உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் நூலகர் என். செல்வராஜா அவர்களுடனான சந்திப்பு 20.01.2013 ஞாயிறு காலை 10.00 மணிக்கு யா/நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. உயில் செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய சு. குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தொடக்கவுரையை ‘நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் எஸ்.தனபாலசிங்கம் நிகழ்த்தினார். தொடர்ந்து நூலகர் என். செல்வராஜா உரை நிகழ்த்தினார். தனது உரையில் நூல்தேட்டம் தொகுதிகள் பற்றியும், ஆவணப்படுத்தலில் ஈடுபடுபவர்கள் எதிர்கொள்ளும் சுமைகள் பற்றியும், இவை பற்றி ஈழத்துப் படைப்புலகமோ நூலகங்களே பெரியளவில் கரிசனை கொள்ளாமல் இருப்பதன் துர்ப்பாக்கிய நிலை பற்றியும், தனது அனுபவங்களினூடாக எடுத்துரைத்தார். நிகழ்வுக்கு வருகை தந்த எழுத்தாளர்கள் ஆர்வலர்கள் பற்றிய அறிமுகமும் இடம்பெற்றது.
(கடந்த தை முதல் நாளன்று (சனவரி 14) தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருவள்ளுவர் பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழாவில் திரு கந்தர் சிவநாதன் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார். திரு கந்தர் சிவநாதன் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கணிதம் அறிவியல் ஆகிய துறைகளில் இளங்கலை (சிறப்பு) பட்டத்தையும் அமெரிக்காவிலுள்ள ஒறிக்கன் பல்கலைக் கழகத்தில் முதுகலை (சிறப்பு) பட்டத்தையும் பெற்றவர். இவர் தாயகத்தில் ஆசிரியர் ஆகவும், கணித விரிவுரையாளர் ஆகவும் யாழ் பல்கலைக் கழகப் பதிவாளர் ஆகவும் இணை வட்டார கல்விப்பணிப்பாளர் ஆகவும் பணியாற்றியவர். இன்றைய உலகின் காலங்காட்டி மற்றும் அதிசய வானில் ஒரு பஞ்சாங்க உண்மை விளக்கம் என்ற இரண்டு அறிவியல் நூல்களை எழுதி வெளியிட்டவர். இவர் தாயக மக்களது வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்ப தன்னால் ஆன பங்களிப்பை நல்கி வருகிற கொடையாளர். தமிழின உணர்வாளர். பொங்கல் புத்தாண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)