வாசகர் கடிதங்கள்!

வாசகர் கடிதங்கள்![பதிவுகள் வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை  ngiri2704@rogers.com  என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். – ஆசிரியர் -]  

From: thiyagarajan solai
To: ngiri2704@rogers.com
Sent: Tuesday, January 08, 2013 4:42 AM
Subject: மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா

ஆசிரியர்-பதிவுகள்
அனபுடையீர், வணக்கம்
எங்கள் நாட்டில் ஜனவரி 12 தொடங்கி 14 வரை நடைபெறவுள்ள மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன் வாய்ப்பாக அமையுமானால் மியன்மா நாட்டிற்கு பயணம் வரலாமே!
உங்கள் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். என்றும் தமிழுடன்,
சோலை.தியாகராஜன்
Yangon,Myanmar
0095 943042105.

[நண்பர் சோலை தியாகராஜனுக்கு, தகவலுக்கு நன்றி. இது பற்றிப் பதிவுகளிலும் அறிவிப்போம். தங்களது அழைப்புக்கும் நன்றி.  மியனமாவிலிருந்து தொடர்பு கொண்டிருக்கின்றீர்கள். மகிழ்ச்சியாகவிருக்கிறது.  அங்கு உங்களது பணி தொடர வாழ்த்துகள். மியான்மாவின் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய கட்டுரையொன்றினை பதிவுகளுக்கு அனுப்பி வையுங்கள். தற்போது பதிவுகளில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் கலை/இலக்கிய வரலாறு பற்றிய கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மியான்மாவின் தமிழ் இலக்கிய வரலாறு பற்றியும் அறிய ஆவலாகவுள்ளோம். – ஆசிரியர், பதிவுகள்-]

ஞானம் 150 வது சிறப்பிதழ் அறிமுகநிகழ்வு!

– ஞாயிறு, டிசம்பர் 30, 2012 – உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் ‘ஞானம்’ 150 வது சிறப்பிதழுக்கான அறிமுகநிகழ்வு 30.12.2012 ஞாயிறு காலை 9.30…

Continue Reading →

புதிய பண்பாட்டுத் தளத்தின் கருத்தாடல் அரங்கு

கருத்தாடல் அரங்கு என்ற நிகழ்வை புதிய பண்பாட்டுக்கான வெகுஜன தளம் ஒழுங்கமைத்துள்ளது. இந்நிகழ்வு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 06- 01-2013 அன்று மாலை: 4.00 மணிக்கு கலாநிதி…

Continue Reading →

‘குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்’ ஹைக்கூ நூல் வெளியீடும், சென்னைப்புத்தகக் கண்காட்சியும்!

'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூல் வெளியீடும், சென்னைப்புத்தகக் கண்காட்சியும்!அனைவருக்கும் வணக்கம், வரும் ஜனவரி 3 2012 அன்று திருவல்லிக்கேணி பெரியதேருவில் உள்ள நூலகத்தில் என்னுடைய இரண்டாவது நூல் (முதல் ஹைக்கூ நூல்) ‘குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்’ வெளியிடப்பட உள்ளது.  நூலின் பெயர்: ‘குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்’; ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்;  விலை: ரூ.60;  பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்;  நூலின் வகை: ஹைக்கூ கவிதைகள். முழுக்க முழுக்க குழந்தைகளைப் பற்றிய ஹைக்கூ கவிதைகள் மட்டுமே மட்டுமே இந்த நூலில் இடம்பெறுகின்றன.  வாங்கிப் படியுங்கள். உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள். கவிதை நூல் வெளிவரப்போகும் விடயத்தைத் தெரியப்படுத்துங்கள். அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.  மேலும் என்னுடைய கீழ்க்கண்ட இரண்டு கவிதை நூல்கள் சென்னைப் புத்தகத் திருவிழாவில் இருவாச்சி இலக்கியத் துறைமுகம் சார்பில் கடை எண் 554 ல் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

Continue Reading →

நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல்.

நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல்.சென்ற ஞாயிற்றுக்கிழமை 23-12-2012 காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி கனடா பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல் ஸ்காபரோ, சீவெல் வீதியில் உள்ள தேவாலய மண்டபத்தில் மாலை 6:00 மணியளவில் நடைபெற்றது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், கல்லூரிக் கீதம் ஆகியன இடம் பெற்றன. அவற்றைத் தொடர்ந்து எம்மினத்தின் விடுதலைக்காகத் தம்முயிர் தந்தவர்களுக்காக ஒருநிமிட மௌன அஞ்சலி இடம் பெற்றது. அடுத்து சிறுவர் முதல் பெரியோர் வரை பங்குபற்றிய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. முன்னாள் நடேஸ்வராக் கல்லூரி ஆசிரியை எழுத்தாளர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம், கல்லூரி ஆரம்பமான காலத்து வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு விரிவாக எடுத்துச் சொன்னார்.

Continue Reading →

இரோம் ஷர்மிளா (ஓர் உண்மை அமைதிப்போராளி).

இரோம் ஷர்மிளா (ஒரு உண்மை அமைதி போராளி). உண்ணா விரதம் என்பது இன்று அரசியல் ஆதாயத்திற்க்காக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாக தான் பயன்படுகிறது என்பது கசப்பான ஒரு உண்மை, உலக அளவில் எங்கும் காணாத முன்று மணி நேர உண்ணா விரதம், அதுவும் சகல வசதிகளுடன்,….தினம் தினம் ஒரு உண்ணா விரதங்கள் ஆனால் இவை எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம்……! ஏழு நாள்கள் உண்ணாவிரதம், பன்னிரண்டு நாள்கள் உண்ணாவிரதம் என்று  ஆரம்பிப்பதும் பின் காலபோக்கில் அவை மறைந்து போவதும் வாடிக்கையாகி விட்டன………. ஒரு பக்கம் அண்ணா ஹசாரேயின் 12 நாள்கள் உண்ணா விரதத்திற்கு உலக அளவில் அதரவு தெரிவிப்பதும், மற்றொரு பக்கம் மணிப்பூர் மாநிலத்தில் இரோம் ஷர்மிளாவின்  12 வருட உண்ணா விரதத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாததும்  வியப்பு அளிக்கிறது…    யார் இந்த இரோம் ஷர்மிளா? எதற்காக இவர் 12 ஆண்டுகளாக போராடுகிறார்?  இவர் அருணாச்சல் பிரதேஷம், அசாம், மணிப்பூர், மேகாலயா,  மிசோரம் ,நாகலாந்து ,திரிபுரா ஆகிய மாநிலங்களில்  நடைமுறையில்  உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் [Armed Forces (Special Powers Act 1958)] திரும்ப பெற வேண்டும் என்பது தான் இவரின் ஒரே கோரிக்கை…. 

Continue Reading →

என் வியப்பும் சந்தோஷங்களும்

கமலா தேவி அரவிந்தன்- வெங்கட் சாமிநாதன் -கமலா தேவி அரவிந்தன் பேசும் மொழி மலையாளம்.  மூன்று தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை வழித் தாத்தா பாட்டி கொல்லத்திலிருந்து வந்தவரகள். தாய்வழித் தாத்தா பாட்டி பாலக்காட்டின் ஒட்டப் பாலத்திலிருந்து வந்தவர்கள். கமலா தேவி குட்டிப் பெண்ணாக ஆரம்பப் பள்ளியிலிருந்து கற்றது தமிழ். வாழ்க்கை முழுதும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும். கணவர் மலையாளி. பிரமிப்பாகவும் இருக்கிறது. தொடக்க காலத்தில் மலையாளத்தில் எழுதினாலும் பின்னர் தமிழிலும் எழுதத் தொடங்கி இப்போது சிறுகதைகள், நாவல், ரேடியோ நாடகங்கள் இத்யாதி இத்யாதி என 160 சொச்சம் புத்தகங்கள் (எண்ணிக்கையை, ஒட்டு மொத்தமாகச்  சொல்லி மிகக் குறைத்துச்  சொல்லி விட்டேனோ, கமலாதேவி?) வெளியாகியுள்ளன. இப்போது நான் இது பற்றி எழுதும் இடைவேளையில் அவர் இன்னும் ஒன்றிரண்டு புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கக் கூடும். எழுதி முடித்திருக்கும் வேளையில் எண்ணிக்கை இன்னும் ஒன்றிரண்டு கூடியிருக்கக் கூடும் சாத்தியம் உண்டு. பிரமிப்பு தான எனக்கு, ஆனால் எனக்கு அவர் பெயர் கேட்டதும் எழுதியதைப் படித்ததும் வெகு சமீபத்தில், வல்லமை என்னும் தமிழ் இணையத்திலிருந்து தான் தமிழ் முரசு, போன்ற மலேசிய சிங்கப்பூர்  பத்திரிகைகளில் அவர் நிறைய எழுதி பரிசுகளும் பெற்றிருக்கிறார்.   அவர் நம்மூர் கணையாழியிலும்,  அமெரிக்க  தென்றல் பத்திரிகையிலும்  எழுதியிருப்பதைத் தெரிந்து கொண்டதெல்லாம் இருக்கட்டும். அதிகம் இல்லை. நூற்றுக் கணக்கில் எழுதியவரைப் பற்றித் தெரிந்து கொண்டது   இவ்வளவு தான் என்றால் அது பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயம் இல்லை. [‘பதிவுக’ளில் 2009 -2012 காலப்பகுதியில் கமலாதேவி அரவிந்தனின் நுவல், நுகத்தடி, மின்மினி, முகடுகள், உற்றுழி, தாகம், புரை, சூரிய கிரகணத்தெரு, ஒரு நாள் ஒரு பொழுது, நாசிலெமாக் மற்றும் திரிபு எனப் பதினொரு சிறுகதைகள் வெளிவந்திருப்பதை மறந்து விட்டீர்களே திரு.வெ.சா. அவர்களே! – ஆசிரியர், பதிவுகள்]

Continue Reading →

காலச்சுவடு.காம்: நாவல் பகுதி – ஒரு நூறாண்டுத் தனிமை

மார்கெஸ்: மகாகவி, மாமுனிவர், ஒப்பற்ற ரசவாதி

மார்கெஸ் நாவல்: ஒரு நூறாண்டுத் தனிமை புனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’ வடிவில் கதை சொல்லி வருபவரிடையே அல்லது இடையிடையே மிகையான அல்லது அறிவுக்குப் பொருந்தாத நிகழ்வுகளைச் சேர்த்து வழங்குதல், புத்திலக்கிய மரபு ஒன்றை உருவாக்கியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளில் ஜெர்மானியப் புதினங்களில் இப்போக்கு காணப்பட்டது. ஆனால் இன்று மத்திய அல்லது லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த புகழ்பூத்த நாவலாசிரியர்கள், குறிப்பாக, ஆஸ்துரியாஸ் (Miguel Angel Asturias), கார்பென்டியர் (Alejo Carpentier), மார்கெஸ் (Gabriel Garcia Marquez) ஆகியோரின் படைப்புகளில்தான் இந்த அடையாளங்கள் சிறப்பாக, பாங்குடன் காணப்படுகின்றன. மார்கெஸின் ஒரு நூறாண்டுத் தனிமை (Cien anos de soledad)யில் மாயப் புறவாய்மை (Magic அல்லது Magical realism) சிறப்பிடம் பெறுகிறது. சான்றாக, இந்தப் புதினத்தில் ஒரு பாத்திரம், தோய்த்தெடுத்த துணியை வரிசையில் உலர்த்தும்போது வானுலகம் நோக்கிப் புறப்படும்! இந்த ‘மாயப் புற வாய்மை’ எனும் சொல் அல்லது தொடர், வேறுபட்ட பண்பாடுகளைப் புலப்படுத்தும் படைப்புகளைத் தொட்டு விரிகிறது. அதாவது, ‘எதார்த்தம்’ (புறவாய்மை) எனும் கூட்டை உடைத்து வெளியே வந்து பழங்கதை (Fable), மக்கள் மரபுக்கதை (Folktale) இல்பொருட் கற்பனை (Myth) ஆகியவற்றின் உயிராற்றல்களிலிருந்து ஆக்கம் பெற்று அதே பொழுதில் நிகழ்காலச் சமூகத்துக்கு இயைந்ததொரு கூற்றை உள்ளார்ந்த கருவாக இறுத்துதல் ஆகும்.

Continue Reading →

மீள்பிரசுரம்: தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…

கவிஞர் தேவதேவன்கவிதை ரசனை அந்தரங்கமானது. சொல்லுக்கும் வாசகனின் அகமனதிற்கும் இடையேயான மர்மமான, முடிவற்ற உறவின் மூலம் இயங்குவது. அதைக் கற்றுக் கொடுக்க முடியாது. ஓர் எல்லைவரை பகிர்வதும் சாத்தியமில்லை. அதே சமயம் ஒருவன் ஒரு கவிதையை ரசிக்கும் முறையைத் தன்னுடைய ரசனைமுறையைத் தானாக கண்டடைய முடியும். ஒவ்வொரு ஆழ்மனமும் தனித்தன்மை உடையது. எனினும் ஒருவகையில் அனைத்தும் ஒன்றுதான். ஒரு கவிதைக்கு நான் என்ன அர்த்தத்தைத் தருகிறேன் என்பது இன்னொருவருக்குச் சற்றும் முக்கியமில்லை. ஆனால் அந்த அர்த்தத்தை நான் எப்படி வந்தடைந்தேன் என்பது உதவிகரமானது. இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. சாதாரணமாகக் கவிதை பற்றிப்பேசும் விமரிசகர்கள் அதன் குறைந்தபட்ச சாத்தியங்களைப்பற்றி மட்டுமே பேசுவார்கள். காரணம் அதுவே புறவயமானது என அவர்கள் நம்புகிறார்கள். கவிதையில் எதுவுமே புறவயமானதல்ல. எனவே ஒரு கவிதையிலிருந்து நான் போகக்கூடிய – அதாவது எழுதக்கூடிய அளவுக்குப் போகக்கூடிய – அதிகபட்சத்தை முன் வைப்பதே உதவிகரமானது.

Continue Reading →

ஜெயந்தி சங்கரின் ‘திரிந்தலையும் திணைகள்’!

சிங்கப்பூரின் பிரபல எழுத்தாளர்களிலொருவரான ஜெயந்தி சங்கரின் புதிய நாவலான ‘திரிந்தலையும் திணைகள்’ தமிழகத்திலிருந்து சந்தியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளதென்ற தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். சென்னையில் ஜனவரி 2013இல்…

Continue Reading →