‘பாரதியைப் பயில…’

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில…’வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும். நன்றி. அன்புடன்,வீ.சு.இராமலிங்கம்தஞ்சாவூர் bharathisangamthanjavur@gmail.com

Continue Reading →

நாமும் கொத்தடிமைகள்தாம்:

- கோவை ஞானி -நவீன காலத்தில் உலக அளவிலான நெருக்கடிகளுக்கு இடையில் மனிதர்கள் தமக்குள் தகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இந்த மனிதர்களில் இப்பொழுது யாரும் தலைவர்களாக இல்லை. நாயகர்களாக இல்லை. தம் வாழ்க்கையைத் தாமே படைத்துக் கொள்கிற அல்லது தீர்மானித்துக் கொள்கிறவர்களை நாயகர்கள் என்று சொல்லலாம். நாயகர்கள் என்பவர்கள் தம்மைச் சார்ந்த உலகச் சூழலில் நீதியை நிலைநாட்டுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய சமூகச் சூழலில் இப்படி நாயகர்கள் என்று யாரையும் சொல்வதற்கு இல்லை. தலைவர்கள் என தம்மை நியமித்துக் கொண்டவர்கள் நம் சமூகத்தை, சமூக நீதியை அழிப்பதன் மூலம் தம்மை தலைவர்களாகக்காட்டிக் கொள்கிறார்கள். இவர்களை வில்லன்கள் என்று சொல்லுவதுதான் தகும். இப்படி இவர்களை நம்மால் சொல்லவும் முடியாது. இப்படிச் சொல்வதன் மூலம் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளாக நேரும். ஆகவே நம் காலத்து நாவல்களில் நாயகர்கள் என எவரும் இல்லை. நாவல்களில் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமக்குள் சிதைவுக்குள்ளான மனிதர்கள். இவர்களுக்குள் மையம் இல்லை. முழுமை இல்லை. தொடர்ச்சியான லட்சியங்களோடு இவர்களால் வாழ முடியவில்லை. இவர்கள் வாழ்வுக்கான வழிதேடி அலைகிறார்கள். பிறந்த பூமியில் இவர்களால் வாழ முடியவில்லை. வயிற்றுப் பிழைப்பேகூட இவர்களுக்கான வாழ்க்கையாகிவிட்டது. நீத, நேர்மை என்று இவர்களால் பேச முடியாது. உறவுகள் என்று சொந்தங்கள் என்று இவர்கள் கொண்டாட முடியாது. இயற்கையோடு இவர்களுக்கு வாழ்வு இல்லை. கலைத்தரம், ரசனை என்று இவர்கள் தமக்குள் வளர்த்துக் கொள்ள இயலாது. யாரையாவது நம்பி, அவனுக்கு அடிமையாகி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் இவர்கள் இருக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை திருமணம் என்ற லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. கற்பைக் காத்துகொள்ள முடியுமா? குழந்தைகள், குடும்பம் என்று கனவு காண முடியுமா?
 

Continue Reading →

வனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு!

முதலாவது விமரிசனம்!

வனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு!- திலகபாமா -‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த  முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு ,  வனசாட்சி. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடவே நாவலுக்குள் புகுந்தேன் நாவல் இந்திய தமிழர் பிரிட்டிசார் காலத்தில் இலங்கை சென்ற பாடுகள் , அந்தத் தமிழன் இலங்கைத் தமிழனாகவே வாழத் தொடங்கி விட்ட நிர்பந்தம், வாக்குரிமை நிராகரிக்கப் பட்டு , மாறுகின்ற அரசியல் சூழலில் பாமரனின் வாழ்வு அலைவுறும்  அவலம், நிலம் நிராகரிக்கப் படுகின்றபோது  அரசு மனித நிராகரிப்புகளும் சேர்ந்து கொள்ள சிதைவுறும் குடும்பங்கள் உறவுகள் , இந்திய மண்ணுக்கு தூக்கி எறியப்பட்டவனாக வந்து சேருகின்ற அவலம், இந்திய தமிழகம் அவனுக்கு தந்த வாழ்வுதான் என்ன? இவையே நாவலின் களமாக இருக்கின்றன. இன்றைக்கெல்லாம் நாவல்கள் மூன்று அடிப்படைகளில் தான் வெளி வருகின்றன: தகவல்களின் அடிப்படையில் வியப் பூட்டுவது; பிரதேச மொழியைப் பதிவு செய்வது; இதுவரை அறியப் படாத சம்பவங்கள் என்ற முன்னெடுப்பில் சம்பந்தம் இல்லாத சம்பவங்களால் பக்கங்களை நிரப்புவது. இந்த மூன்று உத்திகளையும் கையிலெடுத்து, அதை  போலிச்சடங்குகளாக்கி  நாவலுக்கான சுவையை  கலைத்தன்மையை இழந்து போன நாவல்களே இன்று அதிகம். அல்லது செய்நேர்த்தி மிகுந்து உண்மைகளை தொலைத்து விட்ட எழுத்துகளுக்கும் இடையில் நல்ல எழுத்தை , கலையும் உண்மையும் கூடிய எழுத்துக்களைத் தேர்வதே வாசகனின் இன்றைய சவால். தகவல்களை பின்னில் விட்டு மனிதனை முன்னிறுத்தி இந்நாவல் செயல்பட்டிருக்கின்றது. வாசகனை அந்நியப் படுத்தாது கூட இழுத்துச் செல்லுகின்ற மொழி, கதையோட்டம் சரியாக இருந்தால் எந்த பிரதேச மொழியும்  புரிதலுக்கானதே, என சொல்லாமல் செய்து விட்ட நாவலிது. கதையோட்டத்திற்கு தேவையான  சம்பவங்களால் ,தன்னை தகவமைத்துக் கொண்ட நாவலாகவும் இருக்கின்றது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 16: பிரக்ஞை, பிரக்ஞையின்மை, நனவு மனம் மற்றும் நனவிலி மனம்!

மீராபாரதிநண்பர் மீராபாரதியின் ‘பிரக்ஞை’ அண்மையில் வாசித்தேன். தமிழில் இதுபோன்ற நூல்களை எழுதுபவர்கள் ஆன்மிக அடிப்படையில் எழுதுவார்கள். அறிவியலை மறந்துவிடுவார்கள் அல்லது தவிர்த்து விடுவார்கள். மீராபாரதி இந்தத் தவறினைச் செய்யவில்லை. மேற்படி நூலில் பிரக்ஞை பற்றிய மேலை நாட்டு அறிஞர்களின் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே மீராபாரதி பிரக்ஞையினை அணுகியிருக்கின்றார். அவ்வப்போது பிரக்ஞை பற்றிய கீழை நாட்டுத்தத்துவங்களையும் குறிப்பிட்டிருப்பார். எதிர்காலத்தில் பிரக்ஞை பற்றிய கீழை நாட்டுத்தத்துவங்களின் அடிப்படையிலான நூலொன்றினை எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். மேற்படி நூலில் ஒரு விடயம்தான் எனக்குச் சிறிது நெருடலாக இருக்கிறது. சிந்திக்கும் மனதை, உணர்வுள்ள மனதை பிரக்ஞை என்போம். அதனை நனவு மனமென்றும் கூறுவர். உளவியல் அறிஞர்களின் ஆய்வுகளின்படி மனித மனமானது இரு தளங்களை உள்ளடக்கியுள்ளது. சிந்திக்கும் மனம் (Conscious Mind), சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஆழ்மனம் (Unconscious Mind). இவ்விதமான மனதின் பிரிவுகளை மீராபாரதி முறையே பிரக்ஞை என்றும், பிரக்ஞையின்மை என்றும் குறிப்பிடுகின்றார். பிரக்ஞை என்பது சிந்திக்கும், உணரும் மனம் என்றால் (Conscious Mind), பிரக்ஞையின்மை என்பது சிந்திக்கும் மனம் அற்ற என்றுதான் பொருள்படும். அவ்விதம்தான் ஒரு சாதாரண மனிதர் புரிந்துகொள்வார். இதனை மீராபாரதியும் புரிந்துகொண்டிருக்கின்றார். அதனால்தான் அதுபற்றிய விளக்கமொன்றினையும் மேற்படி நூலின் பக்கம் 61இல் கீழ்வருமாறு தருகின்றார்:

Continue Reading →

(10) – சி. சு. செல்லப்பா: தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு–

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் - வேடிக்கையாகத் தான் இருக்கிறது.  இன்று செல்லப்பா காலமாகி பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, அவரைப் பற்றி நினைப்பவர்கள் – நினைப்பவர்கள் இருக்க மாட்டார்களா என்ன? எட்டு கோடி தமிழரில் அவரிடம் பழகிய அவருக்கு பத்திருபது வயது இளையவர்கள், அந்த தலைமுறையில் அவர் பெயரைக் கேள்விப்பட்டவர்கள் சிலராவது இருக்க மாட்டார்களா என்ன?, இருப்பார்கள் தான் – அவர்கள் முதலில் அவரை விமர்சகராகத் தான் நினைவு கூறுவார்கள். அவர் சுதந்திரப் போராட்ட உணர்வு கொண்டதும் சிறை சென்றதும் கடைசி வரை காந்தி பக்தராகவே இருந்ததும் தவிர அவர் வாழ நினைத்தது ஒரு எழுத்தாளராக. எழுத்தாளராக வாழ்வது சாத்தியமாகத்தான் அவர் சென்னைக்கு வந்ததும். அவர் பழகியதும் உடன் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்ததும் எழுத்தாளர்களோடு தான். சிறு கதைகள் அவர் மனத்தை ஆக்கிரமித்திருந்தன. க.நா.சு. அந்த காலகட்டத்தில் விமர்சனத்தின் தேவையை வலியுறுத்திப் பேசி வந்த காலத்தில் எல்லாம் அவர் பிச்ச மூர்த்தி போல், இன்னும் மற்ற சக எழுத்தாளர்கள் போல் அதை ஏற்க மறுத்தே வந்திருக்கிறார். க.நா.சு. குளவியாகக் கொட்டிக் கொட்டித் தான் செல்லப்பாவும்  குளவியானார். க.நா.சு.வுக்கு அவர் படிப்பினூடேயே, எழுத்தினூடேயே, விமர்சனப் பார்வை என்பது உடன் வளர்ந்தது. விருப்புடன் வளர்த்துக்கொண்டது. ஆனால் செல்லப்பா அப்படியில்லை. விமர்சனம் தேவை என்ற நினைப்பு கடைசியில் க.நா.சுவுடனான பழக்கத்தில் தோன்றியதும், 

Continue Reading →

சிறுகதை: பின்னற்தூக்கு

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடிய வேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள். செல்விக்கு நீண்ட பின்னல். முழங்கால் வரை நீண்ட பின்னல். எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள். மருத்துவத் தாதிப் பயிற்சிக்கென வந்திருந்த பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மழைக்காலக் காலைப்பொழுதில் அவள் செய்திகொண்டு வந்தபொழுது அப் பின்னலும் முடிச்சும் தூக்குக் கயிறு போலத்தான் தோன்றியது. எந்தப் பெண் எனத் தெரியவில்லை. வெளியூர்ப் பெண். ஆனாலும் இந்த வீதியில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணாகவே இருப்பாள். அருகிலிருந்த நகரத்தின் மையத்திலிருந்த மருத்துவத் தாதிகள் பயிற்சி நிலையத்தில் பயிலச் சேர்பவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த விடுதியில் இறுதி ஆண்டுகளில் தங்கிப் பயிலவேண்டுமென்பது ஒரு விதிமுறை. அந்த விதிக்கமையவோ, அல்லது தங்கிப் படிக்க வேறு வசதியான இடம் அந்த நகரத்தில் அமையாததாலோ பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த எல்லா இறுதியாண்டு மாணவிகளும் அங்கு வந்து தங்கியிருந்தனர்.

Continue Reading →

பாரிஸ் மாநகரில் இலக்கிய மாலை: வி. ரி. இளங்கோவனின் புதிய 4 நூல்கள் வெளியீடு..!

பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம் மற்றும் பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்; ஆகியன இணைந்து நடாத்தும் மூன்றாவது ‘இலக்கிய மாலை” நிகழ்வு எதிர்வரும் 02 -ம்…

Continue Reading →

பிரெஞ்சு நாவல்: காதலன் – 10 & 11!

அத்தியாயம் -10

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -நாகரத்தினம் கிருஷ்ணாமரி கிளாட் கார்பெண்ட்டர்(Marie-Claude Carpenter) அமெரிக்க பெண்மணி. எனது நினைவுத்திறனை நம்புவதால் அவள் பாஸ்ட்டனைச்( Boston) சேர்ந்தவள் என்பது உறுதி. மிகவும் நிர்மலமான கண்கள். வெளிர்நீலம். 1943. இளமஞ்சள்நிறம். வயதுக்கான தளர்ச்சியில்லை, தவிர அழகானவளென்றும் ஞாபகம். முகத்திற் சட்டென்று மின்னலாய் தோன்றி மறையும், கணநேரப் புன்னகை. நன்றாக நினைவிருக்கிறது, தாழ்ந்த குரல், உரத்துபேசுவதைத் தவிர்க்கும் ரகம். நடுத்தர வயதைக் கடந்திருந்தாள், நாற்பத்தைந்துவயது.  பாரீஸின் பதினாறாவது வட்டத்தில், அல்மா(Alma)வுக்கு அருகில் வசித்துவந்தாள். அவளுடையது கடைசி மாடி, மிகப்பெரியது, எட்டிப்பார்த்து சேன்(Seine)நதியை வியக்கலாம். குளிர்காலத்தின் இரவு உணவுக்கும், கோடையில் மதிய உணவுக்கும் அங்கு சென்றதுண்டு. அவற்றைப் பாரீஸ் நகரத்திலிருந்த உயர்ரக உணவு விநியோக விடுதிகளிலிருந்து தருவிப்போம். பெரும்பாலும் அவை தரமானவை என்பது உறுதி, ஆனால் வயிறு நிறைந்ததில்லை.

Continue Reading →

நாவல்: அசோகனின் வைத்தியசாலை (14)

இரண்டாம் பாகம்

நோயல் நடேசன்சுந்தரம்பிள்ளை வேலைக்கு சேர்ந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. மனைவியும் வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிப்பதால் குடும்பம் வசதியாக வாழ முடிந்தது. இரண்டு பேரின் சம்பளப் பணத்தில் பிள்ளைகளின் பாடசாலை ,வீட்டு வாடகை ,குடும்பச் செலவு என செலவு செய்த பின்பும் கையில் பணம் சேமிப்பாக மிஞ்சியது. இதனால் வீட்டுக்குச்  சொந்தகாரராக வேண்டும் என்ற ஆசை தொத்திக் கொண்டது. எலி வளையானாலும் தனி வளை தேவை என்ற நினைப்பில்  தற்பொழுது இருக்கும் வாடகை வீட்டை விட்டு  சொந்தமாக வீடு வேண்டும் என்ற நினைப்பு மனத்தில்  வந்து விட்டது. அவுஸ்திரேலியாவில் குடி வந்தவர்களின் பொதுவான கனவு, மெய்ப்படுத்த விரும்பி வீட்டுக்  கடனுக்கு, வங்கிகளை அணுகிய போது ‘கவலை வேண்டாம்’ எந்த பிரச்சனையும் இல்லாமல்  கடன் தருவதாக கூறினார்கள்.

Continue Reading →

நாவல்: வேர் மறந்த தளிர்கள் (11, 12, 13, & 14)

11.  மலேசியக் கார்

வே.ம.அருச்சுணன் – மலேசியா‘வாடிய பயிர் சூரியனைக் கண்டது போல்’ பசி வயிரைக் கிள்ளிய நேரத்தில் படைக்கப் பட்ட உணவை உண்ண கேட்கவும் வேண்டுமா? அதிலும்,அம்மா தயாரித்த தேநீர் என்றால் பார்த்திபனுக்கு மிகுந்த விருப்பம்.இரண்டு மூன்று கிளாஸ் தேநீரை உருசித்துக் குடிப்பான்.அம்மாவின் கைப்பதம் அவனைக் கிறுகிறுக்கச் செய்துவிட்டிருந்தது! இதை நன்கு தெரிந்து வைத்திருந்ததால் முன்னெச்சரிக்கையாக அம்மா, பெரிய ஜக்கில் தேநீரைக் கலக்கி கொண்டு வந்திருந்தார்.
        
அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து தான் பிரட்டிய மீகூனை சுவைத்து சாப்பிடும் அழகைப்பார்த்து   இரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் முடிந்த வரை சுவைமிகுந்த உணவை சமைத்துக் கொடுத்து உண்ணக் கொடுத்து மகிழ்வார்.
 

Continue Reading →