[எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் உடல்ரீதியான குறைபாட்டை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்திருந்த தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பும் அதன் தலைவரான ஜெய்னுலாபிதீனின் அந்த அறிக்கையினை இணையத்தில் வாசிததோம். மதமொன்றினைப் பிரதிநிதிப்படுத்துபவர் மற்றவர்களுக்கு முன்மாதிரி இருக்க வேண்டும். அவ்விதமாக இருக்க வேண்டிய ஒருவரிடமிருந்து இவ்விதமாக ஒருவரின் உடல்ரீதியிலான குறைபாட்டினைச் சுட்டிக்காட்டி, வன்முறையினைத் தூண்டும் வகையிலான அறிக்கை வெளிவந்திருப்பது துரதிருஷட்டமானது. மனிதரின் பேச்சுரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சட்டங்களைக் கொண்ட மண்ணில் வாழ்ந்துகொண்டு, ஒருவரின் கருத்து தனக்குப் பிடிக்கவில்லையென்பதற்காக இவ்விதம் கீழத்தரமாக அறிக்கை வெளியிட்டிருப்பது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. தர்க்கத்தை தர்க்கரீதியில் எதிர்கொள்வதே சரியான அணுகுமுறை. இது பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அறிக்கை ஆகியன ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றன. – பதிவுகள் –
“ஒருவரை ஒரு நாட்டிலிருந்து வெளியேற்றி விடலாம். ஆனால் அவருள் உள்ள நாட்டை(நாட்டுப்பற்றை-உணர்வை) வெளியேகொண்டு வரமுடியாது.” வெளிநாடு சென்றாலும் மண்வாசனை மாறாது எனச் சுருக்கமாகச் சொல்லலாம். சிகாகோ தமிழ் கத்தோலிக்கர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஒரு கத்தோலிக்கத் திருப்பலியுடன் பொங்கலைக் கொண்டாடுவதற்காக சன. 20ம்தேதி 2013 அன்று குழுமியபோது மேற் குறிப்பிட்ட வாசகங்கள் சாலப் பொருந்துவதாக இருந்தது. தமிழ் நாட்டிலிருந்து பத்தாயிரம் மைல் தொலைவில் இருக்கிறோம். ஆனால் தமிழும் செழுமையான நமது மரபுகளும் பண்பாடும் நாங்கள் அமெரிக்காவிலிருந்தாலும் நாங்கள் யார் என்ற அடையாளத்தின் ஒரு பகுதியாக உள்ளன. நமது தமிழ் பாரம்பரியத்தையும் கத்தோலிக்கர் என்ற நம்பிக்கையையும் பொங்கல் திருப்பலியோடு கொண்டாட ஒரே கடவுளின் தமிழ்த் தாயின் பிள்ளைகளாய் சேர்ந்து வந்தோம். எங்களின் ஆன்ம வழிகாட்டியும் தலைவருமாக உள்ள அருட்திரு. பெஞ்சமின் சின்னப்பன் எங்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றினார்.