நூல் அறிமுகம்: சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை

நூல் அறிமுகம்: சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை19 ஆம் நூற்றாண்டில் வந்த சிறந்த நாவல்களான மேடம் பாவாரி – அனா கரினினா இரண்டிலும் திருமண பந்தத்திற்கு அப்பால் உடலுறலில் ஈடுபட்ட பெண்கள் நாவலாசிரியர்களால் கொலை செய்யப்படுகிறார்கள் . ஒரு இடத்தில் ஆசனிக் கொடுக்கப்படுகிறது . மற்றயதில் ரயிலின் முன் தள்ளப்படுகிறாள் . தி.ஜானகிராமன் தனது மோக முள் நாவலில் வரும் நாயகன் பாபுவுடன் ஆரம்பத்தில் உடலுறவு கொண்ட பெண்ணை நதியில் தள்ளி கொலை செய்துவிட்டு மிகுதித் கதையைத் தொடர்கிறார் . இவர்கள் மூவரும் ஆண்கள். கை நடுங்காது செய்ய முடியும். ஆனால் சல்மாவுமா? சல்மாவின் இரண்டாம் ஜாமங்களில் கதையில் காபிரோடு உடலுறவு கொண்ட பிர்தவ்ஸ் என்ற பெண் பெற்ற தாயாலேயே வலுக்கட்டாயமாக எலிபாஷாணம் குடிக்க வைக்கப்பட்டபோது எனக்கு நெஞ்சம் அதிர்ந்தது . மற்றைய பெண் பாத்துமா வீட்டை விட்டு வாழ்வதற்காக ஓடினாள் . இறுதியில் வாகனத்தால் தாக்குப்பட்டு இறப்பதாக வருகிறது . அங்கு சுலைமான் ஒழுக்கம் கெட்டவளுக்கு அல்லாவால் கொடுக்கப்பட்ட தண்டனை என புளகாங்கிதமாகக் கூறுகிறான்.

சல்மாவை தொலைபேசியில் அழைத்து “பெண் எழுத்தாளராக இருந்துகொண்டு இப்படிச் செய்துவிட்டீர்களே? “ என ஆதங்கத்தோடு கேட்டேன். “அதுதானே ரியலிட்டி” என சல்மாவிடமிருந்து பதில் வந்தது. உண்மைதான் . நாவலுக்கு நம்பும்படியாகவும் அத்துடன் திருப்தியாகவும் இருக்கவேண்டுமென்பார்கள் (Believability and satisfaction).

Continue Reading →