சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது யமுனா ராஜேந்திரனின் அரபுப் புரட்சி : மக்கள் திரள் அரசியல்

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது யமுனா ராஜேந்திரனின் அரபுப் புரட்சி : மக்கள் திரள் அரசியல்யமுனா ராஜேந்திரன்இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி ஆகும். ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபில் ஜனநாயகம் என்பது சாத்தியமில்லை என்பவர்களை மறுத்தபடி, அரபு உலகெங்கிலும் எழுந்த ஜனநாயகத்திற்கான வெகுமக்கள் திரள் எழுச்சி அது. மரபார்ந்த கருத்தியல் வரையறைகளைத் தாண்டி, காலனியச் சுமைகளை தமதுதோள்களில் இருந்து உதறியபடி, அரபு நிலப்படத்தை மறுவரையறை செய்த மக்கள் எழுச்சி அது. இஸ்லாம் என்பது வன்முறை வாழ்முறை என்பதனை மறுத்து, வன்முறையல்லாத புதிய மக்கள்திரள் போராட்டமுறை குறித்த தேடலை உலகெங்கிலும் எழுப்பியது அரபுப் புரட்சியின் அனுபவங்கள். இன்றைய உலகில் அரபுப் புரட்சியின் அரசியல் முக்கியத்துவத்தையும், புதிய போராட்ட வடிவங்களுக்கான அதனது தேடலையும் ஆவணப்படுத்தும் முகமாக எழுதப்பட்ட கட்டுரைகள் இங்கு நூல் வடிவம் பெற்றுள்ளன.

Continue Reading →

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது யமுனா ராஜேந்திரனின் ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது யமுனா ராஜேந்திரனின் ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்யமுனா ராஜேந்திரன்ஆயுதப் போராட்டம் விடுதலை அரசியலின் உச்சகட்ட புரட்சிகர வடிவம் எனக் கருதப்படுகிறது. மானுட மீட்சிக்காகத் தன்னை இழத்தல் எனும் உன்னதம் இங்கு நடைமுறையாகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் என்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் அனுபவங்களுடனும் நினைவுகளுடனும் கலந்துவிட்டிருக்கிறது. தமிழ் அரசியல், கலாச்சாரம், இலக்கியம், தத்துவம், இதுவரைத்திய தமிழ் இடதுசாரி மரபு அனைத்தையும் ஈழ விடுதலைப் போராட்டம் தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. ஈழப் போராட்டம் நந்திக்கடலில் வஞ்சகமாக அழிக்கப்பட்டிருந்தாலும், அதனது வரலாற்றுப் பிழைகளையும் தாண்டி, மானுட சுயதரிசனங்களையும் அரசியல் சுயவிமர்சனங்களையும் அது எழுப்பியபடியே இருக்கிறது. உலக தேசிய விடுதலைப் போராட்ட மரபின் பின்னணியில் ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வு செய்யும் இக்கட்டுரைகள், இன்றைய சர்வதேசிய அரசியல் சூழலில் எதிர்ப்பு அரசியலின் எதிர்கால வடிவம் எத்தகையதாக இருக்க முடியும் எனும் தேடலையும் மேற்கொள்கிறது. தமிழகம்  புகலிடம் எனும் முப்பெரும் பிரதேசங்கள் சார்ந்த எதிர்ப்பு அரசியலின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, பொதுவான எதிர்ப்பு அரசியலின் எதிர்காலத்துக்குமான விமர்சன அரசியலை அவாவியே இக்கட்டுரைத் தொகுப்பு உங்களின் முன் வருகிறது.

Continue Reading →

காற்றுவெளி இணையத்தில் …

காற்றுவெளி இணையத்தில்…. அன்புடையீர். வணக்கம். தை மாத காற்றுவெளி தங்கள் பார்வைக்கு வந்துள்ளது.மாசி மாத இதழுக்குரிய படைப்புக்களை அனுப்பி உதவுங்கள். கவிதை, சிறுகதை, குறு நாடகம், நூல்…

Continue Reading →

40வது இலக்கியச் சந்திப்பு- இலண்டனில்….

அன்பின் நண்பர்களே! 40வது இலக்கியச் சந்திப்பு இலண்டனில்- 06-07 ஏப்ரல் 2013ம் தினங்களில் நடைபெறவுள்ளது என்பதனை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 40வது இலக்கிய சந்திப்பினை நாடாத்துவதற்காக திட்டமிடல்…

Continue Reading →