குளோபல் தமிழ்ச்செய்தி: சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவந்துள்ள தீபச்செல்வனின் மூன்று நூல்கள்

எழுத்தாளர் தீபச்செல்வன்ஈழத்து கவிஞரும் ஊடகவியலாளரும் குளோபல் தமிழ்செய்திகளின் எழுத்தாளருமான தீபச்செல்வனின் மூன்று புத்தகங்கள் தமிழகத்தில் சென்னையில் தற்பொழுது நடைபெற்று வரும் 36ஆவது சென்னைப் புத்தகக்கண்காட்சியில் வெளிவந்துள்ளன.  ஈழத்து மக்களின்பிரச்சினைகளைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் முக்கியத்துவம் கொண்டவையாக அமைந்துள்ளன.

கிளிநொச்சி – போர் தின்ற நகரம்
தனது சொந்த நகரான கிளிநொச்சியின் யுத்தத்திற்குப் பின்பானஅழிவு நிலையை உண்மையின் பதிவுகளாக குளோபல் தமிழ்செய்திகள்  இணையத்தில் தீபச்செல்வன் எழுதியிருந்தார். அவ்வாறு, கிளிநொச்சியில் சந்தித்த மனிதர்களையும் சம்பவங்களையும் பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதிய பதிவுகள் தொகுக்கப்பட்டு இப்பொழுது ‘எழுநா’ வெளியீடாக நூலாக்கப்பட்டுள்ளது.

Continue Reading →

மூத்த எழுத்தாளராகக் கௌரவம் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களுக்கான பாராட்டுரை

மூத்த எழுத்தாளராகக் கௌரவம் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களுக்கான பாராட்டுரைஇந்த மாலைப்பொழுது மிக இனியதாக இருக்கிறது. இப்பொழுது இம் மேடையில் நிற்பது அதை விட மகிழ்ச்சியாக இருக்கிறது. பாராட்டும் பெறும் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களை விட, பாராட்டப் புறப்பட்ட நான் களிப்பில் மிதந்து நிற்கிறேன். பாராட்டுகள் அவருக்கு ஒரு பொருட்டல்ல என்பது மட்டும் காரணமல்ல. ஈழத்தின் மிகச் சிறந்த ஒரு எழுத்தாளருக்கு பாராட்டுரை வழங்கக் கிடைத்த இந்த வாய்ப்பானது நோயாடும், சீழோடும்; பிணியோடும் நிதம் கலந்தலையும் எனக்கு, பூவோடு கூடிய நார்போன்று, இவர் அருகே நிற்பதே பெருமை வீச்சதை தருகிறது. இந்த வாய்ப்பைத் தந்த தகவம் அமைப்பினருக்கு நன்றி. எழுத்துலகில் அவர் சாதாரணர் அல்ல. பூனையையும் எலியையும் வழுக வழுகப் பிடித்துவிட்டு இமயமலை உச்சியில் ஏறிநின்று, மார்தட்டி, கைஉயர்த்தி இருவிரல் சுட்டி, அது தன் வெற்றியெனத் தாமே பறைசாற்றுபவர்கள் இடையே இவர் வித்தியாசமானவர். அத்தகையோர் பலர் எழுத்துலகில் இருக்கிறார்கள். காலத்திற்கும் தருணத்திற்கு ஏற்ப குயளவ குழழன போலக் கதைகட்டிச் சுடச்சுடப் பரிமாறும் எழுத்தாளர்கள் அவர்கள். இவர் அவற்றில் சேர்த்தியல்ல. அனுபவங்களோடு கூடியவை இவரது படைப்புகள். இரை மீட்டி, மீள மீள அரைத்து, மனத்தில் செரிமானமான பின் எழுத்தில் வந்து யதார்த்தமாக வீழ்பவை.

Continue Reading →

பொங்கல் கவிதை: ‘இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று’ பொங்கல் செய்வோம்; களிப்போம்.

'இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று'  பொங்கல் செய்வோம்; களிப்போம்.

உலகப் பந்தின் திக்குக ளெங்கும்
பரந்து வாழும் தமிழர் வாழ்வில்
முக்கிய நாளே! பொங்கல் நாளே!
அதிலும் கதிரின் கருணை வாழ்த்தி
உழுது வாழும் உழவர் போற்றும்
உன்னத நாளிது வாழ்த்தி நிற்போம்
இந்த நாளில் இன்பமும் பொங்கிட
வேண்டி நிற்போம். வேண்டி நிற்போம்.
யுத்தம் மலிந்த பூமியில் இனிமேல்
நித்தமும் அமைதி நிலவிட வேண்டும்
என்றே நாமும் வேண்டி நிற்போம்.
மானிடர் யாவரும் அன்பு கொண்டு
மதங்கள், மொழிகள், இனங்கள் மற்றும்
நிலவிடும் பிரிவுகள் நீங்கி அன்புடன்
வாழ்ந்திட வேண்டி நிற்போம் நாமே.

Continue Reading →

மீள்பிரசுரம்: அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் நான் அக்குழந்தையின் கழுத்தை நெரிக்கவில்லை”- ரிஸானா நபீக்.

30-01-2007
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா

எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.

எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.

Continue Reading →

தேவமுகுந்தன் – ஒரு புதிய வரவு! ஒரு புதிய குரல்!

தேவமுகுந்தன் – ஒரு புதிய வரவு ஒரு புதிய குரல்- வெங்கட் சாமிநாதன் -தேவமுகுந்தன் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்தில் 1972 –ல் பிறந்தவர் வயது 40. இப்போது கொழும்புவில் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாளராகப் பணியாற்றுகிறவர்.  கொழும்புவிலும் மலேசியாவிலும் மேற்படிப்பைப் பெற்றவர். சற்றுக்காலம் கல்வி அதிகாரியாகவும் கொழும்புவில் பணியாற்றியவர். ஆக தன் சிறுவயதுப் பிராயம் தவிர, பின்னர், அவரது வாழ்க்கை பெரும்பாலும் சிங்களவர்களிடையே ஒரு தமிழராகத் தான் கடந்து வந்துள்ளது. இப்போதும். இலங்கை பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற 1949 லிருந்து தமிழரை அன்னியராக பாவிப்பது வெளிப்படையாக, அரசுக் கொள்கையாக வரித்துக்கொண்டது கடந்த முப்பது வருடங்களாக தொடர்ந்த உள்நாட்டுப் போராக வெடித்து மூன்று வருடங்களுக்கு முன் அது அரசின் சிங்கள வெற்றியாக, தமிழரின் இன அடையாளமும் ஈழ அடையாளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் கட்டத்தில் கொழும்புவில் சிங்களவரிடையே வாழும் தமிழரின், மொழி, இன உணர்வுகள் எத்தகைய வாழ்வு பெறும், எழுத்தில் வடிவம் பெறும்? அது இதுகாறும் நமக்குத் தெரியவராத ஒரு புதிய குரலாகத் தான் இருக்கும்.

Continue Reading →

“இனங்களின் புரிந்துணர்வுக்கு இலக்கியப்படைப்புகளின் மொழிபெயர்ப்பு அவசியம்”; கொழும்பில் நடந்த மூன்று மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டில் கருத்து!

மனிதநேயம், மனித உரிமை, இனநல்லிணக்கம் முதலான சிந்தனைகளின் அடிப்படையில் முருகபூபதி ஏற்கனவே பல சிறுகதைகளை படைத்துள்ளார். அவற்றுள் தேர்ந்தெடுத்த பத்துச்சிறுகதைகள் சிங்கள வாசகர்களுக்கு மதகசெவனெலி என்னும் பெயரில் அறிமுகமாகின்றது. மதவாச்சியில் பதவியா என்னும் இடத்தை பின்னணியாகக்கொண்டு நடேசன் எழுதிய நாவல் வண்ணாத்திக்குளம். இதனையும் சென்னை மித்ர பதிப்பகமே வெளியிட்டது. உனையே மயல்கொண்டு நாவலும் பைபோலர் நோய் தொடர்பாக அந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்பாத்திரம் பற்றி எழுதப்பட்ட தமிழ் இலக்கிய நாவல் வரிசையில் சற்று வித்தியாசமான படைப்பு. இந்நாவல் குறித்து தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனும் எழுதியிருக்கிறார். Lost In You ஆங்கில வாசகர்களுக்கும் ஆங்கிலத்தில் படிக்கும் தமிழ், சிங்கள் வாசகர்களுக்கும் புதிய அனுபவத்தை வழங்கும்.சமூகங்களை ஒருங்கிணைப்பதிலும் அவற்றிடையே புரிந்துணர்வை வளர்ப்பதிலும் இலக்கியத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் முக்கிய பங்குண்டு. அந்த நோக்கோடு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழும் நொயல் நடேசன், முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்புப் புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு 08.01.2013 அன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செயற்குழுக்கூட்ட அறையில் நடந்தது. டொக்ரர் நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மங்கல விளக்கினை வீரகேசரி வாரப்பதிப்பின் முன்னாள் ஆசிரியர் வி. தேவராஜ், திரைப்பட இயக்குனர் அசோக ஹந்தகம, கொடகே பதிப்பக அதிபர்சுமணஸ்ரீ கொடகே, டான் (தமிழ் ஒளி) தொலைக்காட்சியின் பணிப்பாளர் ‘ பாரிஸ் ஈழநாடு’குகநாதன் உள்ளிட்ட பலர் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து எழுத்தாளர் திக்குவல்லை கமால் வரவேற்புரை நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றார். இதனையடுத்து, நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்களமொழிபெயர்ப்பு சமணல வௌ பற்றிய அறிமுகத்தை ஊடகவியலாளர் கலாநிதி ஹேமசிறி குருப்பு நிகழ்த்தினார். இந்த நாவலை பிரபல மொழிபெயர்ப்பாளர் மடுளுகிரிய விஜேரத்ன மொழிபெயர்த்திருந்தார். அவரே இதனை பதிப்பித்து வெளியிட்டிருந்தார். ஏற்கனவே இந்த நாவல் ஆங்கிலத்தில் Butterfly Lake என்ற பெயரில் மொழிபெயர்ப்பாகி பரந்த அறிமுகத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகளைச் சேகரிப்பதற்கு உதவுங்கள்!

அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகள் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றில் சிதறுண்டு கிடக்கின்றன. இவரது படைப்புகளை இலங்கையில் வாழும் எழுத்தாளர்கள், பதிப்பகங்கள், பல்கலைக்கழக நூல் நிலையங்கள் மற்றும் சுவடிகள் திணைக்களத்திலிருந்து…

Continue Reading →

மீள்பிரசுரம்: கௌதம புத்தரின் பூமிக்கு இங்கு என்ன தவறு நடந்துள்ளது

மீள்பிரசுரம்: கௌதம புத்தரின் பூமிக்கு இங்கு என்ன தவறு நடந்துள்ளதுகுசல் பெரேரா இரண்டு மாதங்களுக்கு மேலாக நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது வசைமாரி பொழிந்து வரும் விவகாரம், பிரதம நீதியரசராக இருக்கும் ஷிராணி பண்டாரநாயக்காவின் வெளியேற்றத்தோடு ஒரு முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு, எண்ணிக் கொள்ளுங்கள் இன்னும் ஏழு நாட்கள்தான் பாக்கியிருக்கின்றன, ஏனெனில் அவர் தவறு இழைத்துள்ளார் என்று நிரூபிக்கப்பட்டதாலோ, அல்லது குற்றம் புரிந்துள்ளார் என்பதாலோ இது நடக்கவில்லை ஆனால் ராஜபக்ஸவின் ஆட்சி அவர் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. அந்த ஆசனத்தில் அமரப்போகும் அடுத்த அரசாங்க வேலைக்காரர் யாராகவிருந்தாலும், அவர் நிச்சயமாக ராஜபக்ஸவின் கற்பனைக்கு ஏற்ற ஒருவராக இருப்பாரே தவிர, தகுதிப்படி நியமனம் பெற்றவராக இருக்கமாட்டார். சுயாதீனமான நீதித்துறை பற்றி உருவாகிவரும் இந்த குழப்பங்கள் யாவற்றுக்கும் அப்பால், இந்த விடயம் பற்றி மிகவும் குறைவாகப் பேசப்பட்டது மாத்திரமன்றி இதை ஒரு பிரச்சினையாக ஒருபோதும் யாருமே எடுத்துக் கொள்ளாததுதான், இதிலுள்ள மனிதாபிமானமான துயரம்.

Continue Reading →

நூலக ஆணை வேண்டி சுடர் முருகையா தலைமையில் 11-01-2013 அன்று திருவல்லிக்கேணியில் கவன ஈர்ப்புப் பேரணி!

நூலக ஆணை வேண்டி சுடர் முருகையா தலைமையில் 11-01-2013 அன்று திருவல்லிக்கேணியில் கவன ஈர்ப்புப் பேரணி!

கடந்த 2008 முதல் தமிழ்ப் படைப்பாளிகளை புறந்தள்ளும் விதமாக நூலக ஆணை தராத தமிழ்நாடு அரசைக் கண்டித்து நூலக ஆணை வேண்டி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் கவிஞர் சுடர் முருகையா தலைமையில் 11-01-2013 அன்று திருவல்லிக்கேணியில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது.

இடம்: அரசு விருந்தினர் மாளிகை (Government Guest House), சேப்பாக்கம் மைதானம் அருகில், வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 600005.; நாள்: 11-01-2013; நேரம்: காலை 9.00 மணி

Continue Reading →

மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா

 மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா

அனபுடையீர், வணக்கம், எங்கள் நாட்டில் ஜனவரி 12 தொடங்கி 14 வரை நடைபெறவுள்ள மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன். என்றும் தமிழுடன், – சோலை.தியாகராஜன்

Continue Reading →