ஹிராகுட் போனதுமே எனக்கு உதவியாக இருந்தவர் செல்லஸ்வாமி என்று சொல்லியிருக்கிறேன். எங்கோ தமிழ் நாட்டு மூலையில் இருக்கும் கிராமத்திலிருந்து இங்கு வேலை பார்க்க வந்திருக்கும் 16 வயதுச் சிறுவனுக்கு வயதில் konjam மூத்த நண்பனாக சொல்லாமலேயே வழிகாட்டியாக இருந்தவர்களில் செல்லஸ்வாமி முக்கியமானவர். வயதில் நாற்பதைத் தாண்டிய எஸ். என். ராஜாவுக்கு அடுத்த படியாக என்று சொல்ல வேண்டும். அவர் இருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருக்கும் ஜனார்த்தனன் என்பவரின் வீட்டில் இருந்த அவருடைய விதவைத் தாய்க்கும் சின்ன குட்டித் தங்கைக்கும் நான் பிரியமானது போல, அங்கு வந்த அமுத சுரபி பத்திரிகை மூலம் க.நா.சுப்பிரமணியத்தின் ஒரு நாள் தெரிய வந்தது போல, செல்லஸ்வாமி வீட்டில் நான் முதன் முதலாகப் படித்த ஆங்கிலப் புத்தகம் Andre Maurois என்னும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளரின் சுயசரிதமாகிய Call No Man Happy என்னும் புத்தகம் அதில் என்ன படித்தேன் என்பது இப்போது அனேகமாக மறந்துவிட்டது. என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அது தான் புத்தகமாக ஒரு தொடக்கம். எனக்கு இப்போது வெகு மங்கலாக நினைவில் இருப்பதெல்லாம் அவரது இளம் வயது காதல்களைப் பற்றியும் ஷெல்லி, பைரன் போன்ற ஆங்கில கவிஞர்கள் மீது அவருக்கு இருந்து பிடிப்பு பற்றியும், அவர் பின்னர் French Academy யால் கௌரவிக்கப்பட்டது பற்றியும் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். இது ஒன்றும் எனது தேர்வு இல்லை. செல்லஸ்வாமி வீட்டில் இருந்தது, எளிதாகக் கிடைத்த முதல் புத்தகம். படித்தேன்.
நண்பர்களே, மாற்று திரைப்பட வளர்ச்சிக்காகவும், மாற்று திரைப்பட கலைஞர்களை கவுரவப்படுத்தவும் தமிழ் ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட “லெனின் விருது” இந்த ஆண்டு ஆவணப்பட / திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். திரையரங்கில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில்.. அம்ஷன் குமார் அவர்களுக்கு லெனின் விருது வழங்கப்பட்டதை முன்னிட்டு அவரது படைப்புகள் தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், புதுவை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் திரையிடல் நடைபெறும்.
நிழல் நவீன சினிமாவுக்கான களம்: -தஞ்சாவூர் குறும்படப் பயிற்சிப் பட்டறை நிழல் – பதியம் இணைந்து நடத்தும் 27வது குறும்படப் பயிற்சிப் பட்டறை தஞ்சாவூரில் ஆகஸ்ட் 15…