தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு கடைசி வரை போராடியவர் தந்தை செல்வநாயகம்!

(தந்தை செல்வநாயகம் அவர்கள் மார்ச் 31, 1898 இல் பிறந்தவர்.  அன்னாரது 115 ஆண்டு பிறந்த நாள் நினைவாக இக் கட்டுரை வெளியாகிறது)

தந்தை செல்வநாயகம்தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு.  இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) சாத்வீகப் போராட்டம். மேலும் 26 ஆண்டுகள் (1983 – 2009) ஆயுதப் போராட்டம். இப்போது கடந்த 3 ஆண்டுகளாக சாத்வீகப் போராட்டம்.  தொடக்கப் புள்ளியில் மீண்டும் வந்து நிற்கிறோம். சாத்வீகப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் தந்தை செல்வநாயகம். 1948 இல் டி.எஸ். சேனநாயக்காவால் கொண்டு வந்து நிறேவேற்றப்பட்ட 18 ஆம் இலக்கக் குடியுரிமை சட்டம் அதே ஆண்டு நொவெம்பர் மாதம் 15 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தீவிரமாக எதிர்த்துப் பேசியவர் தந்தை செல்வநாயகம். எதிர்த்து வாக்களித்தவர். அப்போது தந்தை செல்வநாயகம் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார்.  அதன் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை. ஆனால் எதிர்த்து வாக்களித்திருந்தார்.  1947 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் அய்க்கிய தேசியக் கட்சி வேட்பாளர் அருணாசலம் மகாதேவாவை 9,000 அதிகப்படி வாக்குகளால் தோற்கடித்து வெற்றி பெற்றவர் பொன்னம்பலம். “கந்தசாமியைக் கொன்ற துரோகி மகாதேவா ஒழிக” என்பது அவரது தேர்தல் முழக்கமாக இருந்தது.  ஆனால் 1948  இல் அதே அய்க்கிய கட்சியின் தலைவர் டி.எஸ். சேனநாயக்காவோடு அமைச்சர் பதவிக்குப் பேரம் பேசினார்.  பத்து இலட்சம் மலையகத் தமிழர்களது குடியுரிமை பறிக்கப்படுவதைப் பற்றி அவர் கவலைப் படவில்லை.  அவர்களது வாக்குரிமை பறிபோவதைப் பற்றி அவர் எண்ணிப்பார்க்கவில்லை. தமிழர்களது வாக்குப் பலத்தை சரிபாதியாகக் குறைத்த குடியுரிமை சட்டத்தின் விளைவையோ அல்லது அதனைக் கொண்டு வந்து நிறைவேற்றிய டி.எஸ. சேனநாயக்காவின் கபட நோக்கத்தையோ பொன்னம்பலம் அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது.  ஆனால் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்ட பொன்னம்பலம் அந்தச் சட்டத்தின் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட வில்லை.

Continue Reading →

சனவரி 30, 2013: ஊடக அறிக்கை – ஜேர்மன் தலைநகர் பேர்லின் மாநகரில் நடைபெற்ற கலந்துரையாடல்

சனவரி 30, 2013: ஊடக அறிக்கை – ஜேர்மன் தலைநகர் பேர்லின் மாநகரில் நடைபெற்ற கலந்துரையாடல்எமது இனத்தையும், எமது பாரம்பரிய பிரதேசத்தையும் அழிக்கின்ற சிறீலங்கா அரசினால்  நிறைவேற்றப்பட்டுவரும் நிகழ்ச்சி நிரலை தடுத்து நிறுத்தும் முகமாகவும், தமிழ் மக்களுடைய அபிலாசையை அடிப்படையாகக் கொண்ட அரசியல்த் தீர்வினை ஒருங்கிணைந்து அடையும் நோக்குடனும் ஆக்கபூர்வமான தொடர்ச்சியாக நடைபெறுகின்ற கலந்துரையாடல் ஜேர்மனியின் தலைநகரமான பேர்லின் மாநகரில் கடந்த 26, 27 திகதிகளில் நடைபெற்றது. தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக் கலந்துரையாடல் நவம்பர் 2012 இல் ஆரம்பமானது. இக் கலந்துரையாடல்களில்,  தாயகத்திலிருக்கும் அரசியல் அமைப்புக்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புää தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மக்கள் அமைப்பான தமிழ் சிவில் சமூகம்,  மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்களது அமைப்புக்களான அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை,  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்,  உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.

Continue Reading →

மூன்றாம் மரபு- இலக்கிய மாநாடு !

மூன்றாம் மரபு- இலக்கிய மாநாடு !”மூன்றாம் மரபு” இலக்கிய மாநாடு 13: பாரதி இலக்கிய சங்கமும் காளீஸ்வரி கல்லூரியும் இணைந்து நடத்தும் ”மூன்றாம் மரபு”  இலக்கிய மாநாடு 13; இடம் காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி; நாள்:  பிரவரி 4, 5 திங்கள் செவ்வாய்; 2 நாட்கள், 4 அரங்குகள், 20 அமர்வுகள் 40 படைப்பாளிகள், 50 ஆய்வுக் கட்டுரைகள்’ தமிழ் மட்டுமல்லாது தென்னிந்தியக் கவிஞர்கள். மூன்றாம் மரபு- படைப்பு வெளி; மூன்றாம் மரபு- ஊடகத் தடங்கள்; மூன்றாம் மரபு- விவாதக் களம்; மூன்றாம் மரபு- கவிதைச் சிந்தனைகள்; கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிறுகதை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நாவலாசிரியர்கள், விமரிசகர்கள் நாடக இயக்குநர்கள், ஓவியர்கள், ஆய்வாளர்கள்,வாசக அன்பர்கள்; நேற்றைய தடங்கள், இன்றைய கேள்விகள், நாளைய எதிர்பார்ப்புகள், வரை படங்கள் அழித்த இலக்கியங்கள், பெண்ணின் பெருவெளிகள், நூல் அறிமுகங்கள், கலந்துரையாடல்கள், கலைகளின் வாசிப்பில் வாழ்வு, தெலுங்கு மலையாளம், கன்னடக் கவிதைகளின் போக்கும் கவிஞர்களின் தடங்களும், கேள்வியும் விவாதமுமாக மாணவர்கள்…..இன்னும் இன்னமுமாக…

Continue Reading →

கவிஞ‌ர் நெப்போலிய‌னின் காத‌ல் க‌டித‌ங்க‌ள் 2013

கவிஞ‌ர் நெப்போலிய‌னின் காத‌ல் க‌டித‌ங்க‌ள் 2013க‌விஞ‌ர் திரைப்ப‌ட‌ப்பாட‌லாசிரிய‌ர் நெப்போலிய‌னின் க‌விதை , சிங்க‌ப்பூர் தேசிய‌ க‌லைக‌ள் ம‌ன்ற‌ ஆத‌ர‌வுட‌ன் இய‌ங்கி வ‌ரும் தி ச‌ப் ஸ்டேஷ‌ன் ‍ ல‌வ் லெட்ட‌ர்ஸ் ப்ராஜெக்ட்ல் ( 2013 ) இட‌ம் பெற்றுள்ள‌து. காத‌லின் ( ந‌ட்பின் சினேக‌த்தின் ) பிரிவின் வ‌லியின் சுவையைச் சொல்லும் வ‌ரிக‌ளைக் க‌ருப்பொருளாய் கொண்ட‌ சிங்க‌ப்பூரின் 12 க‌விஞ‌ர்க‌ளின் க‌விதைக‌ள் இந்த‌ வ‌ருட‌த் தொகுப்பில் இட‌ம் பெற்றுள்ள‌ன‌. சீன‌ம், ம‌லாய், ஆங்கில‌ம், த‌மிழ் என‌ நான்கு மொழிக‌ளிலும் அத‌ன் ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்புட‌ன் இட‌ம் பெற்றுள்ள‌து . 2010ம் ஆண்டு முத‌ல் ந‌டைபெற்று வ‌ரும் இந்த‌ ப்ராஜெக்ட்ல் ஒவ்வொரு மாத‌மும் புக‌ழ்பெற்ற‌ சிங்க‌ப்பூர் க‌விஞ‌ரும் அவ‌ரின் க‌விதையும் ச‌ப்ஸ்டேஷ‌ன் ல‌வ் லெட்ட‌ர்ஸ் ப்ராஜெக்ட் தொகுப்பில் இட‌ம் பெறுவ‌துட‌ன் , இணைய‌ப் ப‌க்க‌த்திலும் வெளியிட‌ப்ப‌டும். அது ம‌ட்டும‌ன்றி அழ‌கிய‌ ஓவிய‌த்துட‌ன் வ‌ண்ண‌ போஸ்ட் கார்டுக‌ளாக‌ ஆர்மினிய‌ன் சாலையில் அமைந்திருக்கும் ச‌ப் ஸ்டேஷ‌ன் அலுவ‌ல‌க‌த்திலும், சிங்க‌ப்பூரின் பிர‌ப‌ல‌ புத்த‌க‌க் க‌டைக‌ளிலும் பொதும‌க்க‌ளுக்கு இல‌வ‌ச‌மாக‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். இதுவ‌ரை இந்த‌த் தொகுப்பில் இட‌ம் பெற்றுள்ள‌ மூன்று த‌மிழ் க‌விதைக‌ளில் க‌விஞ‌ர் நெப்போலிய‌னின் க‌விதையும் ஒன்று என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. ம‌ற்ற‌ இர‌ண்டும் சிங்க‌ப்பூரின் பிர‌ப‌ல‌ ந‌வீன‌ எழுத்தாளரும் ப‌டைப்பாள‌ருமான‌ இள‌ங்கோவ‌ன் ம‌ற்றும் த‌மிழ்முர‌சு ஞாயிறு ப‌திப்பின் ஆசிரிய‌ரும் சிங்கையின் முற்போக்கு க‌விஞ‌ருமான‌ ல‌தா அவ‌ர்க‌ளுடைய‌து.

Continue Reading →