருந்து வெளியே நதிக்குள் குதித்துத் தப்பிப்பதுடன், முன்பு போட்டத் திட்டத்தின் படி இல்லினோய் கரையை அடைவதைக் கைவிடுவது என்று நாங்கள் தீர்மானித்துக் கொண்டோம். நல்ல வேளை! எந்தப் படகும் எதிரில் வரவில்லை. புறப்படும் அவசரத்தில் துப்பாக்கி, மீன்பிடிக்கும் வலை அல்லது சாப்பிட ஏதேனும் எடுத்து வைப்பதைப் பற்றி நாங்கள் இருவருமே சிந்திக்கவே இல்லை. எங்களுக்கு இருந்த பதற்றத்தில் அந்தப் பொருட்களைப் பற்றி யோசிக்கவே தோன்றவில்லை. உண்மையில் உயிர் தப்பிப் பிழைக்கும் போது எல்லாவற்றையும் எடுத்து தோணியில் திணிப்பது என்பது நல்லதொரு நியாயம் இல்லை.

அந்த மனிதர்கள் அங்கே சென்றால் நான் மூட்டி வைத்திருக்கும் அந்தத் தீயைக் காண்பார்கள் என்பது எனது கணிப்பு. இரவு முழுதும் அவர்கள் அங்கேயே அமர்ந்து, வெளியே சென்றிருக்கும் ஜிம் திரும்பி வரக் காத்திருக்கக் கூடும். நல்லது. காரணம் எதுவாகினும், அவர்கள் எங்களை விட்டு வெகு தொலைவில் இருப்பது நல்லதுதான். அவர்களை திசைதிருப்ப நான் மூட்டிய பொய்யான தீ அவர்களை முட்டாளாக்கவில்லை என்றாலும் நான் முயற்சியே செய்யவில்லை என்று யாரும் கூறமுடியாது அல்லவா! என்னால் என்ன செய்து அவர்களை முட்டாளாக்க முடியுமோ அதை நான் கண்டிப்பாகச் செய்தேன்.

அடிவானத்திலிருந்து சூரியனின் முதல்கதிர்கள் வெளியே நீண்டபோது, இல்லினோய் பகுதியில் நீண்டதொரு வளைவுடைய மிஸ்ஸிஸிசிப்பி நதியின் ஊடே அடர்ந்த பஞ்சுப்பொதி மரங்கள் சூழ்ந்த மணல் மேடு உடைய சிறு தீவில் எங்களின் தோணியைக் கட்டி வைத்தோம். பஞ்சுப்பொதி மரங்களின் கிளைகளை சிறிய கோடரி கொண்டு தறித்தெடுத்து, எங்களின் தோணி மீது முழுதும் வைத்து நன்கு மூடி நதிக்கரையில் உள்ள சிறிய குகை போலத் தோன்றுமாறு செய்தோம்.

நதியின் மிஸ்ஸோரி பகுதிக் கரை முழுதும் மலைகளும், இல்லினோய் பகுதி மொத்தமும் அடர்ந்த வனமும் என்ற வகையான அமைப்பு இயற்கையிலேயே அங்கே காணப்படும். மிஸ்ஸோரிக் கரையைச் சுற்றிவர அகன்ற வாய்க்கால் அங்கே உள்ளதால் எங்களை நோக்கி யாரேனும் வந்துவிடுவார்கள் என்ற பயமில்லாமல் நாங்கள் அமைதியாக இருந்தோம். ஓய்வாக அங்கே சாய்ந்து கொண்டு மிஸ்ஸோரி நதிக்கரையோரம் மிதக்கும் மரக்கலங்களையும், நீராவிப் படகுகளையும் முழு நாளும் பார்த்துக் கொண்டே இருந்தோம். இன்னும் சில நீராவிப்படகுகள் நதியின் மத்தியில் நீரின் விசையோடு போட்டியிட்டுக்கொண்டு இரைச்சலுடன் மெதுவாய் நகர முயற்சிப்பதையும் கண்டுகொண்டிருந்தோம்.

Continue Reading →

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- 11

- மார்க் ட்வைன் - என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் பதினொன்று

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 11முனைவர் ஆர்.தாரணிஉள்ளே வரலாம்,”கூறினாள் அந்தப்பெண். உள்ளே நான் நுழைந்தேன். “உக்காரு” அவள் கூறினாள்.

நான் அமர்ந்தேன். பளபளத்த அவளது சிறு கண்களால் என்னை மேலும் கீழும் நோக்கிய அவள் கேட்டாள். “உனது பெயர் என்னவாக இருக்கும்?”

“சாரா வில்லியம்ஸ்”

“எங்கே வசிக்கிறாய்? இந்த ஊரின் அருகாண்மையிலா?”

“இல்லை அம்மா. நான் ஓடையின் ஏழு மைலுக்குக் கீழே உள்ள ஹூகெர்வில் பகுதியில் வசிக்கிறேன். அங்கிருந்தே நடந்தே வந்ததால் நான் மிகவும் களைப்படைந்துள்ளேன்.”

“நீ பசியோடு இருக்கிறாய் என்று நான் நினைக்கிறன். இரு சாப்பிட ஏதாகிலும் இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்.”

“இல்லை அம்மா. பசியெல்லாம் எனக்கு இல்லை. வரும் வழியில் பசித்ததால் இரண்டு மைலுக்கு முன்னால் உள்ள ஒரு பண்ணையில் நின்று அங்கே சாப்பிட்டு வருகிறேன். அதனால் பசி எனக்கு இப்போதைக்கு இல்லை. அதனால்தான் இங்கே வந்து சேர இவ்வளவு நேரம் ஆகி விட்டது. எனது அம்மா உடல்நலக்குறைவினால் படுக்கையில் இருப்பதையும் அவள் பணப்பற்றாக்குறையினால் கஷ்டப்படுவதையும் எனது மாமா அப்னர் மூர் அவர்களுக்குத் தெரிவிக்க இங்கு வந்துள்ளேன். அவர் இந்த ஊரின் வட எல்லையில் வசிப்பதாக எனது அம்மா கூறினாள். நான் இந்த ஊருக்கு வந்ததே இல்லை. உங்களுக்கு அவரைத் தெரியுமா?”

“இல்லை. இந்த ஊரில் உள்ள அனைவரையும் நான் தெரிந்து கொள்ளவில்லை இன்னும்.. இரண்டு வாரங்களாகத்தான் நான் இங்கே வசிக்கிறேன். இங்கிருந்து வட எல்லை மிகவும் தூரத்தில் இருக்கிறது. இன்றிரவு இங்கே தங்கி ஓய்வெடுத்துக் கொள். தலையைச் சுற்றியுள்ள பானட்டைக் கழற்று.”

“இல்லை.” நான் அவசரமாகச் சொன்னேன். “கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டுப் போகலாம் என்று நினைக்கிறேன். இருட்டைக் கண்டால் எனக்கு பயம் இல்லை.”

Continue Reading →

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- 10

- மார்க் ட்வைன் - என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் பத்து

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 10முனைவர் ஆர்.தாரணிகாலை உணவுக்கப்புறம் இறந்த அந்த மனிதன் எப்படிக் கொல்லப்பட்டிருப்பான் என்று அவனைப்பற்றிப் பேச விரும்பினேன். ஆனால், ஜிம் அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை. அது துரதிஷ்டத்தைக் கொண்டு சேர்க்கும் என்று அவன் கூறினான். அத்துடன், இறந்த மனிதன் ஆவியாக வந்து பயமுறுத்துவான் என்றான். நல்லபடியாக ஈமச்சடங்கு செய்யப்பட்டு மண்ணில் புதைக்கபப்ட்ட மனிதனை விட அவ்வாறு புதைக்கப்படாத மனிதன் கண்டிப்பாக ஆவியாக வந்து மற்றவர்களைப் பீதியிலாழ்த்துவான் என்றான். அவன் கூறியது நியாயமாகத் தென்பட்டதால் அதைப்பற்றி மேலே பேசாது அமைதியானேன். ஆயினும், அதைப்பற்றி நினைக்காமலிருக்க என்னால் இயலவில்லை. அவன் யாரால், எதற்காகச் சுடப்பட்டு இறந்தான் என்பதைத் தெரிந்து கொள்ள நான் நினைத்தேன்.

அங்கிருந்து எடுத்து வந்த துணிகளை நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில், ஒரு பழைய கனத்த கம்பளி போன்ற மேல்ச்சட்டையின் உள்பகுதியில் தைத்து வைக்கப்பட்ட பகுதியில் மறைந்திருந்த எட்டு டாலர் வெள்ளி நாணயங்களைக் கண்டெடுத்தோம். அந்த மேல்சட்டையை அந்த வீட்டில் இருந்தவர்கள் எங்கிருந்தாவது திருடித்தான் இருக்கவேண்டும் என்றும் அப்படி இல்லாவிடில், அதனுள் இருக்கும் அந்தப் பணத்தை அவர்கள் இவ்வாறு விட்டுவைத்திருக்க மாட்டார்கள் என்று ஜிம் தன் கருத்தை உரைத்தான். அந்த மனிதனைக் கூட அவர்கள் கொன்றுதான் இருக்கவேண்டும் என்றேன் நான். ஆனால் ஜிம் அதைப் பற்றி மட்டும் பேச மறுத்து விட்டான்.

நான் கூறினேன் “இப்போது இதை கெட்ட சகுனம் என்று நினைக்கிறாய். ஆனால் முந்தாநாள் விளிம்பின் மேற்பரப்பில் கிடந்த பாம்புத்தோலை நான் கொண்டு வந்தபோது நீ என்ன கூறினாய்? பாம்புத்தோலை என் கரங்களால் தொடுவது உலகிலேயே மிகவும் மோசமான பாவப்பட்ட விஷயம் என்று நீ கூறினாயல்லவா! நல்லது. இங்கே பார் உனது துரதிஷ்டத்தை! எத்தனை கொள்ளை பொருட்களை நாம் வாரிவழித்து கொண்டுவந்ததுடன், கூட எட்டு டாலர் வேறு அதிகப்படியாக கிடைத்திருக்கிறது. இப்படியான துரதிஷ்டம் நமக்கு ஒவ்வொரு நாளும் கிடைத்தால் தேவலை என்று நான் விரும்புகிறேன், ஜிம்!”

Continue Reading →

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 9

- மார்க் ட்வைன் - என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் ஒன்பது

 தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 9முனைவர் ஆர்.தாரணிதீவைச் சுற்றி ஆராய்ந்து வருகையில் தீவின் மத்தியில் உள்ள பகுதியைச் சென்று பார்க்க நான் விரும்பினேன். அந்தத்தீவு மூன்றுமைல் நீளமும். கால் மைல் அகலமுமான சுற்றளவு மட்டுமே உள்ளதால், நாங்கள் புறப்பட்டு வெகுவிரைவில் அதன் மத்தியை அடைந்தோம்.

நாங்கள் சென்று பார்க்க விரும்பிய அந்த இடம் பெரிய பள்ளத்தாக்கு போன்று செங்குத்தாக நாற்பது அடி உயரத்தில் இருந்தது. அதன் இருபுறமும் மிகவும் செங்குத்தாகவும், அடர்ந்த புதர்களுடனும் இருந்ததால், அதில் ஏறிச்செல்ல நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம்.

வழித்தடங்களைத் தேடிப் பிடித்துக் கொண்டு அந்த உயரத்தை சிரமத்துடன் கடந்து சென்று அதன் உச்சியில் இருந்த பாறைகளின் மீது இல்லினோய் பக்கம் நோக்கி அமைந்திருந்த ஒரு குகையைக் கண்டோம். அந்த குகை மூன்று அல்லது நான்கு அறைகளின் அளவில் இருந்ததுடன், ஜிம் நிமிர்ந்து நின்றால் அவன் உயரத்திற்கு அது சரியாக இருந்தது. அதனுள்ளே குளுமையான தட்பவெப்பம் நிலவியது. எங்களது பொருட்களை உள்ளே வைத்துக் கொள்ளலாம் என்று ஜிம் கூறினான். ஆனால் ஒவ்வொரு முறையும் மேலும் கீழும் ஏறி இறங்க எனக்கு விருப்பமில்லை.

தோணியைமட்டும் மறைவிடத்தில் வைத்துவிட்டு, மற்ற பொருட்களையெல்லாம் அந்த குகைக்குள் மறைத்து வைத்துவிட்டால், அந்தத் தீவுக்கு யார் வந்தாலும் நாம் சுலபமாக மறைந்து கொள்ளலாம் என்று ஜிம் கூறினான். அவர்களிடம் மோப்ப நாய் இருந்தாலொழிய யாருமே என்றுமே நம்மைக் கண்டிபிடிக்கப்போவதில்லை என்றான். அத்துடன் நாங்கள் கண்ட அந்த இளம் பறவைகளின் வருகை பற்றி எனக்கு நினைவூட்டி, அவைகள் மழையின் அறிகுறிகள் என்பதால், மழை வரும் பட்சத்தில் எல்லாப்பொருட்களும் நனைந்து வீணாகப் போவதை விரும்புகிறாயா என்று என்னிடம் அவன் கேட்டான்.

எனவே நாங்கள் திரும்பிச்சென்று தோணியை குகையின் அடிப்பாகத்தில் உள்ள ஒரு இடத்திற்கு வலித்துக் கொண்டு வந்து சேர்த்தோம். பின்னர் அதில் இருந்த அனைத்துப் பொருட்களையும் மேலே எடுத்துச் சென்றோம். தோணியை மறைத்து வைக்கும் பொருட்டு வில்லோ மரங்கள் அடர்ந்து அதிகமாக உள்ள ஒரு மறைவிடத்தை தேடிக்கண்டுபிடித்து நிறுத்தினோம். மீன் பிடி வலையில் இருந்து சில மீன்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் மீனுக்குக் குறிவைத்து வலையைச் சரி செய்து விட்டு இரவு உணவுக்குத் தயாரானோம்.

குகையின் கதவு ஒரு பீப்பாயை உருட்டிச்செல்லும் அளவுக்குப் பெரியதாக இருந்தது. கதவின் ஒரு பக்கத்தில் உள்ள தரை கொஞ்சம் கவனிக்கப்படக்கூடியதாக இருந்தது. சம அளவிலான தரையாக அது இருந்ததால், நெருப்பு மூட்டி அதில் எங்களது இரவு உணவைத் தயாரித்தோம்.

Continue Reading →

தடம் பதித்த ‘புதிசு’

சஞ்சிகை:புதுசுகலாநிதி நா. சுப்பிரமணியன்இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘புதுசு’ சஞ்சிகையின் பங்களிப்பும் முக்கியமானது. எழுத்தாளர் நா.சபேசனை நிர்வாக ஆசிரியராகவும், எழுத்தாளர்களான இளவாலை விஜேந்திரன், பாலசூரியன், அ.ரவி ஆகியோரை உள்ளடக்கிய ஆசிரியர் குழுவையம் கொண்டு வெளியான சஞ்சிகை. காலாண்டிதழாக ஆரம்பித்த ‘புதுசு’ பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஒழுங்காக வெளிவரவில்லையென்று அறிகின்றோம். ‘புதுசு’சஞ்சிகையில் கவிதைகளே அதிகமாகவே இடம் பெற்றிருக்கின்றன. கவிதைகள் தவிர கதை, கட்டுரை என ‘புதுசு’வின் பங்களிப்பு பன்முகப்பட்டது. சமூக, அரசியலை உள்ளடக்கிய கட்டுரைகள் ‘புதுசு’வில் வெளிவந்துள்ளன. இலங்கைத்தமிழர் விடயத்தில் , அவர்தம் உரிமைப்போராட்டத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்க இடதுசாரிகள் தவறிவிட்டனர் என்பதை வெளிப்படுத்தும் கட்டுரை, மலையகத்தமிழ் மக்களின் பிரச்சனைகள் எனப் ‘புதுசு’ சஞ்சிகையும் இலங்கைத்தமிழர்கள் அனைவரினதும் பிரச்னைகள் பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.


‘புதுசு’ பற்றிய கலாநிதி நா.சுப்ரமணியனின் ‘ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘புதுசு’வின் பண்பும் பணிவும்’ என்னும் கட்டுரையினை ஈழநாடு வாரமலரில் எழுதியுள்ளார். 30.3.1986 அன்று வெளியான மலரில் இடம் பெற்றுள்ள அக்கட்டுரையை தொடராக மேலுமிரு ஈழநாடு வாரமலர்களில் வெளியாகியுள்ளது. அவற்றை வாசிப்பதற்குரிய இணைய இணைப்புகளைக் கீழே தருகின்றேன்.


ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘புதுசு’வின் பண்பும் பணிவும் – கலாநிதி நா.சுப்பிரமணியன் (ஈழநாடு வாரமலர் 30-3-1986) – http://noolaham.net/project/256/25502/25502.pdf

இனப்பிரச்னை இடதுசாரிகள் – ‘புதுசு’ – கலாநிதி நா.சுப்பிரமணியன் (ஈழநாடு வாரமலர் – 6-4-1986- http://noolaham.net/project/256/25509/25509.pdf

Continue Reading →

இத்தரை எங்கும் இன்பம் பெருகட்டும்!

சித்திரைப் புத்தாண்டு பற்றி எண்ணியதும்
சிந்தையில் பற்பல நினைவுகள் எழுந்தன.
பால்ய பருவம் இனிய பருவம்.
கவலைகள் அற்ற சிட்டெனப் பறந்த
களிப்பில் நிறைந்த இனிய பருவம்.
அப்பா, அம்மா , தம்பி , தங்கை
அனைவரும் கூடி மகிழ்ந்த பருவம்.
பண்டிகை யாவும் கொண்டாடி மகிழ்ந்த
நெஞ்சில் அழியாக் கோலமென இன்றும்
இனிக்கும் பருவம் பால்ய பருவம்.
புத்தாடை அணிந்து நண்பருடன் கூடி
மான்மார்க், முயல்மார்க் வெடிகள் கொளுத்தி
கொண்டாடி மகிழ்ந்த பருவம் அஃதே.

Continue Reading →

ஆர் வருவார் சித்திரையை ஆவலுடன் வரவேற்க !

மனமெல்லாம் சித்திரையை வரவேற்கத் துடித்தாலும்
தினம்தினமாய் வரும்செய்தி செவிகேட்கக் கசக்கிறது
புத்தாடை வாங்கலாமா பொங்கலுமே செய்யலாமா
என்கின்ற அச்சநிலை எங்குமே தெரிகிறதே   !

கூடிநிற்றல் குற்றமென கொள்கையிப்போ இருக்கிறது
ஆடிப்பாடி மகிழுவதும்  அரசால் தடையாகிறது
வீட்டினிலே சிறையிருக்கும் வேதனையில் இருக்கையிலே
நாட்டினிலே சித்திரையை  யார்வருவார்  வரவேற்க !

வழிபாட்டுத் தலமெல்லாம் மனிதநட மாட்டமில்லை
வர்த்தக நிலையமெல்லாம் பாதுகாப்பு மயமாச்சு
வெடிவாங்கி கொண்டாட   வேட்டுவைத்த கொரனோவால்
வடிவான சித்திரையை வரவேற்க யார்வருவார்  !

Continue Reading →

கண்ணுக்கு தெரிந்த எதிரியும் – கண்ணுக்குத் தெரியாத எதிரியும்!! “ஏலி! ஏலி! லாமா சபக்தானி ” – ” என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் “

எழுத்தாளர்  முருகபூபதிஇயேசு கிறிஸ்து ஆறுமணி நேரம் சிலுவையில் தொங்கினார். முதல் மூன்று மணி நேரங்கள் அவர் ரோம வீரர்களாலும், மற்றவர்களாலும், அடிக்கப்பட்டு, இழிவாக பேசப்பட்டு, எள்ளி நகையாடப்பட்டு, வேதனைகளை அனுபவித்தார். அவற்றை எல்லாம் பொறுமையாக பொறுத்துக் கொண்டார். ஆறாம் மணி நேரம் முதல், ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் அந்தகாரம் பூமியை மூடி கொண்டது. அந்த ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ! “ஏலி! ஏலி! லாமா சபக்தானி “ என்று உரத்துச் சத்தமிட்டுக் கூப்பிட்டார் ! அதற்கு “ என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்..? “ என்று அர்த்தம். – (மத்தேயு 27:45-46)  இந்த வாசகங்களை ஏற்கனவே படித்திருப்பீர்கள். கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி யேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட தினம். அதனால் அதனை பெரிய வெள்ளி என்று தமிழிலும் Good Friday என்று ஆங்கிலத்திலும் அழைப்பர்.

அத்தகைய ஒரு துக்க தினத்தில் தேவாலயங்கள் சென்று வழிபட்ட மக்கள், யேசுபிரான் உயிர்த்த ஞாயிறு தினத்தில் காலையிலேயே அங்கு மீண்டும் வந்து பிரார்த்தித்துவிட்டு, சம்மனசுகள் புடைசூழ யேசுவின் திருச்சொரூபம் பவனிவரும் காட்சியை கண்டுகளிப்பார்கள். வழக்கமாக உலகெங்கும் நடக்கும் இந்த நிகழ்வு இந்த வருடம் வழக்கம்போன்று வெளியே பகிரங்கமாக நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை.

யேசுவை சிலுவையில் அறைவதற்கு அன்று கண்ணுக்குத்தெரிந்த எதிரிகள் இருந்தனர். இன்று உலகமக்களை கொன்றழிப்பதற்கு கண்ணுக்குத் தெரியாத எதிரி தோன்றியுள்ளான். யேசு இரண்டு நாட்களில் உயிர்ப்பித்தார். ஆனால், மக்கள்…?! சமகாலத்தில், கொரோனே எதிர்பாராமல் வந்து முழு உலகத்தையும் முடக்கியிருக்கிறது. அதனால் உயிர்தெழுந்த யேசுபிரானும் சம்மனசுகளுடன் வெளியே செல்லாமல் தேவலாயங்களில் தங்கிவிட்டார்.

Continue Reading →

கொரோனா நெருக்கடி உலகை மீளமைக்கும் மாற்றத்திற்கான வாய்ப்பு! ஒரு சமூகமானிடவியல் பார்வை!

Thomas Hylland Eriksen“ பொருத்தமான தெரிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், கொரோனா நெருக்கடிக்குள்ளிருந்து சில நன்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது. வேலை, நுகர்வு என்பவற்றால் தீர்மானிக்கப்படும் வாழ்வைத் தாண்டிய விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதானமான வாழ்வைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பினை இந்த நெருக்கடி வழங்கக்கூடும்” என நோர்வேஜிய சமூக மானிடவியல் பேராசிரியர் Thomas Hylland Eriksen, அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

குறுகியகாலத்திற்குள் நாம் அறியப்படாத ஒரு அவசர நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளோம். நோர்வேயில் பெரும்பான்மையான விடயங்கள் தண்டவாளத்தில் நேர்த்தியாகப் போய்கொண்டிருந்த நிலைக்குப் பழகிவிட்டோம். தடம் புரள்வதென்பது எமக்கு மிக அரிதாக நேர்வது. அதனைச் சரிப்படுத்துவதென்பது சவாலானது. இப்பொழுது  கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு முகம் கொடுக்கின்றோம். இனி இருக்கப்போகும் சமூகம் முன்னர் இருந்ததைப் போல் இருக்கப் போவதில்லை. நோர்வே மக்களைவிட மோசமான நெருக்கடியை ஏனைய மக்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.

எனவே முறைப்பாடு செய்வதற்குரிய உரிமை எமக்கில்லை.  மொறீசியஸ் தனது ஒரேயொரு விமானநிலையத்தினையும் மூடநேர்ந்திருக்கிறது. வெளியுலகத்துடனான  நடமாட்டத் தொடர்புக்கு விமானப் போக்குவரத்தை நம்பியிருக்கும் ஒரு சிறிய தீவுத் தேசத்திற்கு இதுவொரு பாரிய விளைவு. அமெரிக்காவின் சமூகசமத்துவமின்மை மிகப்பெரியது. மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் அவர்கள் சுகதேகிகளோ அன்றி நோய்வாய்ப் பட்டவர்களோ வெறுந்தரையில் நிற்கவேண்டி ஏற்படும். காங்கோ போன்ற நாடுகளில்    இத்தகைய   தொற்றுப் பரம்பல்களைக் கையாள்வதற்குரிய வளங்கள் குறைபாடாகவுள்ளன. வறியநாடுகளில் அனைத்துச் சமூகத் தொழிற்பாடுகளையும் வியாபாரத்தையும் நிறுத்துவது கடினமானது. இருந்தும் கிழக்காசிய நாடுகள் இது விடயத்தில் செயற்திறனைக் காட்டியுள்ளன.

Continue Reading →

இலக்கியத்திற்கு அப்பால் மல்லிகை ஜீவா நேசித்த பறவை

எழுத்தாளர் டொமினிக் ஜீவாஎழுத்தாளர் முருகபூபதியாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் (இன்றைய கனகரத்தினம் கல்லூரி) நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த (1962 )காலத்தில் எங்கள் ஆண்கள் விடுதியின் சார்பாக ஒரு நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்த டொமினிக் ஜீவாவை வெள்ளை நேஷனல், வெள்ளை வேட்டியுடன்தான் முதல் முதலில் பார்த்தேன். இந்த ஆடைகள் அவருடைய தனித்துவமான அடையாளமாகவே இன்றுவரையில் இருந்துவருகிறது.

அப்பொழுது அவர் எழுத்தாளராக இருந்தார். ஏறக்குறைய பத்து ஆண்டுகளின் பின்னர் அவரை 1971 இல் நீர்கொழும்பில் எதிர்பாராதவிதமாக சந்தித்தபொழுது, அவர் மல்லிகை இதழின் ஆசிரியராகவே எனக்கு அறிமுகமாகி, அன்று முதல் எனது பாசத்துக்குரிய நேசராகவும் குடும்ப நண்பராகவும் திகழ்கின்றார்.

என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது மல்லிகை ஜீவாதான் என்பதை தொடர்ச்சியாக பதிவுசெய்துவருகின்றேன். அவர் பற்றிய விரிவான மல்லிகை ஜீவா நினைவுகள் நூலையும் 2001 இல் எழுதியிருக்கின்றேன். அதற்கு முன்பும் பின்னரும் அவர் பற்றிய பல கட்டுரைகளை பத்திரிகைகள், இலக்கியச்சிற்றேடுகள், இணைய இதழ்களிலெல்லாம் எழுதியுள்ளேன். அவை இலங்கை, தமிழகம், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா முதலான நாடுகளிலிருந்து வெளியான ஊடகங்களில் பதிவுபெற்றுள்ளன.

அதனால் மீண்டும் அவர் பற்றி இலக்கிய ரீதியில் புதிதாக சொல்வதற்கு என்ன இருக்கிறது…? என ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கையில், இலக்கியத்திற்கு அப்பால் அவர் ஆழ்ந்து நேசித்த பறவை பற்றிய நினைப்பு வந்தது. நூற்றுக்கணக்கான வகைகளைக்கொண்ட பறவை இனம் புறா மீது அவருக்கு அளவுகடந்த பிரியம். உலகில் சமாதானத்தின் சின்னமாக கருதப்படும் புறா, முற்காலத்தில் நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற்றத்திற்கும் உதவியிருக்கிறது. நாமறிந்த புறா இனங்கள்: மணிப்புறா, மாடப்புறா, விசிறிப்புறா, ஆடம்பரப்புறா. ஆனால், இதற்கு மேலும் பல புறா இனங்கள் உலகெங்கும் வாழ்கின்றன. அவற்றில் சில படிப்படியாக மறைந்து வருகின்றன.

Continue Reading →