ஆர் ஷண்முக சுந்தரம் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு திறன் வாய்ந்த எழுத்தாளர். அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பு அதிகம் பெறாதவர். இலக்கிய சர்ச்சைகள், நகர வாழ்க்கையின் சந்தடி, இவற்றில் எதிலும் சிக்கிக்கொள்ளாத தூரத்தில் அமைதியாக வாழ்ந்தவர். அவருக்கு பணம் தேவைப்பட்டபோதெல்லாம் தன்னுடைய நோட்புக்கில் ஒரு குறு நாவல் எழுதி முடித்துவிடுவார். அதற்கு அவருக்கு ஏதோ சில நூறு ரூபாய்கள் கிடைத்துவிடும். இப்படித்தான் நாகம்மாள், சட்டி சுட்டது (1965), அறுவடை (1960) போன்ற நாவல்கள் எழுதப்பட்டன. இவை அந்நாட்களில் குறிப்பிடத் தக்க எழுத்து என்று சொல்லவேண்டும். இன்று நாகம்மாள், அறுவடை போன்றவை க்ளாஸிக்ஸ் என்றே சொல்லவேண்டும். அவரது நாவல்கள் கோயம்புத்துர் மாவட்டத்து விவசாயிகளின் வாழ்க்கையைச் சுற்றி எழுந்தவை. கிரேக்க அவல நாடகங்களின் மைய இழையோட்டத்தை அவற்றில் காண்லாம். எதிலும் ஒரு மகிழ்ச்சி தரும் முடிவு இருப்பதில்லை. இன்னும் இரண்டு முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லவேண்டும். அவர்கள் இருவரும் ஒரு குறுகிய ஆரம்ப கால கட்டத்தில் இடதுசாரி கூடாரத்தைச் சேர்ந்தவர்களாக விருந்தனர். ஆனால் அதிக காலம் அந்த கூடாரத்தில் தங்கவில்லை. பின்னர் அந்தக் கட்டுக்களைத் தாமே தகர்த்து வெளியே வந்துவிட்டனர். ஒருவர் நாம் சற்று முன்னர் பசுவய்யா என்ற பெயரில் கவிஞராக அறிமுகம் ஆன சுந்தர ராமசாமி (1931). சுந்தர ராமசாமி அதிகம் எழுதிக்குவிப்பவரில்லை. அவருக்கு தன் எழுத்தின் நடை பற்றியும் அதன் வெளிப்பாட்டுத் திறன் பற்றியும் மிகுந்த கவனமும் பிரக்ஞையும் உண்டு. இரண்டாமவர் த. ஜெயகாந்தன் (1931) இதற்கு நேர் எதிரானவர். ஏதோ அடைபட்டுக்கிடந்தது திடீரென வெடித்தெழுவது போல, அணை உடைந்த நீர்ப்பெருக்கு போல, மிகுந்த ஆரவாரத்துடன், நிறைய எழுதித் தள்ளிக் கொண்டிருப்பவர். நிகழ்கால தமிழ் இலக்கியத்தின் ஒரு அடங்காப் பிள்ளை. அவருக்கென ஒரு பெரிய, மிகப் பெரிய விஸ்வாஸம் கொண்ட ரசிகக் கூட்டமே உண்டு.
கவிதை: வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்!
– வ.ந.கிரிதரன்
பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102 இதழில் வெளியான எனது ‘வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்’ கவிதையினையும், எனது வலைப்பதிவுக்காக எழுதிய மேலுமிரு ஆங்கிலக் கவிதைகளையும் இம்முறை ‘வாசிப்பும், யோசிப்பும்’ பகுதியில் பதிவு செய்கின்றேன்.
“ஏய்… என்னப்பா நீ..? இன்னக்கி இருக்கிறவங்க நாளைக்கி இருப்போமானு எந்த “கேரண்டி”யும் இல்ல…! இதுல என்ன சண்டையும் … உயிர் போற வரைக்கும் மூஞ்சில முழிக்க மாட்டேங்கற பகையும்…? எதையும்…மனசுலேயே வச்சிருந்தாத்தானே மன்னிப்புன்னு ஒரு சங்கதிய வேற நடுவுல இழுத்து விட்டுக்கிட்டு அலையனும்….அத… அத… அப்பப்ப மறந்திருவோமே..” எப்போதோ, யாரிடமோ, எந்த சந்தர்ப்பத்திலோ.. சொன்னது, இப்படி ஒரு ரூபம் கொண்டு, எதிர்வரும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும். “எனக்கு நீங்க அண்ணன் மொறையா வேணும்..” எதிரே வந்து நின்று கொண்டு புன் முறுவல் பூக்கிறது அவன் விதி! “சொல்றது போல செய்யறது அவ்வளவு சுலபம் இல்லடா செல்லம்…” என்று அவன் மனதே எள்ளி நகையாட, வந்தவனை ஏறிட்டான்! இவனை வார்த்தெடுத்தபின், அதே அச்சில், பிரம்மன் அவனையும் வார்த்திருக்க வேண்டும்! எத்தனையோ ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருக்கும் முகம்தான். புதியவன் ஒன்றும் இல்லை; பக்கத்து கம்பம்தான்! ஆனால், என்றுமில்லா திருநாளாக இன்று மட்டும் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? அதுவும் உறவு முறையெல்லாம் சொல்லிக்கொண்டு!
இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின்னால் மீண்டும் வேலைக்கு சென்று, வழக்கம் போல் சாமுடன் வேலை செய்து கொண்டிருந்தான் சுந்தரம்பிள்ளை. மாதத்தில் முதலாவது செவ்வாய்க்கிழமையாக இருந்ததால் நிர்வாக குழு உறுப்பினர் கூட்டத்திற்கு வருவார்கள். என்பதால் வைத்தியசாலையில் வேலை செய்பவர்கள் மத்தியில் வழக்கத்தை விட இறுக்கமான தன்மை தெரியும். வேலை செய்பவர்களின் மனங்களில் பதற்றம்,அவர்கள் நடக்கும் வேகம் வழக்திலும் அதிகமாக இருப்பதில் தெரிந்து கொள்ள முடிந்தது. நாய் பகுதி மேற்பார்வையாளரான மேவிஸ் அரைக்கால்சட்டையும் நீல பெனியனும் அணிந்து கொண்டு கரகரத்த குரலில் கட்டளைகளை இட்டுக்கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் வேலை செய்யும் ஜோனும் மாவினும் சிரித்தபடியே தங்கள் வழக்கமான விடயங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். பூனைப்பகுதியில் கெதர் வழக்கத்திலும் பார்க்க அந்த பகுதியைச் சுத்தமாக வைத்திருந்தார். அங்குள்ள பரிசோதனை மேசையை முகம் தெரிவது போல் துடைத்து வைத்திருந்தார்கள். கிருமிநாசினி கலந்த நறுமணம் அந்த இடத்தில் நிறைந்து இருந்தது.
27 கைகொடுத்த இல்லம்
இவர்கள் இவ்வளவு சுயநலமா இருப்பாங்கனு நான் கனவுலக்கூட நினைச்சுப் பார்க்கலிங்க!” மனைவி கடுங்கோபங் கொள்கிறார். வெளிப் பகட்டுக்காகப் பல்லித்துப் பேசி, நயவஞ்சகத்தோடுப்பழகும் வேடதாரிகள் நமக்கு இனியும் வேண்டாம் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டனர் கணவனும் மனைவியும். பெற்றோர் பேசிக் கொண்டிருந்ததை, பார்த்திபன் கேட்டதும் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைகிறான்! தான் செய்த தவற்றினால் குடும்ப மானம் காற்றில் பறந்துவிட்டதே என்று தன்னையே நொந்து கொள்கிறான். பெற்றெடுத்த தாய்க்கும், பல சிரமங்கள்பட்டு வளர்த்த அப்பாவிற்கும் எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டேன்! யாரிடமும் தலைவணங்காத பெற்றோருக்குத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேனே என்று மிகுந்த கவலை கொள்கிறான்! தனது செயலுக்காகக் கூனிக் குறுகிப்போகிறான்! நான் முந்தி நீ முந்தி என்று போட்டிப் போட்டுக் கொண்டு தனக்குப் பெண் கொடுக்க வந்த உறவினர்கள், இப்போது கண்டும் காணாததுபோல் நடந்து கொண்டது குடும்பத்தார் எதிர்ப்பார்க்காத ஒன்று! இதுநாள் வரை மலைபோல் நம்பிக் கொண்டிருந்தவர்கள் தங்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்களே என்று எண்ணிப்பார்த்த போது அவனுக்கு உறவினர்கள் மீது கோபம் கோபமாக வந்தது!
யார் இந்த அருந்ததிராய்? மேகாலயாவின் தலைநகரான சில்லாங்கில் 24 நவம்பர் 1961-வில் கேரளத்தைச் சேர்ந்த ரோஸ்மேரிக்கும் வங்காளத்தின் தேயிலைத் தோட்ட பணியாளரான தந்தைக்கும் பிறந்தவர். இவருக்கு ஒரு வயது இருக்கும்போதே பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து போயினர். கலப்பு மணம் புரிந்து கணவனைப் பிரிந்து வாழ்ந்த தாய்க்கு மகளாகப் பிறந்ததனால் இவருக்கும் ஊரின், உறவின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது. அருந்ததி ராய்க்கு சமூகம் எதிர் உலகமாகத்தான் முதலில் அறிமுகமாகியது. பின்னர் எல்லாவற்றையும் மீறி நீலகிரியில் பள்ளிப்படிப்பை முடித்து தில்லி பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை படிப்பில் சேர்ந்தார். உடன் படித்த ஒருவரைக் காதலித்து மணந்த தால் படிப்பு பாதியில் நின்றது. அந்த வாழ்க்கையும் நான்கு ஆண்டுகள்தான் நிலைத்தது. அவரிடமிருந்து பிரிந்த பின்னர் “பிரதீப் கிரிஷன்’ என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து திரைப் படம் எடுத்தனர். இவ்வாழ்க்கையும் இவருக்கு நிலைக்க வில்லை. இவரின் கட்டற்ற சிந்தனை அடக்குமுறைக்கு அடங்காதவராக இவரை வடிவமைத்திருந்தது. மேலும் புரட்சிச் சிந்தனை மிக்கவராகவும் இவர் இருந்தார். இவரின் முதல் ஆசிரியரே இவரின் தாய்தான். “”உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள். நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்கிற பாடம் அவருக்குச் சூழலே கற்றுக் கொடுத்தது. அதனால் எல்லாவற்றின்மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் என எல்லாவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி படைப்புகளின் மூலம் பலரின் கவனம் பெற ஆரம்பித்தார். இந்நிலையில் தான் 1997-ல் அவர் எழுதிய “த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ (The God of Small things) என்னும் நாவல் புக்கர் பரிசினைப் பெற்றது. புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் இவர்தான்.
– 9th September 2013 –
On the first day of the 24th Session of the United Nations Human Rights Council, we have lost one of the most ardent human rights activist, Sunila Abeyasekara, in Sri Lanka. Sunila represented a unique voice from within the majority Sinhalese community. She fought repression of all forms, be it against Sinhalese, Tamils, women, Muslims and youth. She built an international solidarity network around the globe, which worked on issues of poverty, environment, labour, women’s rights, and emancipation.
1.0 முகப்பு
தமிழில் எழுதப்பட்ட இலக்கணங்களை மரபிலக்கணங்கள், நவீன இலக்கணங்கள் எனப் பாகுபடுத்திப் பார்ப்பது பெரும்பான்மையான ஆய்வறிஞர்களின் துணிபு. அவற்றுள் மரபிலக்கணங்களைப் பட்டியலிட இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்(2010:112), நூற்பா வடிவில் அமைந்திருக்க வேண்டும்(2010:299-300) என்பது இலக்கணவியல் அறிஞரின் கருத்து. அதாவது அறுவகை இலக்கணம் வரை எழுதப்பட்ட நூல்களை மரபிலக்கணங்களிலும், பிறவற்றை நவீன இலக்கணங்களிலும் வைக்கலாம் என்பது அவ்வறிஞரின் கருத்தாகப் புலப்படுகிறது. அக்கருத்து மரபிலக்கணக் காலநீட்சியை அறிவதற்கான கருதுகோள்கள் எனில், ஏழாம் இலக்கணத்தையும் மரபிலக்கண வரிசையில் வத்துப் பார்ப்பதே பொருத்தமுடையதாக இருக்கும். ஆக, ஏழாம் இலக்கணம் மரபா? அல்லது நவீனமா? என அறிவதாக இக்கட்டுரை அமைகிறது.
1.0 முகப்பு
தமிழில் எழுதப்பட்ட இலக்கணங்களை மரபிலக்கணங்கள், நவீன இலக்கணங்கள் எனப் பாகுபடுத்திப் பார்ப்பது பெரும்பான்மையான ஆய்வறிஞர்களின் துணிபு. அவற்றுள் மரபிலக்கணங்களைப் பட்டியலிட இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்(2010:112), நூற்பா வடிவில் அமைந்திருக்க வேண்டும்(2010:299-300) என்பது இலக்கணவியல் அறிஞரின் கருத்து. அதாவது அறுவகை இலக்கணம் வரை எழுதப்பட்ட நூல்களை மரபிலக்கணங்களிலும், பிறவற்றை நவீன இலக்கணங்களிலும் வைக்கலாம் என்பது அவ்வறிஞரின் கருத்தாகப் புலப்படுகிறது. அக்கருத்து மரபிலக்கணக் காலநீட்சியை அறிவதற்கான கருதுகோள்கள் எனில், ஏழாம் இலக்கணத்தையும் மரபிலக்கண வரிசையில் வத்துப் பார்ப்பதே பொருத்தமுடையதாக இருக்கும். ஆக, ஏழாம் இலக்கணம் மரபா? அல்லது நவீனமா? என அறிவதாக இக்கட்டுரை அமைகிறது.