சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை

[ஜூலை 2009 இதழ் 115  மார்ச் 2010  இதழ் 123  வரை , பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை’ என்னும் தலைப்பில் எட்டு எழுத்தாளர்களைப் பற்றி எழுதியிருந்தார். அத்துடன் அறிமுகம் செய்விக்கப்பட்ட எழுத்தாளர்களினதும் படைப்புகளையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளில் உள்ளடக்கியிருந்தார். ஒரு பதிவுக்காக, பதிவுகளின் புதிய வடிவமைப்பிக் அவை பதிவுசெய்யப்பட வேண்டிய அவசியம் கருதி, அவை இங்கு,  படைப்புகள் தவிர்த்து , மீள்பிரசுரமாகின்றன. – பதிவுகள்-]

1. அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் சித்ரா ரமேஷ்

- ஜெயந்தி சங்கர் - சித்ரா ரமேஷ் இலக்கியத்தைக் குறித்துப் பேசுமிடத்தில், ‘இறைவன் இலக்கியம் இரண்டுமே இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பரம்பொருள் தானே!’, என்று சொல்லியிருப்பார். சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் ‘வாழ்க்கையில் இலக்கியம்’ என்ற தலைப்பில் விறுவிறுப்பாகவும் சரளமாகவும் உரையாற்றி எல்லோரையும் அசத்தியவர். இவருக்கு எழுத வேண்டும் என்பதில் மிகப் பெரிய குறிக்கோள் இல்லாததால் அதிகமாக எழுதுவதை விட அதிகமாகப் படிக்க விரும்பும் வாசகியாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். படிப்பது என்ற விஷயம் பொழுது போக்கிற்காக சில சமயம் நிகழலாம். ஆனால், எழுதுவது என்பது வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் செய்யப்படும் விஷயம் இல்லை என்று சொல்வார் சித்ரா, பதின்ம வயதிலேயே இவரது கட்டுரைகள் தமிழாசிரியையை விட இவருடைய தோழிகளுக்கு மிகவும் பிடித்திருக்கும். அந்தக் கட்டுரைகள் எந்த இலக்கண வரையறைக்குள்ளும் வராமல் சித்ராவின் பாணியில் அமைந்தவை. வெகுஜனப் பத்திரிகை ரசனையிலிருந்து விலகிநின்ற மேம்பட்ட எழுத்துக்களை இவரது மூத்த சகோதரர்தான் இவருக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.

Continue Reading →

பிரெஞ்சு நாவல்: காதலன் (1 -3)

 அத்தியாயம் ஒன்று!

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -ஒரு நாள், நான் வளர்ந்த பெண்ணாக மாறி இருந்த நேரம், வெளியில் பொது இடமொன்றில் நின்றுகொண்டிருக்கிறேன். என்னை நோக்கி ஒருவன் வந்தான், தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட பின்,” வெகு நாட்களாக உங்களை அறிவேன். பலரும், நீங்கள் இளம்வயதில் அழகாய் இருந்ததாகச் சொல்கிறார்கள், இப்போதுதான் உங்கள் அழகு கூடி இருக்கிறது என்பதைச் சொல்லவே உங்களை நெருங்கினேன், உங்கள் இளம் வயது முகத்தினும் பார்க்க, சோபை அற்றிருக்கும் இம் முகத்தை, நான் விரும்புகிறேன்”- என்றான். இதுவரை அச் சம்பவத்தைப் பற்றி எவரிடமும் பேசாத நிலையில், ஒவ்வொருநாளும் இன்றைக்கும் தனிமையில் இருக்கிறபோதெல்லாம் அக்காட்சியை நினைவுபடுத்திக் கொள்கிறேன். அன்று கண்டது போலவே அதே மௌனத்துடன், பிரம்மித்தவளாக நிற்கிறாள், அவளைச் சுற்றிலும். என்னை மகிழ்விக்கக்கூடிய அத்தனை தனிமங்களுக்கும் இருக்கின்றன, அதாவது என்னை நினைவுபடுத்தும், என்னை குதூகலத்தில் ஆழ்த்தும் பண்புகளோடு.

Continue Reading →

பூங்காவனம் 12 ஆவது இதழ் மீது ஒரு பார்வை!

பூங்காவனம் 12 ஆவது இதழ் மீது ஒரு பார்வை!2013 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மலர்ந்திருக்கும் பூங்காவனத்தின் 12 ஆவது இதழ் வாழ்த்துவோர், வீழ்த்துவோரின் செயற்பாடுகளைத் தாண்டி வாசிப்பின் மகத்துவத்தை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டி இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான தர்காநகரைச் சேர்ந்த திருமதி. சுலைமா சமி இக்பாலின் முன் அட்டைப் படத்துடன் தனது படைப்புக்களைத் தந்திருக்கிறது. இதழின் உள்ளே திருமதி. சுலைமா சமி இக்பால் அவர்கள் 1977 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் எழுத்துலகில் நுழைந்ததில் இருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கும் அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். களுத்துறை மாவட்டத்தின் தர்காநகர் மீரிப்பன்னையைப் பிறப்பிடமாகவும், மாவனல்லை கிருங்கதெனியவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், தர்காநகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை கல்வி பயின்று ஆசிரியராகி அதே பாடசாலையில் பல வருடங்கள் கற்பித்து, தான் கற்ற பள்ளிக்கூடத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார். ஜும்ஆ, முஸ்லிம் ஆகிய இஸ்லாமியச் சஞ்சிகைகளில் எழுதியவர். தினகரன், தினக்குரல், வீரகேசரி, விடிவெள்ளி போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகளை எழுதி வருகிறார். 1984 முதல் சுமார் பத்தாண்டு காலப் பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஷநெஞ்சோடு நெஞ்சம் மாதர் மஜ்லிசுக்கு| பிரதித் தயாரிப்பாளராக இருந்து பங்களிப்புச் செய்து வந்திருக்கிறார்.

Continue Reading →

நோர்வேயில் இந்திய தூதரகத்திற்கு முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டம்

நோர்வே ஈழத்தமிழர் அவையின் ஏற்பாட்டில் 05ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணிதொடக்கம் நான்கு மணிவரை இந்திய தூதரகத்திற்கு முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. ஈழத்தமிழர்களின்…

Continue Reading →

தொடர் நவீனம்: மனக்கண் முடிவுரை!

 அறிஞர் அ.ந.கந்தசாமி -தொடர் நாவல்: மனக்கண்1966ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாதம் ‘மனக்கண்’ தொடர் நவீனம் மூலம் வாசகர்களுக்கும் எனக்கும் உண்டான தொடர்புகள் சென்ற வாரம் ஒரு முடிவுக்கு வந்தன. அதாவது, எட்டு மாதங்களாக வாரந் தவறாது நிலவிய ஓர் இனிய தொடர்பு சென்ற பெளர்ணமித் தினத்தன்று தன் கடைசிக் கட்டத்தை அடைந்தது. கதை என்ற முறையிற் பார்த்தால் மனக்கண் சற்று நீளமான நாவல்தான் என்றலும் உலக நாவல்களோடு ஒப்பிடும்போது அதனை அவ்வளவு நீளம் என்று சொல்லிவிட முடியாது. கிரேக்க கவிஞனான களீமாச்சன் (Callimachun) “ஒரு பெரிய புஸ்தகம், ஒரு பெரிய பீடை” என்று கூறியிருக்கிறான். அவன் கூற்றுபடி பார்த்தால் என்னுடைய நாவல் ஒரு நடுத்தரமான பீடையே. ஏனென்றால், நாவல் என்பது ஒரு சீரிய இலக்கியத் துறையாக வளர்ச்சியடைந்துள்ள மேல் நாடுகளில் பொதுவாக நாவல்கள் 20,000 வார்த்தைகளில் இருந்து 20 இலட்சம் வார்த்தைகள் வரை நீண்டவையாக வெளி வந்திருக்கின்றன. யார் அந்த 20 இலட்சம் வார்த்தை நாவலை எழுதியவர் என்று அதிசயிக்கிறீர்களா? பிரெஞ்சு நாட்டின் புகழ்பெற்ற நாவலாசிரியரான மார்சேல் புரூஸ்ட் (Marcel Proost) என்பவரே அந்த எழுத்தாளர். நாவலின் பெயர் “நடந்ததின் நினைவு” (Remembrance of the past). ஆனால் புரூஸ்ட் மட்டும் தான் இவ்வாறு நீண்ட நாவல்களை எழுதினார் என்று எண்ணி விட வேண்டாம். உலகத்தின் மிகச் சிறந்த நாவல் என்று கருதப்படும் (War and peace) “யுத்தமும் சமாதானமும்” லியோ டால்ஸ்டாய் எழுதியது. விக்டர் ஹியூகோவின் (Les miserables) “ஏழை படும் பாடு” என்பனவும் குறைந்தது ஏழெட்டு இலட்சம் வார்த்தைகள் கொண்ட பெரிய நாவல்கள் தான். இவர்களில் முன்னவர் ருஷ்யாக்காரர். மற்றவர் பிரான்சைச் சேர்ந்தவர். இவர்களைப் போலவே ஆங்கிலத்தில் ஹோன்றி பீல்டிங் (Henry Fielding) நீண்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். இவரது “டொம் ஜோன்ஸ்” (Tom Jones) பதினெட்டு பாகங்களைக் கொண்டது. இதில் இன்னொரு விசேஷமென்னவென்றால் இந்தப் பதினெட்டுப் பாகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விசேஷ முன்னுரையும் அவரால் எழுதப்பட்டது. தமிழில் இவ்வாறு நீண்ட நாவலெழுதியவர் “கல்கி”.

Continue Reading →

தொடர்நாவல்: மனக்கண் (29, 31 & 32)

29-ம் அத்தியாயம் மர்மக் கடிதம்!

29-ம் அத்தியாயம் மர்மக் கடிதம்!தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -சுரேசும் தாயும் சொன்ன விவரங்களால் ஸ்ரீதரின் உள்ளம் இப்பொழுது சுசீலாவைச் சுற்றிப் படர்ந்தது. “என்னே அவள் தியாகம், அவள் அன்பு. முறிந்து சரிந்த என் வாழ்க்கைக்கு அன்று அவள் மட்டும் துணிந்து முட்டுக் கொடுக்க முன் வந்திருக்காவிட்டால், நான் இன்று உயிருடன் இருப்பேனா? அப்பா நினைத்தது போல் பத்மாவைப் பலாத்காரமாகத் தூக்கி வந்து எனக்கு மனைவியாக்கியிருந்தால்… சீ அதுவும் ஒரு கல்யாணமா? அதை விட எனக்கு வேறு நரகம் வேண்டியிருந்திருக்குமா?” என்று பல விதமான சிந்தனைகள் சங்கிலித் தொடர் ஒன்றின் பின்னொன்றாக நகர்த்து வந்தன. அன்னையின் பேச்சுகளைக் கேட்ட ஸ்ரீதர் “அம்மா நான் சுசீலாவுக்கு எவ்வளவு அநியாயம் செய்துவிட்டேன். மோசக்காரி – உன்னை நான் வெறுக்கிறேன் என்று அவளைப் பார்த்து நான் எத்தனை தரம் வாய் கூசாது கூறியிருக்கிறேன். பொறுமைக்குப் பூமாதேவியை உதாரணம் சொல்வார்கள். ஆனால் அம்மா சுசீலாவைப் போல் பொறுமைக்காரியை நீ கண்டதுண்டா?” என்றான்.

Continue Reading →

தொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (5,6 &7))

 5 உழைக்கும் கரங்கள்
 
வே.ம.அருச்சுணன் – மலேசியாஅதிசயமாக பெற்றோர் இருவரும் சொல்லி வைத்தது போல் அன்று சில நிமிட இடைவெளிக்குப்பின் ஒருவர் பின் ஒருவராக இல்லம் திரும்புகின்றனர்.சில வேளைகளில் அப்படி அபூர்வமாக நடப்பதுண்டு. வந்து சேர்ந்ததும் சேராததுமாகப் பசியுடன் காத்திருக்கும் பார்த்திபனைப் பார்க்கிறார் அம்மா.அவன் அமைதியுடன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். சோர்வுடன் காணப்பட்டான்!  பெற்ற வயிறு அல்லவா? அம்பிகைக்கு மனசு அடித்துக் கொள்கிறது!   நீண்ட நேரம் மகனைப் பிரிந்திருந்த சோகம் அவர் முகத்திலும் தெரிந்தது.செக்கச்சிவந்த மேனி,மூக்கும் விழியுமாக இருக்கிறான்.தனக்குப் பிறந்த பிள்ளையா இப்படி அழகாக இருக்கிறான்? தன் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு! மனதுள் தோன்றிய எண்ணத்துடன்,மகனை நோக்கிச் செல்கிறார்.அருகில் அம்மா வருவதுகூடத் தெரியாமல் சோர்வுடன் தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மகனின்   தலையைப்      பாசமுடன்  தடவிக்கொடுக்கிறார்.  

Continue Reading →

தொடர்நாவல்: அசோகனின் வைத்தியசாலை [6, 7]

அத்தியாயம் 6!

நோயல் நடேசன்புறஸ்ரேட் விடயத்தில் அந்த மனிதர் கோபமடைந்து வெளியேறிய சிறிது நேரத்தில் பல பூனைகளை சாம்,  சிறு பூனைக் கூடுகளில் தொடர்ச்சியாக பரிசோதனை அறைக்குள்  கொண்டு வந்து நிலத்தில் வரிசையாக வைத்துக் கொண்டிருந்தான்.கிட்டத்தட்ட அறையின் அரைவாசியிடம் அந்தக் கூடுகளால் நிரப்பப்பட்டிருந்தது ‘ஏன் இவையெல்லாம் என்னிடம் வருகின்றன’ ? என ஏதோ பெரிய வேலையை எதிர்பார்த்து மனக் கிலேசத்துடன் சுந்தரம்பிள்ளை அவனிடம் கேட்டபோது ‘இன்று ஆண் பூனைகளை நலமெடுப்பது உங்கள் வேலை. இன்று இந்த நாள் உங்களுக்கானது.’ என்றான்.

புத்தரின் புன்னகை அவனது முகத்தில் தவழ்ந்ந்தது.

சுந்தரம்பிள்ளைக்கு எதுவும் புரியவில்லை மீண்டும் கேட்ட போது ‘ கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு நாளும் மூன்று மிருகவைத்தியர்கள் இந்த மூன்று அறைகளிலும் வேலை செய்கிறார்கள். இந்த மூன்று அறைகளிலும் வெவ்வேறு நாட்களில் இந்தப் பூனைகளுக்கு நலமெடுக்கும் வேலை நடக்கிறது. இன்றைக்கு செவ்வாய்கிழமை என்பதால் இந்த அறையில் நடக்க வேண்டும். எனவே இன்று  இந்த வேலையை நீங்கள் செய்யும் நாள்’ என விபரித்தான்.

Continue Reading →

‘எதுவும் பேசாத மழைநாள்’-ஒரு பார்வை

'எதுவும் பேசாத மழைநாள்'-ஒரு பார்வைமுல்லைஅமுதன்ஈழத்துக் கவிதை உலகில் தமிழ் பேசும் முஸ்லிம் கவிஞர்களின் பங்களிப்பு மகத்தானது.மரபு,நவீனம் என தங்கள் கவிதைகளை சிறப்புறவே நமக்குத் தந்துள்ளனர். அன்பு ஜவகர்ஷா, அன்பு முகைதீன், பஸீல்காரியப்பர், மருதூர் வாணன், அண்ணல், இக்பால்(தர்காநகர்)மேமன்கவி, இப்னுஅஸ்மத், கலைக்கமல், கவின்கமல், சோலைக்கிளி, உ.நிசார், பைசால், ரியாஸ் குரானாகெக்கிராவை. சஹானா,  வசீம் அக்ரம்,  நாச்சியார்தீவு பர்வீன், கே.எம்.எம்.இக்பால்(கிண்ணியா)ஒலுவில் அமுதன், ஒட்டமாவடி அஸ்ரப், ஜின்னாசெரிப்புத்தீன், புரட்சிக்காமால், கலைமகள் ஹிதாயா, நளீம், நற்பிட்டிமுனை பளீல், அனார், ரிஷான் செரிப், பஹீமா ஜெகான்,ழ்ரஷ்மி, பௌசர், இப்படி பட்டியல் மிக மிக நீண்டது. அவ் வகையில் இன்று நமக்குக் கிடைத்திருப்பது நபீல் எனும் கவிஞனின் இந் நூல். உயிர் எழுத்துப் பதிப்பகம் அழகுற எழுபது பக்கங்களில் அச்சிட்டுள்ளது. ஏற்கனவே’காலமில்லாக் காலம்’ எனும் கவிதை நூலை தந்தவர். அபரிமிதமான நம்பிக்கைகளை அந் நூலின் மூலம்விதைத்தவர். அவர்களும் யுத்த ரணங்களைச் சுமந்தவர்கள். இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர்கள். பிரிக்க முடியாத படி அவலங்களுடனும், நெருக்கடிகளுக்குள்ளும் வாழ்பவர்கள். ஒரு இனத்தின் விடுதலை இவர்களையும் இணைத்தது தான். அதுவே முழுமையானதுமாகும்.

Continue Reading →