(103) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும் தான் பத்திரமாகத் தான் இருந்தன. பூட்டு உடைக்கப்படவில்லை. உடைப்பதற்கு அறையில் ஏதும் இல்லை. முதல் தடவையாக தனியாக வந்துள்ள அனுபவமும் தான் சற்று பயப்பட வைத்துள்ளது என்று மனம் சமாதானம் சொன்னாலும் ஹோட்டல் ஒன்றும் அப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. இருப்பினும் படுத்துக்கொண்டேன். இரவு முதலில் கொஞ்ச நேரம் மனம் அமைதியின்றி கழிந்தாலும் எப்படியோ தூக்கம் வந்து கவலையைத் தீர்த்தது. தூங்கினால் காட்டில் தனிமையில் இருந்தாலும் நகரச் சந்தடியில் கூட்டத் தோடு இருந்தாலும் தூக்கம் எல்லாவற்றையும் அழித்து விடுகிறது. சுய நினைவே இல்லையென்றால் எது எப்படி இருந்தால் என்ன?  காலையில் எழுந்ததும் காசிக்குப் போனால் என்ன என்று தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து விட்டு காசிக்குப் போகவில்லையென்றால்…? பின், எப்போது இந்தப் பக்கம் வரும் காசிக்கு இவ்வளவு அருகில் வரும் சந்தர்ப்பம் ஏற்படுமோ? அதிலும் என் காசியாத்திரைக்காகும் செலவு அலாஹாபாதில் லிருந்து காசிக்குப் போய் வரும் செலவு தான். யார் யாரெல் லாமோ நிறைய பணம் வாழ்நாளெல்லாம் சேர்த்துக்கொண்டு, சொத்துக்களை நிர்வகிக்க ஏற்பாடு செய்து,  உயில் எழுதி வைத்து விட்டுப் போவார்களாம். எனக்கு அந்த கஷ்டம் இல்லையே. அதோடு அப்பா அம்மாவுக்கு காசியிலிருந்து கங்கை ஜலச் செம்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் இன்னும் சந்தோஷப்படுவார்களே. அத்தோடு புள்ளையாண்டானுக்கு அபூர்வமா காசிக்குப் போகணும், கங்கை ஜலம் வாங்கிக் கொடுக்கணும்னு அக்கறையும் பக்தியும் வந்து விட்டது என்றால் சந்தோஷம் தானே. நான் சொன்னால் நம்ப மாட்டார்கள். ஆனால் கங்கைச் செம்பு சாட்சி சொல்லுமே.

Continue Reading →

தமிழில் இலத்திரனியல் நூல்: அடிப்படை ரேடியோ தொடர்பாடல்’ (Fundamentals of Radio Communications)

அமெரிக்காவிலுள்ள என்எக்ஸ்பீசெமிகன்டக்டர் நிறுவனத்தில் முதன்மைப் பொறிஞராகப் பணி புரியும் கதிரவன் கிருஷ்ணமூர்த்தி ‘அடிப்படை ரேடியோ தொடர்பாடல்’ (Fundamentals of Radio Communications) என்னுமொரு தமிழ் நூலொன்றினை இலத்திரனியற் துறையில்…

Continue Reading →

கம்பன் விழா – 2012 – பிரான்சு!

கம்பன் உறவுகளே வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் பதினொன்றாம் ஆண்டுக் கம்பன் விழாவை 11.11.2012 ஞாயிற்றுக் கிழமைப் பிற்பகல் 14.00 மணிமுதல் மாலை 20.30 மணிவரை L’espace…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் -6: Jerzey kosinskiயின் Being There!

இந்தக் கட்டுரை சுபமங்களா, மார்ச் 1995 இதழில் வெளிவந்த போலிஸ் அமெரிக்கரான எழுத்தாளர் ஜேர்சி கொசின்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலான Being There பற்றிய அறிமுகக் கட்டுரை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. ஜேர்சி கொசின்ஸ்கியின் இன்னுமொரு புகழ்பெற்ற நாவல் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்' (The Painted Birds). இது நவீன அமெரிக்க இலக்கியத்தின் முக்கியதொரு படைப்பாகக் கருதப்படுகிறது.  இரண்டாம் உலக யுத்தக் காலகட்டத்தில் , யூதச் சிறுவனான ஜேர்சி கொசின்ஸ்கி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அலைந்து திரிந்திருக்கின்றார். அக்காலகட்டத்தில் அவரடைந்த அனுபவங்களை மையமாக வைத்து எழுதிய நாவல் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்'. ஜேர்சி கொசின்ஸ்ஜியின் வாழ்வும் தற்கொலையிலேயே முடிந்து போனது சோகமானது. - வ.ந.கி]வாசிப்பும் யோசிப்பும்![ இந்தக் கட்டுரை சுபமங்களா, மார்ச் 1995 இதழில் வெளிவந்த கட்டுரை. ‘போலிஸ் அமெரிக்க’ரான எழுத்தாளர் ஜேர்சி கொசின்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலான Being There பற்றிய அறிமுகக் கட்டுரை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. ஜேர்சி கொசின்ஸ்கியின் இன்னுமொரு புகழ்பெற்ற நாவல் ‘நிறமூட்டப்பட்ட பறவைகள்’ (The Painted Birds). இது நவீன அமெரிக்க இலக்கியத்தின் முக்கியதொரு படைப்பாகக் கருதப்படுகிறது.  இரண்டாம் உலக யுத்தக் காலகட்டத்தில் , யூதச் சிறுவனான ஜேர்சி கொசின்ஸ்கி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அலைந்து திரிந்திருக்கின்றார். அக்காலகட்டத்தில் அவரடைந்த அனுபவங்களை மையமாக வைத்து எழுதிய நாவல் ‘நிறமூட்டப்பட்ட பறவைகள்’. ஜேர்சி கொசின்ஸ்ஜியின் வாழ்வும் தற்கொலையிலேயே முடிந்து போனது சோகமானது. – வ.ந.கி]  அண்மையில் Jerzy kosinski எழுதிய Being There என்ற கைக்கடக்கமான சிறியதொரு நாவலைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. கடுகு சிறிது காரம் பெரிது என்பதற்கொப்ப அளவில் சிறியதானாலும் இந்நாவல் உள்ளடக்கத்தில் கனதியானது. மனிதனைப் பாதிக்கும் நிலைமைகளை ஒருவித கிண்டல் பாணியில் நோக்கி விமர்சிக்கும் வகையிலமைந்த நாவலை ‘சட்டயர்’ (Satire) என்போம். Being There அந்த வகையான நாவல்களில் குறிப்பிடத்தக்கதொன்று. உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் இச்சிறுநாவல் இன்றைய மனிதனைப் பலமாகப் பாதிக்கும் உலக, உள்நாட்டு அரசியல் மற்றும் குறிப்பாகத் தொலைகாட்சி பற்றிப் பலமாகவே விமர்சனத்தை முன்வைக்கின்றது. உருவத்தைப் பொறுத்த வரையில் கிறிஸ்த்தவ தத்துவ சமயநூலான பைபிளினது பாதிப்பு மிக அதிகமாகவே தெரிகின்றது.

Continue Reading →

வாசிப்பும் யோசிப்பும் – 5: சங்கச் செய்யுள் – நண்டுவிடு தூது.

வாசிப்பும் யோசிப்பும்!சங்க காலத்துச் செய்யுள்கள் எப்பொழுதுமே என்னைப் பிரமிப்பில் ஆழ்த்துபவை. ஆறுதலாக அவற்றை அவ்வப்போது வாசித்து அனுபவிப்பதில் எனக்குப் பெரு விருப்புண்டு. பொதுவாக அவை என்னைக் கவர்வதன் காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: அவற்றில் காணப்படும் வளம் நிறைந்த சொற்செறிவு, கூர்ந்த நோக்கு மிக்க இயற்கை மீதான அவதானிப்பு,  படைப்பாற்றல், கற்பனைச் சிறப்பு, மற்றும் அன்றைய கால கட்டச் சமுதாய அமைப்பு பற்றிய தகவல்கள். அண்மையில் வாசித்த சங்ககாலச் செய்யுளொன்று வாசித்தபொழுது என்னை மிகவும் கவர்ந்தது. அதன் மீதான யோசிப்பின் பதிவுகளை சிறிது பகிர்ந்துகொள்ள விழைந்ததின் விளைவே இச்சிந்தனைக்குறிப்புகள்.  இந்தச் செய்யுளினை இயற்றியிருப்பவர்  மதுரைக் கள்ளிற் கடையத்தன்  வெண்ணாகனார். திணை:  நெய்தல். தன் காதலுக்குரிய தலைவனை நீண்ட காலமாகக் காணாத தலைவி, அவனுடன் திரிந்த இடங்களையெல்லாம் சென்று பார்த்து வருந்துகிறாள். அவனைக் காணாததால் ஏற்பட்ட துயர் அவளை வருத்துகிறது. தன் துயரை அவள் தன் காதலனுக்குத் தெரியப்படுத்துவதற்காக அவள் தெரிவு செய்த உயிரினம் ஆச்சரியத்தை விளைவிக்கிறது. நளன் தமயந்திக்கு அன்னத்தைத் தூது விட்டதை நாம் படித்திருக்கின்றோம். வெண்முகிலைத் தூதுவிட்ட தலைவிமாரைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் யாராவது நண்டினைத் தூது விட்டிருக்கின்றார்களா? அது பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இந்தச் செய்யுளில் வரும் தலைவி அதனைத்தான் செய்திருக்கின்றாள். ஆம், நண்டினைத் தூது விடுகின்றாள்.

Continue Reading →

பயனுள்ள மீள்பிரசுரம்: இரவி – இராசன் – சரவணக்குமார் கைது: கருத்துரிமை மீதான காவல்துறை தாக்குதல்

இரவி, இராசன், சரவணக்குமார் ஆகியோர் மீது காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைக் கண்டித்தும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கொடும்பிரிவுகளை எதிர்த்தும் கருத்துரிமையில் அக்கறையுள்ள அனைவரும் கைக்கோக்க வேண்டிய அவசர, அவசியம் எழுந்துள்ளது. கி.வெங்கட்ராமன்‘அராபிய வசந்தம்’ எழுச்சிக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள சர்வாதிகார நாடுகளும், ஏகாதிபத்தியங்களும் சமூக ஊடகத்தின் மீது தங்களது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்திய ஏகாதிபத்தியம் இதற்கான சட்டங்கள் இயற்றியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், அண்மைக் காலத்தில் திருத்தங்கள் செய்து, அடக்குமுறைக்கான தனது ஆயுதங்களை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. இந்திய ஏகாதிபத்தியத்தின் கங்காணி ஆட்சியாளர்கள் காவல்துறையை ஏவி இச்சட்டத்தின் கோரத்தன்மையை சனநாயக சக்திகளுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தை திறனாய்வு செய்து எழுதியதற்காக புதுச்சேரியைச் சேர்ந்த சிறுதொழில் முனைவர் இரவி சீறிதர் என்பவர் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், புதுவை இணையக் குற்றத்துறைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  “கார்த்தி சிதம்பரம் வதேராவை விட அதிகம் சொத்துகளைக் குவித்துவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன” என்று கடந்த 2012 அக்டோபர் 20ஆம் நாள், தனது ட்விட்டர் இணையப் பக்கத்தில், புதுவை இரவி கருத்துப் பதிந்திருக்கிறார். இதன் மீது, கார்த்தி சிதம்பரம் புதுவை காவல்துறைத் தலைவரிடம் மின்னஞ்சல் புகார் அளித்ததன் அடிப்படையில், இரவியை புதுவை காவல்துறையினர் கைது செய்தனர். உடனடியாக, அவருக்கு பிணை கிடைத்தது என்பது ஒரு ஆறுதல்.

Continue Reading →

‘வியர்வையின் ஓவியம்’ – விருது

அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். இலங்கை தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக் குழுவானது, அகில இலங்கை ரீதியில் நடத்திய ‘வியர்வையின் ஓவியம்’ இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான…

Continue Reading →

“இளம் வீரன்” பிருந்தனுக்குத் தேசிய விருது

பிருந்தனின் நினைவாக ரொறன்ரோவில் உள்ள Wharnsby Park இன் பெயர் பிருந்தனைக் கௌரவிக்கும் முகமாக Birunthan Park என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.செல்வன் பிருந்தன் கடந்த வாரம் 12.10.2012 வெள்ளியன்று உயிரையும், தங்களது இழப்புகளையும் பொருட்படுத்தாது மற்றவர்களைக் காத்தற்பொருட்டு துணிச்சலுடன் அருஞ்செயல்களையும் , தியாகங்களையும் கனடிய மண்ணில் புரிந்தவர்களைக் கௌரவிக்கும் 40 ஆவது வருட தேசிய நிகழ்வு கனடிய ஆளுநர் டேவிட் ஜோன்சனின் ஒட்டாவோ “றிடோ” வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. விழாவில் முதலாவாதாகக் கௌரவிக்கபட்டு விருது வழங்கப்பட்டவர்களில் காலம் சென்ற “இளம் வீரன்”  பிருந்தன் முதன்மையாக இருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் ஸ்காபுறோ (கனடா) நகரில் குளிர் நீர் நிறைந்திருந்த ஒரு குளத்தில் மூழ்கிய பாடசாலை நண்பன் ஒருவரை காப்பாற்றுவதற்காகக் குளத்தில் பாய்ந்து தனது உயிரை பலி கொடுத்த செல்வன் பிருந்தன் முரளிதரனை கௌரவிக்கும் வகையில் கனடாவின் ஆளுனர் நாயகம் சிறப்புப் பதக்கம் ஒன்றை அவரது பெற்றோரிடம் கையளித்தார். பிருந்தனது தந்தையான நடராஜா முரளிதரனும் , தாயாரான சத்தியசிறியும் (றஞ்சி) நிகழ்வில் பங்குபற்றி பிருந்தன் சார்பில் விருதினைப் பெற்றுக் கொண்டார்கள்.

Continue Reading →