சேக்ஸ்பியர் நினைவாக… (ஏப்ரில் 23 அவரது நினைவு தினம்)

Chakspeare

சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக்கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. இன்றுள்ள சூழலைப்பாவித்து அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தில் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

https://www.sparknotes.com/shakespeare/#jumpTo-no-fearno

Continue Reading →

தணியாத தாகம் தீர்ந்தது!

சில்லையூர் செல்வராசன்கமலினி செல்வராசன்இன்றுள்ளது போல் எம் பெண்கள் தொலைக்காட்சிச் ‘சீரியல்’களில் மூழ்கிக் கிடக்காத காலகட்டம். தமிழ் வார இதழ்களில், மாதாந்த நாவல்களில் மூழ்கிக்கிடந்த காலகட்டம். அக்காலகட்டத்தில் ஒவ்வொரு வாரமும் ஒருநாள் அவர்கள் தவறாமல் இலங்கை வானொலியின் முன் கூடுவார்கள். அது ‘பல்கலை வேந்தர்’ சில்லையூர் செல்வராசனின் ‘தணியாத தாகம்’ வானொலி நாடகத்தைக் கேட்பதற்காகத்தான். என் உறவுக்கார அக்காமார் பலர் இவ்விதம் கூடிக் கேட்பார்கள். நான் அந்நாடகத்தைத் தொடர்ச்சியாகக் கேட்டு இரசித்தவன் அல்லன். ஆனால் எல்லோரும் இவ்வளவு ஆர்வத்துடன் அந்நாடகத்தைக் கேட்டதால் அந்நாடகம் என் கவனத்தையும் சிறிது ஈர்த்தது.

இலங்கை மக்கள் வங்கியின் ஆதரவுடன் ஒலிபரப்பாகிய அந்நாடகத்தின் இடையில் ஒலிக்கும் சில்லையூர் செல்வராசன் & கமலினி செல்வராசன் தம்பதியினர் இணைந்து பாடும் ‘அத்தானே அத்தானே! எந்தன் ஆசை அத்தானே’ பாடலை யார் மறப்பார்?

இந்நூலைச் சில்லையூர் செல்வராசன் ஒரு திரைப்படச் சுவடியாகவே எழுதியிருப்பதை நூலின் முதற் பதிப்புக்கான முன்னுரையின் மூலம் அறிய முடிகின்றது. அது 1971இல் வெளியாகியுள்ளது. இரண்டாவது பதிப்பை எழுத்தாளர்கள் புலோலியூர் ஆ.இரத்தினவேலோனும், எஸ்.ரஞ்சகுமாரும் இணைந்து ‘மீரா பதிப்பகம்’ மூலம் 1999இல் வெளியிட்டுள்ளார்கள். நூலைச் சில்லையூர் செல்வராசன் தனக்கேயுரிய பாணியில் தன் மனைவி கமலினி செல்வராசனுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். கவிஞரான அவர் ‘தான்தோன்றிக்கவிஞர்’ என்று அறியப்பட்டவர். தான் தோன்றித்தனமாக எழுதாமல் சமர்ப்பணத்தை விடுகதைப் பாணியில் ஒரு கவிதை மூலம் சமர்ப்பித்திருக்கின்றார். அக்கவிதை வருமாறு:

“எழுதுவித்தவளுக்கு!
மன்னி செகராச வல்லி என நாமத்துட்
பின்னி உயிர்க் குள்ளும் பிணைப்பாகி – முன்னின்று
எவள் எனை இக்காதை எழுதுவித் தாளோ
அவளுக் கிந் நூல் அர்ப் பணம்’

மன்னி செகராச வல்லி என்னும் பெயருக்குள் மறைந்துள்ளார் கமலினி செல்வராசன். வித்தியாசமான, தனித்துவம் வாய்ந்த சமர்ப்பணம். இந்நூலினை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்: http://noolaham.net/project/27/2606/2606.pdf

இந்நூல் பற்றிய தனது முகவுரையில் கமலினி செல்வராசன் அவர்கள் பின்வருமாறு தன் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கின்றார்:

Continue Reading →

மூத்த பெண் ஆளுமை காத்தான்குடி பாத்திமா அவர்களுடனான நேர்காணல்

உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

எனது பெயர் பாத்திமா  முகம்மத். இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பில் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவள். காத்தான்குடி பாத்திமா என்ற பெயரில் இலக்கிய உலகிற்குள் வந்தவள். எனது கணவர் ஏ.எம்.முகம்மத். இவர் ஓய்வு பெற்ற அதிபர். எனக்கு ஒரே மகன். இவர் டாக்டராகப் பணிபுரிகிறார்.

உங்கள் கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் எனது கல்வியைத் தொடர்ந்தேன். பின் அரச முகாமைத்துவ உதவியாளராக கிட்டத்தட்ட முப்பத்து மூன்று வருடங்கள் கடமை  செய்து சென்ற வருடம் ஓய்வு பெற்றேன். சுகாதார சேவைகள் பிராந்திய அலுவலகம் மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலகம் என்பவை எனது அரச பணிக்கான தளங்களாக அமைந்தன.

நீங்கள் எழுத்துத் துறைக்குள் காலடி வைத்த சந்தர்ப்பம் பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக, எப்போது ஆரம்பித்தது?

நான் பாடசாலைக் காலத்திலேயே கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதைப் பொழுது போக்காகக் கொண்டேன். எனது தந்தை மர்{ஹம் காசீம் முகம்மத் வாழும் காலத்தில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தார்கள். அதேபோல எனது கல்லூரியின் தமிழ் ஆசிரியர்களான திருமதி அகஸ்டீன் ஜோசப், எம்.எஸ்.எஸ்.ஹமீட், மருதமைந்தன் ஆகியோர்கள் எனது திறமை கண்டு என்னை மென்மேலும் ஊக்குவித்தார்கள். கல்லூரியில் எட்டாம் ஆண்டு படிக்கும் போதே அக்கல்லூரியில் பவள மல்லிகை என்றதொரு கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்து அதன் பிரதான ஆசிரியராக நானே இருந்து திறம்பட நடாத்தி கல்லூரி மட்டத்திலும் கல்வித் திணைக்கள மட்டத்திலும்  பாராட்டப்பட்டேன். 1972ம் ஆண்டு மிகச் சிறிய வயதில் தேசிய பத்திரிகைகளில் எனது ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கின. தினபதி, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, மற்றும் உள்ளுர் சஞ்சிகைகள் என்பவற்றில் நிறையவே எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன.

உங்களது சிறுகதைப் படைப்புக்கள் பற்றிக் கூற விரும்புவது? சிறுகதைகளை எழுதும் போது அவற்றுக்கான கருப்பொருட்களை எப்படிப் பெற்றுக்கொள்கின்றீர்கள்?

நான் அடிக்கடி கூறுவேன் ஒரு எழுத்தாளன் என்பவன் கற்பனையில், ஆழமாய் சிந்திப்பதில், பரந்து சிந்திப்பதில், மற்றவர் துயரங்களில் அல்லது கஷ்டங்களில் தன்னையும் கற்பனை மூலம் ஆற்றுப்படுத்தி அதுபற்றி தனக்குள்ளே வினா எழுப்பி அதற்காக விடை காணத் துடிப்பதில் விளைவதுதான் கவிதை, அல்லது சிறுகதை. அந்தவகையில் நான் சமூக சேவையிலும் அதீத ஈடுபாடு காட்டுவதனால் பலரது துயரம், கஷ்ட நிலை என்பவற்றில் எனது ஆழ்ந்த கவனத்தைச் செலுத்துவேன். அவர்களது கண்ணீர் களையப்படத்தக்கதாக கருவொன்றை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டு சிறுகதைகளை உருவாக்குவேன். முற்போக்கான சீர்திருத்தங்களை இந்தச் சமூகத்தில் கொண்டுவரத் தக்கதாக எனது ஆக்கங்கள் அமைய வேண்டும் என்பதையே எனது எதிர்பார்ப்பாகக் கொள்வேன்.

Continue Reading →

சுயநலத்தை துறந்திட்டால் துன்பமதைத் துடைத்திடலாம் !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

உயிரினங்கள் வரிசையிலே உயர்ந்தவிடம் மனிதருக்கே
அறிவென்னும் பொக்கிஷத்தை அவரேதான் பெற்றுள்ளார்
புவியிருக்கும் உயிரினங்கள் உணவெண்ணி உயிர்வாழ
அறிவுநிறை மனிதர்மட்டும் ஆக்குகின்றார் அகிலமதில்  !

காட்டையே வாழ்வாக்கி வாழ்ந்தவந்த மனிதவினம்
காட்டைவிட்டு வெளிவந்து கலாசாரம் கண்டனரே
மொழியென்றார். இனமென்றார் சாதியென்றார் மதமென்றார்
அழிவுள்ள பலவற்றை ஆக்கிடவும் விரும்பிநின்றார்  !

விஞ்ஞானம் எனுமறிவால் வியக்கபல செய்துநின்றார்
அஞ்ஞானம் அகல்வதற்கு விஞ்ஞானம் உதவுமென்றார்
விண்கொண்டார் மண்கொண்டார் வெற்றிமாலை சூடிநின்றார்
வியாதியையும் கூடவே விருத்தியாய் ஆக்கிவிட்டார்  !

Continue Reading →

நிரந்தரமே இல்லையென நிரந்தரமாய் உறங்கிவிட்டாள் !

கண்ணுக்குள் மணியானாள்
கருத்துக்குள் உருவானாள்
உணவுக்குள் சுவையானாள்
உணர்வுக்குக் கருவானாள்
மலருக்குள் மணமானாள்
மழைமேகம் அவளானாள்
மண்மீது என்னிடத்து
பிரியேனே எனவுரைத்தாள் !

பொதுநலத்தை உடன்கொண்டாள்
சுயநலத்தைத் தான்துறந்தாள்
வருந்துயர்கள் விருந்தாக
வாஞ்சையுடன் கண்டிடுவாள்
நிரந்தரமாய் இருந்திடுவேன்
எனவுரைத்த மங்கையவள்
நிரந்தரமே இல்லையென
நிரந்தரமாய் உறங்கிவிட்டாள்  !

Continue Reading →