அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன். ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை, மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று. எனது விடுமுறையில் இலங்கை வந்து தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர். மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும், சில நண்பர் மூலமாக கோரப்பட்ட உதவிகளை ஆராய்வதற்காகவும், நகரத்திற்கப்பால் எம்மவர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்பதை அறியும் ஆவலும் என்னை இங்கு அழைத்துவந்திருந்தது. ஆனால் விதிவசமாய் நான் சந்தித்த, புனர்வாழ்வு பெற்ற ஒரு சில முன்னாள் போராளிகளிகள் மற்றும் மனிதர்களின் சோகம் என்னை கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.
மகாநதியின் இரு கரையிலும் இருந்த இரண்டு முகாம்களில், முதலில் ஹிராகுட்டிலும் பின்னர் புர்லாவிலும் நான் கழித்த, 1950 முதல் 1956 வரையிலான ஆறு வருடங்களில், நான் பழகி அறிந்த என்னிடம் அன்பு செலுத்திய நண்பர்களில் நான் மிகவும் வியந்த மனிதர் சீனிவாசன். ஹிராகுட் அணைக் கட்டில் இருந்த குத்தகைக் காரர் ஒருவரிடம் அக்கௌண்டண்ட் ஆக வேலை பார்த்து வந்தார். எப்படி அவருடன் பரிச்சயம் ஏற்பட்டது, எப்படி அவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது, என்பதெல்லாம் இப்போது என் நினைவில் இல்லை. முதலில் அவருடன் பரிச்சயம் ஏற்பட்ட போது, அவர் வேலை பார்த்து வந்த குத்தகைக் காரர், அணைக்கட்டின் தேக்கத்திலிருந்து தண்ணீரைப் பாசனத்துக்கு எடுத்துச் செல்ல இரு பெரிய கால்வாயகள் தோண்டிக்கொண்டிருந்தனர். அதில் ஒரு கால்வாய் குத்தகையை சீனிவாசன் வேலை பார்க்கும் குத்தகைக்கார எஞ்சினீயர் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் புர்லா விலிருந்து இருபது முப்பது மைல் தூரத்திலிருந்த ஒரு கிராமத்தில், சிப்ளிமாவோ அல்லது பர்கரோ தெரியவில்லை, அந்த கிராமத்தில் இருந்து வந்தார். அவ்வப்போது புர்லாவில் இருந்த தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டியிருந்த சமயங்களில் தான் அவர் எனக்கு பரிச்சய மானார். இந்த பரிச்சயத்தால், அவர் புர்லா வருங்காலங்களில் என்னோடு தங்குவது என்ற பழக்கம் ஏற்பட்டது. மிகவும் சுவாரஸ்யமான மனிதராகவும் வித்தியாசமான சிந்தனைகளும் கொண்டவராகவும் என் அறை நண்பர்கள் அவரைக் காணவே, அவர் வரவும் எங்களால் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப் பட்டது. பின்னர் அவர் வேலை பார்த்த குத்தகைக்காரர் புர்லாவிலேயே தன் அலுவலகத்தை மாற்றிக்கொள்ளவே, அவர் நிரந்தரமாக எங்களுடனேயே தங்கத் தொடங்கினார்
தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி நல்ல இலக்கியங்களின் வரவுகளை வரவேற்று தமிழ் நாட்டிலுள்ள நாமக்கல் கு.சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை, கடந்த 4 ஆண்டுகளாக சிறந்த நூலகளுக்குப்…
19, 2012- சென்னை:பிரபல பத்திரிகை ஆசிரியரும், நாவல் ஆசிரியரும், ஆயிரக்கணக்கான கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, வேடிக்கை கவிதைகள், நாடகம், திரைக்கதை படைத்தவரும், அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக, குமுதம் ஆசிரியர் அமரர் எஸ்.ஏ.பி.,க்கு தோளாக, தளபதியின் வாளாக, நண்பராக திகழ்ந்த, ரா.கி.ரங்கராஜன், தனது, 85ம் வயதில், நேற்று காலமானார்.கதை எழுதும் கலையை இளைஞர்களுக்கும் கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் அவர், “எப்படி கதை எழுதுவது?’ என்ற அமைப்பின் மூலம் எழுத்துக் கலையின் சூட்சுமங்களை வெளிச்சமிட்டுக் காட்டியவர். இவரது இறுதிச் சடங்கு, இன்று காலை, 9 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 80154-03491, 94442-69006. இவரது பல கதைகள், திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. “சுமைதாங்கி, இது சத்தியம், மகாநதி (ஆலோசகர்) வெளிவந்துள்ளன. இவரது இலக்கிய படைப்புகளில், “படகு வீடு, பட்டாம்பூச்சி’ ஆகியவை, இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு, இவர் புகழை பாடிக் கொண்டிருக்கும்.மனைவி கமலா, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் கொண்ட குடும்பம் இவருடையது. தன் கண்களை தானமாக வழங்க விருப்பப்பட்டார். அவர் விருப்பப்படியே, மறைவுக்கு பின், கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
ஐந்து வருடங்களின் முன்னர் “குமுதம்” வார இதழின் அரசு கேள்வி – பதில் பகுதியில் ஒரு கேள்வி, “ உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா” என்பதாக கேட்கபட்டிருந்தது. எல்லாம்வல்ல ஒரு இறைவன் இயக்க- தான் தாம் ஒரு கருவியாக செயற்படுவது அல்லாமல், ‘ நான் கிருத யுகம் படைக்க நீ ஆமென் என்று வழிமொழிந்து இரும்’ என்பதுட்பட மக்கள் செயற்பாட்டுக்கான சக்தியாக மட்டுப்படுத்தி கடவுளைக்காட்டும் பாரதி வரிகளை எடுத்துக் காட்டிய பின்னர் – இப்படியெல்லாம் பார்க்கும் போது பாரதியை ஒரு நாத்திகராகவே காண முடிகிறது” என்பதாக அரசின் பதில் அமைந்திருந்தது. தேசிய விடுதலை- சாதியொழிப்பு- பெண்விடுதலை- வறுமைத் தகர்ப்பு – சமத்துவ சமூக படைப்பு என்பவற்றுக்காக மக்களைச் கிளர்ச்சிக் கொள்ள உணர்வூட்டும் படைப்புகளையும் செய்தி வெளிப்பாடுகளையும் எழுதுவதையே தனது தொழில் துறையாகக் கொண்டிருந்தார் பாரதி. கடவுளின் கருவியாக மனிதனை- மனுசியைப் பார்ப்பதை விட்டொழித்து , மனித சக்தியின் கருவியாக கடவுள் உணர்வை மடைமாற்றிவிடும் அவரது பண்பு அவரை முழுமையாக ஆன்மீகவாதியாக தரிசிக்க இடம் தரவில்லை என்பதால் அரசு பதிலில் பாரதி நாத்திகவாதியாகக் காட்டப்படுகிறார்.
ஐந்து வருடங்களின் முன்னர் “குமுதம்” வார இதழின் அரசு கேள்வி – பதில் பகுதியில் ஒரு கேள்வி, “ உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா” என்பதாக கேட்கபட்டிருந்தது. எல்லாம்வல்ல ஒரு இறைவன் இயக்க- தான் தாம் ஒரு கருவியாக செயற்படுவது அல்லாமல், ‘ நான் கிருத யுகம் படைக்க நீ ஆமென் என்று வழிமொழிந்து இரும்’ என்பதுட்பட மக்கள் செயற்பாட்டுக்கான சக்தியாக மட்டுப்படுத்தி கடவுளைக்காட்டும் பாரதி வரிகளை எடுத்துக் காட்டிய பின்னர் – இப்படியெல்லாம் பார்க்கும் போது பாரதியை ஒரு நாத்திகராகவே காண முடிகிறது” என்பதாக அரசின் பதில் அமைந்திருந்தது. தேசிய விடுதலை- சாதியொழிப்பு- பெண்விடுதலை- வறுமைத் தகர்ப்பு – சமத்துவ சமூக படைப்பு என்பவற்றுக்காக மக்களைச் கிளர்ச்சிக் கொள்ள உணர்வூட்டும் படைப்புகளையும் செய்தி வெளிப்பாடுகளையும் எழுதுவதையே தனது தொழில் துறையாகக் கொண்டிருந்தார் பாரதி. கடவுளின் கருவியாக மனிதனை- மனுசியைப் பார்ப்பதை விட்டொழித்து , மனித சக்தியின் கருவியாக கடவுள் உணர்வை மடைமாற்றிவிடும் அவரது பண்பு அவரை முழுமையாக ஆன்மீகவாதியாக தரிசிக்க இடம் தரவில்லை என்பதால் அரசு பதிலில் பாரதி நாத்திகவாதியாகக் காட்டப்படுகிறார்.
ஆண் பெண்ணை விரும்புவதுபோல், பெண்ணும் ஆணுக்கு அடுத்தபடியாகப் பொன்னை விரும்புகின்றாள். மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை ஆகிய மூவாசைகளை மனிதன் நாடித் தேடி ஓடுவது வழக்கமாகும். பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை எல்லாப் பெண்களும் விரும்பி அணிகின்றனர். பெண்களைக் குளிர வைக்க ஆண்கள் அணிகலன்களுடன் முந்தி முதல் வரிசையில் அணி வகுத்து நிற்கின்றனர். மகளுக்குப் பெற்றோரும், மனைவிக்குக் கணவனும், தாய்க்கு மகனும் வேண்டிய பொன்னாபரணங்களை வாங்கிக் கொடுத்து, அணிவித்துப் பார்த்து மகிழ்வர்.
தங்கம், பித்தளை, வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களினாற் செய்யப்பட்ட ஆபரணங்களைப் பெண்கள் அணிகின்றனர். ஆனால் தமிழ்ப் பெண்கள் தங்கத்தினாற் செய்யப்பட்ட ஆபரணங்களைத்தான் விரும்பி அணிவர். உலோகங்களினாற் செய்யப்பட்ட அணிகலன்களில் உள்ள ஈர்ப்புச் சக்தி அணிபவர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் கூறுவர். பித்தளையால் செய்யப்பட்ட வளையல்களை கீல்வாத நோயாளிகள் (arthritic) அணிவதையும் நாம் பார்த்திருக்கின்றோம்.
யாழ்ப்பாண வரலாறு பற்றியும் நல்லூர் இராசதானி பற்றியும் அறிந்து கொள்ள உதவும் பழைய சரித்திர நூல்களாக யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமலை, பரராசசேகரன் உலா, வையாபாடல், இராசமுறை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் சில நூல்கள் தற்போது வழக்கில் இல்லை என்பது வருத்தம் தரும் செய்தியாகும்.
கைலாயமாலை
கைலாய மாலை என்பது யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் முதல் நூலாகக் கொள்ளும் நூல்களில் ஒன்றாகும். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவ மாலையை எழுதிய மயில் வாகனப் புலவர் தான் பயன்படுத்திய முதல் நூல்களில் ஒன்றாக கைலாய மாலையையும் குறிப்பிட்டுள்ளார். இது யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது.
ஈரலிப்பைச் சுமந்தபடி வானலையும் மென்முகில்கள் கறுத்தொடுங்கித் தூறலாகிப் பின் சாரலாகிப் பூமி குளிர்த்துமோர் மழைப் பொழுது. சில்லிடும் அம்மழைப் பொழுதினை இளஞ் சூட்டுக் குருதி வெப்பநிலையும் போர்வையாய் மெல்லியமயிர் பூத்த தோலுந் தாங்கிய ஓர் மனிதஉயிரி எங்கனம் எதிர்கொள்ளும்? தன்னுடலுக்கும் புறச்சுழலுக்கும் இடையேயான வெப்பச் சீராக்கத்திற்காய் உரோமங்களை நிமிர்த்தியபடி நடுநடுங்கிக் கொள்ளும். இதுதானே காலங்காலமாய் நாம் உணரும் உயிரியல் யதார்த்தம். ஆனாலும் இங்கே எதிர்மறையாய் ஒரு மழைப் பொழுது. அதில் சுற்றுச்சுழலை விடவும் அதிகரிக்கும் உடல்வெப்பநிலை குருதிக் கலங்களையெல்லாம் விரிவடையச் செய்தபடியும் வியர்வைச்சுரப்பிகளைத் தூண்டிவிட்ட படியுமாய் வியர்த்தொழுகுகிறது. இது சாத்தியமா? சிறுபான்மை மீதான நியாயப்படுத்த முடியாத வன்முறைகளும் வெறிகொண்ட பேரினவாதம் வளர்த்துவிட்ட போர்க்காலம் இழைத்துச் சென்ற துரோகங்களின் தீராக் காயங்களுமே மழைப் பொழுதிலுங்;கூடக் கவிஞரின் உணர்வுகளைக் கொதிநிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றன போலும். வியர்த்தொழுகும் மழைப்பொழுது என்ற சகோதரர் சபருள்ளாவின் முரண்சுவையோடு கூடிய இத்தலைப்பே இத்தொகுதி மீதான ஈர்ப்பினை அதிகப்படுத்தியது எனலாம்.