‘கலைஞர்கள் கேள்வி ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்’.. லண்டனில் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றத்தில் டாக்டர் லக்ஷ்மி ஜெயான்!

‘மிருதங்கக் கலையைப் பயின்று தான் முதன்முதலாகச் செய்யும் அரங்கேற்றம் போலன்றி மிகுந்த அனுபவம் கொண்ட ஒரு கலைஞனாக பக்க வாத்தியங்களோடு இணைந்து மிருதங்கத்தினை வாசித்த விதம் மிகுந்த பாராட்டுக்குரியது’ என்று இந்திய வானொலியின் சிறந்த கலைஞராகத் திகழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீமதி வாசுன்றா ராஜகோபால் அவர்கள், லண்டன் வொட்ஸ்சிமித் தியேட்டரில் இடம்பெற்ற ஸ்ரீ கந்தையா ஆனந்தநடேசன் அவர்களின் மாணவனான செல்வன் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றத்தின்போது தனது பிரதம உரையில் தெரிவித்திருந்தார்.

‘மிருதங்கக் கலையைப் பயின்று தான் முதன்முதலாகச் செய்யும் அரங்கேற்றம் போலன்றி மிகுந்த அனுபவம் கொண்ட ஒரு கலைஞனாக பக்க வாத்தியங்களோடு இணைந்து மிருதங்கத்தினை வாசித்த விதம் மிகுந்த பாராட்டுக்குரியது’ என்று இந்திய வானொலியின் சிறந்த கலைஞராகத் திகழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீமதி வாசுன்றா ராஜகோபால் அவர்கள்,  லண்டன் வொட்ஸ்சிமித் தியேட்டரில் இடம்பெற்ற ஸ்ரீ கந்தையா ஆனந்தநடேசன்; அவர்களின் மாணவனான செல்வன் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றத்தின்போது தனது பிரதம உரையில் தெரிவித்திருந்தார். இந்தியாவில் இருந்த வருகை தந்திருந்த ஸ்ரீ சன்டீப் நாராயணனின் கணீரென்ற குரலில் அமைந்த பாடல்களுக்கு, மாறுகின்ற தாள லயத்தோடு பின்னிப் பிணைந்து ஈடுகொடுத்து செல்வன் ஹரிஷன்  மிருதங்கத்தினை வாசித்தமை பாராட்டுக்குரியது என்றும் அவர் தனது உரையில் தெரிவித்திருந்தார். கலை ஞானம்கொண்ட ஹரிசனை வழிநடாத்தி அரங்கேற்றத்துக்கு வழி சமைத்த குரு ஸ்ரீ.ஆனந்தநடேசன் அவர்களையும்,  ஊக்கப்படுத்திய பெற்றோரான ஸ்ரீகாந்தன் வத்ஷல்யா தம்பதிகளையும் வாழ்த்தி தனது பாராட்டை மேலும் தெரிவித்திருந்தார்.     

Continue Reading →

தமயந்தி நூல்கள் அறிமுகம்

தமயந்தி நூல்கள் அறிமுகம் 30 – 09- 2012   * ஞாயிறு மாலை 6 மணி.,ஓசோ பவன்,எம்.ஜி.புதூர் , திருப்பூர்.தலைமை: சுப்ரபாரதிமணியன் பங்கேற்போர்: சுப்ரபாரதிமணியன்,சுகன்யா, சுபமுகி,சாமக்கோடாங்கி ரவி, வெங்கடேசன், சிவதாசன்,…

Continue Reading →

வெற்றிமணி மாணவர் சிறுகதைப் போட்டி முடிவுகள்!

பிரபல எழுத்தாளர் திரு.குரு அரவிந்தன் அவர்கள் (கனடா) ஆதரவுடன் யாழ்பாணத்தில் வெற்றிமணி பத்திரிகை நடத்திய அகில இலங்கை மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி முடிவுகள்பிரபல எழுத்தாளர் திரு.குரு அரவிந்தன் அவர்கள் (கனடா) ஆதரவுடன் யாழ்பாணத்தில் வெற்றிமணி பத்திரிகை நடத்திய அகில இலங்கை மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி முடிவுகள்.

பரிசளிப்பு நிகழ்வு
 
காலம்: 21-09-2012.  (மாலை 3:30)

இடம்: நாவலர் கலாச்சார மண்டபம். நல்லூர். யாழ்ப்பாணம்.
போட்டியில் பரிசு பெற்ற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Continue Reading →

ஜெய் பீம் காம்ரேட் – திரையிடல் (தமிழில்) – நாள்: 23-09-2012, ஞாயிற்றுக் கிழமை

ஜெய் பீம் காம்ரேட் - திரையிடல் (தமிழில்) - நாள்: 23-09-2012, ஞாயிற்றுக் கிழமைஜெய் பீம் காம்ரேட் – ஆவணப்படம் திரையிடல் & டி.வி.டி. வெளியிடல்
திரைப்படம் : JAI BHIM COMRADE, மூன்று மணி நேரம், 20 நிமிடங்கள் ஓடக்கூடியது.
நண்பர்களே ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படம் (தமிழ் சப் டைட்டிலோடு), திரையிடப்பட உள்ளது.
டி.வி.டி. வெளியிடுபவர்: வழக்கறிஞர் சத்யசந்திரன்
பெற்றுக்கொள்பவர்: பேராசிரியர் இளங்கோவன்
திரைப்பட அறிமுகம்: ஆர். ஆர். சீனிவாசன்

Continue Reading →

வாசிப்பும் யோசிப்பும் -3: ஜீவநதியின் கனடாச் சிறப்பிதழ்

ஜீவநதியின் கனடாச் சிறப்பிதழ்!வாசிப்பும் யோசிப்பும்!கலாமணி பரணீதரனை ஆசிரியராக, ‘அறிஞர் தம் இதய ஓடை, ஆழ நீர் தன்னை மொண்டு, செறி தரும் மக்கள் எண்ணம் , செழித்திட ஊற்றி ஊற்றி, புதியதோர் உலகம் செய்வோம்’ என்னும் பாரதிதாசனின் பாடல் வரிகளைத் தாரகமந்திரமாக் கொண்டு அல்வாயிலிருந்து வெளிவரும் ஜீவநதி கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 48வது இதழான புரட்டாதி 2012 இதழ் கனடாச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கின்றது. இது பற்றிய ஆசிரியத் தலையங்கத்தில் ‘ஜீவநதியின் கனடாச் சிறப்பிதழும் முழுமையாகக் கனடா வாழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மாத்திரமே தாங்கி வருகின்றது என்பது பதிவு செய்யப்பட வேண்டியதொன்றாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்மாவட்டத்திலிருந்து ஆஸ்திரேலிய, கனேடியச் சிறப்பிதழ்களை வெளிக்கொண்டுவந்ததன்மூலம் ஜீவநதி மேற்படி நாடுகளிலுள்ள படைப்பாளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதுடன், ஈழ மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு மேற்படி நாடுகளின் கலை, இலக்கிய முயற்சிகளையும் அறிமுகம் செய்கின்றது. இது பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். மேற்படி ஆசிரியத் தலையங்கத்தில்2011 வருட சிறந்த சஞ்சிகைக்கான கு.சின்னப்பபாரதி விருது கிடைத்த விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராட்டுகள்.

Continue Reading →