சிறுகதை: சந்திரமதி

 நவஜோதி ஜோகரட்னம்., லண்டன். சொந்தமென்றும், உறவென்றும், இலக்கியமென்றும், கலையுலகென்றும் மறைந்துகொண்டிருப்போரின் நினைவுகள் மனதைப் பம்பரமாக்கி, காலம் என்ற ககன வெளியில் சிதைத்தெறியும் துயரில் நான். நிம்மதி தேடி அலைகிறது மனம். நிற்பதுவும் நடப்பதுவும் வெறும் தோற்ற மயக்கங்களோ என்று  சிந்தனை சிலிர்க்கிறது. வீட்டில் நடந்துபோன துயர் அனுபவங்களும் மேலும் துயர் சோபையைக் கூட்டுகிறது. ஏன் சிந்தனை அலையைக் குறிக்கிட்டு தொலைபேசி அழைப்பு அலறிக்கொண்டிருக்கிறது. மீண்டும் நிதர்சன உலகில் நான். இன்னுமொரு தொலைபேசி அழைப்பு. ஒரே கதையைத் திரும்பத் திரும்ப சொல்லப்போகும் அழைப்பு மணி அது. இன்னுமொரு திகிலில் கதையைக் கொண்டு சேர்க்கப் போகிறதா அந்த அழைப்பு மணி. அழைக்காத விருந்தாளியாக  ஒலிக்கிறது அந்த அழைப்பு மணி. அழைப்பிற்கு பதில் சொல்லாமல் விடலாமோ என்று நினைத்தேன். அது நாகரீகமில்லை என்று மனதில் பட்டது.

‘ஹலோ’ என்றேன்

‘நான் சந்திரமதி கதைக்கிறேன்’

ஓ சந்ரமதியா? நெடுநாளாhகிவிட்டது.  என்ன விடயம்?

‘எனக்கொரு உதவி செய்ய வேணும் மாதங்கி. உங்களுக்கு லண்டனில் இருக்கிற நல்ல சமூகசேவையாளர்கள் என்று பலரையும் தெரியும்தானே! ஆங்கிலம் நல்லாகக் கதைக்கக்கூடிய ஒரு பொம்பிளை ஒருவரை அறிமுகஞ் செய்து தருவீங்களோ?’  

‘ஏன் உங்களுக்கு கணவர் பிள்ளைகள் இருக்கிறார்கள் தானே! உதவி செய்ய மாட்டார்களோ?’

‘எல்லோரும் இருக்கிறார்கள்தான். ஆனால்.’

மிக மோசமான துயரத்தின் மௌனத்தில் நிரம்பிய விசும்பல் அவளது பதிலில் ஒலித்தது.

Continue Reading →

பாரிஸ் மாநகரில் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்” சிறப்பிதழ் வெளியீடு..! ‘ஞானம்” ஆசிரியரின் பாரிய பணிக்குப் பாராட்டு..!!

ஞானம் புலம் பெயர் இலக்கியச்சிறப்பிதழ்.இளங்கோவன் உரையாற்றுகின்றார். அருகில் ஞானம் ஆசிரியரும், துனைவியாரும்.‘போர்ச்சூழலில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் போர் இலக்கியங்கள் மூலமே வெளிக்கொணரப்படுகின்றன. போர் இலக்கியத்தின் முக்கிய பரிமாணம் அவை போரின் சாட்சியங்களாக அமைவதுடன் போரின் நிலைமைகளை, கள நிலவரங்களை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி உலகின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புவதுதான். ‘ஞானம்” சஞ்சிகையின் 150 -வது இதழை, போர் இலக்கியச் சிறப்பிதழாக 600 பக்கங்களில் வெளிக்கொணர்ந்தோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதப்படும் இலக்கியங்கள் தொகுக்கப்படல் வேண்டும். சங்க கால புறநானூறுப் பாடல்கள் தொகுக்கப்பட்டதால்தான் நாம் அன்றைய தமிழரின் போர்பற்றி அறிய முடிகிறது. இத்தகைய பாரம்பரியத்தில் தொகுக்கப்பட்டதுதான் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்” என்ற தொகுப்பாகும்.” இவ்வாறு ‘ஞானம்” சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தி. ஞானசேகரன் அண்மையில் பாரிஸ் மாநகரில் நடைபெற்ற ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்” ஞானம் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தி. ஞானசேகரன் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது: ‘போர் இடம்பெறும் வேளையில் உள்நாட்டில் இருப்பது தமது உயிர் பாதுகாப்பிற்கு ஏற்றதல்ல என்று அஞ்சி பல்வேறு நாடுகளுக்குச் சென்றவர்கள் தமது நாட்டினைப் பிரிந்து சென்ற ஏக்கத்தினையும், சென்றடைந்த நாடுகளில் தமக்கு ஏற்பட்ட அல்லல் நிறைந்த அனுபவங்களையும் பதிவு செய்யும் இலக்கியம் புலம்பெயர் இலக்கியங்கள் என வகைப்படுத்தப்பட்டன. நாம் தொகுத்த இந்தச் சிறப்பிதழில் போர்க் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியவர்களின் பயண அனுபவங்கள், தாயக நினைவுகள், புலம்பெயர் வாழ்வின் அவலங்கள், கலாசாரக் கலப்பு மற்றும் முரண்பாடு, அகதி நிலை, நிறவாதம், புதிய சூழல்சார் வெளிப்பாடுகள், பெண்களின் விழிப்புணர்வு, மற்றும் விடுதலை, அனைத்துலக நோக்கு, அரசியல் விமர்சனம் முதலியவற்றைப் பிரதான உள்ளடக்கக் கூறுகளாக அவதானிக்க முடியும். இத்தெகுப்பில் 85 சிறுகதைகளும், 125 கவிதைகளும், 50 கட்டுரைகளும், நான்கு நேர்காணல்களும் அடங்கியுள்ளன. இந்த போர் இலக்கியம், மற்றும் புலம்பெயர் இலக்கியம் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கப்பட்ட இலக்கிய வகைமைகளாகும்.” என்றார்.

Continue Reading →