நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 16

- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணிஎன் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் பதினாறு

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- 16பெரும்பாலான பகல்நேரங்களை நாங்கள் தூங்கிக்கழித்துவிட்டு இரவு நேரங்களில் வெளியே புறப்பட்டோம். இறுதி ஊர்வலத்திற்குச் செல்வதை போன்ற ஒரு மிகப்பெரிய படகின் பின்னே நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அதன் ஒவ்வொரு திசைப்பகுதியிலும் நான்கு நீண்ட துடுப்புகள் இருந்தன. எனவே அதில் குறைந்த பட்சம் முப்பது மனிதர்களாவது இருக்கவேண்டும் என்று கணக்கிட்டோம். படகின் மேற்பரப்பில் ஐந்து கூம்புக்குடில்கள் மிகுந்த இடைவெளியுடன் ஒன்றொக்கொன்று தள்ளிப் போடப்பட்டிருந்தது. அவற்றின் நடுவில் திறந்தவெளியில் குளிர்காயும் தீ மூட்ட வசதியாக ஒரு அமைப்பு இருந்தது. உயர்ந்த கொடிக் கம்பங்கள் ஒவ்வொரு இறுதி முனையிலும் இருந்தன. அந்தப் படகுக்கென்று தனி நேர்த்தி இருந்தது. நீங்கள் மட்டும் இப்படிப்பட்ட ஒரு படகைச் செலுத்தும் நபர்களுள் ஒன்று என்றால் நீங்கள் கண்டிப்பாக தனித்துவம் வாய்ந்தவர்தான்.

இரவு மிகவும் சூடாகவும், மேகமூட்டத்துடனும் இருந்தபோது, ஒரு மிகப்பெரிய வளைவில் கீழ்நோக்கிய திசையில் நாங்கள் மிதந்து கொண்டிருந்தோம். பரந்து விரிந்த நதியின் கரைகளில் இருபுறமும் அடர்ந்த காடுகள் அரண் போல் தென்பட்டன. அந்த காடுகளில் எங்கேயும் இடைவெளியோ அல்லது ஏதேனும் ஒளிக் கீற்று உள்ளே நுழைவதையோ காணவே முடியாது. கைரோ நகரைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, உண்மையில் அந்த நகரை அடைந்தால் அதை எங்களால் இனம் காணமுடியுமா என்று நாங்கள் வியந்து கொண்டிருந்தோம். ஒரு டசன் வீடுகளுக்கு மேல் அங்கே இருக்க வாய்ப்பில்லை என்று நான் முன்னமே கேள்விப்பட்டிருந்ததால், ஒருக்கால் அதைத் தெரிந்து கொள்ள முடியாது போகலாம் என்று நான் கூறினேன். அதுவும் அந்த வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படாமல் இருந்தால், அந்த நகரைக் கடந்து செல்வது எங்களுக்கு எப்படித் தெரியும்? அந்த நகரின் அருகேதான் இரண்டு பெரிய நதிகளும் சந்திக்கின்றன என்பதால் அதை வைத்து நாம் கண்டுபிடித்துவிடலாம் என்று ஜிம் கூறினான். அவ்வாறு நதிகள் சந்திக்கும்போது ஏற்படும் மணல் குவியலை, நதியின் மத்தியில் இருக்கும் தீவின் பாதம் என்று நினைத்து அதைக் கடந்து செல்வதாக நாங்கள் தவறுதலாக நினைத்து விடக் கூடாது என்று நான் எச்சரிக்கை விடுத்தேன். இந்த விஷயம் எங்கள் இருவரையும் கவலை கொள்ள வைத்தது.

எனவே நாங்கள் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. கரையில் ஏதேனும் விளக்கு காணப்பட்டால், முதலில் தெரியும் விளக்கை நோக்கி துடுப்பு வலித்து நாங்கள் கரைசேரவேண்டும். பின்னர் அங்குள்ள எல்லோரிடமும் எனது அப்பா வணிகப்படகு ஒட்டிக் கொண்டு எங்களைத் தொடர்ந்து வருவதாகத் தெரிவிக்க வேண்டும். அவர் புதிதாகத் தொழில் தொடங்கியுள்ளதால், கைரோ எத்தனை தொலைவில் உள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புவதாக அனைவரிடமும் கூறுவோம் என்று யோசனை சொன்னேன். ஜிம்முக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. எனவே திருப்தியாகப் புகைப்பிடித்துக் கொண்டு இருவரும் காத்திருந்தோம்.

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- 15

- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணிஎன் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் பதினைந்து

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- 15தெற்கு இல்லினோயில் உள்ள கைரோ நகருக்குச் சென்று சேர இன்னும் மூன்று இரவுகள் பிடிக்கும் என்று நாங்கள் கணக்கிட்டோம். அங்கேதான் ஒஹையோ நதி மிஸிஸிப்பி நதியில் வந்து கலக்கிறது. அங்கே செல்லத்தான் நாங்களும் விரும்பினோம். அங்கே இந்தத் தோணியை நல்ல விலைக்கு விற்று விட்டு, ஒரு நீராவிப்படகு எடுத்துக் கொண்டு ஒஹையோ நதியில் பயணம் செய்து, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களுக்குச் செல்ல விரும்பினோம்.

இரண்டாம் நாளிரவு பனிமூட்டம் ஆரம்பித்தது. கடுமையான பனிமூட்டத்தினூடே படகைச் செலுத்திச் செல்வது அறிவீனமான செயல். எனவே சிறிய தீவு போன்ற பகுதிக்கு சென்று அங்கே காத்திருப்பது என்று முடிவு செய்தோம். தோணியை அந்தத் தீவில் கட்டக் கயிற்றுடன் துடுப்பை வலித்துக் கொண்டு செல்லும்போது அங்கே சிறு சிறு செடிகள் மட்டுமே இருந்தன. நதிக்கரையின் ஓரத்தில் இருந்த இளம் செடிகளை நோக்கி கயிற்றை வீசினேன். ஆனால் நதி நீரின் விசை மிகவும் வலுவாக இருந்ததால், தோணி இழுத்துக்கொண்டு கயிறு சுற்றியிருந்த செடிகளை வேரோடு அறுத்துக் கொண்டு வந்து விட்டது. கடுமையான பனிமூட்டம் முற்றிலும் சூழ்ந்து கொண்டுவர நான் பீதியில் வலுவிழந்தேன்.

தோணி கண்ணைவிட்டு மறைந்தது. இருபது அடிகளுக்கு முன் இருப்பது எனக்குத் தெரியாத அளவு பனிமூட்டம் மறைத்திருந்தது. ஒரு நிமிடம் அச்சத்தில் உறைந்து நின்ற நான், அடுத்த நொடி சுதாரித்துக் கொண்டு நான் இருந்த இலேசான படகிலிருந்த துடுப்பை இறுகப் பற்றி வேகமாய் வலிக்கலானேன். ஆனால் அது நகரவேயில்லை. அவசரத்தில் அந்த படகைக்கட்டியிருந்த கயிறை அவிழ்க்க மறந்திருக்கிறேன். வெளியே குதித்து அதன் கயிற்றை அவிழ்க்க முயற்சி செய்தேன். ஆனால் மிகுந்த பரபரப்பில் நடுங்கிக் கொண்டிருந்த எனது கரங்கள் அக்காரியம் செய்யப் பயனற்றுப் போயின.

கயிற்றை அவிழ்த்த உடனே, எங்களது தோணியை நோக்கி செலுத்தினேன். தீவின் கரையை ஒட்டி மிகுந்த சீற்றத்துடன் துடுப்பை வலித்தேன். அந்த விஷயம் சரியாகத்தான் சென்றது. ஆனால் அந்த சிறு தீவின் நீளம் அறுபது அடி கூட இல்லாததால் அதன் கடைசிப் பகுதிக்குச் சென்றவுடன், திடமான வெள்ளைப் பனி மூட்டத்தில் நான் சிக்கினேன். ஒரு இறந்த மனிதனுக்குக் கூட தான் எங்கே செல்கிறோம் என்று தெரிந்திருக்குமோ என்னவோ, எனக்கு அந்தக் கணம் எதுவுமே புலப்படவில்லை.

இனி துடுப்பு வலித்தால். கரையில் முட்டுவேனோ அல்லது தீவில் கொண்டு இடிப்பேனோ என்று தெரியாததால், துடுப்பு வலிப்பதை நான் நிறுத்தினேன். அந்த சமயத்தில் என் கைகளைச் சேர்த்துப் பிடிக்கக் கூட இயலாத அளவு அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்த நான் அப்படியே அசையாமல் உக்கார்ந்து மிதந்து கொண்டிருப்பது என்று முடிவு கட்டினேன். நதியில், தூரத்தே இருந்து ஒரு விளிச்சப்தம் கேட்டதும், எனது உற்சாகம் மீண்டும் தொற்றியது. அந்த ஒலியை மீண்டும் கேட்பதற்காக கவனமாக துடுப்பு வலிக்க ஆரம்பித்தேன். அடுத்த முறை அந்த ஒலியைக் கேட்டவுடன், அந்த ஒலியை நோக்கித் தான் செல்லவில்லை என்றும் அதனின் வலது புறம் சென்று கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். அடுத்த முறை கேட்டபோது அதனிலிருந்து இடது பக்கம் போய்க்கொண்டிருந்தேன். அந்த ஒலியை தொடர்ந்து செல்வதை விட்டுவிட்டு அங்கேயே எல்லா இடங்களிலும் சுற்றி வந்திருக்கிறேன் என்பதால் அந்த ஒலி கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு நீங்கியது.

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- 14

- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணிஎன் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் பதினான்கு

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி  உறக்கம் நீங்கி கண்விழித்து எழுந்ததும், உடைந்திருந்த படகிலிருந்து நாங்கள் எடுத்து வந்திருந்த கொள்ளையர்களின் பொருட்களை ஆராய்ந்து பார்த்தோம். பூட்ஸ்கள், துணிமணிகள், புத்தகங்கள், ஒரு தொலைநோக்கிக் கண்ணாடி, மூன்று பெட்டி சிகரெட்டுகள் இன்னும் இது போன்ற எத்தனையோ பொருட்களைக் கண்டோம். நாங்கள் இருவருமே எங்கள் வாழ்க்கையில் இதுவரையில் இத்தனைப் பொருட்களுடன் பணக்காரர்களாக இருந்ததில்லை. சிகரெட்டுகள் அத்துணை அருமையாக இருந்தது. காட்டினுள் அமர்ந்து அன்று மதியம் முழுதும் நாங்கள் பேசிக் கொண்டே இருந்தோம். அந்த புத்தகங்களைப் படித்துப் பார்த்தேன். எங்களின் பொழுது நன்கு கழிந்தது.

அந்த உடைந்த படகில் நடந்த அனைத்து விஷயங்களையும் மற்றும் அந்த நீராவிப்படகு விஷயத்தையும் நான் ஜிம்மிடம் கூறினேன். இவையெல்லாம் சாகசங்கள் என்று நான் அவனுக்கு விளக்கினேன். ஆனால் அவனோ இது போன்ற சாகசங்கள் தனக்கு இனி வேண்டாம் என்று பதிலுரைத்தான். நான் திரும்ப அந்தக் கேபினுள் சென்ற பின் அவன் தவழ்ந்து தோணிக்குச் சென்றபோது, அங்கே தோணியைக் காணவில்லை என்று தெரிந்ததும், தான் இறந்தே விட்டோம் என்று நினைத்துக் கொண்டதாக ஜிம் கூறினான். எல்லாவழிகளும் அடைபட்டுத் தான் சிக்கிவிட்டதாக அவன் கருதியிருக்கிறான். யாருமே அவனைக் காப்பாற்ற இல்லையெனில் அவன் நீரில் மூழ்கி இறந்து விடுவான். ஆனால் யாராவது அவனைக் காப்பாற்றினால் அவன் ஜிம்முக்காக அறிவித்திருக்கும் பணப்பரிசுக்கு ஆசைப்பட்டு காட்டிக் கொடுத்துவிடுவான். பின்னர் மிஸ். வாட்ஸன் அவனைத் தெற்கில் இருக்கும் யாருக்கேனும் கண்டிப்பாக நல்ல விலைக்கு விற்று விடுவாள். நல்லது. சந்தேகமில்லாமல் அப்படித்தான் நடந்திருக்கும். உண்மையில் ஜிம் நீக்ரோக்களின் மத்தியில் ஒரு சிறந்த அறிவாளிதான்.

ராஜாக்கள், ராணிகள், நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள் மற்றும் அது போன்ற பலரைப் பற்றி உள்ள கதைகளை நான் ஜிம்முக்குப் படித்துக் காட்டினேன். எப்படி ஆடம்பரமாக அவர்கள் உடை உடுத்துவார்கள், எவ்வாறு பந்தா செய்து கொள்வார்கள், எப்படி அவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் மிஸ்டர் என்று அழைப்பதற்கு பதிலாக மாண்புமிகு, கனம் பொருந்திய, கருணைப் பிரபு, எங்கள் கடவுளே என்றெல்லாம் அழைத்துக் கொண்டார்கள் என்று படித்துக் காட்டினேன். மிகவும் ஆச்சரியமடைந்த ஜிம்மின் கண்கள் விரிந்தன. அவன் சொன்னான்.”

“இத்தனை நபர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவே தெரியாது. பைபிளில் நான் படித்த ராஜா சாலமனைத் தவிர வேறு எந்த ராஜாவையும் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. அது தவிர விளையாடும் சீட்டுக்கட்டுகளில் உள்ள ராஜாக்கள் வேண்டுமானால் தெரியும். ஒரு ராஜா எத்தனை பணம் சம்பாதிப்பார்?”

“சம்பாதிப்பது?” நான் சொன்னேன் “ஏன்! அவர்கள் நினைத்தால் ஒரு மாதத்திற்கு ஆயிரம் டாலர்கள் கூட சம்பாதிக்கக் கூடும். அவர்கள் நாட்டில் உள்ளது எல்லாமே அவர்களுக்குத்தான் சொந்தம் என்பதால் இன்னும் எத்தனை பணம் வேண்டுமானாலும் அவர்கள் சம்பாதிக்கலாம்.”

Continue Reading →

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- 13

- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணிஎன் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.  அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் பதின்மூன்று

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)-மயங்கி விழாத குறையாக மூச்சை இழுத்துப் பிடித்து கொண்டு நான் இருந்தேன். உடைந்து மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு படகில், கொலை செய்யும் ஒரு கும்பலுடன் நாங்கள் எத்தனை வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது உணர்ச்சிவசப்படும் சமயமல்ல. அந்தப் படகைக் கட்டாயம் கண்டுபிடித்தால்தான் நாங்கள் தப்பிக்க முடியும். கிடுகிடுவென நடுங்கியபடியே வலது புறமாக நாங்கள் வழி தேடிக் கொண்டு கீழ்நோக்கி நாங்கள் சென்றோம். மிகவும் மெதுவாக இருந்தது எங்கள் நடை. படகின் பின்பகுதி சென்று சேர்வதற்குள் ஒரு வார காலம் ஆனது போல ஒரு மலைப்பு. படகு இருந்ததற்கான அடையாளமே அங்கு இல்லை. [‘இதற்கு மேலும் இனி தப்பிக்க முடியும் என்று தோன்றவில்லை’ என ஜிம் கூறினான். கடும் அச்சம் காரணமாக அவனின் பலம் முழுதையும் அவன் இழந்தது போல உணர்ந்ததாகக் கூறினான். ஆனால் அங்கே இருந்து பேராபத்தில் சிக்குவதை விட அங்கிருந்து தப்பிக்க முயற்சியைத் தொடர வேண்டும் என்று நான் கூறினேன். எனவே நாங்கள் மீண்டும் எங்கள் முயற்சியைத் தொடர்ந்தோம். படகின் பின்பக்க அறையை நோக்கி மெதுவாக நாங்கள் முன்னேறினோம். முன்னால் இருக்கும் வான வெளிச்சத்தைத் தவிர்க்க அறைச்சுவர்களுடன் ஒட்டி கொண்டு நகர்ந்தோம். முழுதான நிலவொளி நீரில் விழுந்து இருந்ததால், சன்னலை மூட உதவும் கண்ணாடிப் பலகையைப் பிடித்துக் கொண்டு அதன் நிழலில் நிலவொளி எங்கள் மீது படாதவாறு மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் நடந்தோம். உள்ளரங்குக் கதவின் மிக அருகே நாங்கள் சென்றபோது அந்தப்பரிசலைப் பார்த்தோம். என்னால் அதை இனம் காண முடிந்தது. அதைக் கண்டுவிட்டோம் என்றதும் நான் கடவுளுக்கு நன்றியுடையவனானேன். இன்னும் ஒரு நொடிப்பொழுதில் அந்த பரிசலில் தாவி ஏறி இருப்போம். ஆனால் அந்தச் சமயம் பார்த்து அந்தக் கதவு திறந்தது. அந்த இருவரில் ஒருவன் எனக்கு சில அடி தூரத்தில் உள்ளிருந்து தனது தலையை வெளியே நீட்டினான். நான் செத்தேன் என்று நான் நினைத்தேன். ஆனால் அவன் தன் தலையை மீண்டும் பின்னுக்கு இழுத்துக்கொண்டு கூறினான். “அந்த இழவு பிடித்த லாந்தர் விளக்கை அணைத்துவை, பில்!”

கையில் ஏதோ அடங்கியிருந்த ஒரு மூட்டையை அவன் பரிசலுக்குள் தூக்கி எறிந்தான். பின்னர் அதனுள் ஏறி உள்ளே அமர்ந்தான். அது பேக்கர்ட். பிறகு பில் வெளியே வந்து அவனும் அந்த பரிசலுக்குள் குதித்து ஏறினான். பேக்கர்ட் மிக மெல்லிய குரலில் கூறினான் “எல்லாம் சரி. நாம் புறப்படுவோம்.”

எனது சக்தி முழுதும் இழந்தவனாக அந்த சன்னலின் அடைப்புப் பலகையை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். ஆனால் பில் கூறுவதையும் நான் கேட்டேன்.

“நிறுத்து. அதை நீ முடித்து விட்டாயா?”

“இல்லை. நீயும் செய்யவில்லையா?”

“இல்லை. அப்படியானால். இன்னும் அவனின் பங்குப்பணம் அவனிடமே உள்ளது.?”

“நல்லது. வா! கொள்ளையடித்த பொருட்களை எடுத்துக்கொண்டு பணத்தை விட்டுப் போவதில் ஒரு பலனும் இல்லை.”

“ஹேய்! நாம் வேறு ஏதோ மறைமுகமாகச் செய்கிறோம் என்று அவன் நம்மை சந்தேகப் பட்டால்?”

“படலாம். படாமலும் இருக்கலாம். எப்படி ஆனாலும் அதை நாம் எடுத்துக் கொண்டேயாகவேண்டும். அதை இங்கே அப்படியே விட்டுவிட்டு போக முடியாது. வா என்னுடன்.”

Continue Reading →

நூல் அறிமுகம்: எங்கு செல்கிறோம்? தற்கால வரலாறும் சில பார்வைகளும்

நூல்: எங்கு செல்கிறோம்? தற்கால வரலாறும் சில பார்வைகளும்! | ஆசிரியர்: பி.ஏ.கிருட்டிணன்       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.நூல்: எங்கு செல்கிறோம்? தற்கால வரலாறும் சில பார்வைகளும்! | ஆசிரியர்: பி.ஏ.கிருட்டிணன்
வெளியீடு : தி இந்து தமிழ்த்திசை சென்னை – 2.

‘தி இந்து தமிழ்த்திசை’ நாளிதழில் பி.ஏ.கிருட்டிணன் அவர்கள் ‘இந்தியாவும் உலகமும்’ என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி வெளியிட்டுள்ளது தி இந்து குழுமம். அரசியல் மற்றும் பண்பாடு சார்ந்த கட்டுரைகள். படிப்பதற்கு மிக விறுவிறுப்பாகவும் காத்திரமான உண்மைகளையும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. இந்திய அரசியல், காசுமீர் பிரச்சினை, அமெரிக்க அரசியல் உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகளை அவரது பயண அனுபவத்தின் வழியே ஆதாரங்களோடு புனைவுகளற்ற இயல்பான மொழிநடையில் தந்திருக்கிறார். நான்கு பகுதிகளைக் கொண்ட இந்நூலில் அரசியல்தான் விரிவாகப் பேசப்பட்டாலும் முக்கியமான அரிய / பயனுள்ள தகவல்கள் பல கொட்டிக்கிடக்கின்றன. தனது பயண அனுபவத்தில் கண்டு பழகிய மக்களின் பண்பாடு நாகரிகம் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றையும் கலந்தே இந்நூலில் தந்துள்ளார். அவரது மிளிர்ந்த நடையழகில் நாமும் பயணித்த உணர்வை இந்நூல் ஏற்படுத்துகிறது.

உலகிலேயே இயற்கை எழில் மிகுந்து, எண்ணற்ற வளங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரே இடம் காசுமீர். காமீர் பார்பதற்கு கொள்ளை அழகு. இங்கு நம் மனத்தை ஈர்க்கும் பச்சைப் பசும்புல்வெளிகள், கரும்பச்சைக் கூம்பு வடிவ பீர் மரங்கள், வெண்பனிப்பாறைகள், உயர்ந்த மலைச்சிகரங்கள், குதிரை வண்டிப்பயணம், குல்மார்கின் கேபிள் பயணம் என கொட்டிக்கிடக்கும் கொள்ளை அழகில் அவர் பயணித்ததோடு நம்மையும் பயணப்பட வைக்கிறார். காசுமீரில் நடப்பது என்ன என்பதையும் நமக்கு விவரிக்கிறார்.

காசுமீர் மக்கள் அமைதியானவர்கள் / அமைதியை விரும்புவர்கள். இங்கு முசுலிம்களே அதிகம். இப்பெண்கள் பர்தா அணிவதில்லை. கேலி, கிண்டல்களுக்கும் அஞ்சாதவர்கள். துணிச்சல் மிக்கவர்கள். காசுமீர்மக்கள் சுதந்திரமின்றி தவிக்கின்றனர். அவர்களைச்சுற்றிப் பாதுகாப்புப் படைகளும் மத்திய அமைதிப்படைகளும் சூழ்ந்துள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் இளைஞர்கள் பயங்கரவாதம் என்ற பெயரிலும் தாக்கப்படுகின்றனர். மனித உயிர்களுக்கு இங்கு மதிப்பில்லை. வேலைவாய்ப்பின்றி இளைஞர்கள் தவிக்கின்றனர். அரசாங்கமும் அரசு ஊழியர்களும் மக்களுக்கு ஆதரவாக இல்லை. பாகிசுதானையோ, இந்தியாவையோ அவர்கள் ஆதரிக்கவில்லை. காசுமீர் எங்களுக்குச் சொந்தமானது. பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ விரும்புகின்றனர். வேலை வாய்ப்பு அதிகரித்தால் பயங்கரவாதம் குறையும். காஷ;மீர் விடுதலைக்கு 95 சதவீத மக்கள் ஆதரவாக உள்ளனர் என்பதோடு காசுமீர் மக்களுக்கான தீர்வையும் முன் வைக்கிறார்.

Continue Reading →

சிறுகதை செம்பப்பு சக்கெ!

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -கணுக்காலின் மேற் கெண்டையில் முதிர்வின் வலைப்போர்த்தியக் கால் தோலில், புடைத்திருந்த நரம்பில் குருதி பெருக, எக்கி பரண்மேல் எதையோ துழாவினாள் ‘செள்ளி’.  அவளின் எழுபது வயதை எப்பொழுதுமே முப்பதாக காட்சிப்படுத்தும் உடல்திறம் இன்றும் இவளுடன் நீண்டிருந்தது. வயதின் முதிர்வினை அண்டவிடாது மாயம் செய்யும் அவளை கண்டு வியக்காதவர்கள் அவ்வூரில் யாருமில்லை. இன்னும் சுருக்கமடையாத உள்ளத்தாலும், குழந்தைகளுக்கான கைதேர்ந்த நாட்டு மருத்துவத்தாலும் அவள் அவ்வூரில் விசலமடைந்து கொண்டே  இருந்தாள். கைகளால் துழாவி துழாவித்தேட அவளுக்கு அது கிடைத்தப்பாடில்லை.

சலித்துக்கொண்டே அடுக்களையில் இருக்கும் முக்காலியை எடுத்துவந்து அதன்மேல் ஏறி தேடினாள். அதன்மேல் ஏறி எட்டிப்பார்த்தாள். பரணின் பாதிவரை மட்டுமே காட்சிப்பட, மேலும் தொடர்ந்த முயற்சியில் கண்விழிப்படலம் நோவுற அவளின் தேடல் தொடர்ந்தது. அவளின் செவிகளோ கடும் வயிற்றுப்போக்கால் அவதியுறும் அவளின் பதினோரு மாதப் பெயர்த்தி ‘மணியின்’ நலிவு ஓலத்தை கூர்மையாக கேட்டுக்கொண்டே தன் மனிதில் நோவினைச் சேர்த்துக்கொண்டிருந்தாள். ‘ஈரமாசியே! ஈரமாசியே!’ என்று தன் குலத்தெய்வத்தின் பெயரினை முனங்கியப்படியே அவளின் தேடல் தீவிரமாகத் தொடர்ந்தது.

Continue Reading →