அறிஞர் அண்ணா நினைவாக….

–  பெப்ருவரி 3 அறிஞர் அண்ணாவின் நினைவு நாள். அவரது நினைவையொட்டி, அவர் பற்றி ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான முனைவர் துரை கண்டனின் ‘அண்ணாவின் நாடகங்களில் மொழிநடை’ மற்றும் முனைவர் கல்பனா சேக்கிழாரின் ‘சொல்லேருழவர் பேரறிஞர் அண்ணா! ஆகிய கட்டுரைகளை மீள்பிரசுரம் செய்கின்றோம். – ஆசிரியர், பதிவுகள். –


அண்ணாவின் நாடகங்களில் மொழிநடை

– முனைவர் துரை.மணிகண்டன்  –

“அண்ணா அவர்கள் நமது நாட்டுக்குக் கிடைத்த ஒரு நிதி என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார் தந்தை பெரியார் அஃது உண்மையும் கூட. அண்ணா தமிழகத்திற்கு சீர்திருத்த திறவுகோல் ஆவார். தாழந்து அடிமைபபட்டுச் சாதிகளால் சிக்குண்டு கிடந்த மக்களை ஒன்றிணைக்க புறப்பட்ட புரட்சியாளர்; ; இளைஞர்களின் எழுச்சி தீபம்; அரசியலையும், படைப்புகளையும் தன் இரு கண்களாகிக்கொண்டு வாழந்த வள்ளல்;;; இப்பேரும் புகழும் பெற்ற அண்ணாவின் படைப்புகள் பல. கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை, நாடகம் வழக்காடு மன்றம் என இலக்கியப் பணியில் பன்முகத் தன்மை கெர்ணடவர். இவர் படைப்புகளான நாடகங்களில் கையாண்டுள்ள மொழி நடையைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

மொழி நடை
மொழி சொற்களால் ஆடைக் கட்டிக் கொள்கிறது. அவ் ஆடைகள் பலவாக இருக்கலாம். படைக்கும் படைப்பாளனை ஒட்டியே அஃது அமைகிறது. ஒரு கருத்தை மற்றவர்களுக்குப் புரியவைப்பதற்கு மொழி ஒரு பாலமாக இயங்குகிறது.  “நடை என்பது அந்தந்த ஆசிரியரின் தனித்தன்மையை வெளிப்படுத்த வல்லதாகும். அவரை இனங்கண்டு கொள்ளும் வகையில் அவரவருக்கே உரியதாக இருக்கும் வெளி;ப்பாட்டின் மொழிப்பாங்கே அது இலக்கியத்தில் அதுவே மிகப் பெரிய சாதனையாகும் என்று மா.ராமலிங்கம் மொழிநடைக்கு விளக்கம் தருகிறார். (20 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் ப.160) “அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல எழுத்தின் அழகு நடையில் வெளிப்பட வேண்டும் “ (இலக்கியக் கலை ப.145) என்று அ..ச. ஞானசம்பந்தன் நடையைப்பற்றி விளக்குகிறார் இவ்வாறு மொழிநடை இலக்கிய படைப்புகளையும் படைப்பாளனையும் இனங்கண்டு கொள்ள மொழி நடை தேவைப்படுகிறது.

Continue Reading →