கோமாளிகள்! இலங்கைத்தமிழ் சினிமாவில் அதிக வசூலையீட்டிய திரைப்படம். இத்திரைப்படம் வெளியானபோது யாழ்ப்பாணம் , கொழும்பு நகர்களில் ஐம்பது நாள்களைக்கடந்து ஓடியது. ஏனைய இடங்களிலும் நன்கு ஓடியது நினைவிலுள்ளது. வி.பி.கணேசனின் ‘புதிய காற்று’ வெற்றியைத்தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகியபோது இதனை நான் பார்க்கவில்லை. யாழ் வின்சர் திரையரங்கில் ஓடியது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் ‘கோமாளிகள் கும்மாளம்’ என்னும் பெயரில் சுமார் இரண்டு வருடங்கள் வாராவாரம் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப்பெற்ற வானொலி நாடகமிது.
எஸ்.ராம்தாசின் கதை, திரைக்கதை வசனத்தில், எஸ். இராமநாதனின் இயக்கத்தில் வெளியான திரைப்படத்துக்கு இசையினை கண்ணன் – நேசம் இரட்டையர் அமைத்திருந்தனர். ஒளிப்பதிவு – ஜே. ஜே. யோகராஜா. இராமநாதன், யோகராஜா இருவரும் சிங்களத்திரையுலகில் நன்கு பிரபலமானவர்களாக விளங்கினார்கள். படத்தைத்தயாரித்தவர் வர்த்தகரான எம். முகம்மது எஸ்.ராம்தாஸ், அப்துல் ஹமீட், ஆனந்தராணி இராஜரத்தினம் (இன்று ஆனந்தராணி பாலேந்திரா), சுப்புலட்சுமி காசிநாதன், சில்லையூர் செல்வராசன், கே.ஏ.ஜவாஹர், செல்வம் பெர்ணாண்டோ, கமலினி செல்வராசன், எஸ்.செல்வசேகரன், ரி.ராஜகோபால், ஜேசுரட்னம், கே.சந்திரசேகரன் என்று புகழ்பெற்ற வானொலிக் கலைஞர்கள் பலர் நடித்திருந்தார்கள்.
‘பல்கலைவேந்தர்’ சில்லையூர் செல்வராசனின் வானொலி, திரைப்படப்பங்களிப்பு முக்கியமானது. இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படுபவர். அது பற்றிக் கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரனும் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். நினைவுக்கு வருகின்றது. சில்லையூர் செல்வராசன் ‘தணியாத தாகம்’ (திரைப்படச் சுவடி), விவரணத்திரைப்படங்கள் ( ‘கமம்’, ‘தங்கமே தங்கம்’, ‘பாதைதெரியும் பார்’ என்பவை அவற்றுட் சில. ‘கமம்’ புதுடில்லி பேர்லின் திரைப்பட விழாக்களில் விருதுகளைப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது).
Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>
Sat., Apr. 25 at 6:21 p.m.
நண்பர் கிரிதரனுக்கு காலை வணக்கம். அந்தச்சகோதரிகள் எனது ஆசான்கள் சுப்பிரமணியம் தம்பதியரின் புதல்விகளா! வாழ்க. கலைஞர் இ.சி. சோதிநாதனும் சுப்பிரமணியம் தம்பதியர் பணியாற்றிய எங்கள் விஜயரத்தினம் கல்லூரியில் (விவேகானந்தா வித்தியாலயம் என்ற பெயருடன் இயங்கிய காலத்தில்) அதிபராக பணியாற்றியவர்தான். சோதிநாதனும் கனடாவில் மறைந்தார். தணியாத தாகம் மிகச்சிறந்த வானொலி நாடகம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
venkat_swaminathan_new_a
Copyright © 2025 இரவி — Primer WordPress theme by GoDaddy