கவிதை: நம்பிக்கை!

முல்லை அமுதன்!நம்பிக்கையை
தான் கைப்பிடித்து
நடக்கிறேன்.
அவர் பற்றி
இவர்களும் அவர்களும்
நடத்தும் பட்டிமன்றம் முடியவே இல்லை..
தொடக்கத்தில்
இருந்தே அவர் மீதான
அன்பு
நம்பிக்கையாக வளர்ந்தது..
அவர் கை நீட்டி அழைத்ததில்லை…
நானும் அவரிடம் நெருங்கியதில்லை.
ஆனாலும்

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 138 : உதித்தெழுந்தது அறிவென்னும் இரவி!! ; மின்னூல்கள் பற்றிய எழுத்தாளர் மாலனின் கூற்றும், அது பற்றிய சில எண்ணங்களும்….

உதித்தெழுந்தது அறிவென்னும் இரவி!

‘எழும் பசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவென்னும் இரவி!’ -பாரதியார் –

இத்தாரக மந்திரத்துடன் மே-யூன்1998, யூலை-ஆகஸ்ட் 1998 என இரு இதழ்கள் ,டொராண்டோ, கனடாவில், வெளிவந்ததொரு மாதப்பத்திரிகைதான் இரவி. அக்காலகட்டத்தில் தொடர்ந்தும் வெளிவராது நின்று போனாலும், என் ஆர்வம் இன்றுவரை நின்று விடவில்லை. என் ஆர்வத்தின் வெளிப்பாடுகள்தாம் ‘கணினி உலகம்’, ‘நமது பூமி’ ஆகிய செய்திக்கடிதங்களும், ‘குரல்’ கையெழுத்துச்சஞ்சிகையும், ‘இரவி’, ‘கல்வி’ ஆகிய பத்திரிகைகளும் பதிவுகள் இணைய இதழும்.

‘இரவி’ பத்திரிகையின் முதற் பக்கத்திலுள்ள இரவி என்னும் பத்திரிகையின் எழுத்துருவினை வடிவமைத்துத் தந்தவர் எழுத்தாளர் ‘அசை; சிவதாசன். அதற்காக அவருக்கு நன்றி. அவரும் அக்காலகட்டத்தில் மறுமொழி சஞ்சிகையினை வெளிக்கொணர்ந்தவர். இன்று வெளிவரும் ‘தாய் வீடு’ பத்திரிகையின் தாயான ‘வீடு’ பத்திரிகையினைத்தொடங்கி வெளியிட்டவர். சிறுகதைகள், கட்டுரைகள் பல பல்வேறு சஞ்சிகைகளில் எழுதியவர். ‘தாயகம்’ சஞ்சிகையில் அவர் எழுதிய ‘அசை மறுபக்கம்’ பத்தியின் மூலம் ‘அசை’ சிவதாசன் என்று அழைக்கப்பட்டவர். தொலைக்காட்சி நிகழ்வுகளில் அரசியல் ஆய்வாளராக அடிக்கடி வலம் வருபவர்.

Continue Reading →

கவிதை: பிறகும் தொடரும் தீவின் மழை!

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -மழை வெளி நிலத்தின் பட்சிகள்
ஈர இறகை  உலர்த்தும் புற்பாதையில்
மீதமிருக்கும்  நம் பாதச்சுவடுகள் இன்னும்

எப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை
மென்குளிரைப் பரப்பியிருக்க
நனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம்
நடந்து வந்த பாதையது

தீவின் எல்லாத் திசைகளிலும்
கடலை நோக்கி நதிகள் வழிந்தோடும்
அவ் வழியே பிரம்பு கொண்டு பின்னப்பட்ட
கூடைத் தொப்பியை அணிந்து வந்த முதியவள்
‘கருமேகக் கூட்டங்களற்ற வானை
ஒருபோதும் கண்டதில்லை’ என்றதும்
சிரட்டைகளால் செதுக்கப்பட்ட
அவளது சிற்பங்களை முழுவதுமாக வாங்கிக் கொண்டாய்
இவ்வாறாக
கரிய முகில் கூட்டம் நிரம்பிய வானின் துண்டு
உன் சேமிப்பில் வந்தது
மழை உனக்கு அவ்வளவு பிடிக்கும்

Continue Reading →

சிறுகதை”: அம்மாவின் மோதிரம்

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -அந்த மோதிரத்துக்கு கெட்ட செய்திகளை மட்டும் ஈர்த்துக் கொண்டுவரும் சக்தி இருக்கிறதோ என்று அவன் ஐயப்பட்டது அன்று உறுதியாகிவிட்டது. அந்த மோதிரத்தை விரலில் மாட்டிய நாளிலிருந்து தினம் ஏதேனுமொரு கெட்ட தகவல் வந்துகொண்டே இருந்தது. அணிந்த முதல்நாள் வந்த தகவல் மிகவும் மோசமானது. அவன் தங்கிப் படித்து வந்த வீட்டு அத்தை கிணற்றில் விழுந்து தவறிப்போயிருந்தாள். அன்றிலிருந்து தினம் வரும் ஏதேனுமொரு தகவலாவது அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டே இருந்தது. முதலில் அவன் அந்த மோதிரத்தை இது குறித்துச் சந்தேகப்படவில்லை. அதுவும் சாதுவான பிராணியொன்றின் உறக்கத்தைப் போல அவனது மோதிரவிரலில் மௌனமாக அழகு காட்டிக் கொண்டிருந்தது.

அவனுக்கு ஆபரணங்கள் மேல் எவ்விதமான ஈர்ப்புமில்லை. அவனது தாய், பரம்பரைப் பொக்கிஷமாக வந்த அந்த மோதிரத்தைப் பாதுகாத்து வைத்திருந்து அவனுக்கு இருபத்து மூன்றாம் வயது பிறந்தபொழுதில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி அதனை அவனது வலதுகை மோதிரவிரலில் அணிவித்து, பின் அவனுக்கு முதலாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு சரியாக இருபத்து மூன்று வயது பிறக்கும்போது அதனை அணிவித்து விடவேண்டுமென்றும் அதுவரையில் எக்காரணத்தைக் கொண்டும் அதனைக் கழற்றக் கூடாதெனவும் ஆணையிட்டு, நெற்றியில் முத்தமிட்டாள். அவனுக்கு தூக்கக் கலக்கத்தில் எதுவும் புரியவில்லை. அடுத்தநாள் காலையிலும் அம்மா அதனையே சொன்னாள். காரணம் கேட்டதற்குப் பதில் சொல்ல அவளுக்குத் தெரியவில்லை. அவளது அப்பா அப்படிச் சொல்லித்தான் அதனை அவளது இருபத்து மூன்றாவது வயதில் அவளுக்கு அணிவித்ததாகச் சொன்னாள். அவனும் அம்மோதிரத்தை இதற்கு முன்னால் அவளது விரல்களில் பார்த்திருக்கிறான். அவளுக்கென இருந்த ஒரே மோதிரமும் அவன் வசமானதில் கைவிரல்கள் மூளியாகிப் போனது அவளுக்கு.

அது சற்று அகலமானதும் பாரமானதுமான வெள்ளி மோதிரம். நடுவில் ஒரே அளவான சற்றுப் பெரிய இரு கறுப்பு வைரங்களும் ஓரங்களில் எட்டு சிறு சிறு வெள்ளை வைரங்களும் பதிக்கப்பட்டிருந்த அழகிய மோதிரம். வெளிச்சம் படும் போதெல்லாம் பளீரென மின்னுமதன் பட்டையான இருபுறங்களிலும் கூட சின்னச் சின்னதாக அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதிலிருக்கும் கற்களை விற்றிருந்தால் கூட ஒரு நல்ல வீட்டை விலைக்கு வாங்குமளவிற்குப் பணம் கிடைத்திருக்கக் கூடும். இப்பொழுது வரையில் வாடகை வீட்டிலேயே வசித்து வரும் அம்மாவுக்கும் இந்த எண்ணம் தோன்றியிருக்கும். ஆனால் என்ன கஷ்டம் வந்த பொழுதிலும் அவள் அதனை விற்கவோ, அடகுவைக்கவோ ஒருபோதும் துணியவில்லை. அவனது இருபத்து மூன்று வயது வரும் வரையில் விரல்களிலிருந்து அவள் அதனைக் கழற்றக்கூட இல்லை.

Continue Reading →

அமருத்தவமடைந்த அதிபர் பொ.கனகசபாபதி அவர்களது முதலாவது ஆண்டு நினைவஞ்சலிக்கூட்டம்.

இடம்: Golden Cultural Event Centre, 3001 Markham Rd. Unit 10. Scarborough, On. M1X 1LR. டிசம்பர் 24, 2015 வியாழக்கிழமை பி.ப. 3…

Continue Reading →