புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியச் செயற்பாடுகளைப் பதிவு செய்யும் சஞ்சிகைகள் பலவற்றை ‘படிப்பகம்’ இணையத்தளம் பதிவு செய்திருக்கிறது. புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிக் கட்டுரைகளைப் படிப்பவர்கள்…
[உயிர் நிழல் ஆகஸ்ட் 2000 இதழில் வெளியான சிறுகதை. பதிவுகள், திண்ணை இணைய இதழ்களிலும் பின்னர் மீள்பிரசுரமானது. -பதிவுகள்.] யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் இரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். ‘பேப்’ வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு ‘திரில்’ இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த ‘யமேய்க்க’ மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளையர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். ‘பேப்’ வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். ‘சிறு இந்தியா’ , ‘சிறு இத்தாலி’..இப்படி பல பகுதிகள். அது ஒரு மாலை நேரம். மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்த சமயம். இலேசாக மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் யன்னலினூடாக எதிரே விரிந்திருந்த உலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.
இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களையடுத்து உலகின் நானா பக்கங்களையும் நோக்கி ஈழத்தமிழர்கள் 1979இலிருந்து அதிக அளவில் புலம்பெயரத் தொடங்கினார்கள். அதற்கு முன்னரும் அரசியல் காரணங்களுக்காக , புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தாலும், 1979இல் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்கு வந்தபின்னர், அதன் பின்னர் 1983 ஜூலை இனக்கலவரத்திற்குப் பின்னர்தான் அதிக அளவில் இவ்விதம் புலம்பெயரத்தொடங்கினார்கள். இவ்விதம் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமக்குள் பலவேறு திசைகளில் அரசியல்ரீதியில் பிரிந்து கிடந்தாலும், தாம் வாழும் நாடுகளிலிருந்துகொண்டு பல்வேறு கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்கள்; ஈடுபட்டுக்கொண்டு வருகின்றார்கள். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக இவ்விதமான கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டு வரும் இவர்களின் செயற்பாடுகள் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. இவை பற்றிய கலந்துரையாடல்கள் விரிவாக, பரந்த அளவில் நடைபெற்றிருக்கவில்லை. அவ்விதம் நடைபெற்ற கருத்தரங்குகளெல்லாம் குறிப்பிட்ட குழுசார் மனப்பான்மையுடன் நடைபெற்றதால் விரிவாக, நடுநிலையுடன், எப்பொருள் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்னும் மனப்பாங்குடன் அவ்விதமான அமர்வுகள் நடைபெறவில்லை. இவ்விதமான சூழலில் உலகின் நானா பக்கங்களிலும் பரந்து வாழும் தமிழக் கலை, இலக்கியவாதிகள் படைப்புகள் அனைத்தையும் படிப்பதற்கு முயலவேண்டும். அவை பற்றிய கலந்துரையாடல்களை அமர்வுகள் வாயிலாகவோ, இணையத்தினூடாகவோ நடாத்திட வேண்டும். அவை பற்றிய ஆக்கங்களைப் பிரசுரிக்க வேண்டும். இதன்மூலம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் படைத்த, படைக்கும் கலை, இலக்கியப் படைப்புகள் பற்றிய விபரங்கள் ஆவணப்படுத்தப்படும். அவை பற்றிய விரிவான ஆய்வுகள் நடைபெறும்.
கம்பன் கழக மகளிர் அணி (பிரான்சு) நடத்தும் திருக்குறள் அரங்கம் -22 எதிர்வரும் 20.10.2012 அன்று பிரான்சில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்கள் கீழே:
காலம் – 20th October 2012 , 3.00 P.Mஇடம் – Walthamstow Quaker Meeting House, 1a Jewel Road, London E17 4QUதலைமை –…
[பதிவுகளில் அன்று வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்யப்படும். அந்த வகையில் இந்தச் சிறுகதையும் மீள் பிரசுரமாகின்றது. – பதிவுகள்-]
தொடையில் ஓங்கி ஒரு அடி..!
வலியில் , வஹாப் – என் தம்பி – எழுப்பிய சத்தம் மனதை அறுத்தது. இது வலி என்றோ அது எந்த இடத்திலென்றோ அல்லது அடித்தது தன் லாத்தாதான் என்றோ அவன் உணர்வானா ? பார்வை , எப்போதும் வானத்தை மறைக்கும் முற்றத்துப் பந்தலின் ஏதாவது ஒரு மூங்கிலில் பட்டு நிதானமில்லாமல் அலைய, எச்சில் வடிகிற கோணல் வாயில் மொய்க்கும் ஈக்களை விரட்டத் தெம்பில்லாத தன் திருகிய கைகைளைத் தொட்டியில் அடித்துக் கொண்டு இருப்பவன் அவன். தொட்டியின் கம்பிகளைச் சுற்றிப் பிணைந்துள்ள அவன் சூம்பிப் போன கால்களுக்கு என்ன தெரியுமோ அதுதான் அவன் மூளைக்கும் தெரியும். மூளை இருக்கிறதா ? உடலின் எந்த பாகங்களுக்கும் வித்யாஸம் தெரியாத ஒரு பிறவியை குழந்தையென்று சொல்வது பொருந்துமா ? இப்போது அவன் பேண்டிருக்கும் மலத்தின் நாற்றம் கூட அவனுக்குத் தெரியவில்லையே…
[பதிவுகளில் அன்று வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்யப்படும். அந்த வகையில் இந்தச் சிறுகதையும் மீள் பிரசுரமாகின்றது. – பதிவுகள்-]
வானத்தில் முகில் கூட்டங்கள் நிற்பதும் நடப்பதுமாக எதையோ தேடி ஒடியபடி என் நினைவுகளும் அதுபோல்தான். என் கையைவிட்டு மட்டும் தொலைந்துபோன அற்புதமான அந்த நினைவுகள் என்னுள் எப்போதும் படர்ந்தபடி. அம்மா அடிக்கடி கூறுவா உன்னால ஒருவேலையும் முழுசா செய்ய முடியாது.எந்த வேலையை தொட்டாலும் அரைகுறைதான். அதைபடிக்கவேணும் இதை படிக்கவேணு மென்று எல்லாவற்றையும் தொட்டு பார்த்ததோட சரி. நேற்று இந்த ஒன்று கூடலுக்கு போய்வந்ததிலிருந்து என் எண்ணங்களும் அங்கேயும் இங்கேயும் தொட்டுக்கொண்டே இருக்கின்றது.
[பதிவுகளில் அன்று வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்யப்படும். அந்த வகையில் இந்தச் சிறுகதையும் மீள் பிரசுரமாகின்றது. – பதிவுகள்-]
நாட்பட்ட உந்துதல் தாளமுடியாமலேதான் வரைபலகையையும் தூரிகையையும் எடுத்தான். உந்துதல் என்றால்,ஒருநாள் இருநாள் உந்துதல் அல்ல. கிட்டத்தட்ட ஏழு வருட உந்துதல். இன்றைக்கு உச்சியிலும் மறுநாள் கிடப்பிலும் என்று காண்புகட்கேற்ப, நினைவில் நுரைத்து வடியும் உந்துதல். வீடுகூட்டும் தும்புக்கட்டைகூட, அந்தச் சீனத்து எழுத்தோவியனின் தூரிகையோட்டத்தை எழுப்புவதுண்டு. சொல்லப்போனால், ஒழுக்கிலே இலயித்து நகரும் நதியும்கூட.
[பதிவுகள் இணைய இதழில் செப்டம்பர் 2009 இதழ் 117இலிருந்து தொடராக வெளிவந்த இந்த உளவியற் கட்டுரைத் தொடர் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. — ஆசிரியர்] கோடி கோடியார் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா? கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா? கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் இடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா? இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார். இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த உலகத்தில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு நீங்கள் வாழ வேண்டும் என்றால், அறிவியல் வளர்ச்சியினாலும் தொழில் நுட்ப வளர்ச்சியினாலும் ஏற்பட்டுள்ள வாழ்க்கை வசதிகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஓர் விலை கொடுத்தே ஆக வேண்டும். அந்த விலையே மன அழுத்தம்.
இலங்கையில் வடமேல் மாகாணத்தில் அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம். முன்னாள் பிரதமர்கள் பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா ஆகியோரின் பரம்பரை தேர்தல் தொகுதியையும் பரம்பரைக்காணிகளையும் கொண்டு விளங்கும் அத்தனகல்லை என்ற நகரத்துக்கு சமீபமான கிராமம்தான் இங்கு நான் குறிப்பிடும் கொரஸ்ஸ. மினுவாங்கொடை என்ற மற்றுமொரு ஊரைக்கடந்து உடுகம்பொலை என்ற இடத்தையும் கடந்து சென்றால் இந்த கொரஸ்ஸ கிராமம் வரும். அங்கே ஒரு பௌத்த விகாரை. அதன் பிரதம குரு (விஹாராதிபதி) வணக்கத்துக்குரிய பண்டிதர் ரத்ன வண்ஸ தேரோ. அவரைப்பார்க்கச்செல்பவர்கள் பெரும்பாலும் அந்தக்கிரமத்திலும் அதனைச்சுற்றியுள்ள ஊர்களையும் சேர்ந்த சிங்கள கிராமவாசிகள்தான். அவர்கள்தான் அந்த பௌத்த பிக்குவுக்கு தினமும் தானம் (மதிய உணவு) முறைவைத்து கொண்டுவந்து கொடுப்பவர்கள். தினமும் பகலில் மாத்திரம் ஒரு வேளை உணவுண்டு பௌத்த தர்மத்தை மக்களுக்கு போதித்துவந்த அவரைப்பார்க்க அடிக்கடி தமிழ் எழுத்தாளர்களும் சென்றுவந்திருக்கிறார்கள் எனச்சொன்னால் இதனை வாசிக்கும் வாசகர்கள் ஆச்சரியப்படலாம். அதிசயம்தான். ஆனால் உண்மை.