ஆய்வு: தொல்காப்பியரின் திணைக் கோட்பாடும் – பிற்கால இலக்கண நூல்களில் அதன் வளர்ச்சியும்

 - கா. சுரேஷ் முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழ்த்துறை, அரசு  கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் -தமிழரின்  தொன்மைமிக்க வாழ்வியல் முறையினை எடுத்துரைக்கும் பகுதி தொல்காப்பியப் பொருளதிகாரமாகும். தமிழர்கள் மலைகளில் வாழ்ந்து உடைமைகளைப் பேணிக்காக்கக் காடுசார்ந்த பகுதியில் வாழ்ந்து பின்பு நாகரிக வளர்ச்சியடைந்து நிலமும் நீரும் வளமும் பெருகி இருந்த வயல்சார் மருதநிலத்தில் வாழ்ந்து,  வாணிகம் பொருட்டு கடல்சார்ந்த நெய்தல் பகுதியில் குடியேறி ஒப்பற்ற வாழ்க்கை முறையினை வாழ்ந்து வந்தனர். மேலும் அவர்கள் மலைச்சாரல் பகுதிகளிலும்,  அழகிய புல்வெளி சார்ந்த காடுகளும் வறட்சியுற்ற போது பாலை என்ற நிலம் உருவானது. அங்கும் மக்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வாழ்க்கை முறையினை உணர்ந்த தொல்காப்பியர் அக வாழ்க்கை மற்றும் புறவாழ்க்கை என இரண்டாகப் பகுத்துள்ளார். அதில் ‘அகம்’ காதல் சார்ந்த வாழ்க்கையினையும்,‘புறம்’ நாடு சார்ந்த போர், வீரம் போன்ற வாழ்வியல் சூழலையும் எடுத்துரைத்துள்ளது. தொல்காப்பியர் திணையை ஒழுக்கம் என்னும் பொருளில் கையாண்டு அக ஒழுக்கம் ஏழினையும் புறஒழுக்கம் ஏழினையும் பிரித்தறிகின்றார்.
இதனை,

“கைக்கிளை முதலா ஏழ் பெருந்திணையும்
முற்கிளந்த தனவே முறைவயினான்”1

என்ற நூற்பாவில் சுட்டுகிறார். அதாவது கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என அகத்திணைகள் ஏழு என்கிறார். இத்திணைகளின் நெறிமுறைகளைப் பொருளதிகாரத்தின் அகத்திணையியல் முதல் நூற்பாவில் (தொல்.அகத்.நூ.1)கூறப்பட்டுள்ளது. இதற்கு இளம்பூரணர்,“திணையாவது கைக்கிளை முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணையென்பன. அவை முறைமையினான் மேற்சொல்லப்பட்டன என்றவாறு”2 என்பார். அதாவது இந்நூற்பாவில் கைக்கிளை முதலா ஏழ்பெருந்திணையும் அகத்திணை என்றும் அவற்றின் முறையே என்பதற்கு புறமாகிய  பாடாண், வஞ்சி, வெட்சி, வாகை, உழிஞை, தும்பை, காஞ்சி என்றும் புறத்திணை ஏழும் சேர்ந்து பதினான்கு திணை என வரையறுக்கிறார் இளம்பூரணர். பேராசிரியர்,“கைக்கிளை முதற் பெருந்திணையிறுவாய். எழும் முன்னர்க் கிளக்கப்பட்டன”3 என்பார். மேலும் நச்சினார்க்கினியர்,“கைக்கிளை  முதலா  எழுபெருந்திணையும்  கைக்கிளை  முதலாக முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணையென்ற  எழு நிலனும், முறைநெறி வகையின் – அவற்றிற்கு முறைமை வழியிற் புறமென அடைத்த வெட்சி முதற் பாடாண் பகுதியீறாகிய எழுபகுதியோடே கூட்ட, முற்கிளந்தனவே-முன்னர்க் கிளக்கப்பட்டனவேயாகச் செய்யுட்குறுப்பாய் நிற்கும்”4 என்பர். இளம்பூரணர் நூற்பாவில் வரும் “முறைமையினான்” என்ற பாடத்தை மாற்றி “முறை நெறிவகையின்” என  பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பாடங் கொண்டுள்ளனர். இத்திணை என்னும் உறுப்பு செய்யுட்குரிய உறுப்பாக அமைந்துள்ளது. ஒரு செய்யுளில் முதல், கரு, உரிப்பொருள் மூன்று சேர்ந்து வந்தால் தான் அச்செய்யுள் அகப்பாட்டுறுப்பாக அமையும் என்பது தொல்காப்பியரின் திணைக்கோட்பாடாகும். இத்திணைக் கோட்பாடு செய்யுளில் பாடப்பெறும் ஒழுகலாறுகளை அகமும் புறமும் எனப் பாகுப்படுத்தி அறிவதற்கான கருவியாகும்.

Continue Reading →

மெய்யியல் கற்றல் கற்பித்தல்- 1

– ஆதவன் கதிரேசர்பிள்ளை என்னும் பெயர் ஆதவன் என்னும் பெயரில்  தமிழ் இலக்கிய உலகில், குறிப்பாக ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான பெயர்களிலொன்று. பேராதனைப்பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியற் துறையில் நிரந்தர விரிவுரையாளராக , 1981-1983 காலகட்டத்தில் பணி புரிந்தவர். கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், சினிமா, தத்துவம் எனப்பல்துறைகளிலும் தன் பங்களிப்பினைச்செய்து வருபவர். தத்துவம் பற்றிய இவரது கருத்துகளைத் தொடர்ந்தும் ‘பதிவுகள்’ இணைய இதழில் பகிர்ந்து கொள்வார்.


மெய்யியலை எவ்வாறு கற்பிக்கலாம்?

சரி,

பிரச்சனைகளிலிருந்து ஆரம்பிக்கலாம்.

உங்களுக்குத் தெரிந்த…உங்களால் -பிரச்சினை- என்று கருதப்பட்ட ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்கள்.

மறந்தும் -என்றால் என்ன?- என்கிறதும், -எங்கே?- என்பதுமான கேள்விக்கு விடையளிக்க எத்தனிக்க வேண்டாம்.

நீங்கள் இத்தகைய கேள்விகளுக்கு விடையளிக்க எத்தனிக்கும் போதே.. அக்கணத்தில் மூளைச் சலவை செய்யப்பட்டுவிட்டீர்கள் நீங்கள் அறியாமலேயே.

Continue Reading →

நாவல்: அமெரிக்கா (3)

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'– மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது ‘அமெரிக்கா’ என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே ‘பொந்துப்பறவைகள்’ மற்றும் ‘மான் ஹோல்’ தவிர , கனடாவிலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின,  மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் ‘அமெரிக்கா’ என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன்  பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். – வ.ந.கிரிதரன் – –

அத்தியாயம் மூன்று: புரூக்லீன் தடுப்பு முகாம்.

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது எங்கள் விடயத்தில் சரியாகி விட்டது. இரண்டு நாள்கள் ஹில்டன் ஹொட்டலில் வைத்திருந்தார்கள்.  பொஸ்டன்  குளோப் பத்திரிகையில் எங்களைப்பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படத்துடன் பிரசுரித்திருந்தார்கள். ‘வோய்ஸ் ஒவ் அமெரிக்கா , பி.பி.ஸி ஆகியவற்றிலெல்லாம் எங்களைப்பற்றிய செய்தியை ஒலிபரப்பினார்கள்.  இலங்கை இனக்கலவரம் சர்வதேச வெகுசனத் தொடர்பு சாதனங்களில் பரபரப்பாக அடிபட்டுக்கொண்டிருந்த  சமயத்தில்தான்  எங்களது பயணமும் தொடங்கியிருந்தது.  இதனால்தான்  எங்களைப்பற்றிய செய்தியும் பிரபலமாகியிருந்தது.  எங்களைப்பற்றிய பூர்வாங்க விசாரணைகள் முடிந்ததும் எங்களை நியூயார்க்குக்கு அனுப்பினார்கள். அப்பொழுதுகூட எங்களுக்குத்தடுப்பு முகாமுக்கு அனுப்பும் விடயம் தெரிந்திருக்கவில்லை.

பிரத்தியேக பஸ்ஸொன்றில் எங்களை நியூயார்க் அனுப்பியபொழுது ஏற்கனவே இரண்டு நாள்கள்  ஆடம்பர ஹொட்டலான ஹில்டனில் இருந்த சந்தோசத்தில் நாங்கள் சந்தோசமாகவேயிருந்தோம்.  நியூயார்க் நகரைப்பற்றி, அதன் பிரசித்தி பற்றி இலங்கையிலேயே அறிந்திருந்தோம். அத்தகையதொரு நகருக்குச் செல்வதை நினைத்ததுமே நெஞ்சில் களிப்பு. பல்வேறு கனவுகள், திட்டங்களுடன் படம் விரித்தன.  அன்று மட்டுமல்ல இன்றும் கூட என் நெஞ்சை ஒரு கேள்வி குடைந்தபடிதானிருக்கின்றது.  பொஸ்டனில் ;பிடிபட்ட எங்களை எதற்காக நியுயார்க் அனுப்பினார்கள்.  பொஸ்டனில் தமிழ் அமைப்புகள் மிகுந்த செல்வாக்குடன் விளங்கின.  இந்நிலையில் எங்களை அங்கேயே வைத்திருந்தால் அரசியல்ரீதியில் அமெரிக்க அரசுக்குப் பிரச்சினை வரலாமென்று அமெரிக்க அரசு எண்ணியிருந்திருக்கலாம் என்ற ஒரு காரணம்தான் எனக்குப்படுகின்றது.

Continue Reading →