நோர்வேத் தமிழ் நாவல்: நாளை – 1

– நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன.  இவரது ‘நாளை’ நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. – பதிவுகள் –

அத்தியாயம் ஒன்று!

- இ. தியாகலிங்கம் -அந்த இரைச்சல் தாங்க முடியாததாக இருந்தது. கழுவும் இயந்திரத்தின் இத்தகைய ஒலங்களைச் சகித்தல் அவள் வேலையின் ஒரு அம்சமே. இன்றைக்கு நித்தியாயினிக்குத் தாங்க முடியாததாக இருந்தது. ஒரே தலைவலி. மற்றவர்கள் காதில்லாதவர்கள் போன்ற பாவனையில் வேலையில் ஈடுபட்டிருந்தது அவளுக்கு எரிச்சல் ஓட்டியது.  ‘என்ன மனிதர்கள்? பணத்திற்காக எதுவுமா? வேலை ஸ்தல உரிமைகள் மீறப்படுகின்றன. ஏதாவது முணு முணுப்பு? இலங்கையில் அடங்கிக் கிடந்தார்கள். இங்கு? புதிய பூமியும் புதின வானமும் நாடி வந்த இடத்தில்? சுதந்திரம் என்பது எங்களுக்கு எட்டாத கனவுகளா?’–இவ்வாறெல்லாம் அவளுடைய மனசு தறிகெட்டோடியது.  ‘செவி உடல் உறுப்பு. உடலா நோகடிக்கப்படுகிறது? இல்லை. காதிலும் ஆழமானது. மனசு நோகடிக்கப்படுகின்றது. மனசு சம்பந்தப்பட்ட உணர்வுகள் காயமடைகின்றன. நோகடிப்பதும் காயப்படுத்துவதும் வன்முறை சார்ந்தது என்று இவர் தர்க்கிப்பார். இவர் கற்பனை செய்யும் உலகம் வேறு. யதார்த்த உலகம் வேறு அநுபவங்களைக் கொண்டிருக்கிறது. பணத்தின் விஸ்வ ரூபம்! பணத்தின் முன்னால் மண்டியிடும் மனிதன் இயந்திரமாகி விட்டான். ஆன்மாவின் விலையா பணம்?’ இவருடைய சிந்தனைச் செல்வாக்குகள் தன்னைப் பீடிப்பதை உணருகின்றாள். அவற்றில் இருந்து அந்நியப்படவும் அவளால் முடியவில்லை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 45: கவிஞர் வி.கந்தவனத்தின் கவிதைகள் பற்றி….

கவிஞர் கந்தவனம்இலங்கையின் மரபுக் கவிஞர்களில் கவிஞர் வி.கந்தவனத்துக்கு முக்கியமானதோரிடமுண்டு. ‘கவியரங்குக்கோர் கந்தவனம்’ என இரசிகமணி கனகசெந்திநாதனால் விதந்துரைக்கப்பட்டவர் கவிஞர் கந்தவனம். என் பால்ய காலத்திலேயே இலங்கையில் வெளியாகிய பத்திரிகைகள், சஞ்சிகைகளினூடாக இவரது பெயர் எனக்கு அறிமுகமானது. கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி), நிலாவணன், திமிலைத்துமிலன், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, மஹாகவி, இ.முருகையன், மதுரகவி இ.நாகராஜா,  வேந்தனார், அம்பி என்று தொடரும் இலங்கைத்தமிழர் கவிதையுலகில் கவிஞர் கந்தவனத்துக்கொரு நிலையான இடமுண்டு.

கவிஞரின் படைப்புகளில் எனக்குப் பிடித்த மிக முக்கியமான தொகுப்புகளாக நான் கருதுவது ‘பாடு மனமே’, ‘இலக்கிய உலகம்’, மற்றும் ‘கீரிமலையினிலே‘ ‘பாடு மனமே’ தொகுப்பிலுள்ள நல்லதொரு கவிதை ‘பாவலனாகிடல் வேண்டும்’.

‘காலை, மாலை மற்றும் இரவு வேளைகளிலெல்லாம் மானுடர் வேலை செய்கின்றார். காலம் முழுவதும் இவர் செய்யும் வேலை எந்தவிதப் பயனுமற்றது. இவ்விதமாக வேலை , வேலை என்று நாளும் பொழுதும் வாழும் மானிடர் வாழ்வில் துயரம் சூழ்ந்துள்ளது. சோலி, சுரட்டில் அவர்தம் வாழ்வு சோர்ந்து தளர்ந்திடுகின்றது. வஞ்சகமும், சூதும், களவும் நிறைந்தவர் தஞ்சம் பெறுமுலகில், அவர்களுக்கஞ்சி நீதியும் மறைந்து விடுகிறது. பஞ்சக் கொடுமைகள், சாதிச்சண்டைகள் மலிந்த இவ்வுலகு கண்டு நெஞ்சம் வெடிக்கிறது.’

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 44: நாஞ்சில் நாடனின் பட்டியல் மற்றும் பட்டியல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்…..

வாசிப்பும், யோசிப்பும் 44:  நாஞ்சில் நாடனின் பட்டியல் மற்றும் பட்டியல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்.....

நாஞ்சில் நாடனின் இளம் எழுத்தாளர்கள் பற்றிய ஆனந்த விகடன் பட்டியல் பற்றிய தனது கருத்தினை தனது வலைப்பதிவில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கின்றார். அதிலவர் ‘முதல்கேள்வி இப்படி பட்டியல்போடுவது சரியா என்பது. உலகமெங்கும் எங்கு இலக்கியம் உள்ளதோ அங்கெல்லாம் இப்படி பட்டியல் போடப்பட்டுக்கொண்டே இருக்கிறதென்பதையும், இலக்கியம் தோன்றியநாள் முதல் இப்படிப்பட்ட பட்டியல்கள் வழியாகவே அது தரம் காணப்பட்டு தொகுக்கப்பட்டு முன்வைக்கப்படுகிறது என்பதையும் கோயிந்துக்களுக்கு கொட்டை எழுத்தில்தான் சொல்லவேண்டியிருக்கிறது. சங்ககால நூல்களெல்லாம் அப்படிப்பட்ட பட்டியல்களே. ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் பன்னிரு திருமுறைகள் என்பவை எல்லாம் பட்டியல்களே’ என்று கூறியிருக்கின்றார்.

‘ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் பன்னிரு திருமுறைகள் என்பவை எல்லாம் பட்டியல்களே’ என்று ஜெயமோகன் பொதுவாகக் கூறியிருக்கிறார். இது தவறு. இதற்கான ஆதாரங்களை வைத்து அவர் கூறியிருக்க வேண்டும். ஐம்பெருங்காப்பியங்களெல்லாம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நின்ற இலக்கியப் படைப்புகள். அதன் பின்னர்தான் பதினான்காம் நூற்றாண்டில் ஐம்பெருங்காப்பியங்களென்ற பெயரில் மயிலைநாதர் என்பவரால் அழைக்கப்பட்டதாக, – சொ.ஞானசம்பந்தன் என்னும் தமிழறிஞர் தனது ‘இலக்கியச் சாரல்’ என்னும் வலைப்பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

Continue Reading →

நிகழ்வுகள்: சென்னைப் பல்கலைக்கழகம் , மலாயாப் பல்கலைக்கழகம், ஸ்ரீசாய்ராம் கல்வி நிறுவனம், கலைஞன் பதிப்பகம், PENA, ITBM இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் ‘கவிதையாய் விரியும் வாழ்வு’ (மலாய், தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளில் கருத்தாக்கம்) தொடக்க விழா

நிகழ்வுகள்: சென்னைப் பல்கலைக்கழகம் , மலாயாப் பல்கலைக்கழகம், ஸ்ரீசாய்ராம் கல்வி நிறுவனம், கலைஞன் பதிப்பகம், PENA, ITBM இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் ‘கவிதையாய் விரியும் வாழ்வு’…

Continue Reading →

சிறுகதை: தேர்

சுப்ரபாரதிமணியன்தூரத்துப் பார்வைக்கு தேர் போலத்தான் இருந்தது. தேருக்கு உரிய சிற்பங்களோ அழகோ இல்லை. தேர் போன்ற வடிவில் இருந்தது. பாடையைத் தூக்குவது போல் அதைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். பிளாஸ்டிக் குடங்கள், பக்கெட்டுகள், கழிவுப் பொருட்கள், டியூப் லைட்டுகள், மின்சார ஒயர்கள் என்று தாறுமாறாய் அந்தத் தேர் வடிவமைப்பில் இருந்தன. கூர்ந்து கவனிக்கிற போது ஒரு தேர் வடிவம்தான். ஆனால் முழுக்க கழிவு மற்றும் குப்பைப் பொருட்களால் ஆனது என்று தெரிந்தது அப்பாசாமிக்கு.  பாடையைப் போல் அதைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் ஏதோ சப்தமிட்டு வருவது தெரிந்தது. தேருக்குப்பின்னால் இருவர் இருவராக வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அவர்களும் ஏதோ சப்தமிட்டு வருவது தெரிந்தது. பேனர்களும், வாசக அட்டைகளும் பிடித்தபடி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மெல்ல நெருங்க கோஷங்கள் புரிய ஆரம்பித்தன. சின்ன ஊர்வலம்தான்.  அட என்ன… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துள் புகுகிறதே ஊர்வலம். ஒருவாரமாய் போலீஸ் காவலால் திணறியது மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இன்றைக்குக் காணோம். ஓரிருவர் பத்திரம் எழுதும் இடத்தில் தென்பட்டார்கள். ஊர்வலம் காம்பவுண்டுகள் புகுந்தது. கோஷங்கள் சற்று உரத்துக்கிளம்பின. ஊர்வலத்தை யாரும் தடுக்கவில்லை.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ – நூலகம்: திரைப்படம், இலக்கியம் சார்ந்த நூல்கள், திரைப்படங்கள் தேவை.

தமிழ் ஸ்டுடியோ - நூலகம்: திரைப்படம், இலக்கியம் சார்ந்த நூல்கள், திரைப்படங்கள் தேவை.நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தை, state-of-the-art என்று சொல்லக்கூடிய வகையில், சினிமா தொடர்பான எல்லா தகவல்களையும், தேவைகளையும் ஒருங்கே கொடுத்து, நிறைய திரைப்பட ஆர்வலர்களை, ஆராய்ச்சியாளர்களை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். திரைப்படம் சார்ந்த நூல்கள், திரைப்படங்கள், குறும்படங்கள், மற்ற மொழி திரைப்படங்கள், மற்றமொழி குறும்படங்கள், திரைப்படம் சார்ந்த சிற்றிதழ்கள் திரைப்பட கலைஞர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய தகவல் களஞ்சியம், என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, அதனை திரைப்பட ஆர்வலர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தமிழ் ஸ்டுடியோவின் எண்ணம். விரைவில் ப்ரொஜெக்டர் வாங்கியதும், தமிழ் ஸ்டுடியோ குறுந்திரை தொடங்கி, தினமும் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் திரைப்படம் திரையிட ஏற்பாடு செய்யப்படும். நல்லப் படங்கள், சுயாதீன படங்கள், குறும்படங்கள் என எல்லா வகையான திரைப்படங்களையும் இந்த திரையரங்கில் காணலாம். தவிர, நண்பர்கள் தாங்கள் விரும்பும் படத்தை காண, முன்பதிவு செய்துக்கொண்டு, படத்தின் பெயரை தெரிவித்தால், அவருக்கு மட்டும் பிரத்யேக திரையிடலும் உண்டு. இதற்காக தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் கிடைக்கும் படங்கள் அனைத்தும் விரைவில் தமிழ் ஸ்டுடியோ இணையத்தில் வெளியிடப்படும்.

Continue Reading →

நூல் அறிமுகம்: உள்ளும் வெளியும் – ஆய்வின் பரவசம்

உள்ளும் வெளியும் - ஆய்வின் பரவசம் ஆய்வெழுத்தின் வரையறை மற்றும் வடிவு ஒழுங்கினைக் குலைத்து தேடலைத் தூண்டும் முனைப்புடன் வெளிவந்திருப்பதுதான் “உள்ளும் வெளியும்” கொண்டிருக்கும் தனித்துவமாகிறது. புலம்பெயர் இலக்கியம் குறித்தான உரையாடலில் தவிர்த்துவிடமுடியாமல் நமக்குமுன் தோன்றுவது குணேஸ்வரனின் விம்பம்தான். அந்தளவிற்கு தாடனம் வந்துவிட்டது அவருக்கு. எந்த வகைப்பாட்டிலும் அவரால் தேய்ந்தெழுதமுடிகிறது. எனது வாசிப்பனுபவத்தில் குறிப்பிடுவதானால் அவர் தன்னையோர் ஆய்வாளனாக முன்னிலைப்படுத்தாமல் வாசகனாகவே தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தி வருகிறார். உள்ளும் வெளியும் பிரதியில் நேர்ந்திருப்பதுமிதுதான். உள்ளடக்க ரீதியில் வகைப்படுத்தினால் நான்கு உள்ளும் ஐந்து வெளியுமாக ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதிலும் இரு கட்டுரைகள் ஆய்வு நோக்கற்றவை. எவ்வாறாயினும் எல்லாக் கட்டுரைகளுமே பொதுநிலைப்பட்ட வாசிப்புக்கேற்றதாகவே எழுதப்பட்டுள்ளன.  ஒவ்வொரு பக்கத்திலும் குணேஸ்வரனின் மெய்யான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் உணர முடிகிறது. ஓவ்வொரு கட்டுரையையும் ஓர் ஆய்வாக மட்டும் அணுகாமல் தனது வாசிப்பனுபவத்தில் கிளர்ந்த பரவசத்தையும் திளைப்பையும் வாசகனிடத்தில் தொற்றவைத்துவிடும் முனைப்புடனும் அணுகுகிறார். ஓர் எளிமையானதும் நுட்பமானதுமான புனைவுத் தன்மை  கொண்ட மொழியைக் கையாள்கிறார். இம்மொழியானது வாசகனை முழு ஈடுபாட்டுடன் அணுகச் செய்வதில் பெரும்பாங்காற்றுகிறது என்பதுடன் புதிய தளங்களுக்கும் இட்டுச் செல்கிறது.

Continue Reading →

ஈழத்து அமுதுவின் இலக்கியத் தொண்டுகள்

இளவாலை அமுதுப் புலவர்' பேராசிரியர் கோபன் மகாதேவாஇந்த ஆய்வுக் கட்டுரையின் நாயகர் 2010 மாசியில் தனது 91வது வயதில் மறைந்த ‘இளவாலை அமுதுப் புலவர்’ என்று வழங்கப்பட்டு வந்த ஈழத்தின் பழுத்த நூலாசிரியராகிய (த.) சவரிமுத்து அமுதசாகரன் அடைக்கலமுத்து ஆவார். அவரின் 10-நூல்களுள் சிறந்த மூன்று வரலாற்று நூல்கள், இரண்டு கவிதை நூல்களை அடக்கி, 1200-பக்கங்களுடன் 2008இன் ‘தொகுப்புநூல்’ லண்டனில் 2010-தையில் வெளிவந்தது. எனது இச் சிற்றாய்வு பெருமளவில் அத் தொகுப்பு நூலையும் அவ்வாசிரியருடன் நான் கொண்டிருந்த 10-12 வருட இலக்கியத் தொடர்பையுமே தளமாகக் கொண்டு அத் தொகுப்பிலுள்ள ஐந்து நூல்களையும் அங்குள்ள வரிசையிலேயே திறனாய்வாக விவரிக்கின்றது.

1. அன்பின் கங்கை அன்னை தெரேசா (234-பக்கம்): இப் பகுதி-நூலுக்கு அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், அன்று ஈழகேசரி ஆசிரியரான ஈ.கே. ராஜகோபால், கணக்காளர்-எழுத்தாளர் ஐ. பேதுருப்பிள்ளை, கலாநிதி அ.பி. ஜெயசேகரம் அடிகள் ஆகிய நால்வர் முன்னுரையும், ஆசிரியர், தன் வாசற்படி உரையையும் எழுதியுள்ளனர். கவிஞர் வைரமுத்து ஒரு வாழ்த்துக் கவிதை புனைந்துள்ளார். இந்நூல் ‘பூங்கொடி மாதவன் சபைத்’ துறவிகளுக்கும் தன் மனைவி ஆசிரியை திரேசம்மாவுக்கும் காணிக்கையாக 1997-2002-2005 இல் மூன்றுமுறை பதிப்பித்து வெளிவந்த, அமுதுவின் முதலாவது ‘பஞ்சாமிர்தம்’.

Continue Reading →

ஈழத்து அமுதுவின் இலக்கியத் தொண்டுகள்

இளவாலை அமுதுப் புலவர்' பேராசிரியர் கோபன் மகாதேவாஇந்த ஆய்வுக் கட்டுரையின் நாயகர் 2010 மாசியில் தனது 91வது வயதில் மறைந்த ‘இளவாலை அமுதுப் புலவர்’ என்று வழங்கப்பட்டு வந்த ஈழத்தின் பழுத்த நூலாசிரியராகிய (த.) சவரிமுத்து அமுதசாகரன் அடைக்கலமுத்து ஆவார். அவரின் 10-நூல்களுள் சிறந்த மூன்று வரலாற்று நூல்கள், இரண்டு கவிதை நூல்களை அடக்கி, 1200-பக்கங்களுடன் 2008இன் ‘தொகுப்புநூல்’ லண்டனில் 2010-தையில் வெளிவந்தது. எனது இச் சிற்றாய்வு பெருமளவில் அத் தொகுப்பு நூலையும் அவ்வாசிரியருடன் நான் கொண்டிருந்த 10-12 வருட இலக்கியத் தொடர்பையுமே தளமாகக் கொண்டு அத் தொகுப்பிலுள்ள ஐந்து நூல்களையும் அங்குள்ள வரிசையிலேயே திறனாய்வாக விவரிக்கின்றது.

1. அன்பின் கங்கை அன்னை தெரேசா (234-பக்கம்): இப் பகுதி-நூலுக்கு அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், அன்று ஈழகேசரி ஆசிரியரான ஈ.கே. ராஜகோபால், கணக்காளர்-எழுத்தாளர் ஐ. பேதுருப்பிள்ளை, கலாநிதி அ.பி. ஜெயசேகரம் அடிகள் ஆகிய நால்வர் முன்னுரையும், ஆசிரியர், தன் வாசற்படி உரையையும் எழுதியுள்ளனர். கவிஞர் வைரமுத்து ஒரு வாழ்த்துக் கவிதை புனைந்துள்ளார். இந்நூல் ‘பூங்கொடி மாதவன் சபைத்’ துறவிகளுக்கும் தன் மனைவி ஆசிரியை திரேசம்மாவுக்கும் காணிக்கையாக 1997-2002-2005 இல் மூன்றுமுறை பதிப்பித்து வெளிவந்த, அமுதுவின் முதலாவது ‘பஞ்சாமிர்தம்’.

Continue Reading →

பதிவுகளில் அன்று: HERE IS THE RUB!

‘பதிவுகளில் அன்று’ பகுதியில் திஸ்கி மற்றும் அஞ்சல் எழுத்துருக்களில் பதிவுகளில் அன்று வெளியான படைப்புகள் ஒருங்குறிக்கு மாற்றப்பட்டு அவ்வப்போது பிரசுரமாகும். அந்த வகையில் R.P. ராஜநாயஹம் எழுதிய இக்கட்டுரையும் பிரசுரமாகின்றது. – பதிவுகள் –

பகுதி 1
 R.P. ராஜநாயஹம்Criminals are Creative Artists  என்று சொல்லப்படுகிறதல்லவா? அதை ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் மெய்யாக்கியுள்ளார்கள். ‘ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகையின் ஒரு பகுதி காலச்சுவடு 42ல் வெளி வந்த பிறகு 43வது இதழில் மோகனரங்கன், நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார்.  அதை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் ‘நாச்சார் மட விவகாரம்’ என்று விகாரமாக வெளிப்பட்டது. அப்போது திண்ணையில் கண்ணனின் விவாதமாக வந்ததில் கீழ்கண்டவாறு ஒரு பகுதியில் குறிப்பிட்டிருந்தார். ‘ராஜநாயஹத்தை இன்றுவரை நான் சந்தித்ததில்லை.  காலச்சுவடின் எந்த அரங்கிலும் அவர் கலந்து கொண்டதில்லை. ஊட்டி தளையசிங்கம் இலக்கிய அரங்கை பற்றிய ராஜநாயஹத்தின் பதிவு காலச் சுவடுக்கு வரும்வரை அவரோடு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.  அவரை நாங்கள் அனுப்பி வைத்ததாக ஜெயமோகன் ஆதாரமின்றி அவதூறு செய்து வருகிறார்.  ராஜநாயஹம் அவர் பெயரில் கட்டுரை எழுதினார்.  புனைபெயரில் அல்ல.  கட்டுரையாக எழுதினார். புனைவாக அல்ல. ‘  என்று எழுதி, பின் தொடர்ந்து எழுதும்போது ‘ஆர்.பி. ராஜநாயஹம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.  ஜெயமோகன் அதன்  நகலை நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார்.  அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்களை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துக்களை சேர்த்தும் அனுப்பியுள்ளார்.  நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது.  திண்ணைக்கு  அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்க முடியும்.  என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக் கொள்கிறேன்.’  என்று சவால் விட்டிருந்தார். அப்போது ஜெயமோகன் மூச்சேவிடவில்லை.  தொடர்ந்து அந்தர் தியானம்.  தேள் கொட்டிய திருடனின் நிலை.

Continue Reading →