5 உழைக்கும் கரங்கள்
அதிசயமாக பெற்றோர் இருவரும் சொல்லி வைத்தது போல் அன்று சில நிமிட இடைவெளிக்குப்பின் ஒருவர் பின் ஒருவராக இல்லம் திரும்புகின்றனர்.சில வேளைகளில் அப்படி அபூர்வமாக நடப்பதுண்டு. வந்து சேர்ந்ததும் சேராததுமாகப் பசியுடன் காத்திருக்கும் பார்த்திபனைப் பார்க்கிறார் அம்மா.அவன் அமைதியுடன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். சோர்வுடன் காணப்பட்டான்! பெற்ற வயிறு அல்லவா? அம்பிகைக்கு மனசு அடித்துக் கொள்கிறது! நீண்ட நேரம் மகனைப் பிரிந்திருந்த சோகம் அவர் முகத்திலும் தெரிந்தது.செக்கச்சிவந்த மேனி,மூக்கும் விழியுமாக இருக்கிறான்.தனக்குப் பிறந்த பிள்ளையா இப்படி அழகாக இருக்கிறான்? தன் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு! மனதுள் தோன்றிய எண்ணத்துடன்,மகனை நோக்கிச் செல்கிறார்.அருகில் அம்மா வருவதுகூடத் தெரியாமல் சோர்வுடன் தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மகனின் தலையைப் பாசமுடன் தடவிக்கொடுக்கிறார்.
அத்தியாயம் 6!
புறஸ்ரேட் விடயத்தில் அந்த மனிதர் கோபமடைந்து வெளியேறிய சிறிது நேரத்தில் பல பூனைகளை சாம், சிறு பூனைக் கூடுகளில் தொடர்ச்சியாக பரிசோதனை அறைக்குள் கொண்டு வந்து நிலத்தில் வரிசையாக வைத்துக் கொண்டிருந்தான்.கிட்டத்தட்ட அறையின் அரைவாசியிடம் அந்தக் கூடுகளால் நிரப்பப்பட்டிருந்தது ‘ஏன் இவையெல்லாம் என்னிடம் வருகின்றன’ ? என ஏதோ பெரிய வேலையை எதிர்பார்த்து மனக் கிலேசத்துடன் சுந்தரம்பிள்ளை அவனிடம் கேட்டபோது ‘இன்று ஆண் பூனைகளை நலமெடுப்பது உங்கள் வேலை. இன்று இந்த நாள் உங்களுக்கானது.’ என்றான்.
புத்தரின் புன்னகை அவனது முகத்தில் தவழ்ந்ந்தது.
சுந்தரம்பிள்ளைக்கு எதுவும் புரியவில்லை மீண்டும் கேட்ட போது ‘ கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு நாளும் மூன்று மிருகவைத்தியர்கள் இந்த மூன்று அறைகளிலும் வேலை செய்கிறார்கள். இந்த மூன்று அறைகளிலும் வெவ்வேறு நாட்களில் இந்தப் பூனைகளுக்கு நலமெடுக்கும் வேலை நடக்கிறது. இன்றைக்கு செவ்வாய்கிழமை என்பதால் இந்த அறையில் நடக்க வேண்டும். எனவே இன்று இந்த வேலையை நீங்கள் செய்யும் நாள்’ என விபரித்தான்.
ஈழத்துக் கவிதை உலகில் தமிழ் பேசும் முஸ்லிம் கவிஞர்களின் பங்களிப்பு மகத்தானது.மரபு,நவீனம் என தங்கள் கவிதைகளை சிறப்புறவே நமக்குத் தந்துள்ளனர். அன்பு ஜவகர்ஷா, அன்பு முகைதீன், பஸீல்காரியப்பர், மருதூர் வாணன், அண்ணல், இக்பால்(தர்காநகர்)மேமன்கவி, இப்னுஅஸ்மத், கலைக்கமல், கவின்கமல், சோலைக்கிளி, உ.நிசார், பைசால், ரியாஸ் குரானாகெக்கிராவை. சஹானா, வசீம் அக்ரம், நாச்சியார்தீவு பர்வீன், கே.எம்.எம்.இக்பால்(கிண்ணியா)ஒலுவில் அமுதன், ஒட்டமாவடி அஸ்ரப், ஜின்னாசெரிப்புத்தீன், புரட்சிக்காமால், கலைமகள் ஹிதாயா, நளீம், நற்பிட்டிமுனை பளீல், அனார், ரிஷான் செரிப், பஹீமா ஜெகான்,ழ்ரஷ்மி, பௌசர், இப்படி பட்டியல் மிக மிக நீண்டது. அவ் வகையில் இன்று நமக்குக் கிடைத்திருப்பது நபீல் எனும் கவிஞனின் இந் நூல். உயிர் எழுத்துப் பதிப்பகம் அழகுற எழுபது பக்கங்களில் அச்சிட்டுள்ளது. ஏற்கனவே’காலமில்லாக் காலம்’ எனும் கவிதை நூலை தந்தவர். அபரிமிதமான நம்பிக்கைகளை அந் நூலின் மூலம்விதைத்தவர். அவர்களும் யுத்த ரணங்களைச் சுமந்தவர்கள். இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர்கள். பிரிக்க முடியாத படி அவலங்களுடனும், நெருக்கடிகளுக்குள்ளும் வாழ்பவர்கள். ஒரு இனத்தின் விடுதலை இவர்களையும் இணைத்தது தான். அதுவே முழுமையானதுமாகும்.
‘காத்திருப்பு’ என்ற இந்த நாவல் ஈழத்து நாவல் இலக்கியத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு படைப்பாகும். அது பேசும் பொருள் காரணமாக இங்கு அவதானிப்பைப் பெறுகிறது. பல நாவல்களையும் குறுநாவல்களையும் தந்தது மட்டுமின்றி, சிறுகதை, விமர்சனம், மேடைப் பேச்சு எனப் பரந்த படைப்பாளுமை வீச்சுக் கொண்டவர் தெணியான். இந்தப் படைப்பு ஒரு வித்தியாசமான படைப்பனுபவமாக அவருக்கு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. படைப்புலகில் தனது வழமையான பாதைகளில் நடந்து சலிப்புற்று புதிய பாதைகளை அவாவும் கலைஞனின் உள்ளார்ந்த தேடலை உணர்த்துகிறது எனலாம். ஏனெனில் இது ஒரு பாலியல் நாவல். பாலியல் நாவல்கள் எமக்குப் புதியன அல்ல. பதின்மங்களில் நான் படித்த எஸ்.பொ வின் எழுத்துக்கள் சில கிளுகிளுப்பூட்டின. கணேசலிங்கன், டானியல் போன்றோரும் பாலியல் பிரள்வுகளை அங்காங்கே தொட்டுச் சென்றுள்ளார்கள். சட்டநாதனின் பல சிறுகதைகள் அற்புதமானவை. பெண்களின் உணர்வுகளை, பாலியல் பிரச்சனைகளை அழகாகாத் தொட்டுள்ளார். கலைப் பிரக்ஞையுடனும், மொழி மீதான அக்கறையோடும் எழுதுபவர்களில் என்னைக் கவர்ந்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் மிக நாசுக்காகவும் அழகாகவும் கையாண்டவர் தி.ஜானகிராமன் இவரின் மோகமுள், அம்மா வந்தாள் இரண்டும் மறக்க முடியாதவை. அதேபோல ஜெயகாந்தனின் ரிஷிமூலம் குறிப்பிட்டுக் கூற வேண்டிய படைப்பாகும். கவித்துவ மொழி நடை அழகும், ஆன்மீகத் தேடலும் கொண்ட லா.சா.ரா காதலும் பாலியலும் இழையோடத் தந்த ‘அபிதா’ தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. இவர்கள் அனைவருமே பாலியல் உறவுகளையும், பிறழ்வுகளையும் யதார்த்தமாக எடுத்துச் சொன்னவர்களாவர். உண்மையில் அவர்கள் ஏதோ நடக்காத காரியத்தைப் புதிதாகச் சொன்னவர்கள் அல்ல. சமூகத்தில் ஆங்காங்கே மறைவாக நடக்கும் விசயங்களை, வெளிப்படையாக இலக்கியத்தில் கலை நயத்தோடு சொன்னார்கள்.
‘அந்த மரத்தை அவன் நன்றாக அறிவான். அந்த இடத்திற்கு அநேக தடவைகள் வந்திருக்கின்றான். அவனுடைய தந்தையின் மரணத்தின் பின்னர் அந்தக் குரல் அவனுடன் அடிக்கடி பேசியிருக்கின்றது. மிவிஹாகி என்ற உருவத்திலே தனக்கு ஒரு நங்கூரம் கிடைக்கக் கூடும் என்கிற ஒரேயொரு நம்பிக்கை மட்டுமே அவனைத் தடுத்து வைத்திருந்தது….அவன் கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். ‘நியோரோகே கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். அவனது வாழ்வின் எல்லா நம்பிக்கைகளும், சிறு பராயம் தொட்டு இருந்து வந்த கனவுகளும் தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு, வலிந்த கைகளின் மூர்க்கத்தனமான பிடியில் நசுக்கி அழிக்கப்பட்ட பிறகு அவன் இறுதி முடிவாக தற்கொலையைத் தேர்ந்தெடுத்திருந்தான். அந்த இளைஞனிடம் கல்வி கற்கும் ஆர்வமும், அதன் மூலமாகத் தன் நிலத்தின் விடிவுகளுமான பல எண்ணங்கள் தேங்கிக்கிடந்தன. அந்த எண்ணங்களை நிஜத்தில் காண அவன் தன் இருபது வயது வரையிலான காலப்பகுதி வரைக்கும் முயற்சித்துக்கொண்டே வந்திருக்கிறான்.
முதலில் ஏனென்ற காரணமே அறியாது சித்திரவதைப்பட்டான். தங்கள் பூர்வீக நிலத்தின் எதிரியாகக் கண்டவரின் மரணத்துக்கும் அவனுக்கும் எந்தவிதமான சம்பந்தங்களற்றபோதிலும் அவன் மிகக் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டான். அவனது தாய்மார், சகோதரர்கள், தந்தை என எல்லோருமே வதைக்கப்பட்டார்கள். மனதின் ஆழத்தில் கனவுகள் நிரம்பியிருந்தவனின் எதிர்காலம் குறித்த அனைத்தும் சிதைந்தன. அவன் ஏதும் செய்யவியலாப் பதற்றத்தோடு தன் ஆசிரியரின் மரண ஓலத்தைக் கேட்டான்.அவன் நேசித்த தந்தையை வன்முறைக்குப் பலி கொடுத்தான். நேசித்த சகோதரர்களை யுத்தங்களில் இழந்தான். எஞ்சிய ஒரே நம்பிக்கையான தனது நேசத்துக்குரியவளால் இறுதியாக, மிகுந்த வலியோடு நிராகரிக்கப்பட்டான். அந்த நேசத்துக்குரியவள் அவனது பால்ய காலந் தொட்டு அவனது சினேகிதி. அவர்களது பூர்வீக நிலத்தின் எதிரியின் மகள். அவனது மனதுக்கு நெருக்கமான தேவதைப் பெண்ணவள்.