ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்: “ஈழத்தமிழர் திரைப்பட முயற்சிகள்”

நிகழ்ச்சி நிரல்பிரதம பேச்சாளர் உரை: “ஈழத்தமிழரின் சினிமாப்பயணம்” – வயிரமுத்து திவ்வியராஜன் சிறப்பு பேச்சாளர்கள் உரை:“சர்வதேசத்தரத்தை நோக்கி எமது சினிமா ” – கென் கந்தையா“புலம்பெயர் தமிழ்ச்சினிமாவும்…

Continue Reading →

சிறுகதை: துன்பம் நேர்கையில்..!

குரு அரவிந்தன் – ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக குடும்பத் தலைவனை இழந்து நிர்க்கதியாய் இருப்பவர்களுக்கு உதவும் நல்ல நோக்கத்தோடு செயற்படும் அன்பு நெறிக்காகப் புனையப்பட்ட சிறுகதை –

சீதா..!
யாரோ வாசலில் கூப்பிடும் சத்தம் கேட்டது.

அவள் கனவிலிருந்து வெளிவந்து கண் விழித்துப் பார்த்தாள். தட்டிக்குள்ளால் நுழைந்த வெளிச்சம் கண்ணுக்குள் பட்டுத் தெறித்ததிலிருந்து விடிந்து போயிருப்பது தெரிந்தது.

‘யாராய் இருக்கும்..?’ நெஞ்சில் ஒருவித பய உணர்வு சட்டென்று தேங்கி நின்றது.

மீண்டும் அதே குரல் கேட்டது. கவனமாகக் காது கொடுத்துக் கேட்டாள், பெண் குரல், பக்கத்து வீட்டு ரேவதி மாமியின் குரலாகத்தான் இருக்கும் என்ற நினைப்போடு அவசரமாக எழுந்து சோம்பல் முறித்து, கூந்தலை அள்ளி முடிந்து கொண்டாள்.

இப்போதுதெல்லாம் முன்புபோலப் பயப்பட வேண்டியதில்லை. நாட்டில் நடப்பதைப் பார்த்தால், ஆட்சி மாறினாலும் அதிகாரம் மாறாமலே இருப்பது போன்ற ஒருவித பிரேமை தோன்றலாம். ஆனாலும் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. முன்பெல்லாம் யாராவது அழைத்தாலே பயம் பிடித்துக் கொள்ளும். வாசல்வரை வந்து அழைத்துச் சென்றால், அப்புறம் பிணமாகத்தான் வீடு வரவேண்டும். இல்லாவிடால் தொலைந்து போனவர்களின் பட்டியலில் இடம் பெறவேண்டும். எதுவாக இருந்தாலும் முடிவு என்னவென்பதை வந்தவர்களே தீர்;மானிப்பார்கள். எஞ்சியிருக்கும் நீங்கள்தான் அந்த இழப்பின் வலியைக் காலமெல்லாம் சுமக்க வேண்டிவரும்.

இவளது கணவனையும் ஒரு நாள் அதிகாலையில் இப்படித்தான் வெளியே வரும்படி அழைத்துக், கூட்டிச் சென்றார்கள். அப்புறம் கணவனுக்கு என்ன நடந்தது, இருக்கிறானா இல்லையா என்றுகூட இதுவரை தெரியவில்லை. சித்திரவதை முகாமுக்கு அவனைக் கொண்டு சென்றதாகவும் கதைகள் அடிபட்டன. ஒரே நாளில் அவளது தலைவிதி மாற்றப்பட்டிருந்தது. கைக்குழந்தையோடு தனித்துப் போன அவளது வாழ்க்கை இதுவரை அர்த்தமற்றதாய் போயிருந்தது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இதுவரை காலமும் அவள் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. குழந்தைக்காகவாவது வாழவேண்டும் என்று அவள் உறவுகளால் நிர்பந்திக்கப் பட்டாள். வருமானத்திற்கு எங்கே போவது, அதுவே பெரிய தொரு கேள்விக்குறியாய், பூதாகரமாக கண்முன்னால் பயம் காட்டியது. யுத்த சூழலில் யாரும் வலிய வந்து உதவுவதற்கு முன்வரவில்லை. தெரியாத வேலை என்றாலும், இன்னும் ஒரு உயிர் வாழவேண்டுமே என்ற ஆதங்கத்தோடு அடுத்த நேரக் கஞ்சிக்காகக் கூலி வேலைக்கும் சென்றாள். ஆனாலும் என்னதான் மறக்க நினைத்தாலும்,  அவளது கணவனை அன்று அழைத்துச் சென்ற அந்த வெள்ளைவான் மட்டும், யமதர்மனின் எருமைமாடுபோல, அவள் கண்ணுக்குள் அடிக்கடி நிழலாடிக் கொண்டே இருந்தது.

Continue Reading →

ஹரோ இலக்கிய சந்தியும் Post Code War உம்.

ஹரோ இலக்கிய சந்தியும் Post Code War உம். - எஸ்.வாசன் -தாம் வாழும் சமூகத்திலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்ட அல்லது மேம்படுத்திக் காட்ட, அச்சமூகத்திலிருந்து தம்மை சற்று வித்தியாசமாக அடையாளப்படுத்துவதும், பின் அந்த அடையாளம் சார்ந்த வேறு சிலரை தன்னோடு இணைத்து தம்மை ஒரு புதிய அடையாளத்துடன் வெளிப்படுத்துவதும் மனித இயல்புகளில் அல்லது பலவீனங்களில் ஒன்றாகும். இது  மொழியால், கலாச்சாரத்தால், அல்லது பண்பாட்டால் ஒன்றிணைந்த மக்கட் கூட்டங்களை கூட  வேறு பல காரணங்களால் பிளவு படும் சாத்தியப்பாட்டினை ஏற்படுத்திவிடுகிறது. இதில் பிரதேச வேறுபாடு முக்கிய கவனத்தினை பெறுகின்றது. தாம் வாழுகின்ற நாட்டில் வட்டாரமாக, வலயமாக, குறிச்சியாக பிரித்துப் பார்த்து தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்வதும் மற்றவர்களை தாழ்வாகப் பார்ப்பதும்  இந்த பிரதேச அடையாள வேறுபாட்டின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும். இதற்கு முக்கிய உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இடம் பெயர்ந்தோரைக் குறிப்பிடலாம். வலிகாமம் வடக்கு பிரதேசத்தை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப் படுத்தி ஸ்ரீலங்கா இராணுவம் அபகரித்துக் கொண்டதன் பின்னணியில் இடம்பெயர்ந்த வலி வடக்கு மக்கள், தமக்கு மிக அண்மையில் 3,4, மைல்கள் இடைவெளியில் மட்டுமே அமைந்த பிரதேசத்திற்கே இடம்பெயர்ந்து இருந்த போதிலும் மற்றைய இடம்பெயராத மக்களால் ஏளனமாக பார்க்கப்படும் நிகழ்வு கடந்த முப்பத்து வருடமாக இன்றளவும் தொடர்கின்றது. இதற்கு அந்த இடம்பெயராத மக்கள் அதற்கு முன்னரேயே அச்சிறிய நிலப்பரப்பிலும் அவர்களை விட தாங்கள் மேன்மையானவர்கள் என்ற மனப்பான்மையைக் கொண்டிருந்ததே காரணமாகும்.

இச் சிறிய வட்டார வலய வேறுபாடுகள் காரணமாக தமக்குள் உருவாக்கிக் கொண்ட உதைபந்தாட்ட அணிகள், கிரிக்கெட் அணிகள் மூலமாக அதன் ரசிகர்கள் மோதிகொள்வதும் நாம் அடிக்கடி  அறிகின்ற  தகவல்கள். இவை உலகெங்கும் நடைபெறுகின்ற சாதாரணமான நிகழ்வுகள்.  இங்கு லண்டனில் இன்னொமொரு விசித்திரமான வழக்கு இருக்கின்றது. அது Postcode War . இது இங்கு வாழும் சிறுபான்மை சமூகங்களில் அதுவும் கறுப்பின பதின்ம வயது இளைஞர்களிடம் தொற்றிக் கொண்டுள்ள ஒரு வியாதி. இவ் வழக்கத்திபடி என்றோ ஒரு காலத்தில் லண்டன் நகரசபை தனது பரிபாலன வசதிக்காக Postcode வாயிலாக  பிரித்துக் கொண்ட பிரிவுகளில்  ஒரு Postcode பகுதியில் வாழும் இளைஞர்கள் மற்றைய Postcode பகுதியில் வாழும் இளைஞர்களுடன் எவ்வித அடிப்படை காரணங்களும் இன்றி மோதல்களில் ஈடுபடுவார்கள். இம்மோதல்கள் வருடாவருடம் பல கொலைகளில் முடிவடைவது வழக்கம். இதில் வருத்தப்பட வேண்டிய முக்கிய விடயம் இந்த மோதல்களில் இரத்த உறவுகளே ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது. இதில் Postcode வேறுபாடு காரணமாக ஒரே தெருவில் எதிரும் புதிருமாக வசிக்கும் அயல் வீட்டு இளைஞர்களும் மோதிக்கொள்வது விசித்திரமானதும் வேதனை தருவதுமாகும்.

Continue Reading →

மூத்த எழுத்தாளர் பத்மஸ்ரீ சார்வாகன் மறைந்தார்!

தமிழ்நாட்டின் மூத்த எழுத்தாளரும் தொழுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணருமான பத்மஸ்ரீ ஸ்ரீநிவாசன் என்ற சார்வாகன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை  சென்னை திருவான்மியூரில் வால்மீகி நகரில் மறைந்தார்.…

Continue Reading →

திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் துறையினரின் தடைகள்!

திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் துறையினரின் தடைகள்!‘தொன்மைமிகு தெட்சண கைலாய திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளுக்கு தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால் தடை’ எனப் பொருள்படும் செய்திகள் 18.12.2015ஆம் திகதியன்றும் அதன் பின்னரும் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தங்கள் கவலையை வெளிப்படுத்திய எண்ணற்ற மக்களுக்கு, கோணேஸ்வரம் கட்டுமானப் பணிகள் சார்ந்த உண்மைகளைக் கூறவேண்டிய கடப்பாடு காரணமாக இந்த அறிக்கையை ஊடகங்கள் வாயிலாக சமர்ப்பிக்கிறோம்.

கோணேசர் ஆலயத்தின் நிர்வாகத்தை சீராக்க வேண்டி திருகோணமலை மக்கள் சட்ட ரீதியாக எடுத்துக்கொண்ட அயராத முயற்சியினால், உயர்நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி ஆகியோரால் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில், நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக நாம் தெரிவு செய்யப்பட்டு, 17.01.2010ஆம் திகதியன்று ஆலய நிர்வாகத்தினை பொறுப்பேற்றுக் கொண்டோம்.

ஆன்மீகத் தேடலுக்குரிய அதிர்வு பூரணமாய் அமையப்பெற்றது இப்புனிதத் தலம்.  இந்துக்களின் புண்ணிய பூமி. பல்லின மக்களும் பயபக்தியுடன் சேவிக்கிற சேத்திரம். எம்மை நம்பி தெரிவு செய்த மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு உண்மையாய் இருப்பதும், நன்நெறியும் தூய்மையும் நேர்மையுமிக்க நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்கி தொன்மைமிகு ஆலயத்தின் இருப்பினைக் கட்டிக்காத்து அடுத்த தலைமுறையினரிடம் முறையாகக் கையளிப்பதும் எமது தலையாய கடமை என்பதை உணர்ந்து செயலாற்றத் தொடங்கினோம்.

நாம் பொறுப்பேற்றுக் கொண்ட போது “நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலை, 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஆலய பிரதேசத்தை புனித நகராக்கக் கோரிய எமது மக்களின் வேண்டுகோளை அரசு நிராகரித்த வரலாறு, பிரட்றிக் கோட்டையில் பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம், ஆலயத்தின் தூய்மையை பாதிக்கும் வகையில் அண்மித்த வழித்தடத்தில் அமைக்கப்பட்ட ஐம்பதிற்கும் அதிகமான தற்காலிக் கடைகள்” போன்ற நிதர்சனங்களை கருத்தில் வைத்துக் கொண்டு, எமது ஆலய திருப்பணிகளை மிக நிதானமாக, அதே நேரத்தில் தளராத தொலைநோக்கோடு மேற்கொண்டோம்.

Continue Reading →