கணையாழி மே 2020: ‘ ‘பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற்காதல் பற்றி – வ.ந.கிரிதரன் –

கணையாழி சஞ்சிகையின் மே 2020 இதழில் எனது கட்டுரையான ‘பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற்காதல் பற்றி’ என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் சென்று வாசிக்கவும். ‘கணையாழி’ சஞ்சிகை இணையப்பதிப்பாக வெளியாகின்றது. வாங்கிப்படிக்க நீங்கள் நாட வேண்டிய இணைய இணைப்பு: https://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Art/

வ.ந.கிரிதரன் பெயர்க் குழப்பமும் , மணிமேகலை பதிப்பகமும்…

வ.ந.கிரிதரனும் , வி.என்.கிரிதரனும்நான் எனது பத்து வயதிலிருந்து வ.ந.கிரிதரன் என்னும் பெயரில் எழுதிக்கொண்டு வருகின்றேன். ஆங்கிலத்தில் V.N.Giritharan என்று எழுதிக்கொண்டு வருகின்றேன். என் நூல்கள் தமிழகத்திலும் 1996இல் வ.ந.கிரிதரன் என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலுள்ள  மணிமேகலை பதிப்பகம்   வி.என்.கிரிதரன் என்னும் பெயரில் இன்னுமோர் எழுத்தாளரின் நூலை வெளியிட்டுள்ளது. இத்தனைக்கும் மணிமேகலை பிரசுர உரிமையாளர் ரவி தமிழ்வாணனுக்கு என் பெயர் தெரியாதென்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் பல வருடங்களுக்கு முன்னர் அவர் பதிவுகளுக்கு அவரது புத்தக வெளியீடுகள் சம்பந்தமாகக் கடிதமொன்று அனுப்பியிருந்தார். ஆனால் அவர் V.N கிரிதரன் என்னும் பெயரில் எதற்காக இன்னுமொருவரின் நூலை வெளியிட்டார்? அவ்விதம் V.N.கிரிதரன் என்று எழுதியவர் எதற்காக அப்பெயரில் எழுதினார்? அதிலுள்ள வி என்பது அவரது தந்தையையோஅல்லது அவரது பிறந்த ஊரையோ குறிக்கின்றதா? இவ்விதமாக ஏற்கனவே எழுத்தாளர் ஒருவர் அப்பெயரில் எழுதிக்கொண்டிருந்தால் நூலொன்றினை வெளியிடுபவர் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக அப்பெயரில் வேறோர் எழுத்தாளரின் நூலினை வெளியிடுவதைத்தவிர்க்க வேண்டும். ஆனால் ரவி தமிழ்வாணம் தவிர்க்கவில்லை.

நான் குறிப்பிடும் புத்தகத்தின் பெயர்: முத்தமிழில் நல்முத்துக்கள் ; எழுதியவர்கள்: V.N.கிரிதரன் & S.N.கிருஷ்ணமூர்த்தி ; வெளியிட்டவர்கள்: மணிமேகலை பதிப்பகத்தினர்.

Continue Reading →

நூல் அறிமுகம்: நீயே முளைப்பாய் – கரிசல்காரி – கவிதை நூல் விமர்சனம்

முனைவர்.சி.சங்கீதாநூல்: நீயே முளைப்பாய்!இராசபாளையம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் எனக்குப் பல இலக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த வகையில் நீயே முளைப்பாய் என்ற நூலினுடைய ஆசிரியரும் பட்டிமன்றப் பேச்சாளரும் கவிஞருமாகிய கரிசல்காரி, கவிதா ஜவஹர் எனக்கு அறிமுகம். அதுமட்டுமல்லாமல் நாங்கள் இருவரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வழியாக எங்களுடைய முதல் கவிதை நூலை ஒரே நாளில்  வெளியிட்டோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  நீயே முளைப்பாய் என்ற கவிதைத் தொகுதியில் பெரும்பான்மையான கவிதைகள் மழை பற்றியதாகவே இருக்கின்றன. குறிப்பாக மழை காதலினுடைய குறியீடாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசியல் சார்ந்த ஒரு குறியீடாகவும் அதிகாரத்தினுடைய குறியீடாகவும் ஆசிரியர் பயன்படுத்திருக்கிறார்.

ஏறத்தாழ பதினைந்து கவிதைகள் மழை பற்றிய கவிதைகளாகவே இருக்கின்றன. அந்த வகையில் ஆசிரியருக்கு மழை மீது கொண்டிருந்த அலாதிப் பிரியம் வெளிப்பட்டிருக்கிறது எனலாம். தன்னுடைய முதல் கவிதையே மழை பற்றிய கவிதை தான். அந்த கவிதை,

‘நீ என்னை சந்திக்க
இயலாமல் போனதற்கு
மழை ஒரு தடையெனச்
சொல்வாயாயின்
அவசரமில்லை
அடுத்ததொரு ஜென்மத்தில்
உன்னை சந்திக்கிறேன்
அதுவரை மழை போதும் எனக்கு’

இந்தக் கவிதையில் ஒரு தலைவனோ அல்லது தலைவியோ தன்னுடைய அன்பையே மழைக்காகத், துச்சமென தூக்கி எறியக் கூடிய ஒரு செய்தியைப் பார்க்க முடிகிறது. ஆனால் இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. நான் உன்னை இந்த ஜென்மத்தில் சந்திக்கவில்லை என்றாலும் அடுத்த ஜென்மத்திலாவது உன்னைச் சந்திக்கிறேன் என்ற வரிகள். எனவே இந்தக் காதல் என்பது பல ஜென்மங்களைக் கடந்து நிகழக் கூடிய ஒரு உணர்வு என்பதைப் பதிவு செய்திருக்கிறார் (பக்கம்.2).
அதிகாரம் என்பது உழைப்பையும் மனிதத்தையும் ஆக்கிரமிக்கும் என்பதையும் அடங்க வைக்கும் என்பதையும் அதிகாரம் எல்லா இடங்களிலும் கோலேச்சும் என்பதை ஒரு கவிதையில் பதிவு செய்திருக்கிறார்.

Continue Reading →

சிலப்பதிகாரம் – சில தகவல்கள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

ஆய்வுச் சுருக்கம்
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் நகர நிர்மாணம், வாஸ்து அமைப்பு,மயன் கலை, சமயம், நீதி முறைமை, குன்றக் குரவர் முதல் கோவேந்தர் வரை கூடிய சமுதாய ஒற்றுமை என்கிற உறவு நலத்தைக் காட்டுவது போன்றவற்றை இளங்கோவடிகள் கையாண்டுள்ள விதத்தை அறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

கலைச் சொற்கள்

நிர்மாணம் – உருவாக்குதல்
வாஸ்து – கட்டடக் கலை வழிகாட்டி

முன்னுரை:
தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் வரிசையில் சிலப்பதிகாரத்திற்கு மிகுந்த ஏற்றமுண்டு. இரண்டாம் நூற்றாண்டு காப்பியமான இதில் இளங்கோவடிகள் அதன் பாத்திரங்கள் வழியாக பல்வேறு வாழ்க்கை நெறிகளை மிக விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். பாட்டுக்கொரு புலவன் பாரதி

“ நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு”1

என்று பாடியுள்ளதைப் போல் சிலப்பதிகாரம் வரலாற்றுக் களஞ்சியமாகவும் பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது. அத்தகைய சிலப்பதிகாரம் பற்றிய சில தகவல்களை இங்கு சற்று காண்போம்.

வாஸ்து
ஒவ்வொரு வஸ்துவும் (வஸ்து = பொருள்) இப்படி இப்படி அமைந்திருந்தால்இன்னின்ன நலன்கள் ஏற்படும் என்பதே வாஸ்து ஆகும்.நம் பயன்பாட்டில் இருக்கும் எல்லா வஸ்துக்களையும் நான்கு வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.அவை

Continue Reading →

திருக்குறள் உணர்த்தும் ஒழுக்க நெறியும் நட்பின் இலக்கணமும் – ஓர்ஆய்வு

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை
ஒழுக்கத்தின் நெறியில் நிற்றலால் மேன்மை அடைதல் உறுதி ஒழுக்கம் தவறினால் தாங்க முடியாத பழியைப் பெறுவதும் உறுதி என்கிறார் வள்ளுவர். மனிதன் தன் சுற்றத்தரோடு தொடர்பு கௌள்ளுதலில் தனிமனித ஒழுக்கம் அவசியமாகிறது. அவ்வொழுக்க முறையினை வகுத்தும் தொகுத்தும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் என்பதனையும், பண்டைத் தமிழரின் வாழ்க்கை அறத்தின் அடிப்படையில் அமைந்தது. அன்பு, பழிபாவங்களுக்கு நாணும் நாணம், எல்லோருக்கும் உதவும் தன்மை, வாய்மை தவறாமை, பழிபாவங்களுக்கு அஞ்சுதல், நடுவுநிலைமை, விருந்தோம்பல், கொடை போன்ற பல்வேறு பண்புகளில் பண்டைத் தமிழர்கள் சிறந்து விளங்கினர். இவை அனைத்தையும்விட நட்பு என்ற நிலையில் சிறந்த விளங்கினர் என்பதனையும், ஆயந்து கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.

ஒழுக்கம் சொல் விளக்கம்
ஒழுக்கம் குறிக்கும் மாரல் என்னும். ஆங்கிலச் சொல் மோர்சு என்ற இலத்தின் மொழிச்சொல்லின் திரிபாகும். ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள், வழக்கமாக கொள்ளும் முடிவை ஒழுக்கமாகக் கொண்டனர்.

ஒழுகு, ஒழுக்கு என்னும் சொற்கள் ஒழுக்கம் என்னும் சொல்லாக மலர்ந்த்து என்பதை, ”மனித இனத்திற்யேயுரிய தனிப்பண்புகள் பல, அவற்றுள் ஒழுக்கம் முதன்மையானதாகப் போற்றப்படுகிறது. ஒழுக்கம் என்னும் சொல் ஒழுகு வேர்ச்சொல்லடியாகப் பிறந்த்தாகும். ஒழுகு என்னும் சொல்லிற்கு இடையுறாது கடைப்பிடித்தல் என்பது பொருள். இடையறாது நீர் ஒழுகுவதை ஒழுக்கு என்று கூறுவதைப் போல வாழ்க்கையில் உயர்ந்தவையெனக் கருதப்படும் நெறிமுறைகளை எக்காலத்தும் எவ்விடத்தும் இடையறாது மேற்கொண்டொழுகுவதே ஒழுக்கமாகும்.”1 எனக் குறிப்பிடுவார் மு.வரதராசனார்.

ஒழுக்கம் என்னும் சொல் சீலம், நன்னடத்தை, ஆசாரம், உயர்ச்சி முறைத்தன்மை, உலக ஓம்பிய நெறி போன்றப் பல பொருள்களைத் தருகிறது. தனி மனித ஒழுக்க கூறுகள் சில,

Continue Reading →