மாதந்தோறும் முழுமதித் தினத்திலே நடைபெற்றுவரும் தழல் இலக்கிய வட்டத்தின் இலக்கிய ஒன்றுகூடல் இம்மாதமும் இல.116/3, புனித சூசையப்பர் வீதி, பெட்டா, மன்னாரில் உள்ள கலையருவி மண்டபத்தில் 01.08.2012 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இவ்வொன்றுகூடலில் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு தங்களை அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
அந்தக் காலத்தில் ஹிராகுட்/புர்லா முகாம்களில் என்ன தமிழ் தினசரி பத்திரிகை வந்தது, எது எனக்குப் படிக்கக் கிடைத்தது என்று நினைவில்லை. அங்கு யாரும், என்னையும் சேர்த்து, தமிழ் தினசரி பத்திரிகை எதுவும் வாங்கியதாக நினைவில்லை. ஆயினும் நான் ஒரு தமிழ் தினசரி பத்திரிகையின் மதிப்புரை பக்கத்தில் தான் இரண்டு புத்தகங்களின் மதிப்புரைகளைப் படித்துப் பார்த்த பின் தான் அவற்றை வரவழைத்தேன்.என்ற நினைவு என்னவோ மறையவில்லை. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள். ஒன்று ரகுநாதன் கதைகள். மற்றது, கு. அழகிரிசாமி கதைகள். ரகுநாதன் எனக்கு பள்ளி நாட்களில் எனது நண்பன் ஆர். ஷண்முகம் கொடுத்த ஓர் இரவு என்ற தடை செய்யப்பட்ட புத்தகம் மூலமும் பின் இங்கு புர்லா வந்த பிறகு ரகுநாதன் ஆசிரியத்வத்தில் வெளிவந்த சாந்தி பத்திரிகை மூலமும். முன்னரே பரிச்சயம் ஆன பெயர் தான். சாந்தி பத்திரிகை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது பற்றி முன்னரே சொல்லியிருப்பேன் கட்டாயம். இந்த இரண்டு புத்தகங்களும் வந்தன. மூன்று ருபாய் விலை ஒவ்வொன்றும். மிக அழகான அச்சில், பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள். சக்தி காரியாலயம் வெளியிட்டவை. இருவரையும் பாராட்டி கொண்டாடும் நோக்கத்துடன் வெளியானவை மாதிரி இருந்தன இரண்டு புத்தகங்களின் வெளியீடும். மிக அழகாக அச்சிடப்பட்டிருந்தன இரண்டுமே அது போல அச்சிடப்பட்ட தமிழ்ப் புத்தகங்களை நான் பார்த்ததில்லை.
– ஜூலை 24, 2012 – இலங்கை சிறைச்சாலை ஒன்றில் தாக்குதலுக்கு உள்ளாகி, அதனால் மரணடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற அரசியல் கைதி நிமலரூபனின் உடல் வவுனியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. வவுனியாச் சிறைச்சாலையில் சில கண்காணிபாளர்களை கைதிகள் தாக்கினார்கள் என்று எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பலர் மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு இவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, நிமலரூபன் இறந்த நிலையிலேயே கொண்டுவரப்பட்டார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மரணமடைந்த நிமலரூபன் அடிகாயங்ளினாலும், உரிய சிகிச்சையில்லாமலுமே உயிரிழக்க நேரிட்டதாக தமிழ் அரசியல்வாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் குற்றம் சுமத்தியிருந்தனர். அவரின் மரணம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்ற போதிலும் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.