அண்மையில் ருஷ்ய விமானப்படையினரின் விமானமொன்றினை துருக்கி சுட்டு வீழ்த்தியது யாவரும் அறிந்ததே. துருக்கியால் ஒரு போதுமே ருஷ்யாவுடன் நேருக்கு நேர் மோத முடியாது. இருந்தாலும் ஏன் துருக்கி இவ்வளவு துணிவாக ருஷ்ய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. ருஷ்ய அதிபர் புட்டின் குற்றஞ்சாட்டுவது போல் துருக்கி திரை மறைவில் இசிஸுடன் (ISIS) நட்பாகவிருக்கிறது. அவர்கள் விற்கும் எண்ணெயினை வாங்குகின்றது. சிரியாவின் தன்னின மக்களைக்கொண்ட போராளிகளுக்கு ஆதரவளிக்கிறது. அதே சமயம் துருக்கி நேட்டோ என்னும் மேற்கு நாடுகளின் கூடாரத்தில் அங்கம் வகிக்கும் நாடு. துருக்கிக்கும் , ருஷ்யாவுக்குமிடையிலான மோதல் வளர்ந்து ருஷ்யாவுக்கும் நேட்டோவுக்குமிடையிலான மோதலாக வெடிக்கும் ஆபத்து உண்டு.
இவ்விதமானதொரு சூழலில்தான் துருக்கி ருஷ்ய விமானத்தைச்சுட்டு வீழ்த்தியுள்ளது. இது துருக்கியுடன் நட்பாகவிருக்கும் இசிஸின் ஆலோசனையாகவிருக்க வேண்டும். துருக்கி ருஷ்ய விமானத்தைச்சுட்டு வீழ்த்துவதன் மூலம் அம்மோதலை நேட்டோவுக்கும், ருஷ்யாவுக்குமிடையிலான மோதலாக மாற்றிடலாமென்று துருக்கியும், இசிஸும் திட்டமிட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால் அவர்கள் விரித்த வலைக்குள் ருஷ்யா விழவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. அது மட்டுமல்ல உடனடியாகவே ருஷ்யா சிரியாவில் இசிஸின் எண்ணெய்க்கிணறு நிலைகள் மீது தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது.